ஊமையாகிக் கிடக்கின்றது உலகம்
ஆயினும் அது
அடிக்கடி சில
குசுக்களை நசுக்கியே விடுகின்றது
இந்திய தமிழ் நாட்டின்
மாணவர் போராட்டத்தைப் பார்த்து
அட்காச அறிக்கை விடும்
அவ்விட அரசியல் அறிவாளிகளைப் போல.
தமிழ் மக்கள் மீதான
முள்ளி வாய்க்கால் அழிவின் பின்பு
மிகுதிக் கொடிகள்
எங்கெங்கே உயர்கின்றன என
வேவு பார்க்கின்றன உளவுகள்.
சொந்தமாகப் போராடி
கிடைக்காத எதுகும்
மாற்றானால் கிடைக்கட்டுமே என
ஆவற்படுகின்றது அகதிக் குணம்.
நாங்கள் என்ற வேர்களை அறுத்து
நான் என்ற தனியராக
மாற்றப்பட்ட உற்பத்தி உறவில்
யார் உண்ணாது விட்டாலென்ன
எவர் உடலெரிந்து செத்தாலென்ன..?
கொலை செய்யும்
கத்தி தூக்கிய மனநோயாளியை
அறுத்துக் கொல்லு என
கத்தி தூக்கும் வைத்தியரை
ஒத்ததாக இருக்கின்றது
இலங்கையின் பிரித்தாள்கை.
இவை அனைத்துக்குமான
குசுக்களிடம் நறுமணம் கேட்கின்றது
மேட்டுக் குடித் தமிழ்.
- மாணிக்கம்
05.04.2013