அமெரிக்கா தலைமையிலான பயங்கரவாத ஆக்கிரமிப்பை எதிர்த்து உழைக்கும் மக்களின் மக்கள்திரள் போராட்டத்தை முன்னெடுப்போம்.

அமெரிக்காவின் இதயமான மூலதனத்தின் சுதந்திர வர்த்தக மையங்கள் மீதும், அதை பாதுகாக்கும் இராணுவ கட்டளை மையமான பென்டகன் மேலான, தனிமனித பயங்கரவாத தாக்குதல்கள் உலகையே உலுக்கியது. இந்த தாக்குதலால் அமெரிக்கா பொருளாதாரத்துக்கு 3000 கோடி டொலர்  நேரடி  இழப்பு எற்பட்ட அதே நேரம். மொத்த இழப்பு 9000 கோடி டொலர் என முதல் மதிப்பு தெரிவிக்கின்றது. இதை அடுத்து அமெரிக்க ஐனாதிபதி புஷ் "அமைதியான அடிபணியாத ஆவேசம்" என்று கூறியபடி, மறுகாலனியாக்க முளைகள் ஆழமாகவும் அகலமாகவும் விதைப்பதன் மூலம், உலகை மறுபங்கீடு செய்வது தொடங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் மூலதனத்துக்கு உலகளவில் ஏற்பட்டு வந்த நெருக்கடியில் (அண்மையில் அமெரிக்காவில் பலமுறை தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் வட்டிவீதம் குறைக்கப்பட்டது) இருந்து மீள, புதிய இராணுவ ஆக்கிரமிப்புகள் மூலதனத்துக்கு அவசியமாகின்றது. இந்த ஆக்கிரமிப்பின் மூலம் பொருளாதார நெருக்கடியை சரிக்கட்டி விட முடியும் என, மூலதனம் கொக்கரிக்கின்றது. மூலதனத்தின் சுதந்திரமான விடுதலைக்கு உலகம் தழுவிய விரிவாக்கமே, உலகத்தின் பொருளாதாரமாக, பண்பாடாக, ஆட்சியாக மாறிவருகின்றது. இந்த நிகழ்ச்சி நிரலில் மற்றைய அனைத்தையும் ஈவிரக்கமின்றி அழித் தொழிக்கும் போது, எதிர்வினைகள் பலதளத்தில், பலவடிவில் வெடித்துக் கிளம்புகின்றன. இந்த வகையில் உலகை உலுக்கும் மக்கள் போராட்டம் ஒருபுறமும், தனிமனித பயங்கரவாத தாக்குதல்கள் மறுபுறமாக, இரு வேறு தளத்தில் நேர் எதிராக கருக்கொண்டு பிரசிவிப்பது நிகழ்ச்சி நிரலாகிவிட்டது.

 

அமெரிக்கா மீதும், அப்பாவி மக்கள் மீதான இந்த தாக்குதலை வித்திட்டதே, அமெரிக்க மூலதனமும் அதை பாதுகாக்கும் அதன் உளவுபிரிவுதான். உலகளவில் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுத்த கம்யூனிசத்துக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களே, ஐpகாத் என்ற பெயரில் இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை உலகெங்கங்கும் கட்டமைத்தனர். உலகின் 120 கோடி இஸ்லாமிய மக்களை மத அடிப்படைவாதம் மூலம் திசை திருப்ப "ஜிகாத்" என்ற பெயரில், இஸ்லாமுக்கு புது விளக்கம் கொடுத்த ஏகாதிபத்திய உளவு அமைப்புகள், கம்யூனிசத்துக்கு எதிராகவே மத அடிப்படைவாதத்தையும், ஆயுதக் குழுக்களையும் உருவாக்கினர். இந்த இஸ்லாமிய குழுக்கள் ஏகாதிபத்திய நலன்களுக்கு இசைவாக இருந்தவரை, கம்பளம் விரித்து பணமும் ஆயுதமும் கொடுத்து சீராட்டி வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக செயற்பட்டனர். இன்று பயங்கரவாதிகள் என்று எப்படி வருணித்து ஒடுக்குகின்றனரோ, அதுபோல் அன்று இவர்களை விடுதலை வீராராக உலகு காட்டி, பாராட்டி உதவக் கூட ஏகாதிபத்தியம் தயங்கவில்லை.

அமெரிக்காவின் முன்னாள் ஐனதிபதி றொன்ல்ட் றீகன் அன்று ஒசாமா பில்லாடனை, அமெரிக்கா சுதந்திரத்துக்கு போராடிய ஜோர்ஜ் வாஷிங்டனுக்கு ஒப்பிடும் அளவுக்கு ஒரே கோப்பையில் உண்டவர்கள். அப்படியிருக்க ஐனதிபதி புஷ் "மனித இயல்பில் உள்ள மோசமான அம்சங்களின் ஒட்டுமொத்த உறைவிடமாக" உள்ளனர் என்று இன்று கூறுவது, அமெரிக்க பொருளாதார நலன்களுக்கு இவை முரண்பாடாக இருப்பதில்லை. அமெரிக்க மூலதன நலனுக்கு இசைவாக அமெரிக்கா உளவு அமைப்பின் செல்ல வளர்ப்பு பிள்ளையாக ஒசாமா பில்லாடன் இருந்தவர். உலகளாவிய ஏகாதிபத்திய மூலதனத்தை பாதுகாக்க, ஒசாமா பில்லாடன் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை சிறப்பாக கையாண்ட போதே இந்த பாராட்டும் பதக்கமும் கிடைத்து. அமெரிக்க உளவுப்பிரிவின் முன்னணி தலைவர்களுடன், இஸ்லாமிய பயங்கரவாதத்தை கட்டமைப்பதில் தோளோதோள் நின்று திட்டமிட்ட, பல ஆதாரபூர்வமான காட்சிகள் கூட இன்று திட்டமிட்டு மூடி மறைக்கப்படுகின்றது. 1979ம் ஆண்டில் அமெரிக்காவின் ஆசியுடன்  தனது சொந்த பணமாக 20 கோடி டொலரை செலவு செய்தே, முஜாகுதீன்களை ஒசாமா பின்லாடன உருவாக்கினான். ஒசாமா பின்லாடன் முஜாகுதீனின் கூட்டு தளபதியாக அமெரிக்க ஆசியுடன் அறிவுரை பெற்று செயற்பட்டவர். விமானங்களையும், இராணுவ முகாங்களையும் அடையாளம் காணும் நவீன உபகரணங்களை கூட அமெரிக்கா, ஓசாமா பில்லாடனுக்கு வழங்கத் தயங்கவில்லை. 1986 இல் சோவியத் விமானங்களை அழிக்க ஸ்ரிஞ்சர் ரக எவுகனைகள் 1000மும், 250 ஏவு கருவிகளையும் ஒசாமா பின்லாடனுக்கு அமெரிக்கா வழங்கியது. இந்த அமெரிக்கா உதவி என்பது வரை முறையற்ற வகையில் காணப்பட்டது. ஆப்கான் இயற்கை வாயுவையும், எண்ணை குதங்களையும் கைப்பற்றுவதன் மூலம், அருகில் இருந்த சீனா மற்றும் சோவியத்யூனியன் மீதான ஒரு இராணுவ எதிர் தளமாக மாற்ற, அமெரிக்கா தீவிர முயற்சி எடுத்தது.

