மேற்கு ஏகாதிபத்தியங்களின் சட்டவிரோதமானதும், மாபியாத்தனமானதுமான பொருளாதாரத் தடைகளைச் சந்திக்கும் சின்னச் சிறிய நாடுகளான கியூபா, வடகொரியா, வெனிசுலா, ஈரான், சிரியா .. போன்ற நாடுகள், இன்னமும் உலகில் நீடித்து நிலைத்து இருக்க முடிகின்றது. இன்னும் இது போன்று பல நாடுகளும், பல உதாரணங்களும் உண்டு. இந்த வரிசையில் முள்ளாள் கம்யூனிச ...
யுக்ரேன் யுத்தம் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கெடுபிடி யுத்தமாக மாறிவிட்டது. நேட்டோவுக்குள் பிளவுடன் கூடிய ஜரோப்பிய ஏகாதிபத்திய மேலாதிக்கம் தவிர்க்க முடியாதாகியிருக்கின்றது. இதுவரை காலம் அமெரிக்காவிடம் இருந்த உலக மேலாதிக்க முடிவுகளை அறிவிக்கும், ஒன்றிணைந்த ஐரோப்பிய ஏகாதிபத்திய முகாம் யுத்தத்தை நவீனமாக்கி - வீரியமாக்கி த...
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னான மூலதனங்களுக்கு இடையிலான மறைமுகமான ஏகாதிபத்திய யுத்தங்கள், இன்று நேரடி யுத்தமாக மாறுகின்ற புதிய கட்டத்துக்குள் உலகம் சுருங்கி வருகின்றது.
யுக்ரேனில் தொடங்கி இருக்கும் யுத்தம் விரைவில் சீனக் கடலிலும் எதிர்பார்க்கலாம். தாய்வான் மீதான சீனா யுத்தத்தை தூண்டும் வண்ணம், அமெரிக்க தலைமையிலான நேட்டோ,...
நியூட்டன் மரியநாயகம்
வரலாற்றுப் புரிதலும் நானும்
“இன்று சமூகத்தில் ஆளுமை /ஆதிக்கம் செலுத்தும் கடந்த காலம் பற்றிய கதைகளையும், அது சார்ந்த, ஆதிக்க சக்திகளின் வரலாற்று உருவங்களையும்/ வேடங்களையும்/ பாத்திரங்களையும், கலையின் குரூரமான பக்கங்களையும் அம்பலப்படுத்தி – ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறை வெளிக்கொணர்வதே உண்மையான வரலாற்றுப் ப...
இன்று வடக்கின் கடல்வளம் பற்றி தனிமனிதர்களாக பேசுவது உயிராபத்தான, தனிமனித பாதுகாப்பு இல்லா நிலையை ஏற்படுத்தும் நிலையுள்ளது. அதேவேளை, யாராவது இதைப் பேசியே ஆகவேண்டியும் உள்ளது. அரசியல் நிலைப்பாடுகளைக் கடந்து, சுயதேவைக்காக “சுயநலனுக்காக மேலோட்டமாக அரசியல் செய்வதை விடுத்து, எல்லோரும் கடலின் அவலநிலையைப் பேசவேண்டும்” என்பதனையும...
அதிகம் வாசிக்கப்பட்டவை |
---|
|
பகுதி 48
முன் பதிவுகளில் போட வேண்டிய சில சம்பவங்களும் உண்டு. நான் பின்தள மாநாட்டுக்கு வரும்போது என்னிடமிருந்த இலங்கை பாஸ்போர்ட்களை தலைமைகழகத்தில் ஒப்படைக்க கொண்டுவந்து வைத்திருந்தேன். மாநாட்டு நேரமும், முன்பும் பின்பும் பல தோழர்கள் வந்து ரகசியமாக தங்களது பெயர்களை கூறி என்னிடம் தங்களது ஒரிஜினல் பாஸ்போர்ட் இருக்கிறதா என்று கேட்டார்கள். நானும் எனக்குத் தெரியாது செக் பண்ணி பார்த்து தான் சொல்ல வேண்டும் என்று கூறினேன். மாநாடு முடிந்து சென்னை வந்தபோது கிட்டத்தட்ட 10 தோழர்களுக்கு மேல் ரகசியமாக வந்து இருந்த அவர்களின் பாஸ்போர்ட் பெற்றுச் சென்றார்கள். பாஸ்போர்ட் இல்லாதவர்கள் சில கள்ள பாஸ்போர்ட்டுகளை வாங்கிச் சென்றார்கள். அவர்கள் இயக்கத்தை விட்டு போகப் போகிறார்கள் என்று தெரியும். அன்றிருந்த மனநிலையில், உண்மைகள் தெரிந்த நிலையில் இவர்களுக்கு பாஸ்போர்ட் கொடுக்காமல் விடுவதோ, இல்லை இவர்களை காட்டிக் கொடுப்பது போன்ற மனநிலைகளில் நான் இருக்கவில்லை. நான் பாஸ்போர்ட் கொடுத்தவர்களில் ஒருவர் கனடாவில் இருக்கும் பரதனும் ஒருவர்.
