10_2005.jpg 'ஆந்திர மாநிலத்தில் கோக்கையும், பெப்சியையும் பயிருக்குப் பூச்சி மருந்தாக அடிக்கிறார்கள். பூச்சியைக் கொல்லும் பெப்சியை ஃ கோக்கை நம்மைக் குடிக்க கட்டாயப்படுத்துகிறார்கள்" என இந்திய கோக் பானங்களின் தரத்தை அம்பலப்படுத்திய வழக்குரைஞர் திருமலைராசன், 'இந்தியச் சட்டங்களை மிக மென்மையாக மாற்ற வேண்டும் எனப் பன்னாட்டு நிறுவனங்கள் கோருகின்றன. இதற்கு ஏற்ப உரிமையியல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தார்கள். இதற்கு அடுத்து, இலவச சட்டப் பணிக் குழுவை, பேரம் பேசித் தீர்த்து வைக்கும் அமைப்பாக மாற்ற முயற்சி செய்தார்கள். இதற்கு எதிராக, அகில இந்திய வழக்குரைஞர் சங்கம் வழக்கு தொடுத்தது."

 

'உச்சநீதி மன்றத்தில் இவ்வழக்கை விசாரித்த சி.ஜே.கிருபால் என்ற நீதிபதி, இந்த வழக்கு விசாரணையில் இருக்கும் பொழுதே, அவர் தில்லியில் நடந்த ஒரு வர்த்தகக் கருத்தரங்கில், இந்தியச் சட்டங்களைப் பார்த்து யாரும் பயப்படத் தேவையில்லை; தொழில் பிரச்சினைகளைப் பேரம் பேசித் தீர்த்து வைக்கும் சட்டம் (யசடிவைசயவழைn யனெ உழnஉடையவழைn) இந்தியாவில் வந்து விட்டது எனப் பேசினார். சி.ஜே. கிருபால் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் என நாங்கள் போட்ட மனுவிற்கு, உச்சநீதி மன்றம் பதிலே அளிக்கவில்லை. சி.ஜே.கிருபால் போன்ற நீதிபதிகள் இருந்தால், கோக்கிற்கு எதிரான வழக்கு என்னவாகும்?" என நீதிமன்றங்கள் ஃ நீதிபதிகளின் யோக்கியதையை அம்பலப்படுத்தினார்.

 

'பிளாச்சிமடாவில் கோக்கிற்கு எதிரான போராட்டத்தில் பெண்கள்தான் முன்னணியில் இருக்கிறார்கள். அந்த மக்களின் நிர்பந்தத்தால்தான் கேரள அரசு உச்சநீதி மன்றத்தில் கோக்கிற்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கிறது."

'எனவே, தண்ணீர் வியாபாரப் பண்டமாக மாற்றப்படுவதற்கு எதிராக அனைத்துத் தரப்பு மக்களையும் திரட்டிப் போராட வேண்டும். வெறும் அடையாள போராட்டமாக இது நின்றுவிடக் கூடாது" எனக் கேட்டுக் கொண்டார்.