Wed01222020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
June 2012

Saturday, 30 June 2012

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 63 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 30 June 2012 07:18
அரசியல்_சமூகம் / நேசன்

வடக்கில் புலிகளின் ஆதிக்கமும் "தீப்பொறி"க் குழுவைக் குறிவைத்த செயற்பாடுகளும்

வடக்குக் கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் நிறுவப்பட்டு முற்போக்கு ஜனநாயக கருத்துக்களைக் கொண்டிருந்த அனைவர் மீதும் தமது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருந்த போதிலும் என்னுடன் பேசுவதற்கு செல்வி எனது வீட்டுக்கு வந்திருந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் என்னை வழிமறித்து பேச அழைத்தபோது நான் பேசுவதை எதற்காகத் தவிர்த்துக் கொண்டேன் என்பதை செல்விக்குத் தெளிவுபடுத்தியதுடன் செல்வி தனது பேச்சை ஆரம்பித்தார். நான் எதிர் பார்த்தது போலவே செல்வியினுடைய பேச்சு நீண்டு சென்று கொண்டிருந்தது. புளொட்டில் இணைந்து நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் செயற்பட்ட காலங்கள், புளொட்டின் தலைமையின் அராஜகப் போக்கால் ஆயிரக்கணக்கான இளைஞர்களினதும் யுவதிகளினதும் உழைப்பு, தியாகம் என்பன விரயமாய்ப் போனமை, ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசிசப் போக்கு ஈழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டிருந்த பல நூற்றுக்கணக்கான போராளிகளையும் புத்திஜீவிகளையும் அப்பாவித் தமிழ், சிங்கள மக்களையும் பலி கொண்டுவிட்டிருந்ததையும் எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார்.

Read more...
Last Updated ( Saturday, 30 June 2012 07:31 )


Friday, 29 June 2012

தங்கள் மனிதவிரோத குற்றங்களை மூடிமறைக்க இலக்கியம், இலக்கியமும் அரசியலும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 29 June 2012 17:24
பி.இரயாகரன் - சமர் / 2012

30 வருடமாக புலி அரசியலையும், அதன் மனிதவிரோத குற்றங்களையும் எதிர்த்து போராடியதை எற்காது, முள்ளிவாய்க்காலுக்கு பின்னான புலிகள் பற்றி விமர்சனமும் அதன் அரசியலும் எதுவாக இருக்கின்றது? அதன் நோக்கம் என்னவாக இருக்கின்றது? முள்ளிவாய்க்காலுக்கு முன் இவர்களுக்கு புலிகளுடன் முரண்பாடு இருந்து இருப்பின், எந்த அரசியலின் அடிப்படையில் இவர்கள் முரண்பட்டு இருப்பார்கள்? அதை இன்று என்னவாக, எப்படி அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்? இதை எல்லாம் மூடிமறைக்க, இலக்கியம் என்ற தகுதி போதுமா? இப்படிப்பட்ட இவர்கள வேறுயாருமல்ல, புலிகளின் அரசியல் தவறுகள் எல்லாம் தெரிந்தவர்களாக இவர்கள் இருந்ததுடன், புலிகளின் குற்றங்களுக்கும் தவறுகளுக்கும் உடந்தையாகவும் இருந்துள்ளனர்.

Read more...
Last Updated ( Friday, 29 June 2012 19:22 )


Thursday, 28 June 2012

நேபாள புரட்சி: வெற்றிக்கான பாதை......! ஆய்வறிக்கை. PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 28 June 2012 09:18
அரசியல்_சமூகம் / சூறாவளி

இந்த நூற்றாண்டின்,உலக உழைக்கும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய நேபாள புரட்சி,நேபாள மாவோயிச கட்சித் தலைமையின் துரோகத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டு பின்னடைவை சந்தித்துள்ளது.அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டு விட்டது.செம்படையை நேபாள ராணுவத்தைக் கொண்டு பிரசந்தா,பாபுராம் கும்பலின் உத்தரவின் பேரில் நேபாள ராணுவத்தின் மூலம் நயவஞ்சகமாக சுற்றி வளைத்து களைக்கப்பட்டுவிட்டது.