பகுதி 45
நான்16/07/1986 அன்று ஏற்படுத்தப்பட்ட புதிய பின்தள மாநாட்டில் கலந்து கொள்ளும் தோழர்கள் இருந்த முகாமுக்கு சென்றபோது, என்னை மொட்டைமாடி அலுவலகத்தில் பார்த்த ஒரு சில தோழர்கள் இருந்தார்கள். கிட்டத்தட்ட 85 பேர் இருந்த இந்த முகாமில் யாரையும் எனக்கு தெரியாது. அங்கிருந்த யாருக்கும் அனேகமாக டெல்லியில் ஒரு அலுவலகம் இருப்பது கூட தெரியாது. என்னைப் பற்றி விசாரித்த பின்னர் அங்கிருந்த எல்லா தோழர்களுக்கும் மாநாடு நடக்குமா நடக்காதா, மாநாடு நடந்தபின் தங்களை இலங்கை அனுப்புவார்களா இல்லையா என்ற கவலையில் தான் இருந்தார்கள். தற்சமயம் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு பற்றி எல்லோரும் கவலையுடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள். அவர்களுக்கு செயலதிபர் உமாமகேஸ்வரன், தோழர் பரந்தன்ராஜன் மேல் சரியான கோபம் தான் இருந்தது. தங்களை பணயம் வைத்து இவர்கள் விளையாடுவதாக அவர்கள் கருதினார்கள். நானும் சந்தடி சாக்கில் இந்தியா செயலதிபர் உமாமகேஸ்வரனை தான் ஆதரிக்கிறார்கள், இந்த பிளவு ஏற்பட்டு இருக்காவிட்டால் மாநாடு நடந்து கட்டாயம் இந்தியா திரும்பவும் பயிற்சி ஆயுதங்கள் கொடுத்து நீங்கள் எல்லாம் இலங்கைக்கு போயிருக்கலாம் என்று கூறினேன். எந்த தோழர்களும் இதை பெரிய விஷயமாக எடுக்கவில்லை. எல்லா தோழர்களுக்கும் காலித் மாதிரி ஒரு சிறந்த தோழர், செயலதிபர் உமாமகேஸ்வரன் தலைமையை மறுத்துப் போனது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நான் காலித்தோடு நெருங்கிப் பழகியதில்லை. ஆனால் அங்கிருந்த தோழர்கள் காலித் பற்றி நன்றாக தெரிந்தவர்கள். காலித் போன்ற சிறந்த தளபதிகள் ஒதுங்குவது குறித்து கவலைப்பட்டார்கள். முதன்முறையாக நான் முகாம் வாழ்க்கையை அனுபவித்தேன். உண்மையைக் கூறப்போனால் எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. அந்த தோழர்களுடன் பேசி பழகும் போது அவர்களின் மனக்குமுறல்கள் அறியக்கூடியதாக இருந்தது. இரண்டு மூன்று மாதத்தில் பயிற்சியும் ஆயுதங்களுடனும் இலங்கைக்கு திரும்பலாம், தங்கள் குடும்பத்தவர்களுடன் இருந்து போராட்டத்தில் பங்கு கொள்ளலாம், என்ற நினைவிலும், பல தோழர்கள் தங்கள் படிப்பை தொடரலாம் என்ற கனவில் வந்தவர்கள். இயக்கத்துக்கு போராட வந்த தோழர்களில் யாரும் வீட்டில் சாப்பிட வழியில்லாமல், பொருளாதார கஷ்டத்தால் இங்கு வரவில்லை.
