Language Selection

கலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வினவு  - இது  மிகவும் பிரபலமான வலைத்தளம், கடந்த ஆறு மாதத்தில் 90 கட்டுரைகள் இடப்பட்டிருக்கின்றன  ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிந்திருக்கின்றனர்,ஆயிரக்கணக்கானோர்  பின்னூட்டமிட்டுருக்கின்றனர்.

 வினவு கட்டுரைகள் ஆறு புத்தகமாக வெளிவந்திருக்கின்றன.உண்மையில் இது மகிழ்ச்சிகரமான விசயம் தான்.நான் கவனித்ததிலிருந்து பலமாதங்கள் வேர்ட்பிரஸ்ன் மேலோங்கும் பதிவுகளில் வினவின் பெயர் இடம் பெறாத நாளை மிக மிக சில நாட்கள் எனலாம்.பலரும் கூறலாம் .இதிலென்ன பெரிய விசயம் எழுதுவதில் நேர்த்தி என்பது இருந்தால் யாரும் இந்த இடத்தை பிடிக்கலாம்,எழுத்து நேர்த்தி என்பது பதிவர்க்கு தேவையானது தான் என்றாலும் வினவின் தளத்தை அந்த ஒரு சிறப்பில் மட்டும் ஆழ்த்திவிட முடியாது,புரட்சிகவியையும் காமக்கவிஞன் வாலியையும் ஒரே தட்டில் வைத்து  படைப்பாளி என்று சொல்வது எவ்வளவு கடுமையான தவறோ அதைப்போன்றதே வினவின் இந்த வளர்ச்சியையும் மற்ற கழிசடை தளங்களின் வளர்ச்சியோடு ஒப்பிடுவது.

 

இசைஞானி என எல்லோராலும் புகழப்படும் இளையராசாவின் இசை எதை எந்த கருத்தை தாங்கி வருகிறது என்பதை பொறுத்தே அவரின் திறமையை புகழ்வதா இல்லை இகழ்வதா என தீர்மானிக்க முடியும்.ஒரு படைப்பாளி என்பவனின் கடமை யாது?மக்களின் அன்றாட பிரச்சினைகளை சந்திக்காது இல்லை அதை பற்றி சிந்திக்காது இருப்பவன்,மக்களின் பிரச்சினைகளை தன் கலை மூலமாக   வெளிப்படுத்தாது இருப்பவன் எப்படிஆகமுடியும்.. ஆசான்கள்   சொன்னது போல “வர்க்கத்துக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை”,வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட எழுத்தாளனோ அல்லது ஒரு படைப்பாளியோ இருக்கவே  முடியாது.

 

vinavu-copy

 

பல படைப்பாளிகள் இருக்கிறார்கள் எதையுமே சிறப்பாக வெளிப்படுத்துவார்கள் கதையாக,கவிதையாக,கட்டுரையாக,இசையாக இப்படி பல வழிகளில்,கண்ணதாசன் வயிரமுத்தன்களி¢ன் கவிதைகளை படித்து பலரும் இப்படி சொல்வதுண்டு”எதை கொடுத்தாலும் அந்த ரெண்டு பேரும் அப்படியே கவிதையா வடிப்பாங்க” அப்படித்தான் “ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே” என்று பாட்டெழுதிய வைரமுத்து தான் “ஆண் தொடாத பெண்மையா” என்றும் எழுதினார்.ஒரு  படைப்பாளி  தன்னுடைய படைப்புக்களை உண்மையாகவே சிந்தித்து படைக்கின்றான் எனில்  எப்படி ஒரே கையால் ஏழையின் வறுமையை பற்றியும் , முதலாளித்துவத்தின் பெருமையைப்பற்றியும் படைக்க முடிகின்றது, அவன் முதலாளித்துவத்தின் பெருமையை படைப்பதற்க்ககவே ஏழையின் வறுமையை படிக்கின்றான் . எந்த படைப்பாளியும் தன் வர்க்கத்துக்காகவே சிந்திக்கின்றான்  அவனின் தேவைக்கு  ரசிப்புக்கு ஏழையின் கண்ணீரும் தேவைப்படுகின்றது என்பது தான் உண்மை.