இந்த வகையில் அமெரிக்கா நலன்களை அடையும் வகையில் கொலிவூட் (ர்ழுழுடுலுறுழுழுனு) சினிமாக்களை உற்பத்தி செய்தது. முஜாகுதீன் (சுதந்திர போராளிகள்) என்ற அமைப்பை ஆயுத பாணியாக்குவதன் மூலம், உலகெங்கும் கம்யூனிசத்துக்கு எதிராக சர்வதேச முஸ்லிம்  மதவாதம் ஊக்குவிக்கப்பட்டது. சர்வதேச முஸ்லிம் சமுகத்தை இஸ்லாம் பெயரில் இஸ்லாமை பாதுகாக்க, ஆப்கானில் போராட வருமாறு அன்று அழைப்பு விடப்பட்டது. இந்த சர்வதேச இஸ்லாம் அடிப்படைவாதத்தின் பின்னணியில் அமெரிக்க உளவு அமைப்பின் வழிகாட்டல் மற்றும் பொருளாதார இராணுவ உதவிகளை அள்ளி வழங்கியது. இந்த கம்யூனிச எதிர்ப்பின் பின்னணியில் ஓசாமா பில்லாடன் ஒரு அமெரிக்கா கைக்கூலியாக, "புனித போராளியாக", "சுதந்திர போராளியாக" திட்டமிட்டே உருவாக்கப்பட்டார். 1988ம் ஆண்டு அல்-காயிதா இயக்கத்தை அமெரிக்கா உருவாக்கிய போது, கம்யூனிசத்தை எதிர்த்து சர்வதேச இஸ்லாமிய மத அடிப்படைவாதத்ததை தட்டி எழுப்புவதே அதன் நோக்கமாக இருந்தது. அல்-காயிதா மூலம் உலகளவில் கம்யூனிசத்துக்கு எதிராக  பயங்கரவாதத்தை கட்டமைத்த அமெரிக்காவின் குறிப்பான பங்கையும், அமெரிக்காவின் கைக்கூலியாக செயற்பட்ட பாகிஸ்தானின் வரலாற்று ரீதியாக பங்கை மூடி மறைத்தபடிதான், சர்வதேச பயங்கரவாதம் பற்றி சுதந்திர ஜனநாயக உலகம் பிதற்றுகின்றது.

சமூக ஏகாதிபத்தியமான சோவியத்யூனியன் தனது போலி கம்யூனிஸ்ட்டு மூகமுடியின் கீழ் ஆப்கானை ஆக்கிரமித்த போதே, முஜாகுதீனின் அமைப்பு அமெரிக்கவால் வளர்த்தெடுக்கப்பட்டது. இந்த அமைப்பு ஆப்கான் விடுதலையை தனது சொந்த மக்கள் போராட்டம் மூலம் பெறுவதற்கு பதில், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் கைக்கூலியாகி, அவர்களின் நலன்களை பேணிப் போராடும் ஒரு இயக்கமாக சீரழிந்தது. சமூக ஏகாதிபத்தியம் தனது கம்யூனிச மூகமுடியை களைந்து, ஒரு ஏகாதிபத்தியமாக மாறிவிடும் கனவுகளுடன் கொப்சேவ் செய்த மாற்றங்கள், மூலதனத்தை சுதந்திரமாக விடுதலை செய்தது. இந்த நிலையில் இந்த மூலதனத்தின் சுதந்திரத்தை பாதுகாக்கவும், சமூக ஏகாதிபத்திய நெருக்கடிகளை களைந்து ஏகாதிபத்திய நிலைக்கு மாறவும், ஆப்கானில் இருந்து சோவியத் படையை வெளியேற்றுவது என்ற தீர்மானத்தை கொப்சேவ் தவிhக்க முடியமால் எடுத்தார்.

இந்த நிலையில்  முஜாகுதீன்கள் ஆப்கானின் ஆட்சிக்கு வருவது உறுதியானது. ஆனால் தொடர்ந்து உறுதியான ஆட்சி என்பது கேள்விக்குள்ளானது. ஆட்சி அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு உள்நாட்டு யுத்தம் மீண்டும், போராடியவர்களுக்கிடையில் ஏற்படும் அபாயம் இருந்தது. ஆப்கான் முஜாகுதீன் இஸ்லாமிய ஐக்கியம் என்று ஏழுபிரிவுகளாக இணைந்தே போராட்டத்தை நடத்தினர். இதைவிட அடிப்படை மதவாதிகள், அரச பரம்பரைவாதிகள், மிதவாதிகள் என்று மூன்று பிரிவும் முரண்பட்டன. மதவெறியின் அடிப்படையில் கன்னி, ஷியா என்ற இரு பிரிவும் பிளவுபட்டே மோதின. இதைவிட மேற்கு சார்பு கொண்ட குட்டி முதலாளித்துவ தரகு பிரிவும் அதிகாரத்தை தக்க வைக்க முனைந்தன. அதைவிட பழங்குடிகள் அடிப்படையிலும் பிரிந்த கிடந்;தனர். அதைவிட பல இனப்பிரிவுகளும், யுத்த பிரபுகளும் நிறைந்த ஒரு சிக்கல் நிறைந்த களமாக இருந்தது. சவுதி, ஈரான், பகிஸ்தான் ஆதரவு என்று பிரிந்து கிடந்த அதிகாரவர்க்கத்தின் பிளவுகள் உறுதியான ஆட்சி என்பதை கனவாக்கியது. சோவியத் படை வெளியேறிய போது, முதலில் அதை எதிர்த்து நின்றது பாகிஸ்தான்; தான்;. பாகிஸ்தான் உறுதியான, தனக்கும் சார்பான ஆட்சியை நிறுவிய பின், சோவியத் ஆக்கிரமிப்பு படையை வெளியேறுமாறு கோரியது. ஆனால் சோவியத் படை மோதவிட்டு தனது நலனை புதிய வடிவில் அடைய, தீடிரென நாட்டைவிட்டு வெளியேறியது. இது புதிய உள்நாட்டு யுத்தத்துக்கு வழிகோலியது. தொடாந்து ஏகாதிபத்திய நலன்களுக்கிடையிலான உள்நாட்டு யுத்தம், உள்ளுர் அதிகாரவர்க்க நலன்கள் சார்ந்து புகைந்தது. ஏன் முன்பு முஜாகுதீன்களுடன் மோதிய ரஸ்ய, இன்று அவர்களுக்கு ஆயுதம் மற்றும் பணத்தை தலிபானுக்கும் அமெரிக்கா நலனுக்கும் எதிராக அள்ளி வழங்கி வருகின்றனர். அமெரிக்கா ஆக்கிரமிப்பு திகதி குறிக்கப்பட்ட நிலையில், அதை முந்திக் கொண்டே ரஸ்யா பாரிய ஆயுத உதவிகளை முஜாகுதீன்களுக்கு வழங்கி, ஏகாதிபத்திய நலனுக்கான, ஆழமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் மோதுகின்றன.

யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்திலும், பின்னாலும் பாகிஸ்தான், ஆப்கான் ஊடான தனது நேரடி வர்த்தக நலன்களை பாதுகாக்க, தலிபான் என்ற ஆயுதம் ஏந்திய அமைப்பொன்றை உருவாக்கியிருந்தனர். தலிபான் என்பது மாணவர்கள் என்ற அர்த்தத்தைக் கொண்டது. பாகிஸ்தானுக்கு அகதியாக வந்த மாணவர்களை கொண்டு, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நலனுக்காக இணைந்து உருவாக்கிய இஸ்லாமிய அடிப்படைவாத குழுவே தலிபானாகும். பாக்கிஸ்தான் தனது துர்க்மேனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தனுகான வர்த்தகத்தை ஆப்கான் ஊடாக நடத்திய போது, அந்த வர்த்தக பாதையின் பாதுகாப்புக்காக உருவாக்கிய படையே தலிபானாகும். ஆரம்பத்தில் இவர்களின் காண்டர், பெஷாவார் பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். உள்ளுர் மோதலை ஒரு அடிப்படை மதவாத குழுவுக்கூடாக அடக்கியொடுக்கி கட்டுப்படுத்திய ஒரு உறுதியான ஆட்சி, அமெரிக்க பொருளாதார நலன்களையும் அதன் ஊடாக பாகிஸ்தான் நலன்களையும் அடைய முடியும் என்று கருதினர். தமக்கு விசுவாசமாக பல வருடம் இயங்கிய தலிபானையே ஆயுதபாணியாக்கியதுடன்;, மத அடிப்படைவாதத்தை அதன் அரசியல் உள்ளடக்கமாக்கினர். மத அடிப்படைவாதத்தை அரசியல் உள்ளடக்கமாக கொண்டே தலிபான்கள், ஆட்சியை படிப்படியாக கைப்பற்ற உதவியதன் மூலம், அமெரிக்க அப்பகுதி ஊடாக எண்ணைக் குழாயை அமைக்கத் திட்டமிட்டது. இதன் முதற்படியாக துர்க்மேனிஸ்தான் எண்ணையை ஆப்பான் ஊடாக இந்தியாவரை கொண்டு வர, யூனோகோல் நிறுவனம் 15000 கோடி டொலரை முதலிட்டது. தலிபான் உருவாக்கத்;தின் பின்னணியில் அமெரிக்க மற்றும் பாகிஸ்தானின் மூலதனநலன்களை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்கா உளவு அமைப்பால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவையே. தலிபான்களின் அமெரிக்கா விசுவாசத்தையிட்டு முன்னைய அமெரிக்கா அதிகார வர்க்கம் மிகுந்த நம்பிக்கையை அன்றும், இன்றும் வெளிப்படுத்த தயங்கவில்லை. எப்படி திடீரென மாறிப் போனதையிட்டு கனவு கண்டவன் போல் மூக்கில் கை வைக்கின்றனர்.  மக்கள் மேலான மத அடிப்படைவாத ஒடுக்கமுறையையிட்டு அல்ல, அமெரிக்கா நலனுக்கு எதிராக வளர்த்த கடா மார்பில் குத்தியது போன்று தலிபான்கள் மாறியதை, அமெரிக்கா அதிகார வர்க்கத்தால் சகித்துக் கொள்ள முடியாத வயிற்று வலியில் சிக்கிவிடுகின்றனர்.

கம்யூனிசத்தை ஒழித்துக்கட்டுவன் மூலம் தனது பொருளாதார நலன்களை பாதுகாக்க, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை திட்டமிட்டே அமெரிக்காவும் உலக ஏகாதிபத்தியங்களும் உருவாக்கின. இதற்கு நிதி மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத கோட்பாடுகளையும் உருவாக்கியதுடன் இராணுவ உதவிகளையும் அள்ளிவழங்கினர். மூலதனத்தை விரிவாக்கும் இந்த வரலாற்று தேவை பூர்த்தியடைந்தவுடன், இஸ்லாம் அடிப்படைவாதத்துக்கான நிதி மற்றும் உதவிகளை கைவிட்டது. இந்த நிலையில் தான் இஸ்லாமிய அடிப்படைவாதம் தனது குறுகிய  பிற்போக்கு நலன்களில் இருந்து, தம்மை கைவிட்ட ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தனிமனித பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடுகின்றது. இது வரலாற்றில் முதற்தடவையல்ல. எமக்கு பரிச்சயமான நிகழ்வுகளை பார்ப்போம்; இந்தியாவில் சீக்கியரின் தேசிய விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போது, அதைத் தடுக்க இந்திராகாந்தியே பிந்தரன்வாலே தலைமையில் உருவாக்கிய மத அடிப்படைவாத குழுவை உருவாக்கினர். இந்த அமைப்பு பின்னால் இந்தியா அரசுக்கு எதிராக மோதியதுடன், இந்திரகாந்தியையே படுகொலையும் செய்தது. ஏன் இந்தியா புலிகளுக்கு ஆயுதம், பயிற்சி, பணம் என்று பல உதவி செய்தது மட்டுமின்றி, அனுராதபுர தாக்குதலைக் கூட திட்டமிட்டு செய்வித்தது. ஆனால் பின்னால் புலிகள் முரண்பட்டு இந்தியாவுடன் மோதியது மட்டுமின்றி, ராஐPவை படுகொலை செய்தது நிகழ்ந்தது. இவை  போன்ற பல நிகழ்வுகள் உலக வரலாற்றில் பதிவாகியுள்ளது.

ஆப்கானிலும், அரபுநாடுகளிலும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தண்ணீர் ஊற்றி வளர்த்த வரலாற்றை மூடிமறைத்தபடியே தான்@ அமெரிக்க மேலான பயங்கரவாதம், அமெரிக்க மேலான யுத்தம், அமெரிக்கவின் புதிய யுத்தம் ("வுநுசுசுழுசு ழுN யுஆநுசுஊயு", "றுயுசு ழுN யுஆநுசுஐஊயு", "யுஆநுசுஐஊயுளு Nநுறு றுயுசு") என்று குறிப்பிட்டு, மறுகாலனியாக்க விரிவாக்கத்தை  உலகமயமாக்குகின்றது. இதன் தொடர்ச்சியில் "உலகத்தை எட்டும் அனைத்துப் பயங்கரவாதத்தையும் அழித்தொழிப்போம்" என்று அமெரிக்க கொக்கரிக்கின்றது. அதே நேரம் அமெரிக்கா ஜனாதிபதி "புனிதப்போர்" நடத்தப் போவதாக வேறு அறிவித்துள்ளார். புனிதப் போர் என்பதன் அர்த்தம், மூலதனத்தினை விரிவாக்கும் மூலதனத்தின் புனிதபோர்தான்.

இந்த புனித போரை அமெரிக்காவும், அமெரிக்காவின் வாலாக பிரிட்டின் குரங்குமாக உலக ஏகாதிபத்தியங்களுங்கு தலைமை தாங்கி நடத்தும் உலகமயமாதல் ஆக்கிரமிப்பு, உலக மக்களுக்கு எதிராக பயங்கரவாதமாக வெளிப்படுகின்றது. பிரிட்டன் அமெரிக்காவின் வாலாக ஐரோப்பிய யூனியனுக்கு முரணாக நிற்பதன் அரசியல் உள்ளடக்கம், மூலதன நலன்களில் சார்ந்து கிடக்கின்றது. 2000 ஆண்டுக்கான உலகளாவிய அமெரிக்காவின் மூலதன ஆக்கிரமிப்பு முதலீடு 32090 கோடி டொலராகும். இது 1999 இல் 27500 கோடி டொலர் மட்டுமே. அதாவது உலகமயமாதல் விரிவாக்க அதிகரிப்பு 17 சதவீதத்தைக் கொண்டதாகும். மொத்த உலகமயமாதல் முதலீட்டில் 75 சதவீதம் ஐரோப்பாவில் இடப்பட்டது. இதிலும் பிரிட்டனிலேயே அதிக முதலீட்டை அமெரிக்கா இடுகின்றது. அமெரிக்காவும் பிரிட்டனும் பரஸ்பரம் தமது பொருளாதார நலன்களை தக்க வைக்க, ஒருமித்த நிலையில் உலகமயமாதல் விரிவாக்கத்தை கையாள்வது அவசியமாகின்றது. ஐரோப்பியயூனியன் போட்டி ஏகாதிபத்தியமாக பரிமாணித்த போதும், பிரிட்டிஸ் அதற்குள் நீடிக்கின்றனர். இருந்த போதும் அமெரிக்கா ஏகாதிபத்திய பொருளாதார நலன்களுடன் பிரிட்டிஸ் கொண்டுள்ள பொருளாதார உறவுகள், பிரிக்க முடியாத ஆக்கிரமிப்பாளனாக உலகின் முன் ஒன்றுபட்டு நிற்க வைத்துள்ளது.

