குப்பி விளக்கோ
முற்றத்தில் மூட்டிய நெருப்போ
உலாவந்து தேய்ந்து வளரும் நிலவொளியோ
கும்மிருட்டிலும் கூட வாழப்பளகிய விழிகள்
ஏழையின் கருமணியில்
தணல் கொதிபிளம்பாய் பழகிப்போகுமா இருள்....
உழுத நிலத்து அறுவடைகள்
கஞ்சியோ, கூளோ
வயிறாறிக் கிடந்த காலமாயிது
விளைச்சல் கொட்டிய மண்,
அடுக்கு மாடிகளாய்
அந்நியர் உலாவந்து கழிக்கும் நிலமாய்..
வரம்பு கட்டி நீர்ப்பாச்ச
இழுத்துக் களைத்த எருதுகள்
மூச்சிழுத்து நுரைத்தள்ளும்,
ஏழை விவசாயி துலாமிதிப்பார்
கூடயிருந்து குடும்பமே
பாத்திகட்டி வெட்டித்திருப்பி, மண்வெட்டி செய்யும்...
குமுறியெழும் அலையிலும்
மீன் கூட்டம் திரண்டு வருவதை
வீச்சுவலையில் வீழ்த்தும் காலமாயிது,
கட்டுமரம் வலித்துப்போய்
தூண்டில் போடமுடியா காலமிது...
தேயிலைத் தோட்ட லயத்தில்
எந்தச் சூரியனும்
வெளிச்சம் பாச்சியதாய் வரலாறில்லை
மின்கட்டணம் ஏற ஏற
வயிறு காய்ந்து எரிவதுதான் ஆசியாவின் ஆச்சர்யமென்றால்
பழகிப்போகுமா இருள்.. ?
சுவாலையெழும் !