பகுதி 42
கடந்த பதிவில் நான் சில தவறான செய்திகளை அதுவும் கேள்விப்பட்ட செய்திகளை போட்டுள்ளதாக நண்பர்கள் அன்புடன் சுட்டிக்காட்டினார்கள். இனிமேல் அப்படி கேள்விப்பட்ட செய்திகளை எழுத வேண்டாம் என்றும் கூறினார்கள். சரியா பிழையா என்று செய்திகளை பார்ப்பதைவிட அன்று எனக்கு டெல்லியில் பிரச்சாரத்துக்காக சொல்லப்பட்ட செய்திகள் தான் அவை. எனக்கு நினைவில் இருக்கும் அன்று சொல்லப்பட்ட செய்திகள் இன்று தவறாக இருந்தாலும் அன்று அவைதான் உண்மை என்று சொல்லப்பட்டது என்பது உண்மை. இன்றுவரை எமது தள ராணுவ தளபதி சின்ன மென்டிஸ் என்ற விஜயபாலன் பிடிக்கப்பட்ட செய்திகள், கொல்லப்பட்ட செய்திகள் உண்மையான முழுமையான செய்திகள் யாரும் அறியவில்லை. பலரும் தங்களுக்கு கேள்விப்பட்டசெய்திகளை தான் உண்மையான செய்திகள் என்ன பதிவு போடுகிறார்கள். அதேபோல் எமது இயக்க மிக மூத்த போராளி நிரஞ்சன் என்கிற சிவனேஸ்வரன், எமது கழக அரசியல் துறைச் செயலாளர் சந்ததியார் போன்றவர்களை எமது செயலதிபர் உமாமகேஸ்வரனுக்கு ஏற்பட்ட எனக்கு தெரிந்த மட்டிலும் தனிப்பட்ட கோபதாபங்களால் எமது தோழர்களே கடத்திக் கொலை செய்தார்கள். அந்தக் கொலைகளை கூட இன்றுவரை எங்களால் உண்மையை அறிய முடியாமல் இருக்கிறது. இதைப் பற்றிப் போன பதிவில் கூட வந்த கருத்துக்கள் பல மாறுபட்ட கருத்துக்கள்தான்தான் இருக்கின்றன. இதில் ஈடுபட்ட எமது தோழர்களை அறிந்த பலர் இந்த முகநூலிலும் இருக்கிறார்கள். யாரும் உண்மையை பதிவிட ஏன் முயற்சி செய்யவில்லை என்று தெரியவில்லை. இந்தப் பதிவுக்கு கூட சில தோழர்கள் நிரஞ்சன் சந்ததியார் இயக்கத்துக்கு துரோகம் செய்தபடியால் கொலை செய்யப்பட்டார்கள் என, எழுதுவார்கள். போன பதிவுக்கு ஒரு தோழர் தமிழர்களை அழிக்கும் பொறுப்பிலிருந்த இலங்கை மந்திரி அத்துலத்முதலியுடன் 1985 செயலதிபர் உமாமகேஸ்வரனுக்கு இயக்க மத்தியகுழுவுக்கு தெரியாமல் ரகசியமாக ஏற்பட்ட தொடர்பு ஒரு ராஜதந்திர தொடர்பு என்று, கருத்து பதிவிட்டிருந்தார். தயவுசெய்து அந்த ராஜதந்திர தொடர்பை பற்றி அறிந்தவர்கள் விபரம் கூறினால் மிக நன்றாக இருக்கும்.
பகுதி 41
டெல்லியில் எமது பத்திரிகையாளர் தொடர்புகளும் மிகவும் விரிவாக இருந்தது. குறிப்பாக டெய்லி ஹிந்து பத்திரிக்கை ஆசிரியர் ஜிகே ரெட்டி, ஹிந்துஸ்தான் டைம் ஆசிரியர் பட்னிஸ்(இந்த தொடர்பு தோழர் ஜெயபாலன் மூலம் ஏற்பட்டது), இடதுசாரி சிந்தனையுள்ள மிகப் பிரபலமான ஜான் தயால் டெல்லியில் வெளிவரும் patriot, மற்றும் மும்பையில் இருந்து வெளிவரும் blize பத்திரிகைகளில் இவரது கட்டுரைகள் முக்கியத்துவம் பெறும். இவர் ஜான் தயால் எமது டெல்லி அலுவலக வீட்டுக்கே வந்து செயலதிபர் உமா மகேஸ்வரனை பேட்டி கண்டு ஒரு பக்க அளவுக்கு அந்தப் பேட்டி வந்திருந்தது. டெல்லியில் வந்திருந்த தோழர் சைமன், ஜோன் தயல் அவர்களுடன் மிக நீண்ட நேரம் விவாதித்து பேசிக்கொண்டிருப்பார். அடிக்கடி சந்திப்பார். மற்றும் பிபிசி புகழ்பெற்ற டெல்லி நிருபர் மர்க்டெலி, அவுஸ்திரேலிய வானொலி நிருபர் இவர்கள் எமது அலுவலகத்துக்கே வந்து செயலதிபர் உமாமகேஸ்வரனை பேட்டி கண்டு ரேடியோவில் ஒலிபரப்பினார்கள்.