இதன் எதிர் நிலையில் தான் இஸ்லாமின் பெயரில் உருவான அடிப்படைவாத மதவாதக் குழுக்களின் தனிமனித பயங்கரவாத நடவடிக்கைகள், உலகளவில் ஏகாதிபத்திய அருவடிகளை நோக்கியும் அதன் அச்சின் மீதும் நடத்துகின்றனர். தனிமனித பயங்கரவாதம் ஏகாதிபத்திய இயந்திரத்தையும் அங்கு வாழும் உழைக்கும் மக்களை பிரித்து பார்க்கத் தவறி, ஒன்றுபடுத்திய வகையில் மனிதப் படுகொலைகளை நடத்தி அதையே அரசியலாக்குகின்றனர். மத அடிப்படைவாதக் குழுக்களின் தனிமனித பயங்கரவாதச் செயல்கள் எப்போதும், எதிரி போன்று மக்களின் நலன்கள் மேல் அக்கறைப்படுவதில்லை. மாறாக அப்பாவி மக்களின் பிணங்கள் மேல், தமது பிற்போக்கு மனித விரோத அடிப்படைகளை நிறுவிக் கொள்வதே நிகழ்கின்றது. அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய பயங்கரவாதத்தை, தனிமனித பயங்கரவாதத்துடன் ஒப்பிட முடியாதுதான்;. தனிநபர் பயங்கரவாதம், ஏகாதிபத்திய பயங்கரவாதத்தில் இருந்தும், அரசு பயங்கரவாதத்தில் இருந்தும், அதன் நற்றம் பிடித்த புண்களில் சீழ்களில் இருந்தே உருவாகின்றன. இந்த சமூக அடிப்படைக்கு வெளியில் தனிநபர் பயங்கரவாதம் உலகில் உதிப்பதில்லை. நாம் தனிநபர் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டுமெனின், அதை தோற்றுவித்த காரணத்தை எதிர்த்து அழிக்க வேண்டும்;. தனிநபர் பயங்கரவாதத்தை மட்டும் எதிர்ப்பது என்பது, ஏகாதிபத்திய மற்றும் அரசு பயங்கரவாதத்துக்கு துணை போவதாகும்;. அரசு மற்றும் ஏகாதிபத்திய பயங்கரவாதம் வித்திட்ட தனிநபர் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டுமாயின், ஏகாதிபத்திய பயங்கரவாதத்தை முடிவு கட்டவேண்டும். மக்கள் திரள் வழி மட்டும் தான், ஏகாதிபத்திய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான போராட்ட மார்க்கமாகும்;;. இது தனிநபர் பயங்கரவாதத்திற்கான ஊற்று மூலத்தை அழிக்கும். இல்லாத எல்லா நிலையிலும், ஏகாதிபத்திய பயங்கரவாதமும் தனிநபர் பயங்கரவாதமும் நகமும் சதையும் போன்று கூடிப்பிறந்தவையாக நீடிக்கும். இதில் ஒன்றை மட்டும் யாராலும், எவராலும் அழிக்க முடியாது.

உலகளவில் புதிய ஒழுங்கை மேலும் ஆழமாக விரிவாகவும் மூலதனம் கோருகின்றது. மறுகாலனியக்கத்தை விரைவு படுத்தக் கோருகின்றது. உலக பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில், புதிய இராணுவ செல்வாக்கு மண்டலங்களை உலகு எங்கும் நிறுவுவதில் ஏகாதிபத்தியம் களமிறங்கியுள்ளது. இதற்கான அமெரிக்கா உளவு அமைப்பின் வருடாந்த செலவு அண்ணளவாக 225600 கோடி இலங்கை ரூபாவாகும். இந்த ஆக்கிரமிப்பு யுத்தத்துக்கு பயன்படுத்தும் டாமாக் ஏவுகணையை ஒருமுறை ஏவ 9.5 கோடி இலங்கை ரூபா செலவாகின்றது. மிக பிரமாண்டமான பொருளாதாரத்தை இந்த ஆக்கிரமிப்புக்கு முதலிட, ஏகாதிபத்தியங்கள் தயங்கவில்லை. அமெரிக்கா பிரிட்டிஸ் ஏகாதிபத்திய துணையுடன் மற்றைய ஏகாதிபத்தியத்தை பின்தள்ளியபடி களமிறங்கியுள்ளது. உலகு எங்கும் எல்லா நாட்டிலும் தனது படையை நிலை நிறுத்துவதன் மூலம், அரைக்காலனிய நவ காலனிய மூலதன நலன்களை மறுகாலனியாக்கி பாதுகாக்கும் அனைத்து முயற்சியிலும் களம்மிறங்கியுள்ளது. ஏகாதிபத்தியங்களுக்கிடையில் நடைபெறும் பனிப்போரை "உலக பயங்கரவாதம்" என்ற சொற்றொடர் மூலம், அமெரிக்கா தனக்கு சார்பாக மாற்றி அமைக்கின்றது. அமெரிக்காவின் பொருளாதார நலன்களை உலகளவில் நிறுவுவதே உலக பயங்கரவாத ஒழிப்பாகி, அதையே அரசியலாக்கி இராணுவமயமாக்குகின்றது.

இந்த நிலையில் உயிரியல் ஆயுதம் மூலமான பயங்கரவாதத் தாக்குதல் பற்றி, ஏகாதிபத்தியம் மக்களுக்கு பீதியூட்டி யுத்தத்தை மேலும் ஆழமாக தீவிரமாக்குகின்றது. உயிரியல் ஆயுதம் மூலம் அப்பாவி மக்களை கொன்று போடும் ஆயுதத்தை யார் செய்தனர். ஏகாதிபத்தியம் சுட்டிக்காட்டும் பயங்கரவாதிகளா உற்பத்தி செய்தார்கள்? கதிர் வீச்சைக் கொண்ட அணு குண்டு, இரசாயன ஆயுதங்கள், உயிரியல் ஆயுதங்கள் என அனைத்தும் எந்த தனிமனித பயங்கரவாத நபர்களோ, குழுக்களோ உற்பத்தி செய்தவையல்ல. மாறாக மூலதன விரிவாக்கத்தை உலகளவில் விரிவாக்கும் ஏகாதிபத்திய முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, உலக மக்களின் உழைப்பை சுரண்டி கொள்ளையிட ஏகாதிபத்தியங்கள் தமக்குள் தாமே உற்பத்தி செய்தவைகளே. இந்த ஆயுதங்கள் மூலம் உலக ஆதிக்கத்தை நிறுவும் அழிவுகளில் தான், இன்றைய அழிவுகரமான ஆயுதங்கள் உலகு எங்கும் குவிந்து போய்கிடக்கின்றன. இதை ஏகாதிபத்திய மூலதன அறிவியில் மையங்களில் இருந்தே, தனிமனித பயங்கரவாதமும் பெற்றுக் கொள்கின்றது. இதை மூடிமறைத்தபடி தனிமனித பயங்கரவாதக் குழுக்கள் இவற்றை பயன்படுத்த போவதாக ஏகாதிபத்தியங்கள் பீதியூட்டுவதன் மூலம்;, ஏகாதிபத்திய பயங்கரவாதமும் அதை வரைமுறையின்றி பயன்படுத்தும் உரிமைக்கு அங்கீகாரத்தை கோருவதே, இதன் அடிப்படையான உள் நோக்கமும் விளைவுமாகும்.

