சூரியதேவனெனப் பெயர்
பிரபாகரனிற்கிருக்கிறது
முற்றத்தில் பானையிட்டு
மூழும் நெருப்பில் பொங்கிவடியும் பால்
பொங்குதமிழாய் தெரியுமோ !
கோத்தபாய,
நாம் பொங்கலாமா..?
ஒவ்வோர் அசைவும்
புலனாய்வுப் படைநோக்கும்
கவ்விப்போக
வெள்ளைவான் ஓடித்திரியும்
பாடசாலை, பல்கலைக்கழகம்
போனபிள்ளை
வீடுவந்து சேரும்வரை
நெஞ்சம் பதைக்கும்
கோத்தபாய,
நாம் பொங்கலாமா..?
நீதித்துறையே
காலில் மிதிபடும் காலத்து
புனர்வாழ்வுச் சிறைக்குப்
பொங்கிப் போகமுதல்
சொல்லுங்கள் கோத்தபாய,
நாம் பொங்கலாமா..?
-14/1/2013