குடிக்க சுத்தமான குடிநீர் கேட்ட போராடிய மக்கள் மீது, பாய்ந்து குதறியது அரச பயங்கரவாதம். மூன்று பேர் கொல்லப்பட, 50 மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பொது மக்களின் சொத்துகள் சேதமாக்கப்பட்டது. இராணுவ வன்முறைக்கு அஞ்சி தேவலாயத்தில் புகலிடம் பெற்ற மக்களை, இராணுவம் அடித்து துவைத்துள்ளது. சுதந்திரமாக தகவல்களை சேகரிக்கவும், தெரிவிக்கவும் முடியாத வண்ணம், ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. அரச பயங்கரவரத்தை மூடிமறைக்கும் வண்ணம், அனைத்தையும் கண்காணிக்கின்றது. விசாரணையின் பெயரில் இராணுவவிசாரணைக்கு உத்தரவுவிட்டு நாடகமாடுகின்றது. விசாரணை பெயரில், மக்களையும் ஊடகவியளாளர்களையும் தனது இராணுவ முகாமுக்கு வருமாறு மிரட்டி வருகின்றது. வெலிவேரியாவுக்கு இராணுவத்தை யார் வரவழைத்தது, யார் துப்பாக்கி பிரயோகத்துக்கு உத்தரவை வழங்கியது என்று எதையும் கண்டறிய முடியாதுள்ளதாக கூறுகின்ற பாசிச கோமாளிகளின் கேலிக் கூத்துகளின் பின்னணியில் தான், விசாரணைகள் அனைத்தும் அரங்கேற்றப்படுகின்றது.

 

 

இன்று சிவில் சமூக கட்டமைப்புக்கு பதில் அனைத்தையும் இராணுவ மயமாக்கிவரும் அரச பயங்கரவாதம் மூலம், குடும்ப சர்வாதிகாரமாக தன்னை முன்னிறுத்துகின்றது. யார் இராணுவத்துக்கு உத்தரவிட்டது என்பது கண்டறிய முடியாத விவகாரமாக மாறிவிடும் போது, யார் இதன் பின்னணியி ல் உள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமா கிவிடுகின்றது.

 

இந்த பின்புலத்தில் மக்கள் அரசிடம் கோரியது 'தமிழீழத்தை" அல்ல. தங்கள் சுற்றுச் சூழலை பாதுகாப்பதன் மூலம், உடலுக்கு ஆரோக்கியமான குடிக்கும் நீரை உத்தரவாதப்படுத்தி தரும்படி தம்மை ஆள்வோரிடம் கோரினர்.

 

கொழும்பில் இருந்து 20 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள கம்பஹா மாவட்டத்தில் இருந்த கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையின் கழிவு நீர், நிலத்தடி நீரை மாசுபடுத்தி வந்தது. இதனால் 15க்கு மேற்பட்ட கிராம மக்களின் குடிநீர் நஞ்சாகிய நிலையில், அரச அதிகாரிகளிடம் முறையிட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரசுடன் நடந்த உயர்மட்ட பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து தோல்வி பெற்ற நிலையில், வெலிவெரியாவில் ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் ஜனநாயக வழியில் வீதியில் இறங்கினர். தங்கள் அடிப்படை தேவையான குடிநீரை மக்கள் கோரியதை, மக்கள் விரோத அரசால் பொறுத்துக் கொள்ள முடியாது பன்னாட்டு தரகு நிறுவனத்துக்காக பாய்ந்து குதறியது.

 

இலங்கையில் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமான ஹேலீஸ் குழுமத்தைச் சேர்ந்த டிப்ட் புராடக்ட்ஸ் என்ற கையுறை தயாரிக்கும் தொழிற்சாலைக்காகவே, மக்கள் மேல் அரச பயங்கரவாதத்தை ஏவியது. இந்திய முதலீட்டாளர்களான பாலாஜி ஷிப்பிங் இன் முக்கிய பங்குதார நிறுவன மும் கூட. இந்த பின்னணியில் ஆளும் வர்க்கங்களும் ஆளும் தரப்புகளுக்கும் பெயரவிலான இருந்த இடைவெளி அருகி வரும் பாசிசப் பின்னணியில், அரச பயங்கரவாதம் மிகக் குரூரமான வடிவத்தை பெற்றுவருவதை வெலிவெரியா சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.

 

தமிழ் மக்கள் தங்கள் உரிமையைக் கேட்ட போது ஒடுக்கிய அதே இராணுவம் தான், குடிக்க சுத்தமான நீரை கேட்ட போது ஒடுக்கின்றது. மக்கள் தங்கள் உரிமைகளை கோரி போராடும் போது, ஒடுக்கும் கைக் கூலி இராணுவம் தான் இலங்கை இராணுவம்.

 

தமிழ் மக்களின் உரி;மைப் போராட்டத்தை ஒடுக்க முற்றுமுழுதாக சிங்களவரைக் கொண்டு உருவான இலங்கை இராணுவம் தான், சிங்கள மக்கள் போராடும் போது பாய்ந்து குதறுகின்றது. முள்ளிவாய்கால் போன்ற அதே வன்முறையையும், அதே படு கொலைகளையும் அரங்கேற்றி அதை இன்று மூடிமறைக்க முனைகின்றது. வெலிவேரிய படுகொலை, 'இராணுவம்" பற்றிய பொது விம்பங்களையே தகர்த்து இருக்கின்றது.