பகுதி 37
அடுத்த நாள் காலையில் நானும் செயலதிபர் உமாமகேஸ்வரனும் வை.கோபால்சாமி MP வீட்டுக்குப் போனோம். வை.கோபால்சாமி எம்.பி டெல்லி வரும்போது அடிக்கடி போய் நான் சந்தித்து பேசுவேன். அதுபோல் செயலதிபர் உமாமகேஸ்வரனும் டெல்லி வரும்போது கோபால்சாமி எம்.பி டெல்லியில் இருந்தால் போய் சந்திப்பார். அவர் விடுதலைப் புலிகளோடு நெருக்கமாக இருந்தாலும் எங்களோடு நல்ல தொடர்பில் தான் இருந்தார்.
கோபாலசாமி எம்.பி யும், அவரது உதவியாளரும் நமக்கு தேனீரும் பிரெட் டோஸ்ட் போட்டு கொடுத்து உபசரித்தார்கள். திம்பு பேச்சுவார்த்தை பற்றி, பேச்சுவார்த்தை வந்தபோது, உமாமகேஸ்வரன் செயலதிபர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். இந்திய வெளியுறவுச் செயலர் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தை சம்பந்தமாக இலங்கைக்குப் போய் வரும் போது அவர் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனா அவருடன் நெருங்கிப் பழகி வைர நெக்லஸ்கள், விலை கூடிய நவரத்தினம், மாலைகள் போன்றவற்றை அன்பளிப்பாக பெற்றுக்கொண்டதும் மட்டுமல்லாமல் இந்திய, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு எதிராக வேலை செய்வதாகவும் போட்டுக் கொடுத்தார். வை.கோபால்சாமி மிகவும் கோபத்துடன் இவ்வளவெல்லாம் நடந்திருக்கிறதா, நான் விடமாட்டேன் ஒரு கை பார்க்கிறேன் என்று கூறினார். அன்று ராஜ்யசபா பாராளுமன்றத்தில் வை.கோ இந்திய வெளியுறவுச் செயலர் ரொமேஷ் பண்டாரி இலங்கை ஜனாதிபதியின் கைக்கூலி, வைர நெக்லஸ்க்காக விலை போய்விட்டார் என காரசாரமாக பேசினார். அடுத்த நாள் பத்திரிகைகளில் எல்லாம் ரொமேஷ் பண்டாரி வைர நெக்லஸ் வாங்கியதுதான் முக்கியத்துவம் பெற்றன.
விமலேஸ்வரன் பற்றிய நினைவுகள் 33 வருடங்களாக பதிவாகித்தான் வந்தது.
விஜிதரன் என்ற மட்டக்களப்பைச் சேர்ந்த கலைப்பிரிவு மாணவன் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டதற்கு எதிராகவும், விஜிதரனை விசாரிப்பதாயின் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர் மத்தியில் வைத்து விசாரிக்கப்படுவது தான் சரியானது என்ற கோரிக்கையை அனைத்து இயக்கங்களையும் நோக்கி முன்வைத்தும் பல்கலைக்கழக மாணவர்கள் சாகும்வரையான உண்ணாவிரதப் போரட்டத்தினை பல்கலைக்கழகத்தினுள்ளே அன்று நடாத்தினர்.
விஜிதரன் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டது நவம்பர் மாதம் 1986 ம் ஆண்டு.
