சரிநிகர் 132இல் தலித்தியக் குறிப்புகள் என்ற அருந்ததியின் கட்டுரை எப்படி மார்க்சியத்துக்கு எதிராக சுரண்டும் வர்க்கத்தை பாதுகாக்க முன்வைக்கப்படுகிறது எனப்பார்ப்போம்

தலித்தியக் குறிப்புகள் எந்த விதத்திலும் வலதுசாரித்தனத்துக்கோ எதிர்ப்புரட்சிக்கோ இட்டுச் செல்லாத வகையில் எச்சரிக்கையுடனேயே எழுதப்படுகின்றன ஆனால் தலித்தியத்தின் தனிப்பண்புகள் இத்தகைய வரட்டுத்தனத்திற்கு (இங்கு இவர் மார்க்சியம் பேசும் சிலரை எனக் குறிப்பிடுகிறார்) பலி கொடுக்கவும் முடியாது என்பதிலும் அதே எச்சரிக்கையுணர்வு எமக்கிருக்கவேண்;டும் என்பதன் ஊடாக எப்படி மார்க்சிய அரசியலுக்கு எதிராக தலித் அரசியலை முன்வைக்கிறார் என்பதை ஆராய்வோம்

பாட்டாளிவர்க்கமும் அதன் கோட்பாடான மார்க்சியமும் எப்போதும் இயங்கியல் தன்மைக் கொண்டது. அது சமுதாயத்தின் எல்லா முரண்பாடுகள் மீதும் எல்லா வேறுபட்ட வர்க்க நிலைகளின் செயல்கள் மீதும் வரட்டுதனத்தை கையாள்வது இல்லை. எல்லாப் பிரச்சனைகளையும் வர்க்க புரட்சியை முன்னெடுக்க அதை நோக்கி நகர்த்த சமுதாய பிளவுகள் மீது இயங்கியல் அணுகு முறையை கையாள்கின்றது. இங்கு வரட்டுதனத்தை கையாளும் யாரும் புரட்சியை முன்னெடுக்க முடியாது ஏன் அவர்கள் மார்க்சிய வாதிகளாக எப்போதும் இருப்பதில்லை இங்கு இந்த வரட்டுவர்க்கத்திற்கு எதிராக மார்க்சியவாதிகள் போராடுகின்றனர்  இதுதான் மார்க்சிய இயங்கியல்

இன்று தலித் பெயரால் முத்திரை குத்தியோ (உதாரணமாக டாணியல் படைப்புக்கள்) அல்லது அப்படி சிலரால் இடப்படும் இலக்கியங்கள் கலைகள் மற்றும் அனைத்தையும் ஏன் ஐனநாயக கோரிக்கைகளை பாட்டாளி வர்க்கம் ஆதரிக்கிறது  முன்னெடுக்;கின்றது. பாட்டாளி வர்க்கம் தலித்தியத்;துக்குள்ளும் வெளியிலும் ஏன் எங்கும் எல்லா இடமும் போராடுகின்றது. பாட்டாளி வர்க்கம் தலித்துக்குள்ள முதலாளிகள் தலித்திய பிற்போக்கு கோரிக்கைகள் தலித்துக்குள் சாதியை நிலைநாட்டும் எல்லா செயலையும் தலித்திய பிரிவுக்குள் எதிர்த்து போரடுகின்றது. அதே நேரம் சாதி ஒடுக்கு முறையை எதிர்த்தும் சாதியை கடந்த சமுக கட்டமைப்பை கோரியும் அணிதிரட்டியும் வர்க்கப் போரை முன் தன்னி தலித்துக்குள் போராடுகின்றது.

சாதி ஒடுக்குமுறை தீர்க்கப்பட வேண்டுமாயின் சாதியை கடந்த ஒரு சமுக அமைப்பை உருவாக்கும் ஒரே ஒரு பாதை மட்டும்தான் சாதியை ஒழித்துக்கட்டும். இதில்தான் பாட்டாளி வர்க்கமும் அதன் கோட்பாடான மார்க்சியமும் தீவிரமாக போராடுகின்றது.

தலித்தியம் சாதி கட்டமைப்பை அடிப்படையாக கொண்டு நிறுவனமாக மாறுவதுடன் தனக்குள் சாதிப்பிளவை கடக்க முடியாதுமான சாதியை கடந்த சமூகத்தை கோராதுமான தனக்குள் சுரண்டும் வர்க்கத்தை பாதுகாக்கும் வகையில் முன் வைக்கும் தலித் அரசியலையும் தனக்குள்ளும் வெளியிலும் சாதிஅமைப்பை தக்கவைத்து சுரண்டும் வர்க்கத்தால் தனித்து அரசியலை கொண்டு தலைமை தங்கும் வகையில் தனக்குதான் அணைகட்டியது தான் தலித்தியம்.

