உண்ட பின் ஆயாசத்தில் உப்பாயோ,
உறக்கமத்தின் கிறக்கத்தில் உவப்பாயோ,
'உங்களது' பகடைக்கு உருட்டாயோ
தவறி ஒருக்கால் உம் மென் கனவில் இனிப்பாயோ ,
வந்து போம் கணங்கள் பல வரும் போதும்
வந்தடையா என வீசியே எறிந்த மாந்தர் உள்ளம்
வருவதற்கினி மார்க்கமில்லை !
எங்களது கனவுகள் எம்மோடே!
ஏற்றமோ தாழ்வோ எம்மோடே !
எங்கள் கனவில் வருவதை நாங்கள் கவிதைகள் புனையோம் !
எங்கள் கருத்திலும், நடப்பிலும் உம் கருத்துகள் தவிர்ப்போம் !
நீங்கள் ஆளுவதை ஒருக்காலும் மறுக்க மாட்டோம்.
நீங்கள் ஆளும் வர்க்கத்தையும் நாம் எதிர்க்க மாட்டோம்.
நீர் முன் ஆண்ட வர்க்கத்தையும் எதிர்க்க மாட்டோம்,
இனியும், ஆழ நினைக்கும் வர்க்கத்தையும் நாம் ஒன்றும் செய்ய மாட்டோம்.
ஆனால் எம்மை ஆண்ட பரம்பரை யார் எனக் கேட்கையில்
பிறப்பால் தடம் மாறுவோம் !
- இனி
எங்கள் சாவில் உம் பங்கை மறைப்போம் !
எங்கள் வாழ்விலும் (?) உம் பங்கை மறைப்போம் !
ஒற்றுக்கள் காட்டும்/பார்க்கும் உணர்ச்சிகள் அற்ற
மனிதர் உணர்ந்ததிதை உடனே சொல்வார்,
உரக்கத்தான் படித்துப் பாரும் -இனி
உணர்ச்சிக்கு இங்கு இடமிருக்கா !
இருந்தோமோ செத்தோமோ
இறுக்கிக் கொலை செய்தோமோ
எங்கிருந்து எவர் சொல்லியும் அறிய வேண்டாம்.
எம் கதைகள் இனி வேண்டாம், ஏம்பலித்த எம் கதையைத் தூக்கி
எறிந்தெறிந்து..............
எறிவதும் எறியாமலிருப்பதும்-உங்கள் கொள்கைகள்
ஏமார்ந்த கதைகள் ருசிகரம் தான்-
இருப்பினும் ,
..............................................
எங்கள் கடைசி மானத்தையாவது
காக்க விரும்புவோம் என்பதை ஆளுவோர்கள்
கவனிப்பதாய் எடுத்துக் கொள்கிறோம்.
எமக்கென்று எழுதிய கவிதைகளை எவரவர்க்கோ
எசில்ப்பிண்டமாய்ப் போட்டு மீன்பிடிப்பதை நிறுத்தப் பார்ப்போம்
அமைதியும் அடுத்தவர் கொள்கையின் அழுத்தத்தின் விளக்கமும்,
அடுத்த நாள் வரைக்காவது நின்மைதியாய் வைக்கும் !
வருத்தம் தான் உமக்கும் இருக்கும்
அன்றி இனியும், வருந்துதல் தவிர்க்கப் பாரும்!
இதுகளும் ஒருநாள்க் கழன்று தான் போகும் என்றே
இதை விட அழுத்தமாயே உம் போல் சொல்ல நான் வார்த்தைகள் அறியேன்!
பதில்கள் இனிக் கவிதைகளாகா !
வார்த்தைகள் இனிக் கெஞ்சலாகா !
இருப்பினும்
இவ்வகை யாவையும் இயல்பினால் எழுந்த நேசம்
இறப்பிலும் இவற்றை மறக்க மாட்டோம்........!
கொஞ்சிய வார்த்தைகள் தாம், எமக்கும் அவை நினைப்பில் !
இருந்துமே ..........
சாதுக்கள் மிரள்வது முன்போல் சாதுவாகவல்ல !
-நிலா