Read more...
Last Updated ( Thursday, 28 June 2012 09:22 )


Wednesday, 27 June 2012

படிப்பகத்தை நடத்துவது தவறா!? தவறை மூடிமறைக்கவா விமர்சிக்கின்றோம்!? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 27 June 2012 08:36
பி.இரயாகரன் - சமர் / 2012

கலையரசனின் பிரமுகர்த்தன "மார்க்சியத்தின்" கண்டுபிடிப்பு தான் இது. "தவறை நியாயப்படுத்தி ஏதாவது காரணம் சொல்லத் தானே வேண்டும்" என்று, யோ.கர்ணனின் நூல் மேலான எமது விமர்சனத்துக்கு விளக்கம் கொடுக்கின்றார் கலையரசன். பிரமுகர் என்ற வகையில் மற்றொரு பிரமுகரை உருவாக்கவும், அவரை பாதுகாக்கவும் குறுக்குவழியில் முனைகின்றார் கலையரசன். இதற்காக "தவறு" ஒன்றை, அவர் திடீரெனக் கண்டு பிடிக்கின்றார். வேடிக்கை என்னவென்றால் இவர் "தவறாக" கண்டுபிடித்த விடையம், படிப்பகத்தில் மின்நூலாக்கப்பட்டுள்ள 10000 பிரதிகளுக்கும் பொருந்தும். இவர் சொல்லும் அதே "தவறு"டன் தான் அவையும் இணையத்தில் "உரிமை" மீறி ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது. இப்படி இவர் "தவறு" என்று கூறுவது, மின் நூலாக்கப்பட்டவற்றுக்கு அனுமதியை நாம் பெறவில்லை என்பதுதான். ஆக உங்கள் படிப்பகத்தை மூடக் கோருகின்றார்.

Read more...
Last Updated ( Wednesday, 27 June 2012 09:07 )


Tuesday, 26 June 2012

சிவரஞ்சித் ஏன் தெல்லிப்பளை வாறவன்? - (வதைமுகாமில் நான் : பாகம் - 51) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 26 June 2012 09:08
பி.இரயாகரன் - சமர் / 2012

குறிப்பு : சிவரஞ்சித் ஏன் தெல்லிப்பளை வாறவன்? என்று மாத்தையா என்னிடம் கேட்டான்.

விளக்கம் : புலிகள் இயக்கத்தை கட்டியவரில் ஒருவரே சிவரஞ்சித். பல்கலைக்கழக மாணவராக செயல்பட்ட இவரும், இவரின் குழுவும் பலரை புலிக்கு இணைத்தனர். 1985க்கு பிந்திய காலத்தில் புலியுடன் இக்குழு முரண்பட்ட நிலையில், புலியில் இருந்து விலகிய போதும் அரசியலில் ஈடுபட்டனர். இவருடன் இருந்த முக்கிய நபரை யாழ் கச்சேரியடியில் இராணுவம் சுட்டுக்கொன்ற நிலையிலும், இவர் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது தனியாக ஒரு சிறு இலக்கிய சஞ்சிகையை கொண்டு வந்து பின் நிறுத்தியவர். புலிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியபடி, முரண்பாட்டுடன் விலகியும் இருந்தார். ஆனால் புலிகளுக்கு தொடர்ந்து உதவி என்ற பெயரில், அதன் பினாமியாகவே இயங்கினார். இவர் நோர்வே வந்த பின்பும் சரி, பின் லண்டனில் புலியின் ஒளிபரப்பில் முக்கிய பணியை செய்த போதும் சரி, புலியின் பினாமியாக செயல்படுவதையே எப்போதும் தனது அரசியலாக கொண்டவர்.

