Fri12132019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 19 May 2010
நக்சல்பாரி புரட்சி நாயகன் தோழர் கனுசன்யாலுக்கு வீரவணக்கம்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 19 May 2010 21:12
புதிய ஜனநாயகம் / 2010

மாபெரும் நக்சல்பாரி உழவர் பேரெழுச்சியைக் களத்தில் நின்று தலைமையேற்று வழிநடத்தியவரும் கனு சன்யால் என்று பிரபலமாக அறியப்பட்டவரும் கனுபாபு என்று அன்புடனும் புரட்சிகர மரியாதையுடனும் அழைக்கப்பட்டவருமான கிருஷ்ணகுமார் சன்யால் கடந்த மார்ச் 23ஆம் நாள் நக்சல்பாரி என்று சிறு நகருக்கு அருகே உள்ள ஹட்டிகிசா கிராமத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்செய்தி கேட்டு நெஞ்சில் வலியும் வேதனையும் அடையும் இலட்சக்கணக்கான நக்சல்பாரி புரட்சியாளர்களோடு நாமும் இணைந்து கனுபாபுக்கு வீர அஞ்சலி செலுத்துகிறோம்.

Read more...


தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமா? ஏகாதிபத்தியக் கைக்கூலி நிறுவனமா? PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 19 May 2010 20:51
புதிய ஜனநாயகம் / 2010

காலனிய ஆட்சிக் காலத்தில் அன்று பிரிட்டனின் நூற்பாலைகளுக்குப் பருத்தி தேவைப்பட்டது. இத்தேவையை இந்தியாவின் மூலம் நிறைவு செய்வதற்காக அன்றைய சென்னை மாகாணத்தில் பருத்தி உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்துடன் கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலியில் 800 ஏக்கரில் பருத்தி விவசாயத்தை சோதனை அடிப்படையில் காலனிய அரசு மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக சென்னை சைதாப்பேட்டையில் 1868 இல் விவசாயக் கல்லூரியைத் தொடங்கியது. இது பிரிட்டனுக்குத் தேவையான பருத்தி மற்றும் விவசாயக் கச்சாப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கான வல்லுநர்களை உருவாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தது.

Read more...


புளாட் அமைப்பை விமர்சித்த எங்களை புலி என்றனர், துரோகி என்றனர் - புளாட்டில் நான் பகுதி - 09) PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 19 May 2010 20:51
அரசியல்_சமூகம் / சீலன்

எத்தனையோ அராஜகங்கள் புளாட் முகாம்களில் நடந்து கொண்டிருந்தது. நாம் இதை புளாட்டின் வளர்ச்சிக்கான, கழக உயர்மட்டத்தினருக்கு முன்வைத்தோம். இதனால் எமது உயிருக்கு ஆபத்து என்றும் உணர்ந்திருந்தோம். தீப்பொறியினரைப்போல தமது உயிர்களுக்கு பாதுகாப்புத்தேடி, கழகத்தில் இருந்து தப்பி ஒடியதைப் போன்று நாம் செய்யவில்லை. மாறாக எமது உயிர்களைப் பணையம் வைத்து இதை செய்தோம். எமது அன்றைய அரசியல் வளர்ச்சிக்கு எட்டியடி, இதை செய்தோம்.

Read more...
Last Updated ( Wednesday, 19 May 2010 20:56 )

கோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 19 May 2010 20:40
புதிய ஜனநாயகம் / 2010

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள பிளாச்சிமடா கிராமத்தில் அமைந்துள்ள கோக் ஆலையை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நடத்திவரும் போராட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் அப்போராட்டத்தில் தற்பொழுது முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

Read more...


ரவுடி போலீசாருக்கு அரணாக நிற்கும் கருணாநிதிக்குக் கருப்புக் கொடி! வழக்குரைஞர்களின் கலகம்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 19 May 2010 20:33
புதிய ஜனநாயகம் / 2010

அனைவருக்குமான பொது விநியோக முறையைக் கொல்லைப்புற வழியாக நீக்கிவிட முயலுகிறது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம். கடந்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் நாளன்று ஈழப்பிரச்சினையையொட்டி பார்ப்பன சகுனி சுப்பிரமணியசாமியை எதிர்த்துப் போராடிய வழக்குரைஞர்களைப் போலீசார் நாள் முழுக்கக் கொடூரமாகத் தாக்கிய பயங்கரவாதத்தைத் தமிழக மக்கள் மறந்திருக்க முடியாது. இந்தக் காக்கிச் சட்டை பயங்கரவாதத்தில் இருந்து நீதிபதிகளும் தப்பவில்லை. நீதிமன்றத்தையே சூறையாடிய போலீசு பயங்கரவாதத்தை எதிர்த்து வழக்குரைஞர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் எந்தப் போலீசு அதிகாரி மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா பானுமதி அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்ட போதிலும் கருணாநிதி அரசு அசைந்து கொடுக்கவில்லை.