இந்த வகையில் இந்த அழிவுகரமான மனித விரோத ஆயுதங்களை பயங்கரவாத ஒழிப்பில் தலைமை ஏற்கும் ஏகாதிபத்தியமே, கேடுகெட்ட வகையில் மனித இனத்துக்கும் இயற்கைக்கும் எதிராக பயன்படுத்தி வருகின்றது. ஈராக் மேலான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் போது, 10 லட்சம் கதிர் வீச்சுக் கொண்ட சில்வர் புல்லட்டுகளை ஏவியது. இந்த சில்வர் புல்லட்டு என்பது செறிவு குறைக்கப்பட்ட 4 கிலோ யுரோனியத்தை வெடிமருந்தாக கொண்டது. இதை பயன்படுத்திய ஏகாதிபத்திய இராணுவ வீரர்களோ பல்வேறு பாதிப்பை அடைந்துள்ளதுடன், பலர் இறந்து வருகின்றனர். இந்த நிலையில் ஏகாதிபத்திய பயங்கரவாதத்தால் ஈராக் அப்பாவி மக்களின் இழப்பு என்பது வரலாறு காணாதவையாக உள்ளது. ஈராக்கில் இன்று மாதம் 8000 குழந்தைகளை உயிருடன் கொன்றுவிடுகின்றது. மனிதனுக்கு எதிராக அவனின் வாழ்வின் இயற்கை மீதே விட்டுச் சென்றுள்ள இரசாயன படிமானங்களையும், யுரோனிய கதிர்வீச்சையும் கொண்ட ஏகாதிபத்திய பயங்கரவாதத்தை மூடிமறைத்தபடிதான், ஜனநாயக அமெரிக்காவும் பிரிட்டனும் பயங்கரவாதத்தை ஒழிக்க காவடி எடுக்கின்றனர். இன்று ஈராக்கில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 108 இறந்தே பிறக்கின்றது. இந்த ஏகாதிபத்திய படு கொலை பயங்கரவாதத்தை எந்த நீதிமன்றம், எந்த மனிதபிமானம் பேசுகின்றது. ஈராக்கில் 1996 முதல் 45 சதவீதமான மருந்து பொருட்களுக்கு மட்டும் எண்ணை ஏற்றுமதியை அனுமதிக்கும் ஐ.நா, இதன் மூலம் இதுவரை 14 71 425 பேரை கொன்று போட்டுள்ளது. இந்த படுகொலைக்கு தலைமை ஏற்று நிற்கும் கோபியண்ணாவுக்கு, 2001 கான சாமதானத்துக்கான மானம் கெட்ட நோபல் பரிசு வேறு கொடுக்கப்படுகின்றது. ஏகாதிபத்திய பயங்கரவாதத்தை உலகளவில் மிக விசுவாசமாக வாலாட்டியபடி குலைத்து நியாப்படுத்தியதால், மூலதனத்தின் பஞ்சு மெத்தையில் காதல் கொண்டு விபச்சாரம் செய்ய நோபல் பரிசு மக்களுக்கு எதிரான துரோகிக்கு ஒரு மூடிசூட்டுதான்.

23-12-1984 இரவு போபாலில் அமெரிக்கா இரசாயன தொழிற்சாலை வெடித்த போது 16 000 முதல் 30 000 பேர் தம் உயிரை இழந்தனர். 300 000 பேர் காயம் அடைந்தனர். அத்துடன் அதன் தொடர் விளைவை இயற்கையும், அந்த மக்களும் நாள் தோறும் அனுபவிக்கின்றனர். ஆனால் இன்றுவரை குற்றவாளிகளோ சுதந்திரமான உலகத்தின் ஜனநாயக பாதுகாவலரக இருக்கின்றனர். உலகத்தின் எந்த நீதி மன்றமும் இந்த குற்றத்தை விசாரிக்கவில்லை. இதுபோன்று 5 ஆயிரம் குரிட்டிஸ் மக்களை இரசாயன ஆயுதம் மூலம் துருக்கிய ஜனநாயக பாசிட்டுகள் கொன்ற போது, இந்த அமெரிக்கா எங்கே போனது? இது போன்று ஈராக் அதே மக்களுக்கு எதிராக வீசிய போது, அமெரிக்காவின் அன்றைய எதிரியான ஈரானுக்கு எதிரான ஈராக்கை பாதுகாக்க அமெரிக்கா பின் நிற்கவில்லை. உலக சமதானத்தினை வியர்வை வழிய பாதுகாக்கும் உலக பொலிஸ்காரர்கள், சமாதானத்தின் பெயரில்  ஈராக்கில் 315 தொன் யூரோனிய தூசு படிமங்களை ஏற்படுத்தி, மனித அழிவை நிராந்தரமாக்கியுள்ளனர். ஐரோப்பாவில் யூரோனிய கழிவுகளை இடத்துக்கு இடம் மாற்றும் போது, போராட முன்நிற்கும் பச்சைக் கட்சிகளின் ஆதரவுடன் தான், ஈராக் மீது 10 லட்சம் யூரோனிய சில்வர் புல்லட்டுகள் வீசப்பட்டன. இது கடும் வெப்பத்துடன் எரிவதுடன், 1000 வருடம் கடந்த நிரந்தர யூரேனிய கதிர்வீச்சைக் கொண்டது. இந்த ஆயுதத்தையே ஆப்கானில் பெருமளவில் பாவிப்பதாக உலக ஆதிக்க சமாதானவாதிகள் மண்டியிட்டு அறிவிக்கின்றனர். ஈராக் மற்றும் ஆப்கானில் யூரேனியா சில்வர் புல்லட்டுகளை தாண்டிய மற்றைய ஆயுதங்களின் பிரமாண்டமான அழிவின் தரத்தை, கற்பனை பண்ணிப் பார்க்க முடியுமல்லவா! மனித அறிவியலையே கேடுகெட்ட வகையில் கையாளும் அமெரிக்காவே 2000 ஆண்டு, அந்திராக்ஸ் நோயை உற்பத்தி செய்யும் உயிரியல் ஆயுதத்தை தயாரித்தது. இது காற்றின் மூலம் இலகுவாக பரவும் தன்மை கொண்டது. இதன் அடிப்படையில் இதை கொண்டு செல்ல, இடம் விட்டு இடம் மாறிச் செல்லும் பருவகால பறவை இனங்களைக் கூட, ஏகாதிபத்தியம் பரிசோதித்துள்ளது. அந்திராக்ஸ் உற்பத்தி மற்றும் இது போன்ற கிருமி ஆயுதங்களை தயாரிக்கவும் பரிசோதிக்கவும், நிவேடா பாலைவனத்தில் ஆய்வு கூடங்களையும் தொழிற்சாலையையும் அமெரிக்கா நிறுவியுள்ளது. புஸ் ஆட்சியேறியவுடன் இந்த  பரிசோதனைகளை தீவிரபடுத்தும் படி, விசேட உத்தரவுகளை விடுத்த ஒரு மக்கள் விரோதி மட்டுமின்றி இயற்கை விரோதியுமாவர்.

