பி.இரயாகரன் - சமர்

"சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை" மார்க்ஸ்சின் இந்தக் கூற்று இன்று சமூகம் செயலைக் கோரும் எங்கும் எதிலும் பிரதிபலிக்கின்றது. இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதை மறுத்து, பேஸ்புக்கில் கொசிப்பும், நடைமுறையில் பயந்தாங்கொள்ளிகளையும் உருவாக்குகின்றது. செயற்படாமல் இருக்க, கோட்பாட்டுத் தூய்மை பற்றி பேசப்படுகின்றது. நம்பிக்கையீனங்கள், அவநம்பிக்கைகள், கோழைத்தனம், பயந்தாங்கொள்ளித்தனம் … என்பன அவரவர் நடைமுறைக்குரிய ஒன்றாக தற்காப்பு அரசியலாக மாறுகின்றது. மக்களுக்காக போராடுவது பற்றி மார்க்ஸ் "இங்கே அவநம்பிக்கைகளை அகற்றிவிடுங்கள், எல்லாவிதமான கோழைத்தனத்தையும் ஒழித்துவிடுங்கள்" என்றார். செயலுக்குத் தடையாக இருப்பதை, அதை சிதைப்பது சுயநலம். இந்தச் சுயநலம் தான் அவநம்பிக்கையாக வெளிப்படுகின்றது.

2009 ஆண்டு வரை போராடுவதற்கு புலிகள் தான் தடை என்றவர்கள், அதன் பின்பும் மக்களுடன் இணைந்து செயற்படவேயில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் என அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய செயலுக்கான தெளிவான குறைந்தபட்சத் திட்டத்தை வைத்தவுடன், செயலை மறுப்பதற்கான அரசியல் எதிர்வினைகள் அரசியல் அரங்கில் வருகின்றது.

மேலும் படிக்க: கொசுறுகளும், பயந்தாங்கொள்ளிகளும்

சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாமையால் முன்னிலை சோசலிசக் கட்சியை, இனவாதிகளாக, திரிபுவாதிகளாக, சந்தர்ப்பவாதிகளாக காட்டுகின்ற அரசியல் கேலிக்கூத்தைக் காண்கின்றோம். இப்படி இட்டுக்காட்டி கூறுவது திரிபுவாதமாக, இனவாதமாக இருக்கின்றது. இப்படி திரிக்க தேசிய சுயநிர்ணயம் தொடர்பாக ரோசா லக்சம்பேர்க்குடனான லெனினின் விவாதத்தை எடுத்துக் காட்டுகின்றனர். லெனின் சுயநிர்ணயம் ஏற்க மறுத்த ரோசா லக்சம்பேர்க்கை இனவாதியாகவோ, திரிபுவாதியாகவோ முத்திரை குத்திக் காட்டி விவாதிக்கவில்லை. அவரை எதிரியாகக் காட்டவில்லை, எதிரியாக்கவில்லை. மாறாக அவரை மார்க்சியவாதியாக அடையாளப்படுத்தி, அரசியல் விவாதத்தை முன்னெடுத்தார். தமிழ்தேசியம் மட்டும் தான் தன்னுடன் அல்லாத அனைத்தையும் எதிரியாகச் சித்தரித்துக் காட்டுகின்றது.

மேலும் படிக்க: முன்னிலை சோசலிசக் கட்சி இனவாதிகளா!? திரிபுவாதிகளா!? சந்தர்ப்பவாதிகளா!?

இந்த அரசியல் தமிழ் தேசியமே ஒழிய சர்வதேசியம் அல்ல. வர்க்க அரசியலை முன்னிறுத்துகின்றபோது, அது கோட்பாடு மற்றும் செயல்தந்திரம் மீதான அரசியல் விமர்சனமாக வெளிப்படும். தேசியத்தை உயர்த்தும் போது அது தமிழினம் சார்ந்த சந்தேகமாக அவநம்பிக்கையாக வெளிப்படும்.

மார்க்சிய சொற்தொடர்கள் மூலம் தம்மை மூடிமறைத்த தமிழ்தேசியவாதிகளை இனம் காட்டுவது, பாட்டாளி வர்க்கக் கட்சியான முன்னிலை சோசலிசக் கட்சியுடனான அதன் பொது அணுகுமுறை தான். முன்னிலை சோசலிச கட்சி வர்க்கக் கட்சியாக இருப்பதால், அதன் பொது வேலைத்திட்டத்தின் ஊடாகவே இனப்பிரச்சனை பற்றிய அதன் அணுகுமுறையை பாட்டாளி வர்க்க சக்திகள் இனம்காண முற்படும்போது, தேசியவாதிகள் இனப்பிரச்சனை ஊடாகவே அக் கட்சியை அணுக முற்படுகின்றனர். இந்த வகையில் சர்வதேசியம், தேசியம் இரு வேறு அணுகுமுறைகளை கொண்டு தம்மை வெளிப்படுத்துகின்றனர்.

மேலும் படிக்க: முன்னிலை சோசலிசக் கட்சி தொடர்பான சந்தேகங்களின் பின்னான அரசியல் எது?

