குழந்தைகளின் அவலம்
நிலத்தை மீட்டிருக்குமாயின்
உலகப்பரப்பில்
இன்று சுதந்திரக்காற்றல்லவா வீசும்
பாலச்சந்திரன்கள்
ஏதுமறியாமல் படைகளிடம் சிக்குண்டிருப்பதும்
படுகொலை செய்யப்படுவதுமாய்
மனதைச் சுக்குநூறாய் நொருக்கிப்போடும்
காட்சிகளால்,
நிறைக்கப்பட்டும் மறைக்கப்பட்டும்
ஜநா கோப்புக்களில் சிறைப்பட்டுக்கிடக்கிறது
வீட்டோ நீதிமான்களின்
விழிகள் அகலத்திறப்பதற்கான காலம்,
ஆட்சிப்பீடங்களின்
அடங்கிப்போதலுடன் பிணைந்துகிடப்பதையே,
மனிதஉரிமைக்கான
ஒன்றுகூடல்கள் பதிலாய் தந்திருக்கிறது
புதியரக போர்விமானங்களும், வியுகங்களும்
நாளைய குழந்தைகளை
அச்சமூட்டவும் பலியெடுக்கவும் தயாராகியபடியே,
போர்க்குற்றவாளிகளை
கூண்டிலேற்றப் போகிறார்களாம்,
புலத்தில் கால்பதித்த ஓவ்வோர் தமிழனுக்கும்
பாலச்சந்திரப் பாலகனை
மகிந்த அரக்கனிடம் மாட்டிவிட்ட பொறுப்பு இருக்கிறது
நீ திருந்தெனக் கேட்கிறான்
எங்கள் சிறுவனின் விழிகள்
எதைப்பேசுகிறது,
தமிழா
அந்நியமோகத்தை அகற்றெனக்கேட்கிறான்
.......சுஜீவன்
20/02/2013