 

தமிழர்கள் 'சிங்கள இராணுவமாகவும்" சிங்களவர்கள் 'தங்களுடைய இராணுவமாகவும்" கற்பித்திருந்த பொது நம்பி க்கைகளையும், அனுமானங்களையும், முடிவுகளையும் தகர்த்து இருக்கின்றது. இலங்கை இராணுவத்தை இனி இலங்கை மக்கள் இன ரீதியாக அணுக முடியாது என்பதையும், இலங்கை அனைத்து மக்களும் உணரும் வண்ணம் வெலிவெரியா சம்பவம் உணர்த்தி நிற்கின்றது.

 

அரச பயங்கரவாதம் என்ற வெடி குண்டு சிங்கள அரசு, 'சிங்கள இராணுவமும் என்ற புனித விம்பங்களை தகர்த்து இருக்கின்றது. சிங்கள இராணுவமாக இனவாதம் மூலம் மையப்படுத்திய எதிர்ப்பு மற்றும் ஆதரவு அரசியலை வெலிவெரியா படுகொலை முடிவுக்குகொண்டு வந்திருக்கின்றது.

 

மூலதனத்தின் சுரண்டல் செயற்பாட்டை பாதுகாப்பதே அரசு என்பதை, இனம் காட்டி இருக்கின்றது. அரசு கூறும் நாட்டின் அபிவிருத்தி. மக்களின் வேலை வாய்ப்பு என்பது எல்லாம் மூலதனத்தின் சுரண்டலே. அரசு மக்களின் நலனுக்காக அல்ல, மூலதனத்தின் நலனுக்காகவே செயற்படுகின்றது என்பதை, அரச பயங்கரவாதம் மூலம் மக்களுக்கு உணர வைத்து இருக்கின்றது.

 

சுற்றுச் சூழலை அழித்து, நிலத்தடி நீரை நஞ்சாக்கும் செயலை ஆதரித்த அரசின் செயல் தேசபக்த செயலா என்று கேள்வி யை இன்று எழுப்பி இருக்கின்றது. இதை எதிர்த்த மக்களின் செயற்பாடு தான், தேசபக்த செயற்பாடு என்பதை மட்டுமின்றி, அரசுக்கு எதிரான தேசபக்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை மக்களுக்கு உணர்த்தி இருக்கின்றது. அரசு யாருடன் நிற்கின்றது என்ற உண்மையை, சிங்கள மக்கள் மேலான தனது அரச பயங்கரவாதம் மூலம் போட்டு உடைத் திருக்கின்றது.

 

இதுவரை தமிழ்மக்களை ஒடுக்கும் தேசபக்த சக்தியாக கட்டமைத்த போலியான பேரினவாத தேசியவாதத்தை, அனைவரும் இனம் காண வைத்திருகின்றது. அரசின் தேசபக்தி என்பது சுரண்ட உதவுவதும், சுரண்டலை பாதுகாப்பதும் தான். நீண்ட காலமாக மக்களை மதத்தின் பெயராலும், இனத்தின் பெயரால் பிரித்து வைத்திருந்தவர்கள் இவர்கள் தான். இதன் மூலம் மக்களை எதிரியாகவும், நண்பனாகவும் சித்தரித்த, தங்கள் மக்கள் விரோத போக்குகளை இனித் தொடர முடியாது. சிங்கள மக்களுக்கு தாங்கள் யார் என்பதை, அரச பயங்கரவாதம் மூலம் வலாற்றுப் பாடத்தைக் கற்பித்து கொடுத்து இருக்கின்றனர்.

 

அபிவிருத்தி என்பது மக்களை கொள்ளை இடுவதற்கே, மக்களை வாழ வைப்பதற் கல்ல. கொள்ளையிடுபவனுக்கு சுற்றுச் சூழலையிட்டு அக்கறைப்படுதில்லை. மக்க ளின் வாழ்வையிட்டு கவலைப்படுவதில்லை. தனது பணப்பையை பெருக்கிக் கொள்ளும் சுரண்டலில் மட்டும் தான் அது அக்கறை கொண்டது. கூலிக்கு மராடிக்கும் இராணுவம் போல், அரசு கூட முதலாளியின் எடுபிடி. கூலி இராணுவத்தை பௌத்த சிங்கள தேசபக்த இராணுவமாக காட்டியது போல், சுரண்டலை மக்களுக்கான வேலை வாய்ப்பாகவும் நாட்டின் அபிவிருத்தியாக காட்டி மோசடி செய்ததை, வெலிவேரியா மக்கள் மேலான அரச பயங்கரவாதம் மூலம் நிர் வாணமாக்கி இருக்கின்றது.

 

மனிதனின் போராட்டமே வாழ்வாகிவிட்ட நிலையில், எந்த உண்மைகளையும் புதைக்க முடியாது. மக்களைச் சுரண்டி வாழும் வர்க்க அமைப்பில், மக்கள் ஒடுக்கப்படுவதும், சுரண்டப்படுவதை பாதுகாப்பதே அரசு என்பதும், இதற்கு எதிராக போராடுவதே மக்களின் வாழ்வாகிவிட்டது. இதைத்தான் வெலிவேரியா மக்கள், அனைத்து மக்களுக்கும் உணர்த்தி நிற்கின்றனர்.