40 க்கு மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட இக் கூட்டம், இனவொடுக்குமுறைக்கும், இனவாதத்துக்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணரும் வண்ணம் உணர்வூட்டக் கூடியதாக அமைந்து இருந்தது. பெரும்பான்மையானவர்கள் இதன் அவசியத்தை உணர்ந்ததுடன், தங்களாலான பங்களிப்பை வழங்கவும் உறுதியேற்றனர். கேள்வி பதில்களும், கூட்டத்தை அடுத்து தனிப்பட்ட உரையாடல்கள் இதை வளர்த்தெடுக்கும் வண்ணம் ஆரோக்கியமானதாக இருந்தது. யாராலும் மறுக்க முடியாத, யாராலும் நிராகரிக்க முடியாத, சமவுரிமைக்கான அவசியத்தை முன்னோக்காகக் கொண்டு நடக்க கூட்டம் வழிகாட்டியது.

இந்த வகையில் சமவுரிமை இயக்கம் பற்றி முன்வைக்கப்பட்டவற்றில் முக்கியமானது

மேலும் படிக்க: சிங்கள தமிழ் மொழி பேசும் தரப்புகள் கலந்து கொண்ட சமவுரிமைக்கான சுவிஸ் கூட்டம் பற்றி

கருத்துகளை உற்பத்தி செய்வதன் மூலம், அதை மக்களிடம் கொண்டு செல்லும் சரியான உத்திகள் மூலம், புரட்சி செய்ய முடியும் என்று நம்புகின்ற அரசியல் போக்கு தவறானது. மக்களுக்கு புரியும் மொழியில் பிரச்சாரத்தை செய்யாமை தான், புரட்சி நடைபெறாமைக்கான காரணம் என்று அரசியலைப் புரிந்துகொள்வது தவறானது. இதற்கான மொழியும், உத்தியும், பிரச்சாரமும் தான் குறைபாடு என்று கருதும் அரசியல் போக்குத் தவறானது.

மார்க்ஸ் அறிவியல்பூர்வமான தத்துவஞானத்தையும், அமைப்பையும் மறுத்து வில்ஹெம் வியட்லிங் செயற்பட்ட போது கூறியது இங்கு பொருந்தும். "இந்த போதனை ஒரு கற்பனைத் தீர்க்கதரிசியையும் - வாய் பிளந்து நிற்கும் கழுதைகளையுமே உருவாக்குகிறது" என்றார். இது புரட்சியை உருவாக்காது.

மேலும் படிக்க: மொழியும், உத்தியும், பிரச்சாரமும் சமூக மாற்றத்தைக் கொண்டு வருமா!?

சட்டத் திருத்தத்தை முன்மொழிந்து, வாக்குப் போட்டு இதைச் சட்டமாக்கும் கும்பலே குற்றக் கும்பல்;. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்துக்குவிப்புத் தொடங்கி பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றவர்கள் தான் பாராளுமன்ற உறுப்பினர்கள். இவர்களில் பலர் மாபியாக்களாக செயற்படுவது தொடங்கி பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள். இதற்கு பற்பல முகங்கள் உண்டு. இவர்கள் தான் சட்டத்தை உருவாக்குகின்றனர். இந்த சட்டத்தை கையில் எடுத்து, அதை அமுல்படுத்தும் பொலிஸ் நிலையங்களை கண்டு அஞ்சுமளவுக்கு அவையோ வதைமுகாம்களாக இருக்கின்றது. இது இலங்கை மக்கள் அனைவருக்கும் அனுபவரீதியாக தெரிந்த ஒரு பொது உண்மையும் கூட.

மேலும் படிக்க: சமூகவிரோத குற்றவாளிகள் தமக்கு ஏற்ப செய்யும் சட்டத் திருத்தங்கள்

மக்கள் விரோத மாலிய இராணுவ ஆட்சியின் துணையுடன், ஒரு தலைப்பட்சமான ஆக்கிரமிப்பு யுத்தத்தில் பிரஞ்சு ஏகாதிபத்தியம் இறங்கியிருக்கின்றது. தன் நவகாலனியை தக்க வைக்கும் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் தான் பிராஞ்சு ஏகாதிபத்தியம் வலிந்து ஈடுபடுகின்றது. ஒருபுறம் உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள, நவகாலனிகளை தக்கவைக்கும் போராட்டம் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான ஆக்கரமிப்பு யுத்தங்களாக மாறி இருக்கின்றது. லிபியா, சிரியா,… தொடங்கி மாலி வரை நடப்பது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கெடுபிடி யுத்தம்தான்.

