வெல்வேரிய தந்த தண்ணீர்
அப்பூமியின் ஆதி ஆதியிருப்பு- தங்கம்போல்
நிலத்தடிநீர், நீர்ஊற்று, சலசலத்துச் செல்லும் ஆறுகள்
அனைத்தும் அவ்வகையே!
அழியாச் சிதைவடையாச் செல்வங்கள் அவை
வாழ்வின் ஆணிவேர்கள்-கோடிக்காலங்கள் நிலைத்திருக்கும்
பாதாளம்வரை விசம்பரவாவிட்டால்!
அவர்களது உற்பத்தி முறையில் மக்கள் நலன்
கணக்கில்லில்லை, லாபமே மகா ஏக்கம்
அதன் கணக்குத்தான் கச்சிதம்
வெலிவேரிய மக்கள் எழுந்தார்கள்
;விசமற்ற நீர் எமக்கு வேண்டும்
விசமூற்றுபவனை அகற்று-என
“தாகத்திற்கு தண்ணீர் கேட்பவனை
இல்லையென அனுப்பிவிடாதே, இது
வறண்ட வலய மனிதநேய வழக்கொன்று
போத்தல் தண்ணீரை வகைவகையாகச் சுவைத்து
ஏப்பம்விடும் அதிகார வர்க்கமொன்று
நாலுபேரை தட்டிவிட்டால் அடங்கிவிடும்
இது வளர்ந்துவிடக்கூடாது-என்ற
அதிகாரத்திமிர் ஆணையின்படியே
வெலிவேரிய மண்ணில் குருதி சிதறியது
கபடநாடகம், நரித்தனங்கள்
அரசத்தலைவனும்
அதிகாரிகளும் சேர்ந்து நடித்தார்கள்!
வுpசாரணை, இராணுவ ஒழுக்கம்மென
பூசிமெழுகும் பேச்சுக்கள் அரங்கேறின
மாண்டவர்களின் குருதிக்கலங்கள்
ஒவ்வொன்றாக எழும், எச்சரிக்கும்!
பேசிக்கொண்டேயிருக்கும்- சிலவேளை
நச்சுக்கூடங்கள் நொறுங்கும்வரை
திலக்
11.8.2013