12012020செ
Last updateஞா, 29 நவ 2020 7pm

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் யுத்த அவலங்களும் சமூகச் சிதைவும்

பொருளாதார ரீதியாக இலங்கை மக்கள் சந்திக்கும் நெருக்கடி ஒருபுறம் என்றால், இனவாத நடைமுறைகள் தமிழ் மக்களுக்கு மீள முடியாத பேரிடியாக உள்ளது. இதைவிட புலிகளின் வரி அறவிடும் முறையும், அவர்களின் தேசிய பொருளாதாரக் கொள்கையும் மறுபக்கம் பேரிடியாகி அவலமாகவே பெருக்கெடுக்கின்றது.


மூலதனத்துக்குக் கிடைக்கும் வரம்பற்ற சலுகைகள்

ஒருபுறம் இலங்கை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் நிலைமை கனிந்து செல்லுகின்றது. இந்த நிலைமையை உருவாக்கும் மூலதனம் உயர்ந்தபட்ச சலுகைகளை அன்றாடம் பெறுகின்றது. சர்வதேச மூலதனம் தேச மூலதனத்தை விழுங்கி ஏப்பமிடும் வகையில் இச் சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றது. உலகமயமாதலின் செல்லக் குழந்தையாக இலங்கையைச் சீராட்டி வளர்க்கும் ஏகாதிபத்தியங்கள், இதனடிப்படையில் உள்நாட்டில் ஏற்படும் எந்த நெருக்கடியிலும் உதவத் தயாராகவே உள்ளது.


இந்தியா மற்றும் மற்றைய ஏகாதிபத்தியங்களின் தலையீடுகள்

அமெரிக்கா மட்டுமல்ல மற்றைய ஏகாதிபத்தியங்களும், இந்தியாவும் கூட பல எச்சரிக்கைகளை விடுகின்றது. 15.11.02 இலங்கை வந்திருந்த பிரித்தானியப் பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபை உறுப்பினர் நெஸ்பீ புலிகள் பயங்கரவாதப் போக்கைக் கைவிடவேண்டும் என்றார். புலிகள் ஆயுதங்களைக் களைய வேண்டும் என்றார். அவர் மேலும் கூறுகையில், புலிகள் தனியான இராணுவம், கடற்படை மற்றும் பொலிஸ் பிரிவு போன்றவற்றை வைத்திருக்க முடியாது என்றார். இவை இலங்கை அரசுடன் சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும். இது மிகவும் முக்கியமானது என்றார். தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்வதை வலியுறுத்தி அவர், உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில் இலங்கை அரசுடன் கைகோர்த்துக் கொள்ளவும் அழைப்புவிடுத்தார். ரூசியா இலங்கையுடன் இராணுவ ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. அமெரிக்காவுடன் சர்வதேச நிலைப்பாடுகளில் ஒன்று சேர்ந்து நிற்கும் பிரிட்டன் 30.12.2002 இல் தனது இராணுவக் கப்பலான கெபபாக்-ஐ இலங்கை துறைமுகத்துக்கு அனுப்பி மறைமுகமாகப் புலிகளை மிரட்டியது.

இலங்கையில் ஊடுருவிப் பாயும் பெரும் நிதிகள்

பிரமிப்பூட்டும் வகையில் உதவிகள், கடன்கள் ஏகாதிபத்தியத்தால் வாரி வழங்கப் படுகின்றது. இதற்கு அக்கம்பக்கமாகவே அன்னிய முதலீடுகள் பெருமளவில் போடப்படுகின்றது. நேரடிச் சுரண்டல் மற்றும் கடனுக்கான வட்டி என்ற இரு தளங்களில், இலங்கையின் தேசிய வளங்கள் அனைத்தும் ஈவிரக்கமின்றி சூறையாடப்படுகின்றது. கடன் கொடுக்கும் நாடுகளின் கூட்டமைப்பு 450 கோடி டொலரை (45000 கோடி ரூபாவை) அடுத்த மூன்று ஆண்டுக்கு வழங்கியுள்ளது. இது ஒருபுறம் நடக்க இதற்கு வெளியில் நாடுகள், வங்கிகள் தனித்தனியாக கடன் உதவி என்ற பெயரில் பெரும் தொகை நிதிகளை அன்றாடம் வழங்குகின்றன. இந்த நிதி ஆதாரங்கள் பலவற்றை நேரடியாக தனது சொந்த மேற்பார்வையில் செலவு செய்கின்றன. நிதி வழங்கல் பற்றியத் தரவுகளை அன்றாடம் செய்தி பத்திரிக்கையில் இருந்து தொகுத்த போது, பிரமிப்பூட்டும் எதார்த்த உண்மை தௌளத் தெளிவாக தெரிய ஆரம்பித்தது.

