07262021தி
Last updateசெ, 20 ஜூலை 2021 1pm

அன்று கொன்றது சுனாமி! நின்று கொல்கிறது அரசு! இதோ ஒரு சாட்சியம்!

03_2005.jpgஏழை எளிய மக்கள் என்ன, வேண்டாத கழிவுப் பொருட்களா? நகருக்கு வெளியே கொண்டு போய்க் குவிக்கிறது, அரசு!

 

சிங்காரச் சென்னையில் ஏழை எளிய மக்களுக்கு வாழும் உரிமை இல்லையா? இரண்டாண்டுகளில் 20,000 குடும்பங்களை வேரோடு பிடுங்கிக் கொண்டு போய் 20 மைல்களுக்கு அப்பால் (துரைப்பாக்கத்தில்) குப்பையாகக் கொட்டியது, அரசு.

 


"பாஸ்" உண்டு, "பஸ்" இல்லை! பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

03_2005.jpgதிருச்சி நகரில் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பயணச் சீட்டு பெயரளவில் வழங்கப்பட்டுள்ளதே தவிர, அதைப் பயன்படுத்தும் வகையில் பள்ளி நேரத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. பள்ளி நேரங்களில் வரும் பேருந்துகளெல்லாம் அளவுக்கு மீறிய பயணிகளோடு திணறிக் கொண்டு வருவதும், மாணவர்களை ஏற்றாமல் செல்வதும் தொடர்கிறது. இதனால் மாணவர்கள் ஜன்னல் கம்பியையும் ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்துக் கொண்டு படிகளில் தொங்கியபடியும் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்கின்றனர். கிராமப்புற பேருந்துகளில் மாணவர்கள் மேற்கூரையில்தான் பயணம் செய்ய முடிகிறது. நெரிசலில் முட்டி மோதி உள்ளே ஏறும் மாணவர்களை சில ஓட்டுநர்களும் நடத்துனர்களும் கொச்சையான வார்த்தைகளால் வசைபாடுவதும் தொடர்கிறது. சில

இராமதாசு- திருமாவளவன் வழங்கும் "தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்" புத்தும் புது காப்பி

03_2005.jpgஅஅம்மா! ஆஆமாம்! இந்த இரண்டெழுத்து வார்த்தைகளுக்கு மேல் ஏன் தமிழ்? எதற்கு தமிழ்? என்று தனது "கான்வென்ட்' கொழுப்பைத் தமிழர்களிடம் காட்டுகிறார், பார்ப்பன பாசிச ஜெயலலிதா.

 

பா.ம.க. தலைவர் இராமதாசும், விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவனும் சேர்ந்து, "தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்' என்ற தங்கள் கூட்டமைப்பின் சார்பில், 'தமிழ்த் திரைப்படங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருக்கக் கூடாது. அப்படி ஆங்கிலப் பெயர் வைத்தால் போராட்டம் நடத்துவோம்" என்று 'தமிழ் மீட்புத் தொடர் போராட்டங்களுக்கு" பிறகு எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டனர்.

அட்டைக்கத்திச் சண்டை

03_2005.jpg'சைக்கிள் பாகங்களின் பெயர்கள் எல்லாம் தமிழா?" 'ஹாண்டில் பார், செயின், ரிம், டயர், டியூப்" என்பதெல்லாம் தமிழா? அது தமிழா? இது தமிழா? என்று எகிறுகிறார் ஜெயா. தமிழ் மொழியைத் துச்சமாக மதிக்கும் அவரின் திமிரைப் புதிதாக விளக்க வேண்டியதில்லை. ஆனால், இராமதாசின் தமிழ்ப் பற்றோ மலிவான நகைச்சுவை நாடகம் போல நடக்கிறது.

 

இப்போது தைலாபுரத்தில் (ராமதாசின் பண்ணை வீட்டில்) சுத்தத் தமிழ் வாசனைதான் வீசுகிறது. 'எனது வீட்டில் ராஜா என்று ஒரு பையன் இருக்கிறான். அவனை இப்போது 'ராசா" என்றுதான் அழைக்கிறேன். அதுபோல்

திடீர்ப் பணக்கார அரசியல் ரவுகளின் பிடியில் ராஜகம்பீரம்

03_2005.jpgபொறுக்கி அரசியலுடன் கலந்த கிரிமினல் அரசியலானது, தமிழகத்தில் திடீர் பணக்கார அரசியல் ரவுடித்தனமாக வேர்விட்டுப் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரைக்கு அருகில் ராஜகம்பீரம் என்ற ஊரில், ஊராட்சி மன்றத் தலைவரான சேக் முகமது அடித்துவரும் கொட்டமும் ரவுடித்தனங்களுமே இந்த உண்மையை நிரூபித்துக் காட்டுகின்றன.