தேர்தல், தேர்தல்......!
மகிந்தவைத் தூக்க வாக்கு
“குடும்பாட்சிக் கும்மாளம்
கொன்றுவிடும் கொடூரம்
ஊழலே மிகுதி“
மைத்திரிக்கு வாக்கு
மைத்திரியும் மகிந்தவும் பொல்லிழுப்பில்
பிழைப்பரசியல்வாதிகள்
சில்லுக் கோட்டுப் பாய்ச்சலில்
இதே கோசம், இதேவேடம்...¨!அன்று
சந்திரிகாவைத் தூக்க மகிந்தவின் கூட்டு
மார்தட்டிக் கத்திச்சொன்ன...!
“குடும்பாட்சிக்கும்மாளம்
கொன்றுவிடும் கொடூரம்
ஊழலே மிகுதி.“.....! வாக்கெனக்கு
வாக்கெடுத்தார் மகிந்தர்.
மொத்தமாக மக்களை முதலாளிய
பிழைப்பரசியற் சக்கரம் நெரிக்க
மீண்டும் தேர்தல் கூத்து
தமிழர் தரப்பும் கூட்டாக கூத்தில்
சங்ஊதி, அளவு, ஆராய்வு,
பின்னர் தீர்ப்பு நாம்தருவோம்
வாக்கெங்கென.....!
மண்ணாங்கட்டிகளா மழையில்
கரைந்து போயின?
இனவாதத்தீயில் மலையளவு
மக்கள்துவண்டு மாண்டார்கள்.
இனவாத வெறியர்களுக்கு வாக்கா?
வளமா இது¨! வறட்சியா?
எமது புதிய போக்கு
இடதுசாரிமாற்றீடாகுமா?
-திலக்
26.12.2014