காங்கிரஸ் காவாலிகள் மாணவர்களை தாக்குகிறார்கள். அகிம்சை மயிர் புடுங்கிறோம் சொல்லிக்கொண்டு அந்நிய முதலாளிகளின் கோவணத்தை கட்சிக்கொடியாக, தேசியக்கொடியாக பிடித்திருக்கும் இந்த நாய்கள் போராடும் மாணவர்களை தாக்குகிறார்கள். மன்மோகன் சிங்கும் சோனியாவும் இந்திய முதலாளிகளிற்காக இலங்கைத் தமிழ் மக்களை கொன்றதை மாணவர்கள் கேட்டதற்காக, இந்த தமிழ்நாட்டு காங்கிரஸ் அடிமைநாய்கள் ஊளை இடுகின்றன. எஜமானர்கள் வீசும் எலும்புத்துண்டுகளிற்காக இதுகள் கோரப்பற்களை காட்டி உறுமுகின்றன.
காங்கிரஸை ஒழித்து கட்டுவேன் என்று முழக்கமிட்ட பெரியார் பிறந்த மண்ணில் எஞ்சியிருக்கும் இந்த கைக்கூலிகள் மாணவர்கள் மீது கைவைக்க துணிந்ததை இனியும் பொறுப்பதா? இனம், மதம், சாதி, கட்சி என்று பிரிந்தது போதும் மானிடத்தின் விரோதிகளை, மக்களின் எதிரிகளை, காங்கிரசு கயவர்களை மக்களே தண்டியுங்கள்.
நான் தண்டனை கோருகிறேன்
நான் அழுவதற்கு வரவில்லை
அவர்கள் விழுந்த இடத்தில்
இன்னும் உயிரோடு இருப்பவர்களே
உங்களிடம் பேசத்தான்
உங்களை நோக்கியும்
என்னை நோக்கியும்
நான் வேண்டுவது இதுதான்
இறந்து கிடக்கும் நம்மவர்கள் பேராலே
கேட்கிறேன்
தண்டனை அளியுங்கள்
நம் தந்தையர் நாட்டு மண்மீது
சிவப்பு இரத்தத்தை
சிதற வைத்தவர்களிற்கு
தண்டனை அளியுங்கள்
இந்த சவங்களின் மீது சிம்மாசனம் ஏறிய
அந்த துரோகிகளிற்கு
தண்டனை அளியுங்கள்
மறப்பவர்களிற்கும்
இந்தக் கொடுமைகளை
மன்னிக்கச் சொல்லுபவர்களிற்கும்
தண்டனை கொடுங்கள்
நான் எல்லோருடனும்
கை குலுக்க விரும்பவில்லை
இரத்தக்கறை படிந்த கரங்களை
தொடுவதற்கே விரும்பவில்லை
நான் தண்டனை கோருகிறேன்
தூரதேசங்களிற்கு அவர்களை
தூதுவராய் அனுப்புவதை
அமைதி வரும்வரை
அவர்களை அறைகளில் அடைப்பதை
நான் அடியோடு விரும்பவில்லை
இங்கேயே
இப்பொழுதே
திறந்த வெளியில்
நீதி வழங்குங்கள்
அவர்களிற்குரிய தண்டனையை
என் கண் முன்னே
நிறைவேற்றுங்கள்
- பாப்லோ நெருடா