முன்பு உயர்சாதிகள் கிராமங்களில் ஒதுக்குபுறத்தில் கீழ்சாதிகளை ஒதுக்கி அணைகட்டி வைத்து இருந்த சமூக கட்டமைப்பு தகர்க்க எழுந்து வரும் போரட்டத்தை காக்க இன்று தலித் அரசியல் அதையே தனக்குதான் வேலிபோட்டு செய்கின்றது. இதை தலமைதாங்கும் தனித் முதலாளிகளும் பூர்சுவா வர்க்கமும் தமது சொந்த நலன்களை பெறவும் தக்க வைக்கவும் தேவைப்படுவது தலித் அரசியல் ஊடான ஒரு சமுக அடித்தளமே. இதைதான் சுரண்டப்படும் தலித்துக்கு  முன் வைப்பதன் மூலம் மொத்த சமூகத்தையும் இதை இன்றி பாதுகாக்க முனைகின்றனர் இன்றுதலித் அணிக்குள் பல சாதிகள் உள்ளதுடன் அணிக்குள் உள்ள சாதி கட்டமைவு உடைக்க முடியாத வகையில் தம்மை தாம் தீண்டதகாதவர்களாக பிரகடனம் செய்ய பார்ப்பனியத்திற்கு போட்டியாக தலித் அரசியலை பிரகடனம் செய்கின்றனர்.

இங்கு சாதி சங்கங்கள் சாதித் தலைவர்கள் சாதிய சுரண்டும் வர்க்கங்கள் தமது சொந்த நலனைப் பேணிக் கொள்ள சலுகை பெற இதை பயன்படுத்துகின்றன. இச் சலுகைகளில் சில எலும்புகள் மக்கள் முன் விழுந்து

அருந்ததியன் வலதுசாரிக்கோ எதிர் புரட்சிக்கோ சார்பாக அல்ல அதே நேரம் வரட்டு வாத மார்க்சியத்திற்கு எதிராக என்கிறார். நல்லது அருந்ததியன் மிக அக்கறையுடன் தலித்தை ஆய்வு செய்து எழுதும் நீங்கள் ஏன் வரட்டுவாதமாக மார்க்சியம் இருப்பதில்லை என்பதை கண்டு கொள்வதுமில்லை. இங்கு பிரச்சனை வரட்டுவாத மார்க்சியத்தை விமர்சிப்பதே ஒழிய (இங்கு அருந்ததியருக்கு இதைகாணும் அளவுக்கும் விமர்சிக்கவும் கூடியளவுக்கு தத்துவபலம் உள்ளவர் அதனால்தான் அடையாளம் காண்கிறார்) வித்தை காட்ட கூடாது

மார்க்சியவரட்;டு வாதம் விமர்சிக்கப்படின் அது சரியானது. ஆனால் அது பற்றி கூறவில்லை. மாறாக தலித் அரசியலை முன் வைக்கிறார். ஆகவே இங்கு இவர் வரட்டு வாதம் என்பது தலித் அரசியலை விமர்சிப்பதைத் தானே ஒழிய வேறு ஒன்றுமல்ல. மார்க்சிய அடிப்படை கோட்பாட்டைத் தான் இவர் வரட்டுவாதம் எனக் காட்டி தலித் அரசியலை பிரகடனம் செய்கிறார் மறைமுகமாக. அதாவது மார்க்சியத்துக்கும் வலதுசார் pதனத்திற்கும் இடையில் தலித் அரசியல் உண்டு என்பதை தான் நாசூக்காக சொல்ல முனைகிறார். இன்று உலகில் முதலாளித்துவ பாராளுமன்ற ஐனநாயகம் அதன் கம்ய+னிசியத்திற்கும் நாசி மற்றும் பாசிசத்திற்கு இடையில் உள்ளதாக காட்டுவதை அருந்ததியன் வலதுசாரிக்கும் வரட்டு மார்க்சியத்துக்கும் இடையில் தலித் அரசியலை முன் வைக்கிறர்.