இலங்கையில் அத்துமீறுகின்றன அமெரிக்கத் தலையீடுகள்

இனப்பிரச்சனையில் அமெரிக்காவின் தலையீடுகள் அத்துமீறி அதிகரித்துச் செல்லுகின்றது. நேரடியான ஆக்கிரமிப்புக்கான புறச்சூழலைத் திட்டமிட்டே அமெரிக்கா உருவாக்கி வருகின்றது. இந்த வகையில் ஒஸாமா பின்லேடன் தலைமையிலான அல்-ஹைடா என்ற இஸ்லாமிய அடிப்படைவாத மதவாதக் குழுவுக்கு, கடலில் தற்கொலைத் தாக்குதலை எப்படி நடத்துவது எனப் புலிகள் பயிற்சி அளித்ததாக அமெரிக்கவின் "கடல் புலனாய்வுப் பிரிவு" குற்றம்சாட்டியது. "கடல் புலனாய்வுப் பிரிவைச்" சேர்ந்த கிவ்வென் கிம்மில்மன் புலிகளிடம் இருந்து "ஜமா இஸ்லாமியா" பெரும் பலன்களை பெறுவதாக கூறியதன் மூலம், புலிகள் மேல் கத்தியைத் தொங்கவிட்டுள்ளது அமெரிக்கா. ஒட்டு மொத்தத்தில் இலங்கை இனமுரண்பாட்டின் ஒரு இனப் பிரிவைச் சார்ந்து வெற்றிகரமாக தலையிடுவதற்கான அடிப்படையை அமெரிக்கா உருவாக்கிவருன்றது. அதே நேரம் புலிகளினால் பாதிக்கப் பெற்ற தரப்பின் நிபந்தனை அற்ற ஆதரவையும் கூட அமெரிக்கா பெற்று நிற்கின்றது. இலங்கை இனமுரண்பாட்டின் பின்னணி சூத்திரதாரிகளே, இன்று இலங்கையில் தலையிட முனையும் இந்த ஏகாதிபத்தியங்கள் தான் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

நுகர்வு வெறியும் இன்ப நுகர்ச்சியும் நேர்விகிதத்தில் ஏகாதிபத்திய கொழுப்பை உருவாக்குகின்றது.

ஏற்றுமதிப் பொருளாதாரம், அன்னிய மூலதனக் கொழுப்பை அடிப்படையாக கொண்டது. இலங்கையின் தேசிய உற்பத்திகள், வெள்ளையர்களும், பணக்காரர்களும் நுகர வேகமாக நாடு கடந்து செல்லுகின்றது. வெள்ளையர்கள் சுற்றுச்சூழல் மற்றும் பல்வேறு காரணங்களால் கழிப்பவைதான், இறக்குமதியாக நாட்டினுள் வருகின்றது. இதைவிட மிகை உற்பத்திகள், சர்வதேச சந்தையில் தேங்கிப் போனவையே நாட்டினுள் கொட்டப்படுகின்றது. அதையும் கடனாகத் தலையில் கட்டிவிட்டு, பின் வட்டி வசூலிப்பதும் கூட ஒரு இறக்குமதியின் அடிப்படைக் கூறாகி உள்ளது. அடிப்படை தேவையற்றவைகளையும், கழிவுகளையும் விளம்பரம் செய்து வாங்க வைக்கும் உளவியல் சிதைவை ஏற்படுத்தி, தேவை அற்றவைகளை தேவையானதாக்கி இறக்குமதி ஊக்குவிக்கப்படுகின்றது.

மற்ற கட்டுரைகள் ...