பாழும் அரசும் கோழைப்படைகளும்
வீழுமென்றால்
அண்ணனைத்தேடி ஓவென்றழுத கண்ணீர்போதுமம்மா,
இரணியர் தலையில்
ஏன்,
இடிவிழவில்லை இன்னமும்...
உலக மனிதாபிமான சட்டப்புத்தகத்தை
ஜநா வைத்திருக்கிறதாம்
ஏன்,
வாய் திறக்கவில்லை!!
குழந்தையே விபுசிக்கா,
ஏழைகளைக் கொல்லும் உலகம் அம்மா
உன் விம்மலின்,
வீச்சை அறியா நீசரின் கொடும் கோல் வீழுமா!
இல்லை நீழுமா,
என்றறியாப் பருவத்து பாசம்
எங்கே,
எஞ்சிய உடன்பிறப்பை தேடிய இதயவலி யாரறிவார்!
கஞ்சிக்கு உழைப்பவரின்
கை நரம்பை அறுத்து
பஞ்சுமெத்தையிலே படுத்துறங்கி குறட்டையெழும்,
கொஞ்சி விளையாடி
தங்கைச்சியென்று அன்பிருந்த வாழ்வறியாக்
கூரியவாள் கொண்ட சிங்கம்
எமை ஆழுகின்ற தேசமம்மா
ஈழத்துப் பிஞ்சே நெஞ்சுவெடிக்கிறது.....