 

இந்த மாடர்ன் உலகத்திலே உலகமே கையளவாக சுருங்கி போய்விட்டது, தினசரி பத்திரிக்கைகள் போல  புற்றீசலாய் இணையத்தில் பல வலைத்தளங்கள் உள்ளன,எப்படி மஞ்சள் பத்திரிக்கைகளும் ஆபாச எழுத்தாளர்களும் வெளியில் குவிந்து கிடக்கின்றார்களோ அதை விட இணையத்தில் மிக அதிகமாகவே நிரம்பியிருக்கின்றார்கள்,”பெண்களை வளைக்க என்ன செய்வது,கடலை போடுவது எப்படி போன்ற சிறப்பு பாடங்கள்  வலைத்தளங்களில்  இன்றைய சூடாட இடுக்கைகளில் நிரம்பி வழிகின்றன.சைதப்பேட்டையில் வட நாட்டினர் எப்படி குளிக்கின்றார்கள் என்பதைபற்றி ,ஒரு பதிவர்  அதை தடுக்க கோரி அரசுக்கு தன் பதிவை பதிக்கின்றார் அதற்கு தலைப்பே அம்மண குளியல். தன் தளத்தை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக எதைவேண்டுமானாலும் எழுதுவது  என இப்டித்தான் இருக்கின்றது வலைப்பூக்கள்.

 

அவர்கள் எப்படி தன் வர்க்கத்துகாக எழுதுகின்றார்களோ அப்படித்தான் வினவின் படைப்புக்களும் உழைக்கும் வர்க்கத்துக்காக எழுதப்படுகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் மக்களின் வாழ்வாதரம் எப்படி தொடர்புடையதென்பதை   நிரூபிக்கும் அவரின் எழுத்துக்கள்.வினவின் எழுத்துக்களை படிக்கும் ஒவ்வொரு வரும் கண்டிப்பாய் நழுவ முடியாது பதில் சொல்லியே தீர வேண்டும்,மறுமொழிகளை படித்தாலே புரியும்   பின்னூட்டமிடும் யாருமே தான் எந்த சார்பை சார்ந்தவரென்பதை தெளிவாக எடுத்துவைக்கவேண்டிய முடிவுக்கு தள்ளப்படுகின்றார். குறிப்பாக சாதி வெறிக்கட்டுரையில் தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராய்  ஊடகங்கள் செய்த மோசடியை அம்பலப்படுத்தி மாணவர்கள் தாக்கியது சரியே என்ற கருத்தை வைத்தது.எதையும் நடு நிலைமையாய் பேசுவோம் எனக்கூறி  ஈனத்தனமாய் முடிவெடுத்த பலருக்கும் சவுக்கடி கொடுத்தது,அதனால் தால் குழலி எழுத நேர்ந்தது”செய்தியாளர்களை குறை சொல்லும் பதிவர்களே…..”.

 

கேள்விக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இங்கு இல்லை என்பது தான் உண்மை.ஆனால் கேள்வி கேட்கவே கூடாத பல புனிதங்கள் வரிசையாய் நிற்கின்றன.அவற்றை வெட்டி வீழ்த்தாது மக்களுக்கு கண்டிப்பாய் விடுதலை இல்லை.புனிதங்களுக்கு  கல்லறை கட்டும் வேலையை செய்யும் வினவை கண்டிப்பாய் பாராட்டித்தான் ஆக வேண்டும்,பொழுதுபோக்கென கூறி புரளிகளையும் புரட்டுகளையும் பேசும் இந்த வலைஉலகில்  வலைக்கு வெளியே பரந்து பட்ட மக்கள் உலகம் இருகின்றது அது இன்னமும் அடிமையாயிருக்கின்றது,அந்த அடிமை விலங்கை உடைக்க போராடி நம்மையும் அப்போர்க்களத்திற்கு அழைத்து செல்லும் வினவின் பதிவுகள் தொடர வேண்டும்.மீண்டும் சொல்வோம் இது மகிச்சிகரமான விசயமே ஏனெனில் மகிச்சி என்பது போராட்டம் தானே.