இஸ்ரேல் ஈராக்கியரை மட்டும் தாக்கி கொல்லும் உயிரியல் ஆயுதத்தை உற்பத்தி செய்துள்ளது. இஸ்ரேல் அரபு இனத்தின் மரபு அணுக்களை இனம் கண்டதன் மூலம், அவர்களை அழிக்கவல்ல உயிரியல் ஆயுதங்களை உற்பத்தி செய்துள்ளனர். இந்த நிலையில் இனங்கள் மேலான உயிரியல் ஆயுத தாக்குதலை நடத்த, இனக் கூறுகள் சார்ந்து உயிரியல் ஆயுதங்களின் உற்பத்தியில் ஏகாதிபத்தியம் இறங்கியுள்ளது. உதாரணமாக அமெரிக்க கறுப்பு வெள்ளை இன நிற பிளவில் கூட, மாறுபட்ட மரபணுக்கள் மேல் உயிரியல் ஆயுத உற்பத்தி விரிவாகியுள்ளது. குறித்த மனித தேசிய இனங்களைக் கூட கொன்று விட, உயிரியல் ஆயுதங்களை உற்பத்தி செய்தபடி தான், உலக பயங்கரவாதம் பற்றி கூறி, பயங்கரவாதத்தை உற்பத்தி செய்து, பயங்கரவாதத்தை மக்கள் மேல் ஏவுகின்றனர். வடகொரியவில் ஏற்பட்ட பிளாக், சீனாவில் ஏற்பட்ட கொலரா மற்றும் தைபோயிட் காச்சல், கியுபாவில் பன்றியில் எற்பட்ட ஆபிரிக்கக் காய்ச்சல் மற்றும் கரும்பை நாசம் செய்த கிருமிகளை, இனம் கண்டு கொள்ள முடியாத ஏகாதிபத்திய உயிரியல் ஆயுதத்தின் பின்னணி சந்தேகிக்கப்படுகின்றது. திட்டமிட்டு மனித இனத்தை மட்டுமல்ல அவனின் சுய பொருளாதாரத்தை கூட அழிக்கும் உயிரியல் யுத்தத்தை நடத்துவதுடன், புதிய தாக்குதலுக்கும் ஏகாதிபத்தியம் தன்னை தயார்ப்படுத்தியுள்ளது. உதாரணமாக நெற் பயிற் செய்கையின் போது வரும் பறவை இனங்களில், நெல்லை அழிக்கும் உயிரியில் ஆயுதங்களை அனுப்பி வைப்பதன் மூலம், தேசிய உற்பத்திகளை முடக்கி தேசத்தை தமது மறுகாலனியாக்கும் நடைமுறை கூட, இன்று ஏகாதிபத்திய யுத்த வழியாக ஜனநாயகமாக உள்ளது. மருத்துவ தேவைக்கு கிருமிகளை உற்பத்தி செய்யும் நாடுகள் அவைபற்றி வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமென்றும், கண்காணிக்க அனுமதிக்க வேண்டுமென்றும் கோரிக்கை உலக நாடுகளால் கோரப்பட்டது. உயிரியல் ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் இதை சேர்த்துக் கொள்ள உலக நாடுகள் கோரிய போது, அதை எதிர்த்த முதல் நாடு அமெரிக்காதான்.

கேடுகெட்ட முதலாளித்துவ சுதந்திர ஜனநாயகத்தில் மனிதனை அழிப்பதற்கென்றே யூரோனிய குண்டுகளை, இரசாயன ஆயுதங்களை, உயிரியல் ஆயதங்களை உற்பத்தி செய்தபடிதான், பயங்கரவாத தாக்குதல் பற்றி உலக ஜனநாயக செய்தி அமைப்புகள் பிதற்றுகின்றன. கேடுகெட்ட ஏகாதிபத்திய மனித விரோத ஆயுதங்களையும் அறிவையும் பெற்று, தனி மனிதன் அல்லது தனிமனித பயங்கரவாத குழுக்களின் பயங்கரவாத நடவடிக்கையாக மாறும் போது, குற்றவாளி அவனல்ல. குற்றவாளி இவ்வகையான ஆயுதங்களை உற்பத்தி செய்த ஏகாதிபத்தியம் தான் என்பதை மூடிமறைப்பதே, இன்றைய பொதுவான ஜனநாயகத்தின் சாரம்சமாகும்;. ஈராக்கில் மட்டுமல்ல வியட்நாமில் 30 வருடத்துக்கு முன்பு அமெரிக்கா அந்த மக்கள் மேல் ஜனநாயகத்தின் பெயரில் பொழிந்த அழிவுகரமான குண்டு வீச்சில், 20 லட்சம் வியட்நாமியர் படுகொலை செய்யப்பட்டனர். அன்று மூலதனத்தின் சுதந்திர ஜனநாயகம் காக்க, அமெரிக்கா வீசிய சுதந்திர குண்டுகளின் கதிர் வீச்சும், இரசாயன நஞ்சும்; அவர்களின் உணவை மட்டுமின்றி குடிக்கும் நீரை சுவாசிக்கும் காற்றையும் கூட நஞ்சாக்கி கதிர்வீச்சுக்குள்ளாக்கி, அவர்களை இன்றும் ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கின்றது. நாள் தோறும் இன்றும் நூற்றுக்கணக்கில் கதிர் வீச்சுக்குள்ளான, சிதைந்து இறந்த குழந்தைகளை, வியாட்நாமிய பெண்கள் அமெரிக்காவின் ஜனநாயகத்தின் சின்னமாக பெறுகின்றனர். இதுவே ஜனநாயகம் கொழிக்கும் ய+க்கோசிலாவியாவிலும் புதுக் கதையாகியுள்ளது. ஏன், இந்த குண்டுகளை ஈராக்கிலும், யூக்கோசிலவியாவிலும் கொண்டு சென்று வீசிய அமெரிக்கா மற்றும் எகாதிபத்திய ஆணாதிக்க ஆண்களினால், அவர்களின் மனைவிமார் பெற்று எடுக்கும் குழந்தைகள் கூட, கதிர் வீச்சின் சிதைவுகளுடன் அதன் சின்னத்துடன் பெற்றெடுப்பதும் அண்மையில் அம்பலமாகியுள்ளது. அத்துடன் கதிர்வீச்சு மற்றும் இராசயான ஆயுதங்களை மக்கள் மேல் வரைமுறையின்றி வீசியெறிய வியர்வை சிந்தி உழைத்த இராணுவத்தினர் கூட, கதிர்வீச்சிலும் இரசாயன பாதிப்பிலும் சிதைந்து சாகின்றனர். வீசியவனுக்கே கோரமான அவலம் ஏற்படும் போது, வெடித்த இடத்தின் அவலத்தை உலகத்தின் எந்த சுதந்திர ஜனநாயக அமைப்பும் கொண்டுவரவில்லை. மாறாக அதை மூடி மறைத்த படி, மனிதனை வதைத்து கொல்லும் புதிய அவலத்தை, வக்கிரமாக கோருவதே இன்றைய அறிவுத்துறையின் தலை சிறந்த ஜனநாயக பணியாகவுள்ளது.

இந்த நிலையில் தான் அமெரிக்கா ஐனாதிபதி புஷ் "தாலிபானைப் பார்த்து சலித்துப் போயிருக்கக்கூடிய ஆப்கான் மக்களின் ஒத்துழைப்பு" தேவை என்று, தனது படுகொலை ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு கைக் கூலிகளின் உதவியைக் கோருகின்றார். அன்று சமூக ஏகாதிபத்தியமான சோவியத் ஆக்கிரமிப்பு நிகழ்ந்த போது, சோவியத்தை பார்த்து சலித்துப் போயிருந்தவர்களையே அமெரிக்கா ஆயுதபாணியாக்கியது. ஒசாமா பில்லாடன் முதல்  முஜாகுதீன்கள் வரை அமெரிக்கா நலனுக்காக, இஸ்லாமின் பெயரில் அன்று அமெரிக்கக் கைக்கூலிகளாக செயற்பட்டவர்களே. முஜாகுதீன்கள் கொண்டு முழுமையாக தனது நலனை அடைய முடியாது என்ற ஓரே காரணத்தால் தான் அமெரிக்கா, முஜாகுதீன்களை எதிர்த்து தலிபானை ஆயுதபாணியாக்கியது. இன்று தலிபானுக்கு எதிராக மீண்டும் முஜாகுதீன்களை ஆயுத பாணியாக்குவதன் மூலம், தனது ஆக்கிரமிப்பை கைக்கூலிகளைக் கொண்டே நடத்துகின்றது. "தாலிபானைப் பார்த்து சலித்துப் போயிருக்கக்கூடிய ஆப்கான் மக்களின் ஒத்துழைப்பு" என்பதன் அர்த்தம், தலிபானுக்கு எதிரான அனைவரையும் அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் கொடியின் கீழ் கைக் கூலிகளாக செயற்பட அழைப்பதே. ஆப்கானின் இயற்கை வளங்களை வரைமுறையற்று கற்பழிக்கவும், கொள்ளையடிக்கவும் துணைநிற்க கோருவதாகும். இதையே இன்றைய உலக அளவில் உலகமயமாதல் விரிவாக்கத்திலும் வரைமுறையின்றி ஏகாதிபத்தியங்கள் செய்கின்றன.

