10262020Mon
Last updateMon, 26 Oct 2020 2pm

தமிழகத் தமிழர்களிடமிருந்தும் புலம்பெயர் தமிழர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தல் பற்றி

தமிழ்நாட்டு புலியாதரவு தமிழ்தேசிய கூட்டத்தை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவதை கண்டு, இனியொரு அரசியலோ குமுறிப் பொங்கி எழுகின்றது. இதை "அரச ஆதரவு லும்பன்தனம்" என்கின்றது. சரி புலியாதரவு தமிழ்தேசியக் கூட்டத்தால், தமிழ் மக்களுக்கு என்ன நன்மை என்று கேட்டால், முத்திரை குத்தி புலம்புகின்றனர். புலியாதரவு தமிழ்தேசியமோ தமிழ்மக்களுக்கு அழிவு அரசியலைத்தான் செய்தது. இதுதான் கடந்தகால வரலாறு என்றால், நிகழ்கால வரலாறும் அது தான். கடந்தகாலத்தைப் போல் தான் இன்றும்.

எம்மக்களுக்கு இந்தக் கும்பல் செய்த செய்கின்ற அழிவு அரசியலின் பின்னால் தான் இனியொரு கூடிக் கூத்தாடத் தொடங்கியது. இதை எதிர்ப்பதை, அரசு சார்பானதாக காட்டுகின்றனர். பழைய புலி அரசியல் தான், ஆனால் இடதுசாரிய மார்க்சிய சொல்லாடல்கள் மூலம் பூசி மெழுகுகின்றனர்.


காணாமல் போன பெண்கள் - பாலிய ரீதியான போர்க்குற்றங்கள்

காணாமல் போன ஆண்களில் இருந்தும் இது வேறுபட்டது. பெண்கள் பாலியல் ரீதியாக காணாமல் போனார்கள். இதுவொரு கவனம் பெறாத புதிய போர்க்குற்றம்;. யுத்த காலத்திலும், யுத்தம் முடிந்த பின்னும், பாலியல் ரீதியான நோக்கத்தில் பெண்கள் பலர் காணாமல் போனார்கள். புலிகளுடன் எந்தத் தொடர்புமற்ற பெண்களுக்கு நடந்த கதி இது. புலியின் பெயரால் இவை பரவலாக அரங்கேறின. யுத்தத்தின் வெற்றி என்பது பெண்களை பாலியல் ரீதியாக குதறியும் அனுபவிக்கப்பட்டது.

ஊர் உலகத்தை ஏமாற்ற அரசு அமைத்த விசாரனையின் போது, யுத்தத்தின் பின் காணாமல் போன பெண்கள் பற்றிய தனித் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளது. இவை கூட பலத்த கண்காணிப்பு, மிரட்டல்களைக் கடந்து பதிவாகியுள்ளது. யுத்தத்தில் காயமடைந்த அப்பாவிப் பெண்கள் முதல் புலி அல்லாத இளம்பெண்கள் வரை, இராணுவத்தின் கண்காணிப்பில் காணாமல் போய் உள்ளார்கள். இதைச் சாட்சியங்கள் நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளனர். 


மக்களின் கனவை அழித்தவர்கள் புலிகள் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 19)

புலிப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில், அதற்கு காரணமானவர்கள் காரணங்களை பூசி மெழுகி பாதுகாக்கின்றனர். அவைகளைக் கேள்விக்குள்ளாக்காது விமர்சிக்காது இடது சந்தர்ப்பவாதம், தேசியவாதத்தின் பின் அனைவரையும் செல்லக் கோருகின்றது. இதை அரசியல் ரீதியாக மூடிமறைத்த இடது தேசியவாதமோ, வலது தேசிய வாதத்தை  விமர்சிப்பதையே "அவதூறு" என்கின்றது. இந்த வலது தேசியவாதம் எப்படியெல்லாம் தன்னை நியாயப்படுத்தி அணுகுகின்றது என்பதைப் பாருங்கள். "விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் என்று சொல்லிக் கொண்டு அரசையும் அரசின் படுகொலைகளையும் அரசின் யுத்தத்தையும் ஆதரித்தார்கள். இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள், சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை நான் வளர்ந்த பிறகுதான் அறிந்தேன். அதை யார் செய்தார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அப்பாவிச் சிங்கள மக்களையும் முஸ்லீம் மக்களையும் கொல்வது தீர்வல்ல என்று விடுதலைப் புலிகள் கருதியவர்கள் என்பதை நான் அறிவேன்" என்ன தர்க்கம்!? என்ன வக்கிரம்!? இதுதான் புலியிசம். இதைப் பற்றியெல்லாம் பேசாது அரசியல் செய்வது தான், தேசியத்தின் பால் இடதுசாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை என்கின்றனர். இதை மீறினால் அதை "அவதூறு" என்றும், "வரட்டுவாதம்" என்றும் வேறு முத்திரை குத்துகின்றனர்.

இலங்கை எழுத்தாளர் மாநாடு பகிஸ்கரிப்பு கோருவது, அரச பாசிசத்துக்கு மேலும் வலு சேர்க்கின்றது

பகிஸ்கரிப்பு இலங்கையில் மக்கள் வாழ்கின்றனர் என்பதை மறுதலிக்கின்றது. அரசுக்கு எதிரான போராட்டத்தையே மறுதலிக்கின்றது. இலங்கையில் சுயாதீனமான அரசியல் செயல் தளங்களை மறுதலிக்கின்றது. தாம் அல்லாத அனைத்தையும், அரசு சார்பானதாக முத்திரை குத்துகின்றது. இதைத்தான் புலம் மற்றும் தமிழ்நாட்;டு, புலித் தமிழ்தேசியம் முன்தள்ளுகின்றது. இதற்குள் இடதுசாரியம் நீந்துகின்றது.

