உலகமயமாதல் வேகம் பெற வக்கரித்த பாலியல் சுதந்திரம் உச்சத்துக்குப் போகின்றது. பாலியல் நோய்கள் என்றுமில்லாத வகையில் உலகைப் பிடித்தாட்டுகின்றது. உலக நாகரிகத்தின் தலைமையிடமாகக் கொண்டு கொண்டாடப்படும் அமெரிக்காவில் பாலியல் நோய் சமூகமயமாகிச் சமூகத்தையே நாசமாக்குகின்றது.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை 16 பேர் கொண்ட குழு செய்த ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொரு வருடமும் 1.2 கோடி அமெரிக்கர்கள் பாலியல் நோயில் சிக்கி விடுகின்றனர் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
மருத்துவத்துக்காகச் செலவு செய்யும் ஒவ்வொரு 43 டொலரிலும் இந்த நோயை நிவர்த்தி செய்ய ஒரேயொரு டொலரை மட்டுமே பயன்படுத்துகின்றனர். பாதிக்கப்படும் 1.2 கோடி மக்களில் கால்வாசி பேர் சிறுவர் சிறுமிகள் ஆவர். பால்வினை நோய், வெட்டை நோய், அக்கி, ஈரல் அழற்சி-பே, கிளாமைடியா போன்ற பாலியல் சார்ந்த நோய்களுக்குச் சிகிச்சை அழிக்காமல் மலட்டுத் தன்மை, பிறவிக் கோளாறு, கருச்சிதைவு, புற்றுநோய் மற்றும் மரணத்தை இவர்கள் சந்திக்கின்றனர். எயிட்சை உள்ளடக்காமல் பாலியல் சார்ந்த நோக்கங்களுக்கான செலவாக அமெரிக்கா வருடம் 1,000 கோடி டொலரைச் செலவு செய்கின்றது.
தனிமனிதச் சுதந்திர மூலதனக் குவிப்புக்குப் பண்பாட்டுச் சீரழிவு நிபந்தனையானது. இதனால் கட்டமைக்கப்படும் பாலியல் வக்கிரங்கள,; அந்தச் சமூகத்தையே நோய்க்குள்ளாக்குகின்றது. இயற்கையான புணர்ச்சி வெம்பிவெதும்பி அழுகிப் போகின்றபோது, அதுவே புதிய மூலதனத்தைத் தனிமனிதனுக்கு வழங்குகின்றது. சமூகத்தைச் சூறையாடித் தனிமனிதன் குவிக்கும் சுதந்திர ஜனநாயக வாழ்க்கையில், சமூகத்தின் எல்லாவிதமான உழைப்பு ஆற்றலையும், அவன் சிந்தனையையும், நடத்தையையும், பண்பாட்டையும், உணர்ச்சியையும் மூலதனமாக்கி விடுவதன் மூலம் சூறையாடும் ஜனநாயகம் நிலைநாட்டப்படுகின்றது. தனிமனிதப் பாலியல் உறவும் மூலதனத்தை உருவாக்குகின்ற போது, அதன் விளைவும் மூலதனத்தைக் குவித்துக் கொடுக்கின்றது. உலகில் எல்லாவிதமான பொருட்களும், உறவுகளும், நடத்தைகளும் உலகமயமாதலின் தனிமனிதச் சுதந்திர ஜனநாயகத்தின் அடிமையாகவே செயற்படுகின்றன.
1990-இல், பிரிட்டனில் மட்டும் பாலின வக்கிரத்தினாலான செலவு 2,000 கோடி டொலராக இருக்கின்றது என டாக்டர் பேட்ரிக் டிக்ஸன் தெரிவித்தார். அமெரிக்காவில் வருடந்தோறும் பருவ வயதுடைய 30 இலட்சம் பேர் பாலியல் வக்கிரத்தால் ஏற்பட்ட நோய்களால் துன்புறுகின்றனர்.31 இவை நோய் விளைவுகளின் அவலத்தையும், அதனால் குவியும் மூலதனத்தின் மையத்தையும் காட்டுகின்றது. பாலியல் இயல்பான இயற்கையின் புணர்ச்சியைத் தாண்டி வக்கரிக்கின்ற போது, அதன் பின்னால் நேரடியான மூலதனம் குவிவதையே இது காட்டுகின்றது. இங்கு சந்தை நேரடியாகப் பாலியலில் உருவாக்கப்படுகின்றது. இதைத் தாண்டி பாலியல் வக்கிரத்தினூடாகக் கட்டமைக்கும் சந்தை உலகமயமாதலின் மையப்புள்ளியாகின்றது.