இந்த தலித் அரசியலை பின் நவீனத்துவவாதிகள் தான் அடையாளப்படுத்தி கோட்பாட்டு வடிவம் கொடுக்க தலைகீழாக நிற்கின்றனர் இதே சரிநிகர் பின் நவீனத்துவவாதியான nஐகத்வீரசிங்ஹவின் ஒரு கூற்றை எடுத்துப் பார்ப்போம். இந்த சமூகத்தின் முரண்பாடுகள் புரட்சியால் முடிவுக்கு வரும் என்று மாக்சியமும் கம்யூனிசமும் நம்பின. அவை நடைமுறைச் சாத்தியமற்ற கற்பனைபூர்வமான விடையை (ரவழடியைn) வரலாற்றுக்கு அளிக்க முயன்றன. ஆனால் இது நம்பமுடியாத முரண்பாடு என்பது யதார்த்தத்தின் தவிர்க்க முடியாத ஒரு பக்கம் நீங்கள் இந்த முரண்பாடுகளின் உயர் வலுவைக் குறைக்கலாமே ஒழிய இவற்றை தீர்க்கமுடியாது என்று இந்த பின் நலினத்துலவாதி இந்த சமூக ஒழுங்கை பாதுகாக்க கூறிய போது அருந்ததியன் உயர்த்தும் தலித் அரசியல் எந்தளவு அழகாக பொருந்திவிடுகிறது. முரண்பாடு தீர்க்கமுடியாதது அது முடிவு அற்று தொடரும் கம்யூனிசம் முரண்பாட்டை கடக்கும் மனிதநலன் நேசித்த போதும் அது பொய்யான பொட்டல் காடு என்கிறார் பெண் விடுதலையா? சுரண்டல் ஒழிப்பா?------எல்லாம் கற்பனையினால். இம்முரண்பாடு கற்பிதமானது ஒருக்காலும் தீர்க்க முடியாது. குறைக்கலாம் எனவே சீர்திருத்த போராட்டத்தை மட்டும் எடுங்கள். மாற்றுவோம் என கூறி வர்க்கப்போரை எடுப்பது விடுதலையல்ல என்ற நம்பிக்கையீனத்தை விதைத்து அதில் இந்த ஏகாதிபத்திய உலக மாயமாதலை பாதுகாக்க எச்சில் ஒழுக ஏகாதிபத்தியத்துக்காக அழுகிறார். அதாவது தலித் அரசியல் கூட சாதியை கடக்கமுடியாது தான் சலுகை கோரியே நாம் பிழைப்போம் என்பதை கூறத்தான் தலித் அரசியல் என்ற சாக்கடையை முன் தள்ளுகின்றனர். இது இன்று எதை பாதுகாக்கின்றது எனப்பார்ப்போம். இன்றைய உலகமயமாதல் சுரண்டல் அமைப்பை பாதுகாக்க சாதி ஆதிக்கத்தை பாதுகாக்க ஆணாதிக்கத்தை பாதுகாக்க-----தலித் அரசியல்வித்தை தேவைபடுகின்றன. இதை எதிர்த்து போராடுவதை தடுக்க சமூகத்தை பிளந்து முன்வைத்து இருக்கும் தலித் அட்டவணையைப் பார்ப்போம்.

தமிழ்             தலித்        பெண்           வர்க்கம்

தமிழ்                                             ஓ

தலித்               ஓ                         ஓ                    ஓ                  ஓ

பெண்                                            ஓ

வர்க்கம்                                        ஓ

இந்த வரைவை தலித் வரைவு என்கின்றனர். அதாவது இது சுரண்டும் வர்க்க அட்டவணையே ஒழிய ஒன்று மல்ல. இல் வரைவு ஒடுக்கப் பட்ட மக்களை அடையாளபடுத்திவிடாது மாறக இன்றைய உலக ஒழுங்கை பாதுகாக்க சாதி தலை வர்க்கங்களிலும் சுரண்டும் வர்க்க ஆதிக்கத்தையும் பாதுகாக்க முன்வைத்த இந்த வரைவை நாம் விரிப்போமாயின் இதன் கபடம் அம்பலமாக நிதர்சனமாகி விடுவதை கீழ் உள்ள வரைவு மூலம் காணமுடிகிறது.

 

 

தமிழ்முதலாளி   தமிழ்பாட்டாளி   தலித்முதலாளி  தலித்பாட்டளி  பூர்சுவாபெண்   பாட்டளி பெண்   சுரண்டுவோர்      சுரண்டப் படுவோர்

தமிழ் முதலாளி

தமிழ்பாட்டாளி

தலித்முதலாளி        ஓ                                        ஓ                                      ஓ                                    ஓ

தலித் பாட்டாளி                                                                       ஓ                                     ஓ                                            ஓ

பூர்சுவா பெண்                                                     ஓ

பாட்டாளிபெண்                                                                                                               ஓ

சுரண்டுவோர்                                                      ஓ

சுரண்டப்படுவோர்                                                                      ஓ

