Mon04062020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Monday, 09 January 2006
புதிய தலிபான்கள்!... PDF Print Write e-mail
Written by admin2
Monday, 09 January 2006 20:20
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

இலங்கையின் இனமுரண்பாட்டை வெகுவாக உள்வாங்கும் ஒரு சராசரி குடிமக(ளு)னுக்கு அதன் முரண்பாடானது இன ஒடுக்குமுறையின் பலாத்தகார வன்முறையாகத்தாம் தெரிகிறது.நாம் எதற்காகப் போராடுவதற்கு வெளிக்கிட்டோம்?, ஈழக் கோசம் எதையொட்டி எழுந்தது?,போராடும் சூழ்நிலை எங்ஙனம் தோன்றியது?,இப்போது மீளவும் இலங்கையரசோடு பேசவேண்டிய தேவையும்,யுத்தம் மேற்கொண்டு நகர முடியாத சூழ்நிலையும் எப்படித் தோன்றியது?,எமது பிரச்சனை இலங்கை அரசுக்கும்,தமிழ் பேசும் மக்களுக்குமானதாகக் கற்பிக்கப்பட்டது சரிதாமா?

Read more...

இயற்கையும்,விடுதலையும்... PDF Print Write e-mail
Written by admin2
Monday, 09 January 2006 19:51
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

பொதுவாக ஒரு வாழ்சூழலை மனிதர்களுக்கான வாழ்வுச் சுதந்திரமாக வரையறுக்க முடியுமா?புவிப்பரப்பில் உயிர்வாழ்வுக்கான அனைத்து முயற்சிகளையும் எல்லாவகை உயிரிகளும் தம்மால் முடிந்தவரை ஒரு வரையறைக்குள் உணருகின்ற இன்றைய பொழுதுவரை புவியின்மீதான இடைச்செயல் தத்தமது உணர்வினது மட்டுப்படுத்தப்பட்ட "அறிதிறனால்"செயலூக்கமாக விரிகிறது.வாழ்வாதரமற்ற பகுதிகளைவிட்டகலும் உயிரியானது தனது இருப்புக்காக இன்னொரு பகுதியைக் கண்டடையவேண்டிய நிர்பந்தம் சூழலால் தீர்மானிக்கப்படுகிறது.இந்தச் சூழலலைத் தீர்மானித்த இயற்கையானது வரலாற்றுப்போக்கில் வெகுவாகப் பாதிப்படைகிறது.மனிதரின் உயிர்வாழ்வுக்கான புவிமீதான இடைச்செயல் அத்தியவசியத்துக்கு மீறிய மட்டுப்படுத்தமுடியாத குவிப்புறுதிய+க்கத்தால் தொடர்ந்து இயற்கை வளம்,மனித வளம் அழிக்கப்படுகிறது.இதன் உச்சபச்ச நுகர்வ+க்கம் மக்களின் உயிர்வாழ்வைக் கேள்விக் குறியாக்கிவிடுகிறது.இத்தகைய நிலைமையில் இன்றைய மக்கள் சமுதயாங்களின் இருப்பானது எதுவரை சாத்தியமாகும்?

Read more...

தனிநபர்-புரட்சி-முன்னெடுப்பு, சில அபிப்பிராயங்கள்! PDF Print Write e-mail
Written by admin2
Monday, 09 January 2006 19:48
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

தனிநபர்களான ஒவ்வொரு மனிதரும் தமது விருப்புறுதியின்மீதான அதீதக் கற்பனைகளை,மதிப்பீடுகளை,சமூகப்பார்வைகளை வர்க்கஞ்சார்ந்த வர்க்க உணர்வாகப் பொருத்திவிட்டு"பொய்யான"உணர்வுத்தளத்தை நிறுவுவது திமிர்தனமான வெற்றுச் செயலாகும்.வர்க்கச் சமூகத்தில் வர்க்க அரசியலை முன்னெடுப்பதற்கான எந்தவொரு அமைப்பாண்மையுடைய புரட்சிகரக் கட்சியையும் இன்றைய நிதிமூலதனமும்,விஞ்ஞானமும் விட்டுவைக்கவில்லை.வர்க்கமென்றாலே என்னவென்றறிய முடியாதவொரு இரண்டுங்கெட்டான் சமுதாயமாக மனித சமூக வாழ்வு கட்டப்படுகிறது.இதுவரையான எல்லா மதிப்பீடுகளும் வரலாற்று இயங்கியல் போக்கில் வடிவத்தை உடைத்துவிட்டு உள்ளடக்கத்தையே முன் தள்ளுகிறது.

Read more...