இந்த மாநாட்டுக்கான எதிரான எதிர்ப்பு அரசியல், புலி பாசிசத்தினால் கட்டமைக்கப்பட்டது. அதன் சாதக பாதக அம்சங்கள் அனைத்தையும் மறுதலிக்கின்றது. இலங்கை பாசிசத்தை இலங்கை மக்கள் தான் முறியடிக்கவேண்டும். இந்த அரசியல் அடிப்படையைக் கூட, தொடர்ந்து இன்று புலி அரசியல் மறுதலிக்கின்றது. அங்கு வாழும் தமிழ்மக்கள் சுயாதீனமாக கூடுவதைக் கூட, இவர்கள் அனுமதிக்கத் தயாராகவில்லை. புலிகள் கடந்த காலத்தில் எதைச்செய்தனரோ, அதையே இன்று செய்கின்றனர். புலியைப் போல் தான் அரசும், தான் அல்லாத எதையும் சுயாதீனமாக செய்வதை விரும்பவில்லை. அதை தன் ஜனநாயக வே~ம் மூலம் மட்டும் தடுத்து நிறுத்த முடியாது. இன்று புலம் மற்றும் தமிழ் நாட்டு புலித் தமிழ்தேசிய பினாமிகள், இந்த வகையில் அரசுக்கு தாராளமாகவே உதவுகின்றனர். அரசுக்கு பதில் புலியே அதைச்செய்து முடிக்கின்றது.

புலியுடன் கூடி கூத்தாடும் இடதுசாரி சந்தர்ப்பவாத தமிழ் தேசியம்

புலி அழிவுடன் திடீரென உருவான இடதுசாரியமோ, இன்று புலியை எதிர்க்காது கூடிக் கூத்தாடுகின்றது. இதன் மூலம் தான் தமிழ்மக்களின் விடிவுக்கு வழிகாட்ட முடியும் என்கின்றனர். புலியை விமர்சிக்காது இருப்பதன் மூலம் தான், தேச பக்தர்களை இடதுசாரிகள் பக்கம் கொண்டு வர முடியும் என்று சந்தர்ப்பவாதம் பேசுகின்றது. இது புலி சமன் தேசியம் என்ற அரசியல் கோட்பாடு மூலம், அரசை மட்டும் எதிர்க்கின்ற புலி இடதுசாரியமாக  முன்தள்ளப்படுகின்றது. இந்தப் புலி இடதுசாரியம் புலிகளின் அரசியலை "புலிகளின் தவறுகளையெல்லாம்" என்று வகைப்படுத்துகின்றது. இப்படி இனியொரு புலியின் "தவறுகளை" திருத்தி, புலித் தேசியத்தை உயர்த்த இன்று கூடிக் கூத்தாடுகின்றனர். இந்தத் "தவறுகளை" இடதுசாரிய சந்தர்ப்பவாதம் மூலம் களைந்து, புலிக்கே தலைமை தாங்கலாம் என்பது தான் இதன் பின்னுள்ள சந்தர்ப்பவாத நுண் அரசியலாகும். புலியின் "சரியான" அரசியலில் உள்ள "தவறுகள்" பற்றிய விளக்கம், அந்த இடதுசாரியத்தின் பெயரில் வலதுசாரிய அரசியலைக் காட்டுகின்றது.

"புலிகளிடம் மக்களை விடுவிக்கக் கோருவது அநீதியான கோரிக்கை" அருள் எழிலன்

"புலிகளிடம் மக்களை விடுவிக்கக் கோருவது அநீதியான கோரிக்கை" என்றால், மக்களைக் கொல்லக் கொடுத்தது நீதியான ஒரு அரசியல் செயல். யுத்தம் நடந்த காலத்தில் இதைக் கூறவில்லை. அண்மையில், அதுவும் புலிப் பணத்தைத் திருடி வைத்திருக்கும் பணக்காரப் புலிகள், பினாமி புலி ஊடகவியலாளர்களுடன் சேர்ந்து நடத்திய ஊடகவியலாளர் கூட்டத்தில் தான் அருள் எழிலன் இதைக் கூறினார். அதேநேரம் தன் பேஸ் புக்கிலும் கூட,  இதைக் குறிப்பிடுகின்றார். "சமீப காலமாக தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருபவர்" என்று சிபார்சு செய்யப்பட்டவர் தான் இதைக் கூறியிருக்கின்றார். அவரோ இனியொரு இணைய ஆசிரியரில் ஒருவர். அவரோ புலிப் பினாமி ஊடகவியல் கூட்டத்தில் தண்டரா போடுகின்றார். இதேபோல் இனியொருவின் மற்றொரு ஆசிரியரை உள்ளடக்கிய புதியதிசை, அண்மைக்காலமாக புலிகளுடன் கூடி கும்மியடிக்கின்றது. புலத்துப் புலி மாபியாக்களை பயன்படுத்தி, தாங்கள் வர்க்கப் புரட்சி செய்யப் போகின்றார்களாம். இப்படி திடீர் அரசியலுக்கு வந்தவர்களின் பற்பல அரசியல் கூத்துகள்.

 

More Articles ...