இந்த கைக்கூலிகளுக்கு அழைப்புவிட்டபடி அமெரிக்கா பாதுகாப்பு செயலர் டொனால்டு ரூம்ஸ்ஃபெல்ட் ஆப்கான் மக்களை கேவலமாக இழிவுபடுத்திவிடுகின்றார். "ஒரு ஆப்பானிஸ்தானியனின் சராசரி ஆண்டு வருமானம் வெறும் எண்ணூறு அமெரிக்க டொலர்தான். இது வாஷிங்டனிலிருந்து லொஸ் ஏஞ்சல்ஸ் போக ஒரு அமெரிக்கர் எடுக்கும் விமான டிக்கெட் கட்டணத்தைவிட குறைவானது. அந்த நோஞ்சான் நாடு எங்களோடு மோதப் பார்க்கிறது" என்று கொக்கரிக்கின்றான்;. இங்கு அந்த ஆக்கிரமிப்பாளன் தனது திமிர் பிடித்த வர்க்கக் கண்ணோட்டத்தில், இதை பிரகடணம் செய்கின்றான்;. இது மேற்கு அல்லாத மக்களை இழிபடுத்தி அவமானப்படுத்தவதற்கு சமனாகும்;. அதாவது வாஷிங்டனிலிருந்து லொஸ் ஏஞ்சல்ஸ் போக செலவாகும் விமான பயணச் செலவுக்கு குறைந்த தேசிய தலா வருமானத்தை கொண்ட நாடுகளின் மக்களை, மனிதனாக கூட மதிக்காத ஒரு  இராணுவ வெறியனை தெளிவாக படம் பிடித்துக் காட்டியுள்ளது. ஊரையும் உலகத்தையும் கொள்ளையடித்து மக்களை கையேந்த வைத்துவிட்டு, இந்த பன்றிகள் மோதுவதைப் பற்றி வாய்கிழிய பேசுகின்றார்கள்;. அவன் "நாம் இராணுவத்தோடு மோதும் போரைச் செய்தால், அவர்கள் பதிலுக்கு அப்பாவிகளைக் கொல்லும் கோழைத்தனமான வெறியர்களாக இருக்கிறார்கள்" என்று பிதற்றுகின்றான். நீ செய்யும் யுத்தம் என்ன. கோழைத்தனமான வகையில் நேருக்கு நேர் போராட முடியாத நீ, மனிதனைக் கொல்லும் யூரேனிய கதிர் யுத்ததையும், இராசயாண யுத்ததையும், உயிரியல் யுத்ததையும் ஒளித்து நின்று நடத்துவதா உனது மானம் கெட்ட அமெரிக்க வீரம்? வியட்நாம், ஈராக், யூக்கோசிலாவியா, ஆப்கான்.... என எங்கும், நீ யாருடன் யுத்தம் செய்;கின்றார்கள். மக்கள் மேல் குண்டுகளை வரைமுறையின்றி போடுவதுடன், பல நூறு வருட பாதிப்பை ஏற்படுத்தும் கேடுகெட்ட கதிர் வீச்சுகளை செய்யும் மனித விரோதிகளை என்ன என்பது. தனிமனித பயங்கரவாதம் கையாளும் மனிதவிரோதத்தை விட, அரசு மற்றும் ஏகாதிபத்திய பயங்கரவாதம் பல நூற்றாண்டு கடந்து, அழிவைத் தரக் கூடிய உலகத்தையே அழித்;தொழிக்கும் அழிவுகரமான பயங்கரவாத்தை மக்களுக்கு எதிராக நடத்துகின்றனர். தனிமனித பயங்கரவாதத்தை விட பல ஆயிரமடங்கு மக்களுக்கு அழிவுகளை செய்தபடி, மற்றவனை குற்றம் சாட்டும் கோழைகளை ஆதாரமாக கொண்டதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமை. நேருக்கு நேர் யுத்தம் செய்ய முடியாத நிலையில், ஒளித்து யுத்தம் செய்யும் கோழைகள் மற்றவனை கோழையென்பது விசித்திரமானது.

மேலும் அவர் "நாம் எதிர்த்துப் போரிடுவதற்கு பயங்கரவாதிகளிடம் ராணுவமோ, கப்பற்படையோ, விமானப்படையோ இல்லை. இழந்துவிடுவோம் என்று தயங்குமளவுக்கு அவர்களிடம் சொத்துக்கள் குவிந்த பெரிய நகரங்கள் இல்லை" ஐயோ என்ன பரிதபாம்;. சொத்தை அழிப்பதே அமெரிக்காவின் யுத்தம் என்பதை சொல்லாமல் சொல்லுகின்றார். இங்கு, அமெரிக்கா குறிவைத்த பயங்கரவாதியை ஒழிப்பது அல்ல. தேசிய பொருளாதார வளங்களை அழித்து தரைமட்டமாக்குவதே அமெரிக்காவின் ஏன் ஏகாதிபத்தியங்களின் யுத்த முறையும் மரபுமாகும். இது மட்டும் தான் தேசிய எல்லை கடந்து, தேசிய பொருளாதாரம் கடந்து ஊடுருவி பாயும் ஏகாதிபத்திய பொருளாதரம், உலகமயமாதலை விரைவாக்கும். இழக்க எதுவுமற்ற பாட்டாளி வர்க்கம் வர்க்க விரோதிகளுக்கு எதிராக போர் தொடங்கும் போது, அமெரிக்க மூலதனம் எப்படி ஊளையிடும் என்பதுக்கு, இந்த வார்த்தையே தவிர வேறு எதுவும் இருக்கப் போவதில்லை. இழந்து விடுமளவுக்கு எதுவுமற்ற நாடு, இழப்பதற்க்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்கத்தையிட்டு அஞ்சி மூலதனமும் அதன் இயந்திரமும் புலம்பி அழும்போது, அந்த அதிகார வர்க்கத்தின் கையேலாத்தனத்தை மீண்டும் ஒருமுறை வரலாறு தெளிவுபடுத்துகின்றது. மக்களையும் நாட்டையும் வர்க்க அதிகார வெறியுடன் கேவலப்படுத்தி அழிக்க எதுவுமில்லை என்றபடி தான் "தாலிபானைப் பார்த்து சலித்துப் போயிருக்கக்கூடிய ஆப்கான் மக்களின் ஒத்துழைப்பு" தேவை என்று கொட்டாவி விட்ட படி அமெரிக்கா ஐனதிபதி கோருகின்றனர். அத்துடன் ஐனதிபதி புஷ் "பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகளுக்கும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை" என்கிறார். அச்சொட்டாக அமெரிக்காவே பொருந்தும்;. உனக்கு எதிரானவர்களுக்கு எதிராகவும், மற்றைய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், கம்ய+னிசத்துக்கு எதிராகவும் உலகெங்கும் அடைக்கலம் கொடுத்தது யார்? ஆயுதமும், பணமும், பயற்சியும், அடைகலமும் கொடுத்தது யார்? ஏன், இன்று உனக்கு எதிராக தாக்கியவனுக்கும் நீதானே பயிற்சி முதல் ஆயுதம் பணம் என அனைத்தும் ஐனநாயகத்தின் பெயரில் வாரி வழங்கியதை மக்களின் வரலாற்றால் மூடிவிடமுடியாது. முந்தைய அமெரிக்கா ஆக்கிரமிப்பை வழிநடாத்திய தந்தையான றொன்ல்ட் றீகன், ஒசாமா பில்லாடனை ஜனநாயகத்தின் தந்தையாக பாராட்டிய பின்நோக்கிய வரலாறு எந்த அடைகலத்தில் இருந்து தொடங்கியது? இவற்றையெல்லாம் ஒவ்வொருவரும் இன்றைய அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பின் ஊடாக திரும்பி பார்க்க வேண்டியுள்ளது.