Read more...


பசியைப் போக்குமா? பட்டினியில் தள்ளுமா? PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 19 May 2010 20:09
புதிய ஜனநாயகம் / 2010

உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துகொண்டே போவதைக் கட்டுப்படுத்துவதற்கு சிறு துரும்பைக்கூட எடுத்துப் போட விரும்பாத மன்மோகன் சிங் அரசு இந்திய மக்கள் அனைவருக்கும் உணவு கிடைப்பதை உத்திரவாதப்படுத்துவதற்காகத் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவரப் போவதாக அறிவித்திருக்கிறது. இது தொடர்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள நகல் சட்டத்தை ஆராந்த மைய அரசின் அமைச்சரவைக் குழு இந்த நகலில் சில திருத்தங்களைச் செய்யச் சொல்லிப் பரிந்துரைத்திருக்கிறது. மைய அரசின் இந்தக் கரிசனத்தைக் கேள்விப்படும்பொழுது ரொட்டி வாங்கமுடியாமல் திண்டாடிய பிரஞ்சு மக்களிடம் கேக் வாங்கிச் சாப்பிடச் சொல்லி பிரஞ்சு பேரரசி கிண்டலடித்த வரலாற்று வக்கிரம்தான் நினைவுக்கு வருகிறது.

Read more...


புலியோடு முடியுமா மக்கள் அணியாகி திரளட்டும்…… PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 19 May 2010 18:48
அரசியல்_சமூகம் / கங்கா

நரபலியாடிய நாட்களின் துயரொடு
நொருக்கிய கனவுகள்
கருக்கிய உயிர்களின் சாம்பலில்
முளைத்த காட்டாட்சி அரசு
மனிதம் அலறிட அமைதியான உலகில்
மானுடம் மறுமுறை செத்தது
பொறியிடு நகர்வாய் புலத்தவன் வீழ்த்தினான்
வறுகிய செல்வம் வாய்த்தும் அடங்குமா….. Read more...

Last Updated ( Wednesday, 19 May 2010 18:53 )

புலியை ஏன் விமர்சிக்கின்றீர்கள்!? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 19 May 2010 07:06
பி.இரயாகரன் - சமர் / 2010

எம்மை நோக்கி  கேள்விகளாகவும், குற்றச்சாட்டுகளாகவும் இது முன்வைக்கப்படுகின்றது. நீங்கள் அவர்களை விட்டுவிட்டு, தனியாக அரசியலை செய்யுங்கள் என்கின்றனர். அவர்களை விமர்சிப்பதை கைவிடுங்கள்; என்கின்றனர். விமர்சனம் செய்யாதீர்கள் என்கின்றனர். விமர்சிப்பதால் அவதியுறுவோரும், இப்படி இப்படி செய்வதால் என்ன இலாபம் என்று கேட்போரும் அடங்குவர்.

Read more...

Last Updated ( Wednesday, 19 May 2010 07:12 )

மே 18-ன் ஓராண்டு - செய்தியும் செய்திக்கண்ணோட்டமும்- 15-05-2010 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 19 May 2010 05:20
அரசியல்_சமூகம் / அகிலன்

கடந்த வருடத்தின் மே மாத நடுப் பகுதியை விடுதலைப் புலிகளின் அரசியலுக்கு, அரசியல் போராட்டத்திற்கு ஏற்பட்ட சுனாமி அரசியலாகப் பார்க்கலாம். ஏன் ஓர் பயங்கரவாத அமைப்பொன்றின் அஸ்தமன காலமாகவும் கணிக்கலாம். தமிழ்த் தேசியத் தலைமை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தேர்தல் வெற்றிக்கான எடுகோளாக எடுக்க, புலிகள் எவ்வித சமூக விஞ்ஞான அரசியல் ஆய்வுமின்றி அதைத் தம் கைகளில் எடுத்து ஓர் 30-வருட காலம் அரசியல் அரசோச்சினார்கள். புலிகளின் இவ்வரசியல் போராட்ட மார்க்கம் விடுதலைப் போருக்கான எப்பரிமாணத்தையும் எட்டாத பட்சத்தில், முள்ளிவாய்காலுக்கு ஊடாக நந்திக்கடலில் போய் சங்கமமாகியிற்று….

Read more...
Last Updated ( Wednesday, 19 May 2010 05:26 )