மக்கள் ஊழியர்கள் மக்கள் விரோதி என்றால் ........ இந்த அரசு மக்களுக்கு யார் ?
1897 ல் பாலகங்காதர திலகர் மற்றும் 1922 ல் மகாத்மா காந்தி உள்ளிட்ட இந்திய தேசத் தலைவர்களுக்கு வாய்பூட்டு போடுவதற்காக பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் எச்சமான இந்திய குற்றவியல் பிரிவு 124 (பிரிவினை) ஐ பினாயக் சென்னுக்கு எதிராக அரசாங்கம் பயன்படுத்தியது அரசு தரப்பின் மிக பிற்போக்கான குணத்தை நிரூபித்தது ...
இன்று மீண்டும் மேற்குத்தொடர்ச்சி மலைவாழ்மக்கள் உரிமை இயக்கம் ஒருங்கிணைப்பாளர் மனுவேல் .. நேற்று சத்தியமங்கலம் காவல் துறையால் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்டு .. பின் கைது செய்யப்பட்டு 124 தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் ...
காடும், காட்டுவளமும் பழங்குடி - மலைவாழ் மக்களுக்கே சொந்தம்!
இந்திய அரசே!
• சத்தியமங்கலம் புலிகள் காப்பகத் திட்டம் உள்ளிட்ட அனைத்து புலிகள் காப்பகத் திட்டங்களையும் கைவிடு! வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்து!
தமிழக அரசே!
• இந்திய அரசின் புலிகள் காப்பகத் திட்டங்களுக்கு ஒத்துழைப்புத் தராதே! அத்திட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்று!
தொழிலாளர்களே! விவசாயிகளே! சிறு வியாரிகளே! மாணவர்களே! அறிவாளர்களே!
• பழங்குடிகள், மலைவாழ் மக்களுடன் இணைந்து காட்டையும், நாட்டையும் பாதுகாக்கப் போராடுவோம்!
என்ற முழக்கத்துடன் மக்களுகாக போராடி வரும் தோழரை, தேசத்ரோகி என்ற பெயரில் கைது செய்த காவல் துரையின் அடக்கு முறையை வன்மையாக கண்டிப்போம்!!
எந்த நிபந்தனை இன்றி விடுதலை செய்ய குரல் கொடுப்போம்!!
பாசிச அரசின் மக்கள் விரோத அடக்கு முறையை கண்டிப்போம்!!!