அடுத்த பகுதியில் இதை மேலும் பார்ப்போம். ''ஆபாச அலைக்கு ஆட்சேபம்" என்ற கட்டுரையில் ''பாலுணர்வு (ளுநஒ) விற்பனை உத்தி ஆனது" என தொடர்ந்து பல பத்திரிக்கைகள், விளம்பரங்கள், கட்டுரைகள் என முடிவற்றுத் தொடர்கின்றது. (6.1.1995)34 மேலும் ''நிர்வாணத்தை விற்கின்றார்கள்" என்ற கட்டுரையில் கலை உலகில் பணக்கார பண்பாளர்கள் வீடுகளை அலங்கரிக்கக் கலைக் கல்லூரி கலை வளர்ப்போர் முன் நிர்வாணமாக நிற்க, வயிற்றுக்குக் கையேந்தும் பெண்களை 10 முதல் 20 ரூபாய்க்கு நிர்வாணமாக நிற்க வைத்து கலை சுரண்டுகின்றது. (6.3.1992)34 ஜப்பானில் 70,000 தாய்லாந்துப் பெண்கள் விபச்சாரத்துக்காக விற்கப்பட்டுள்ளனர்.57 ''காசு பண்ணும் கனவு வியாபாரிகள்" என்ற கட்டுரையில் செக்ஸ் கடைகள் செக்ஸ் வீரியத்தை உயர்த்த விளம்பரம் செய்கின்றன. (21.3.1991)34
உலகில் விற்பனையாகும் பண்டங்கள் பெண்ணின் உடல் அங்கத்தில் சந்தைப்படுத்தப்படுகின்றது. பொருட்கள் மீதான கவர்ச்சி பெண்ணின் பாலியல் அங்கங்கள் மீது கட்டமைக்கப்படுகின்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று படைப்பின் கருவை ஆராய முடியாத இலக்கியவாதிகள் அழகியலைப் பயன்படுத்துவது போல், சந்தைப்படுத்துவோர் பெண்ணைப் பயன்படுத்துகின்றனர். பெண்ணின் ஒவ்வொரு அங்கமும் மக்களின் மனதில் எதைப் பிரதிபலிக்கின்றதோ அதையே கற்பனையுடன் சுரண்டும் வர்க்கம் பயன்படுத்திப் பொருட்களை மக்கள் மயமாக்குகின்றது. அதைக் கனவுகளில் உருவாக்க, நினைவுகளில் பிரதிபலிக்க சில கவர்ச்சிக் கன்னிகளைத் திட்டமிட்டே நாட்டுக்கும், உலகுக்கும் உருவாக்கி அவர்களின் அங்கங்களில் (உதட்டில்) முத்தம் இட்டு பொருட்கள் வரும் போது மக்கள் அதன் மீதான (முத்தம்) மயக்கத்தில் பொருட்களை வாங்குகின்றனர்.
மறுதளத்தில் கலைஞன் என்ற தகுதி பெண்ணை நிர்வாணமாக்க விபச்சாரம் செய்ய ஜனநாயகம் இடமளிக்கின்றது. பெண்களின் வயித்துப் பிழைப்புக்குக் கையேந்தி, ஒரு நேர உணவுக்காக 10, 20 ரூபாய்க்காக நிர்வாணமாக நிற்க வைத்து இரசித்து ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் ஓவியனாகி விட, அது பணக்கார அரண்மனைகளில் ஓவியமாகி ஜனநாயகப்படுகின்றது. பெண்களின் ஒரு வாய் சோற்றுக்கான அவலம் ஒருவனைக் கலைஞனாகப் புகழ் பெறச் செய்கின்றது. இவை பணக்காரச் செல்வாக்கைப் பறைசாற்றும் ஒவியமாகப் பணக்காரனின் மறு இரசனை (வாசிப்பு போல்) ஆகின்றது. ஏழையின் துயரம், அதில் கொட்டிக் கிடக்கும் மனித அவலங்கள், அந்த அவலத்தில் நிர்வாணமாகும் பாலியல் வக்கிரத்தை எல்லாம் எதிர்த்துப் படைப்பாக்க முடியாத கலைஞன் பெண்ணின் பாலியல் உறுப்புகளை எல்லாம் பணக்காரக் கும்பலுக்கு கலை இரசனை என்ற பெயரில் வியாபாரம் செய்கின்றான். ஆனால் ஏழைப் பெண் பெறுவதோ எச்சில் சோறுதான் என்பது எதார்த்தமாகும். இது ஒருபுறம் நடக்க மறுபுறம் பணக்காரப் பெண்கள் நிர்வாணமாகி இலட்சம் இலட்சமாகச் சம்பாதிப்பதும் இந்தக் கலையில்தான். ஒருபுறம் வாழ்க்கையின் ஆதாரத்துக்கு நிர்வாணமாவதும், மறுபுறம் ஆடம்பரத்துக்கு நிர்வாணமாவதும் என்பது பொதுவாக ஆணாதிக்க இரசனையை நோக்கித்தான்.
இது சிலவேளை பொருள் விற்பனைக்கும், பணக்கார வீட்டை அலங்கரிக்கவும், வக்கிரமான பாலியல் நடத்தைக்கும் இவை பயன்பாட்டுச் சந்தைப் பெறுமானத்தைக் கொண்டவைதான். இந்த வக்கிரக் கலைகளை இந்தப் பூர்சுவா பிழைப்புக் கலைஞனையும் நாம் பாதுகாக்க வேண்டுமா? அல்லது ஒழித்துக்கட்ட போராடவேண்டுமா? இது வர்க்கப் போராட்டத்தின் துல்லியமான வர்க்கக் கேள்விகள்;. இதற்குப் பதிலளிக்காதவன் இந்த ஏகாதிபத்திய அமைப்பினைப் பாதுகாக்கும் ஒருவனாக நாம் இனம் காணவேண்டும். பாலுறவுச் சந்தையை ஒட்டி அனைத்து வடிவத்தையும் பலாத்காரம் கொண்டு புரட்சிக்கு முன் பின் சமூகத்தில் ஒழித்துக்கட்ட பாட்டாளிவர்க்கம் தயங்காது. பாட்டாளி வர்க்கத்தை எதிர்த்துப் போராடமுனையும் பிரிவுகளையும் இதன் போக்கில் வேரறுக்கவேண்டும்.