Read more...
Last Updated ( Tuesday, 26 June 2012 09:12 )


Sunday, 24 June 2012

பிள்ளையின் கதை (மட்டுமல்ல) PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 24 June 2012 22:11
அரசியல்_சமூகம் / கனகமணி

பிள்ளை (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) சுவரில் சாய்ந்து ஒரு காலை நீட்டிக் கொண்டு மற்றக்காலின் முழங்காலில் ஒரு கையை வைத்து முகட்டை வெறித்துப்பார்த்துக் கொண்ண்டிருந்தான். இன்று நேற்றல்ல 17 வருடமாக அவனிருக்கும் அந்த செல்லும், அந்த முகடும்தான் அவனது உலகம்.

Read more...
Last Updated ( Sunday, 24 June 2012 22:18 )


Saturday, 23 June 2012

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 62 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 23 June 2012 06:45
அரசியல்_சமூகம் / நேசன்

இந்தியப் படையின் வெளியேற்றமும் வடக்குக்-கிழக்கில் புலிகளின் ஆதிக்கமும்

இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்தியப்படையின் வெளியேற்றத்தையடுத்து பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபைக்கெதிராக ஒன்றிணைந்து செயற்பட்டுக்கொண்டிருந்தனர். பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசுடன் கைகோர்த்துக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் உலகின் நான்காவது பெரிய இராணுவத்தை தமது போராட்டம் மூலம் விரட்டியடித்துவிட்டதாகக் கூறி ஆர்ப்பரித்தபடி வன்னியில் அடர்ந்த காடுகளுக்குள் தலை மறைவாக ஒளித்திருந்த புலிகள் மீண்டும் மக்கள் வாழும் பகுதிகளுக்கு திரும்பியிருந்தனர். ஆனால் இலங்கையிலிருந்து இந்தியப்படை விலகிக்கொண்டதென்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்தியப்படைக்கெதிரான தாக்குதல்களால் மட்டுமே நிகழ்ந்ததென்ற கருத்தானது தவறானதாகும். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின் இந்தியாவிலும் இலங்கையிலும் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் - பாராளுமன்றத் தேர்தல்கள் - இந்தியப்படை இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு காரணங்களாக அமைந்திருந்தன.

Read more...
Last Updated ( Saturday, 23 June 2012 10:56 )


Thursday, 21 June 2012

யோ.கர்ணனின் "சேகுவேரா இருந்த வீடு" என்ற சிறுகதைத் தொகுப்பின் ஊடான "புனர்வாழ்வு" அரசியலை இனம் காணல் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 21 June 2012 13:41
பி.இரயாகரன் - சமர் / 2012

கடந்தகால இயக்க நடத்தைகள், இயக்க புனைவுகள் சார்ந்தும், மக்களின் அவலங்கள் சார்ந்தும் யோ.கர்ணன் கதைசொல்வது ஏன்? சமூகம் மீதான அவரின் சமூகப் பார்வை தான் என்ன? இனவொடுக்குமுறைக்கு எதிரான அவரின் செயல்பாட்டுத்தளம் என்ன? புலிக்கு பின் எல்லா சந்தர்ப்பவாதிகளும், பிழைப்புவாதிகளும் புதிய முகமூடிகளுடன், மூடிமறைத்த தங்கள் நோக்கங்களுடன் களத்தில் இறங்குகின்றனர். இதை யோ.கர்ணனின் கதைகளிலும் காணமுடியும். அரசு வழங்கிய (சுய) "புனர்வாழ்வை" இந்த கதைகள் மூலம் இனம் காணமுடியும்.

