மனித இனம் வாழுகின்ற நிலத்திலெங்கும்
விலங்கினங்கள் இரையாடும் வனங்களாக்கி - ஆங்கே
வீற்றிருக்கும் சிங்க ராசாக் குழுமத்தார் - தம்
காலனியப் பிணிசுமந்த கொடுமைகளால்
மனித உறவுகளை மிருகமென வதைகளிட - அதை
புகழ்ந்து போற்றியும்..இ இகழ்ந்து தூற்றிடும்..,
ஆதிக்க அரசியல் - சமூகச் சூழ்ச்சியால்
ஒடுக்கி அடங்கிய அனைத்து மக்களே..!
அடங்கி ஒடுங்கி அடிமை குடிமையாய்
செத்து வாழ்வதை விட்டே ஒதுங்கி - யாம்
பட்ட அறிவினை மீட்டுப் பார்த்து - எம்
அழியும் வாழ்வினை மீளக் கட்டி நிலைபெற..,
அன்றன்றாய் அழிந்தவையும் அழிகின்றவையும்
மறைந்தவையும் மறைக்கப்பட்டவையும் - அவை
அத்தனைமேல் நீதியிடும் மீட்புக்காய்..,
ஆர்ப்பரிக்கும் மக்கள் போர் வெடிக்கட்டும்
அதைக்கண்டு மனித இனம் பிரித்த அரசியல்கள்
அழிந்தொழிந்து அனாதரவாய் ஓடட்டும்.
மீண்டுவரும் சுதந்திர தேசத்தில்
மக்கள் ஜனநாயக மகிழ்வினிலே வாழட்டும்.
மாறாக யாரேனும் புரட்டுக்கள் செய்திட்டால்
மக்கள்மன்றுகளே அதற்கான தீர்வுகளை வழங்கட்டும் - அவை
எத் தீர்ப்புகளையும் மரியாதையுடனே வழங்கட்டும் - அவை
அறிவியல் ஆதாரத் தீர்ப்புகளாய் நிகழட்டும்.
மக்களே..! மக்களே..!!
ஆர்ப்பரிக்கும் மக்கள் போர் வெடித்திட
திரண்டு நீவிர் இனவாதமற்று வாரீர்..!
மனிதத்தை மீட்கும் போரினிற் சேர்வீர்..!!
அனைத்து இன மக்களும் இணைந்து
ஆதிக்க சக்தியை அடியொடு ஒழித்து
மக்களுக்கான அமைதி வாழ்வைத் தேடிட
ஆர்ப்பரிக்கும் மக்கள் போர் வெடித்திட வாரீர்..!
இது மனித வாழ்வினில் மகிழ்வினைத் தேடிடும் போராட்டம்.
இது மனித அநியாய மடிவுகளை ஏற்காத போராட்டம்.
இது மனித இனங்களை இணைக்கின்ற இயல்புக்கான போராட்டம்.
இது மனித ஆதிக்க சக்திகளை அடியொடு எதிர்க்கின்ற போராட்டம்.
இது மனித பண்பின் நலங்களை பாதுகாக்கின்ற போராட்டம்.
இது மனித நாகரீகத்தை நலமொடு மேம்படுத்தும் போராட்டம்.
இது மனித அரசியலில் ஆதிக்கரால் மறுக்கப்பட்ட போராட்டம்.
இது மனித அடிப்படைவாதத்தில் இருந்து மீழ்கின்ற போராட்டம்.
இது மனித வாழ்வுக்கான சுய பாதுகாப்புப் போராட்டம்.
இது மனித வதைகளை அறிந்தெழுந்த போராட்டம்.
இது மனித இனங்களிலே மனித்தை விதைக்கின்ற போராட்டம்.
இது மனித இனங்களின் சுயத்தினை நிர்ணயிக்கும் போராட்டம்.
இது மனித இனங்களின் சம உரிமைக்கான போராட்டம்.
மக்களே..! திரண்டு சேருங்கள் நாங்களாக.
இனங்களின் சம உரிமைப் போராட்டத்தில்
இணைந்தே போரிடுங்கள் நாங்களாக.
தனித்தடி இணைந்து கட்டான பலத்தினில்
அனைத்து இனங்களும் இணைந்த நாங்களாக.
ஆதிக்க சதிகளை அடியொடு எதிர்த்தே
அனைவர்க்குமான அமைதியைத் தேடிடும் நாங்களாக.
ஆர்ப்பரிக்கும் மக்கள் போர் வெடிக்கட்டும்.
மக்களே..! மக்களே..!!
திரண்டு நீவிர் வாருங்கள்.
மனிதகுல வர்க்கப் போரினில் சேருங்கள்.
- மாணிக்கம்.