அருந்ததியன் தலித் வரைவை நாம் பிரிக்கும் போது பிளவுபட இரு வேறு நலன் கொண்ட சுரண்டும் சுரண்டப்படும் இரு திட்டவட்டமான பிளவுகளை மேல் உள்ள வரைவு காட்டுகிறது தலித் அரசியலும் அதை ஒட்டிய தலித் வரைவையும் சுரண்டும் வர்க்கப்காப்பினதே ஒழிய சுரண்டப்படும் வர்க்கசார்பினது அல்ல தலித் வரைவு ஒடுக்கப்பட் மக்கள் சார்பானதுமல்ல மாறாக ஒடுக்குபவன் சார்பானது என்பதை வரைவு தெளிவாக்குகின்றது. இந்த வரைவு திட்டவட்டமாக இருபிளவுகளை இனம் காட்டுகின்றது  இந்த வரைவு உள்ள வரை தலித் என்பது சுரண்டும் வர்க்க தலைமையில்தான் இருக்கமுடியும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வரைவு எப்படியிருக்க முடியும் என்பதை நாம் கீழ் தருகின்றோம்.

தமிழ்பாட்டாளி    தலித்பாட்டாளி      பாட்டாளிபெண்          பாட்டாளிவர்க்கம்     உலகபபாட்டாளி

தமிழ்பாட்டாளி

தலித்பாட்டாளி

பாட்டாளிபெண்

பாட்டாளிவர்க்கம்

உலகபாட்டாளி

இந்திய பாட்டாளி

இது தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வரைபு. இதற்குள் சுரண்டும் நலன் இருப்பது இல்லை. இவை ஒன்றுடன் ஒன்று எல்லாத்துறையிலும் கலக்கின்றன. இவ்வரைபு சாதியைக்கடக்கின்றது. ஆணாதிக்கத்தை ஒழிக்கின்றது. உலக மக்களை ஒன்றாக்குகின்றது. இனத்தைக் கடக்கின்றது. வரைபைப் பொறுத்த வரையில் இது மட்டும் தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தீர்வைத் தருகின்றது. தலித் வரைபு உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஆதிக்கத்தைப் பாதுகாத்து வைத்து இருக்க முன்வைக்கும் தலித் அரசியல் தான் என்பதைக் காட்டுகின்றது.

தலித் அரசியல் வர்க்கம் கடந்த சுயேட்சையானது அல்ல. அது இடது வலது சாரித்தனத்துக்கு இடைநடுவில் தொங்க முடியாது. இதில் நிச்சயமாக ஒன்றை பிரதிநிதித்துவம் செய்தேயாக வேண்டும். அப்போது இது இரண்டாக பிளந்து போகும். (வரைபில் காட்டியது போல்)

இன்று பின் நவீனத்துவ வாதிகள் தமது ஏகாதிபத்திய கோட்பாட்டை முன்தள்ள, அதில் தாலாட்டுப் பெற்று வளரும் தலித்தியம்,  இன்றைய உலக ஒழுங்கை பாதுகாக்க முன்வைக்கப்படும் எதிர்ப்புரட்சி கோட்பாடு தானே ஒழிய வெளியில் அல்ல.

தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னுள்ள பிரச்சனை சாதியைக்கடக்க சாதியமைப்புக்கு எதிராகப் போராடியபடி, அனைத்து மக்களுடன் ஒன்றிணைந்து போராடுவதேயாகும். சாதியமைப்பு என்பது சுரண்டலை அடிப்படையாகக் கொண்டு கட்டியமைக்கப்பட்டது என்பதை சரியாக அடையாளப்படுத்தியபடி, இதை தகர்க்க சுரண்டலை எதிர்த்த போராட்டத்தினூடாக, சாதீய பொருளாதார உறவுகளை, பண்பாடுகளை, சுரண்டலை தகர்த்து எறிய முன்வருவதுமேயாகும்.

உலகில் எல்லா முரண்பாடுகளையும் களைந்து எறிய ஒரு மனிதன், எப்படி போராட முனைகின்றானோ, அதே பாதை தான் மிக அடிநிலையில் உள்ள சாதிப்பிரிவு மக்களின் பாதையுமாகும். அதைவிடுத்து பிற்போக்கு ஆதிக்க அடையாளத்தை மீளவும் கோருவதும், தக்கவைப்பதன் ஊடாக கிணற்றுத் தவளையாக இருந்து கத்தக் கோருவதுமல்ல.

கிணற்றை விட்டு வெளியில் வருவதும், வெளியில் உள்ளோருடன் ஒன்றிணைவதும் தான் சாதிக்கட்டமைப்பை  உடைக்க ஒரே ஒரு பாதையுமாகும்.

தலித் என்பது அதன் அரசியல் என்பதும் முரண்பாடுகளைக் கடக்க முடியாது என்ற பின் நவீனத்துவம் விதைத்த நச்சுக்காளான்கள் தான். இது அழிக்கப்பட வேண்டும். இது தான் பயிரைப் பாதுகாக்கும் ஒரே ஒரு பாதையுமாகும்.