கதைகளின் நோக்கம் மிகத் தெளிவானது. சமூக நோக்கு கொண்டவர்களை அரசியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபடுவதில் இருந்து அன்னியப்படுத்துவது தான். அதே நேரம் சமூக நோக்கு கொண்டவர்களை பற்றிய வெறுப்பை, மக்கள் மத்தியில் ஊட்டுவதுதான். இந்த வகையில் கதைகள் கடந்தகால இயக்கங்கள் நடத்தையை கருப்பொருளாக கையில் எடுத்து, மனித அவலங்களைக் காட்டி வெறுப்பை ஊட்டுகின்றது. யுத்தத்தின் பின் போராட்டத்துக்கு எதிரான பொது உணர்வுகளை, அரசியல் ரீதியாக வளர்ப்பதை அடிப்படையாக கொண்டதே இந்த "புனர்வாழ்வு" கதைகள். மக்களுக்கும் "புனர்வாழ்வு" அழிக்க இந்த கதைகள் மூலம் முனைகின்றது. அந்த நோக்கில் இவர்கள் எழுதுகின்றனர், எழுத வைக்கப்படுகின்றனர். போராட்டம் தவறானதா? இல்லை. மாறாக அதன் அரசியலும், அதன் சமூகப் பார்வையும், அதன் நோக்கமும் தான் தவறானதாக இருந்தது. இதை தங்கள் கதைகளில் கூறுவதை இவர்கள் மறுதலிக்கின்றனர். இந்த அடிப்படையில் விமர்சனம் சுயவிமர்சனத்தைக் கூட, இவர்கள் தங்களளவில் செய்ய மறுக்கின்றனர். இந்த அடிப்படையில் சமூகத்தை வழிநடத்தும் வண்ணம், சமூகப் பொறுப்புடன் இவர்கள் கதை சொல்லவில்லை.

Read more...
Last Updated ( Thursday, 21 June 2012 13:48 )

எம்மினத்தை இனவாதத்துக்கு எதிராக அணிதிரட்டாது புரட்சியை நடத்தமுடியுமா? - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 12 PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 21 June 2012 10:50
பி.இரயாகரன் - சமர் / 2012

யாரைக் கொண்டு தான் புரட்சியை நடத்தமுடியும்? சில புரட்சியாளர்களின் புரட்சிக் கோசம், மக்களுக்கு எதிரான சதியாகிவிடும். நாம் ஒடுக்குமினமாக இருந்தால், ஒடுக்கப்பட்ட இனத்துக்காக போராடவேண்டும். அந்தப் போராட்டத்தை ஒடுக்கும் இனத்துக்குள் தான் நடத்தவேண்டும். இனவொடுக்குமுறையை அந்த இனம் சார்ந்து முன்னெடுப்பதால், அந்த மக்களை அதற்கு எதிராக அணிதிரட்ட வேண்டும். சிங்களப் புரட்சியாளர்கள் அதைச் செய்யாது, ஒடுக்கப்பட்ட இனத்தை அணுக முற்படுகின்றனர். ஒரு தவறான அரசியல் பாதை.

Read more...
Last Updated ( Thursday, 21 June 2012 10:56 )


Tuesday, 19 June 2012

ஊடக தர்மங்கள் ! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 19 June 2012 20:34
அரசியல்_சமூகம் / கனகமணி

உலகெங்கும் பரந்து வாழும் பலவேறுபட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பணி மிகப்பெரியது. தனிமனித விருப்பு வெறுப்புக்களுக்கப்பால், ஊடகத்தின் அடிப்படை நியதிகளையும் விட்டு விலகாது ஒரு செய்திக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைப் பொறுத்து அதன் உள்ளடக்கத்தையும், தரவுகளையும் கொண்டு செல்வது ஊடகங்கள்தான்.  ஆனாலும், ஒரு சில ஊடகங்களைத் தவிர, பெரும்பாலான ஊடகங்கள் வியாபாரத்தையே நோக்கமாகக் கொண்டிருப்பதால்  போட்டி மனப்பான்மை தானாகவே வந்து விடுகிறது. அச்சு ஊடகங்கள் போன்று செய்தியை முந்தித் தருவது யார் என்று இன்றைய இணைய யுகத்தில் போட்டி போட முடியாது. ஆகவே அதிகமான தகவல்களையும், மேலதிக விபரங்களையும் யார் தருவது என்பதில் இணைய ஊடகங்கள் போட்டி போடுகின்றன.

Read more...
Last Updated ( Sunday, 24 June 2012 22:15 )

Page 1 of 3