மேலும் படிக்க: ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான யுத்தத்தில் பிராஞ்சு ஏகாதிபத்தியம்

பொருத்தமான மிகச் சரியான தீர்ப்பு. ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட நீதியை பறைசாற்றிய நீதிமன்றங்களின் போலித்தனத்தை துகிலுரிந்து, இறுதியில் அதைத் தூக்கில் ஏற்றி இருக்கின்றனர். இனி நாங்கள் மட்டும் தான், இடையில் நீதிமன்றம் போன்ற இடைத் தரகுக்கு இடமில்லை என்று பாசிட்டுகள் எந்தப் பாசங்குமின்றி சொந்தப் பிரகடனத்தை பாராளுமன்றம் மூலம் செய்து இருக்கின்றனர். யாராவது இதை எதிர்த்து மக்களை அணிதிரட்டினால் போட்டுத்தள்ளுவோம், எங்களோடு இருப்பவர்கள் இதை எதிர்த்தால் தலை உருளும். இது தான் நடைமுறையில் உள்ள எழுதப்படாத சட்டமும், தீர்ப்பும். நீதிமன்றங்கள் இதற்கு கொள்கை விளக்கம் வழங்குவதைத் தவிர, இதை மீறி விளக்கம் கொடுக்கக் கூடாது.

மேலும் படிக்க: பாராளுமன்றம் நீதிமன்றத்துக்கு வழங்கிய தூக்குத் தண்டனை

ரிசானாவை ஷரியா சட்டம் மூலம் கொன்றதால் அதைப் போற்றும் மதக் காட்டுமிராண்டிகள். சட்டம் என்பது உள்நாட்டு விவகாரம் என்று கூறி, கொன்றதை நியாயப்படுத்தும் அரச பயங்கரவாத பாசிட்டுகள். ரிசானா கொல்லப்பட மத அடிப்படை வாதமும், அரச பாசிசமும் ஒன்றுக்கு ஒன்று துணையாக தூணாக இருந்தது. ஒரு ஏழை, ஒரு தொழிலாளி, ஒரு அபலைப் பெண், ஒரு குழந்தை, அன்னிய நாட்டு கூலி உழைப்பாளி … என்று சமூகத்தில் அடிநிலையில் எந்த சமூக ஆதாரமுமற்றவர்களைக் குற்றவாளியாக்கி கொன்றிருக்கின்றது ஷரியா சட்டமும், அரச பாசிசமும்

மேலும் படிக்க: இலங்கை அரசின் துணையுடன் ரிசானாவுக்கு மரண தண்டனை, இதைச் செய்த ஷரியா சட்டத்தைக் கொண்டாடும் மானிட விரோதிகள்

இது சொந்த இன ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து நிற்கும் இனவாதமாகும். இப்படி தன்னை மூடிமறைத்த சுயநிர்ணயம், நேரடியான இனவாதத்தை விட ஆபத்தானதும், அபாயாகரமானதுமாகும். தனக்கான நேரம் வரும் வரை அது தன்னை வெளிப்படுத்துவதில்லை. தன்னை ஒடுக்கப்பட்ட வர்க்கப் பிரதிநிதியாகக் காட்டிக் கொண்டு, அதிகம் நாசம் செய்கின்ற இனவாதமாகும். இதை அரசியல்ரீதியாக, கோட்பாட்டுரீதியாக இனம் கண்டு கொள்வது இன்று அவசியமாகின்றது. சுயநிர்ணயத்தின் பின் ஒளித்துப் பிடித்து விளையாடுவதை நாம் அனுமதிக்க முடியாது.

மேலும் படிக்க: "எதிர்" இனத்தைச் சாராத "சுயநிர்ணயம்" இனவாதமாகும்

இராணுவத்துக்குத் தாம் இணைக்கப்படுகின்றோம் என்று தெரியாது எப்படி அந்தப் பெண்கள் இணைக்கப்பட்டனரோ, அதேபோல் தமிழினவாதிகள் பாலியல்ரீதியாக அந்தப் பெண்களுக்கு தெரியாமலே அவர்களை ஊடகம் மூலம் வன்புணர்ந்துவிட்டனர். இந்தப் பெண்கள் அவர்களுக்கு தெரியாமலே இராணுவத்தில் இணைக்கப்பட்டனர் என்ற உண்மையை ஒத்துக்கொள்ள இராணுவம் எப்படித் தயாரில்லையோ, அப்படி தமிழினவாதிகளும் தாங்கள் இந்தப் பெண்களை பாலியல்ரீதியாக ஊடகம் மூலம் வன்முறைக்கு உள்ளாக்கியதை ஒத்துக்கொள்ளத் தயாரில்லை. இந்த உண்மையை மூடிமறைக்க மனநல மருத்துவரைப் பற்றிய விவகாரமாக, அவரின் நடத்தை பற்றிய ஒன்றாக இதை மாற்றிவிட முனைகின்றனர். இந்தப் பெண்கள் "பாலியல் வன்முறைக்கு" உள்ளானதாக கூறி முன்னெடுத்த இனவாத அவதூறுப் பிரச்சாரத்தை, மனநல மருத்துவருக்கு முன்னமே முதலில் நாம் அம்பலப்படுத்தினோம். நாம் இதை முதலில் அம்பலப்படுத்திய பின்னர் தான், மனநல மருத்துவரின் இதை ஒத்த கருத்துகள் வெளியாகியது.

மேலும் படிக்க: பாவம் இராணுவத்தில் இணைந்த பெண்களும், மருத்துவம் செய்த மருத்துவரும்

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More