அண்மையில் சர்வதேச வீரர்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்காவின் ஜனநாயகவிரோத நிற இனவெள்ளை நாசிசத்தை இனம்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளனர். சர்வதேச ஒப்பந்தங்களை மட்டுமன்றி, சர்வதேச மனிதஉரிமை மீறல்களையும் மீறிவருவதாக அமெரிக்காமீது குற்றம்சாட்டியுள்ளனர். 260 பக்கங்களைக்கொண்ட இவ்வறிக்கையில் அமெரிக்காவிலுள்ள நிற மக்கள்மீது திட்டமிட்ட குற்றச்சாட்டுக்களையும், மரணதண்டனைகளையும் விசாரனையின்றி மனிதநாகரீகத்திற்கு எதிராக பொய்யாக சோடிக்கப்பட்டு நிகழ்த்தப்படுகின்றன.

 

 

அமெரிக்காவில் மொத்த சனத்தொகையில் கறுப்பு இனத்தவர் தொகை வெறும் 6வீதம் மட்டுமேயாகும். ஆனால் 1976 முதல் 1995 வரையிலான காலத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டவரில் 40 வீதமானோர் கறுப்பின மக்களாவர். சிறைகளில் பொய்யாக குற்றவாளியாக்கப்பட்டு வைத்திருப்போர் 44வீதம் பேர் கறுப்பினத்தவராவர். இந்த ஜனநாயக அமெரிக்காதான் இன்று ஈரான், லிபியா, கியூபா பயங்கரவாத நாடுகள் என அறிவித்து உலகை அதன் சட்ட ஒழுங்குகளையும் சர்வாதிகரமாக ஜனநாயகத்தின் பெயரில் மீறுகின்றனர்.  அண்மையில் அமெரிக்கா கூட்டு ஒன்றியத்தில் ஆங்கிலம் மட்டுமே அரசுமொழியென வேறு அறிவித்துள்ளனர். அமெரிக்காவின் மக்கள் விரோத சர்வதேச மனிதவிரோத நடவடிக்கைகளை இனம்காண்பதும், அதன் ஜனநாயக வேடம் பயங்கரவாதம் சார்ந்தது என்பதையும் புரிந்துகொள்ள வேறெதுவும் தேவையில்லை. அந்தளவுக்கு சர்வதேச வீரர்கள் ஆணைக்குழு அறிக்கை சரியாக வெட்டவெளிச்சமாக்கியுள்ளது