காணாமலாக்கப்பட்ட விஜிதரனை எப்படியாவது விடுவித்துத் தரும்படி அவனது பெற்றோர் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஒழுங்கு செய்யப்பட்ட பகிரங்க கூட்டத்தில், பெருமளவு மாணவர்கள் குழுமியிருந்த அக்கூட்டத்தில் கண்ணீர் மல்க கதறியழுதனர். நான் இந்தக் காலப்பகுதியில் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் பௌதீக ஆய்வுகூட போதனாசிரியராக கடமையிலிருந்தேன். அன்றைய நாளில் இக் கூட்டத்தில் நானும் பிரசன்னமாயிருந்தேன்.
அந்தப் பெற்றோரின் கண்ணீரும் கதறலும் அங்கிருந்த எல்லார் நெஞ்சையும் தொட்டது.
பகுதி 33
திரும்பவும் இயக்கத் தலைவர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் டெல்லி அழைக்கப்பட்டிருந்தார்கள். இம்முறை செயலதிபர் உமாமகேஸ்வரன் வாசுதேவாவையும் அழைத்து வந்திருந்தார். எல்லா இயக்கங்களுக்கும் ஒரு ஹோட்டல். உமாமகேஸ்வரன் வழமை போல் என்னோடுதான் தங்கினார். அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் வேறு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். ராஜீவ் காந்தி அரசின் புதிய வெளியுறவு செயலாளர் ரொமேஷ் பண்டாரி ரகசியமாக இயக்கங்களை தனியாகவும், தமிழர் விடுதலைக் கூட்டணி தனியாகவும் சந்தித்துப் பேசினார். சந்திப்புகள் தனியார் ஓய்வு விடுதியில் நடந்தன.
இந்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை தமிழ் இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண பிரதமர் ராஜீவ் காந்தி விரும்புவதாகவும் அதற்கு இயக்கங்களின் கருத்துக்களையும் கேட்டுக்கொண்டார். அதே மாதிரி தமிழர் விடுதலைக் கூட்டணி அமிர்தலிங்கம் ஆட்களுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக அறிந்தோம்.
பகுதி 29
(நான் எனது முகநூலில் எனது அனுபவங்களை எழுதுவது வெளிநாட்டில் இருக்கும் பல தமிழீழ மக்கள் விடுதலைக் கழக உறுப்பினர்கள் அதாவது இயக்கத்தை விட்டு விலகியவர்கள், ஒதுங்கி இருப்பவர்கள் நான் எனது அனுபவங்கள் எழுதுவது தவறு என்றும் எழுதக் கூடாது என்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். நான் யாரையும் எனது முகநூலை பார்க்க படிக்க சொல்லவில்லை. விருப்பமில்லாத நபர்கள் என்னை தடை செய்து விட்டு போகட்டும். நான் எனது அனுபவங்கள் பதிவாக இருக்கட்டும் என்று மட்டும்தான் போடுகிறேன் ஒழிய. யாரும் லைக் போட வேண்டும் என்ற கருத்து சொல்ல வேண்டும் என்றோ போடவில்லை என்பதை திரும்பவும் தெரிவித்துக் கொள்கிறேன்).
எனது 27வது பதிவில் ஆலடி அருணா எம்.பியின் வீடு பற்றி எழுதி இருந்தேன். அதில் நண்பர் பரதன் அந்த வீட்டில் இருந்த கேரளா குடும்பத்தில் இருந்த பெண்களை மூன்று பெண் குட்டிகள் பற்றி குறிப்பிடவில்லை என கவலைப்பட்டு இருந்தார். பின்பு அந்த பின்னூட்டத்தை எடுத்து விட்டார். இதைப்பற்றி இதில் குறிப்பிடுகிறேன். ஆலடி அருணா MP எனக்கு வீடு கொடுக்கும் போது, கூறினார் பக்கத்தில் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள், சுற்றியிருக்கும் வீடுகள் எல்லாம் இந்திய எம்.பி மார்களின் வீடுகள் அங்கும் பெண் பிள்ளைகள் இருப்பார்கள். உங்களால் எந்த ஒரு கெட்ட பெயரும் வந்துவிடக் கூடாது. எனக்கு மட்டுமல்ல, ஈழப் போராளிகளுக்கும் அது கெட்ட பெயராக அமைந்து விடும். ஆனால் உங்களால் எந்த ஒரு கெட்ட பேரும் வராது என நம்புகிறேன். சிறு கெட்ட பேர் வந்தாலும் துரத்தி விடுவேன் என கூறினார்.