அரசியல்வாதிகள் நாட்டைச் சூறையாடுவதை எதிர்க்கும் தேசிய மக்கள் சக்தி, செல்வந்தர்களும், அன்னியர்களும்.. இலங்கை மக்களைச் சூறையாடுவதைப் பாதுகாக்கவும், ஆதரிக்கவும் செய்கின்றது.
இந்த அரசியலிலிருந்து தான் "மக்கள் பொருட்களின் விலையைக் குறைக்கக் கேட்கவில்லை" என்கின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு "ஊழல், மோசடி, வீண் விரயமே" காரணம் என்கின்றனர்.
மாற்றத்துக்காக மக்களின் வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி, மாற்றமாக முன்வைப்பது ஆட்சியிலுள்ள ஆட்களை மாற்றுவதே. புதிய நபர்களைக் கொண்ட ஆட்சி அதிகாரம் மூலம், சட்டத்தின் ஆட்சியை நிறுவி பொருளாதார அமைப்பு (சிஸ்ரத்தை) முறையைப் பாதுகாப்பதே.இந்த மாற்றம் மக்களின் வாழ்வில் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் தருமா!? உலகில் சட்டத்தின் ஆட்சிகள், மக்களுக்கான மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றதா எனின் இல்லையென்பது, எங்குமான பொது உண்மை.
தேசிய மக்கள் சக்தி பாதுகாக்க விரும்பும் சட்டத்தின் ஆட்சி, நிலவும் பொருளாதார அமைப்பைப் (சிஸ்ரத்தை) பாதுகாப்பதே. இந்தப் பொருளாதார அமைப்பானது (சிஸ்ரமானது), ஏகாதிபத்தியப் பொருளாதார அமைப்பு முறையேயொழிய. தேசியப் பொருளாதார அமைப்புமுறையல்ல.
ஜனாதிபதி தேர்தலின்; பின்பாக ஏகாதிபத்தியப் பொருளாதார அமைப்பை முன்னிறுத்தி மக்களின் கோரிக்கைகளை மறுதலிக்கும் விதமாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் சில்வா கூறுகின்றார் "மக்கள் பொருட்களின் விலையைக் குறைக்கக் கேட்கவில்லை. அசிங்கமான அரசியலை அகற்றத்தான் கேட்டனர்" என்கின்றார். இதை மட்டுமா, மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் எதிர்பார்த்தார்கள்!?
இதேபோன்று ஜனாதிபதி அனுரா பதவியேற்றதன் பின்பாக, மக்களின் எதிர்பார்ப்பை மறுதலிக்கும் வண்ணம், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் "மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயம் என்பனவே காரணமாக அமைந்ததெனக்" கூறி, "பழைய அரசியல் கலாச்சாரத்தின் மீதான எதிர்ப்பு, பிரஜைகள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள்.." என்கின்றார்.
பொருளாதார நெருக்கடிக்கு இவர்கள் கூறுவது மட்டுமா காரணமா எனின் இல்லை.
1. அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு பொருளாதார அமைப்பு (சிஸ்ரம்) காரணமாகும்.
2. நிதிமூலதனமும், அறா வட்டியும், வட்டிக்கு வட்டியும், அதற்கான நிபந்தனைகளும் காரணமாகும்.3. இந்த அமைப்பு முறையைப் (சிஸ்ரத்தை) பாதுகாத்து நிற்கும் ஜ.எம்.எவ். கொள்கைகள்
தேசிய மக்கள் சக்தி இலங்கையின் நெருக்கடிக்கு சமூக பொருளாதாரப் அமைப்புமுறை (சிஸ்ரம்) காரணமல்ல என்று கூறுவதுடன், அது சரியாக இருக்கின்றது என்று கூறுகின்றனர். சட்டத்தின் ஆட்சியையும், நடைமுறைகளையும் பாதுகாக்க தவறியதே காரணமென்கின்றனர்;. பொருளாதார அமைப்பைப் (சிஸ்ரத்தை) பேணிப் பாதுகாக்கத் தவறிய அரசியல் கலாச்சாரமே காரணம் என்கின்றனர். அதாவது முந்தைய ஆட்சியாளர்கள் சட்டத்தின் ஆட்சியை பாதுகாத்திருந்தால், தாங்கள் அரசியலில் அவசியமில்லை என்கின்றனர்.
சட்ட அமைப்பைப் பாதுகாக்கும் புதிய அரசியல் கலாச்சாரத்தைக் கொண்டு வருவதன் மூலமான மாற்றமென்பது, ஜ.எம்.எவ். முன்வைக்கும் ஊழலற்ற அமைப்பு முறையைப் (சிஸ்ரத்தை) பாதுகாப்பதே.
ஊழல், இலஞ்சம், அதிகார முறைகேடுகள், கொலைகள் .. தொடங்கி இதைப் பாதுகாக்கும் அரசியல் அனைத்தும் தோற்கடிக்கப்பட வேண்டுமென்பதன் பொருள், சுரண்டும் வர்க்க (பெரும் செல்வந்தர்கள்) ஆட்சியை பாதுகாப்பதல்ல. மாறாக உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிறுவுவதும், அதைக் கண்காணிக்கவும், திருப்பி அழைக்கவும் கூடிய, அரசியல் கலாச்சாரத்தைக் கொண்ட சமூக மாற்றத்தையே.
இதன் பொருள் தேசம், தேச வளங்கள் தொடங்கி உழைக்கும் மக்களின் உழைப்பு வரை, அனைத்துச் செல்வமும், மக்களுக்கானதாக, மக்களுடையதாக இருக்க வேண்டும்.
இலங்கை பெரும் செல்வந்தர்களினதும், அன்னியர்களினதும் … சொத்தாக, உடைமையாகக் கொண்ட அமைப்பை (சிஸ்ரத்தை) பாதுகாப்பதை மாற்றமாக மக்கள் கருதவில்லை. அதாவது இலங்கை வளங்களை அரசியல்வாதிகள், அதிகார வர்க்கங்கள் சூறையாடுவதை மட்டும் மக்கள் எதிர்க்கவில்லை, மாறாக இலங்கை மூலதனங்கள் சூறையாடுவதையும், அதை அன்னியனுக்கு தாரை வார்ப்பதையும் மக்கள் எதிர்க்கின்றனர்.
இலங்கையின் பொருளாதாரமாக மக்கள் கோருவது டொலர் பொருளாதாரத்தையல்ல, தேசிய பொருளாதாரத்தையே.
தொடரும்
16.10.2024
- கள்ளரை வெளியேற்ற அனுரவுக்கு ஆதரவு" தெரிவிக்க வேண்டுமா!? - யாருக்கு வாக்களிக்க வேண்டும்-பகுதி - 2
- மக்களின் குரலாக யார் இருக்கின்றனர்? யாருக்கு வாக்களிக்க வேண்டும் பகுதி - 1
- ஜே.வி.பியின் வெற்றியும் சமூகத்தின் தோல்வியும்
- பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஜே.வி.பி. குறித்த கற்பனைகளும் நிஜங்களும்.
- ஜே.வி.பி. மீதான அரசியல் அழுத்தங்கள் மூலம் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்
- தமிழ் தேசியமும் - சாராயக் கடையும் - பொலிஸ் அதிகாரமும்
- யாருக்கு வாக்களிக்க வேண்டும்!? ஏன்!? எதற்காக!?
சமூக மாற்றத்தை மறுதலிக்கும் தேசிய மக்கள் சக்தி . - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 3
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode