இதில் உள்ள அரசியல் மற்றும் நடைமுறை வேறுபாட்டை தெளிவாக பிரித்துப் புரிந்து கொள்ளவேண்டும்;. இன நல்லுறவு ஊடாக வர்க்கப் போராட்டமா அல்லது வர்க்கப் போராட்டம் ஊடாக இன இனநல்லுறவா என்பதை அரசியல்ரீதியாக தெளிவுபடுத்தி வேறுபடுத்திக் கொள்ளவேண்டும். சுயநிர்ணயம் முன்வைக்கும் இன ஐக்கியம் என்பது, இனங்களுக்கு இடையில் நல்வுறவுகளை ஏற்படுத்துவதல்ல. மாறாக வர்க்கப் போராட்டத்தின் ஊடான வர்க்க ரீதியான ஐக்கியத்தையும், அது சார்ந்த இன நல்லுறவையும் ஏற்படுத்துவதுதான்.

கோசங்கள் தனித்து இன நல்லுறவை மையப்படுத்தியதாக இருக்கக் கூடாது. மாறாக வர்க்க உள்ளடக்கத்தில் இனநல்லுறவைக் கோரும் கோசங்களாக இருக்க வேண்டும். இந்த வகையில் கோசங்கள், போராட்டங்கள் முதல் போராட்டங்களைக் குறித்து அடையாளப்படுத்தும் பெயர்கள் வரை, இந்த அரசியல் வேறுபாட்டை புரிந்து கொண்டு, அதை அரசியல்ரீதியாக வேறுபடுத்திக் கொண்டு அணுகவேண்டும். வர்க்கப் போராட்டம் தான் இனப்பிரச்சனையைத் தீர்க்கவல்லதானதுவே ஓழிய. இதுவல்லாத எதுவும் முரணானது.

மார்க்சியம் இங்கு இனப்பிரச்சனைக்குத் தீர்வாக முன்வைக்கும் சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வு, முரணற்ற ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டது. இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்;. அதாவது முதலாளித்துவ ஜனநாயகத்தின் முரணற்ற தன்மைக்குள் உள்ளார்ந்த முதலாளித்துவ தீர்வைத்தான் சுயநிர்ணயமாக மாhக்சியம் முன்வைக்கின்றது. இந்த முரணற்ற முதலாளித்துவத் தீர்வு மூலம்;, வர்க்க போராட்டத்தை முன்னெடுக்கவே மார்க்சியம் வழிகாட்டுகின்றது. மாறாக அதை தீர்வாக அடைவதை நோக்காகக் கொண்டு செயல்படுவதல்ல. இதைச் சரியாக புரியாது தலைகீழாகப் புரிந்து அணுகினால், வர்க்கப் போராட்டத்துக்கு எதிரான அரசியல் விளைவைத் தரும்.

வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க முரணற்ற ஜனநாயகத்தை தீர்வாகக் கொள்ளவேண்டுமே ஓழிய, முரணற்ற ஜனநாயகத்தை தீர்வாக முன்னிறுத்தி வர்க்கப் போராட்டத்தை பின்நகர்த்தக் கூடாது.

வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கத்தான் சுயநிர்ணயமே ஒழிய, சுயநிர்ணயத்தின் கூறுகளை முன்னெடுப்பதன் மூலம் வர்க்கப் போராட்டத்தை நடத்தலாம் என்பது தவறானது. தவறான அரசியல் விளைவைத் தரும்.

இன ஐக்கியத்தை மையப்படுத்திய இன்றைய கோசங்கள், போராட்டங்கள் முதல் அடையாளப் பெயர்கள் அனைத்தும் இனநல்லுறவை ஏற்படுத்துவதை நோக்காகக் கொள்ளாது, வர்க்க ஐக்கியத்தை மையப்படுத்தியதாக அமைய வேண்டும்;.

ஆக குறுகிய காலத்திற்குள் இனநல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில் அல்லாது நீண்டகால நோக்கில் வர்க்க நல்லுறவை ஏற்படுத்தும் வண்ணம், கோசங்கள், போராட்டங்கள் அடையாளப்படுத்தும் பெயர்கள் என அனைத்தும் அமைய வேண்டும்.

எங்கள் நோக்கம் இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை நடத்துவதுதானே ஒழிய, இனநல்லுறவை மட்டும் எங்கள் இலக்காகக் கொண்டு அதை சாதிப்பதல்ல.

இனநல்லுறவை ஏற்படுத்தி வர்க்கப்போராட்டத்தை சாதிக்கலாம் என்பது தவறானது. இன்றைய இனவாதத்துக்குப் பதில் இனநல்லுறவை நோக்கியது மட்டுமல்ல, மாறாக வர்க்கப் போராட்டமாக அதை மாற்ற வேண்டும்;.

இங்கு வர்க்கப் போராட்ட விருப்பங்களை இன நல்லுறவு ஊடாக சாதிக்க முடியாது. அதை வர்க்கப் போராட்டத்தின் ஊடாகவே சாதிக்கமுடியும்.

பி.இரயாகரன்

26.08.2012

1. இனவொடுக்குமுறையையும் பிரிவினைவாதத்தையும் முறியடிப்பது எப்படி சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் -01

2. தமிழ் சிங்கள முன்னேறிய சக்திகள் ஒன்றிணைவதற்கான அரசியல் எது?- சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் -02

3. அரச பாசிசத்தை புரிந்துகொள்ள புலிப் பாசிசத்தை புரிந்து கொள்ளல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல்-03

4. புரட்சிக்குப் பிந்தைய தீர்வைக் கொண்டு புரட்சிக்கு முந்தைய பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் 04

5. இலங்கையில் ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி ஏன் உருவாகவில்லை - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் 05

6. புரட்சியின் ஏற்றத்தாழ்வான பல கட்டங்களை மறுத்தல் பற்றி - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் -06

7. "கோத்தாவின் யுத்தம்- ஒரு நல்வரவு சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் -07

8. கட்சிக்கு ஆள் பிடிக்கும் அரசியல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் -08

9. இனங்களை ஐக்கியப்படுத்தும் நடைமுறைக்கான தடைகளை இனங்காணல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் -09

10. இனங்கள் இணங்கி ஐக்கியத்துடன் வாழ்வதற்கான தடைகளை இனம் காணல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல்-10

11. தமிழ் மக்களுக்காக சிங்கள மக்கள் போராட முடியுமா ? இல்லை - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் -11

12. எம்மினத்தை இனவாதத்துக்கு எதிராக அணிதிரட்டாது புரட்சியை நடத்தமுடியுமா - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் -12

13. சிங்கள தேசியத்தை எதிர்க்காத சிங்கள சர்வதேசியம் மார்க்சியமல்ல - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல்-13