ஒவ்வொரு தனிமனித பயங்கரவாத தாக்குதலுக்கும் பின்னணியில் குற்றவாளியாக அரசுகளும், ஏகாதிபத்தியங்களுமே காணப்படுகின்றன. அதாவது அரசு பயங்கரவாதமும், ஏகாதிபத்திய பயங்கரவாதமுமே தனிமனித பயங்கரவாதத்தின் ஊற்ற மூலமாகும். அங்கிருந்தே வேர் விட்டபடி நகமும் சதையுமாக புரையோடிப் போயுள்ள இந்த சுரண்டல் அமைப்பில், தனித் தனியாக ஒன்றையும் யாரும் ஒழித்துவிட முடியாது.

தனிமனித பயங்கரவாதம் உள்ளடக்கத்தில் ஏகாதிபத்தியத்தையும் அதன் பொருளாதார அமைப்பையும் பலப்படுத்துகின்றது. மக்களின் சமூக விடுதலையை மறுக்கும் இரு வேறுபட்ட எதிர்நிலை போக்குகள், எப்போதும் மக்கiளின் விடுதலையையிட்டு ஒரே நிலைப்பாட்டையே ஒரே விதமாகவே அணுகி ஒடுக்குகின்றது. இரண்டும் மக்களை எதிரியாகக் காண்கின்றது. மக்களின் விடுதலையை கொச்சைப்;படுத்தி தனிமைப்படுத்தி அழிக்க முனைகின்றது. இந்தவகையில் தனிநபர் பயங்கரவாதத்தை ஏகாதிபத்திய அமைப்பு ஊட்டி வளர்க்கின்றது. சமுதாய இயக்கங்களை தனிமனித கதாநாயகர் வடிவில் கட்டமைக்கப்பட்;டு, அதையே பண்பாட்டு கலாச்சாரமாக்கி ஒரு ஊடாகமாக்கின்றது. சமூக அநீதிகளை தனித்தனியான தனிமனித சாகச வீரச் செயல் மூலம் தீர்க்க முடியும் என்று, இன்றைய பண்பாட்டு கலாச்சார கூறுகள் ஊட்டிவளர்க்கப்படுகின்றன. இந்த வகையில் கட்டமைக்கப்பட்ட, கட்டமைக்கப்படும் சினிமா முதல் அன்றாட செய்தி வரை, தனிமனித தாக்குதலுக்கு முன்னோடி வழிமுறைகளை திட்மிட்டே கற்றுக் கொடுக்கின்றன. பயணிகள் விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்த முடியும் என்பதை சினிமாக்கள் ஊட்டிவளர்த்தன. இன்று எந்த வகையிலும் எப்படியும் வாழ்வின் பயன்பாட்டில் உள்ள எதையும் ஆதாரமாக கொண்டு, அப்பாவி மக்கள் தாக்கி படுகொலை செய்ய முடியும் என்பதை, உலகுக்கு இந்த தாக்குதல் மிக மோசமாக கற்றுக் கொடுத்துள்ளது. மறுதளத்தில் அமெரிக்கா முதல் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக மக்கள் எழுச்சியுறும் போது நொருங்கி சிதையும் என்பதையே இந்த தாக்குதலின் எதிர் நிலையும் உலகுக்கு கற்றுக்கொடுத்துள்ளது. இந்த தாக்குதல் சமுதாயத்தின் மேல் அதிர்த்தியுறும் தனிமனித நடத்தைகள், எதிர் காலத்தில் மிக மோசமான மனிதவிரோத தாக்குதலாக நடத்தப்பட வேண்டும் என்ற செய்தியையும் கொடுத்துள்ளது. இது குறிக்கோள் சார்ந்தும் குறிக்கோள் கடந்தும் இதுவே உலகமயமாதலின் அக்கபக்கமான தனிமனித கதாநயாகர் வடிவமாகியுள்ளது. இதுவே இனி உலகின் தனிமனித பயங்கரவாதத்தின் உலக கண்ணோட்டமாகின்றது.

இவ் நடவடிக்கைகள் முதல் நடத்தைகள் வரை அமெரிக்கா சினிமாவில் முத்தமிட்டே, அங்கிருந்தே அரசியலாகின்றது. தனிமனித சாகச அரசியல் கண்ணோட்டம், மக்களின் போராட்டத்தை எதிரியாகவே எப்போதும் அடையாளம் காண்கின்றது, காட்டு;கின்றது. தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடும் புலிகளின் தலைவர் பிரபாகரன், 1980 களில் இந்தியாவில் வழங்கிய இயல்பான யதார்த்தமான பேட்டி ஒன்றில், அமெரிக்கா யேம்ஸ்பான்ட் சினிமாவில் இருந்தே தான் போராடக் கற்றுக் கொண்டதாக கூறியது, இங்கு குறிப்பிட்டுக் காட்டக் கூடிய ஒன்றாகும்;. அனைத்து வலதுசாரி தனிமனித நடவடிக்கைகளும், வலதுசாரி சினிமாவில் இருந்தே தமது காதநயாகர் நடவடிக்கையை தொடங்கி, அதில்தான் முடிக்கின்றனர். விமான மூலமான தாக்குதல் முதல் எந்த தாக்குதலுக்கும் இன்றைய தனிமனித காதநாயகர்களின் வக்கிர சினிமாவே, போதகராகவும் தந்தையாகவும் இருப்பது வரலாற்றின் தற்செயலானவையல்ல.

தனிமனித கதநாயக உலகத்தில் தனிமனித தற்கொலை போல், தனிமனித படுகொலைகள் எல்லையற்றன. உலகளவில் ஆயுதம் மூலமான வருட மரணம் 500 000 மாகும்.  வருடாந்தம் 55 கோடி ஆயுதங்கள் நடைமுறை புளக்கத்தில் இருக்கும் அதே நேரம், இதன் மூலமான மரணங்களில் 300 000 தனிப்பட்ட தகராறு மூலம் கொல்லப்படுகின்றனர். 200 000 லட்சம் மரணங்கள் அமைப்பு வடிவம் மூலம் நிகழ்கின்றது. தனிமனித படுகொலை மற்றும் தற்கொலை சமூக அமைப்பை பாதுகாத்தபடியே தான், பயங்காரவாத ஒழிப்பு பற்றி மெய் சிலிக்க புலம்புகின்றனர். அமெரிக்காவின் உலக ஆக்கிரமிப்பு பற்றிய நியாப்படுத்தல் ஊடாக, ஆப்கான் மக்கள் பற்றி ஆக்கிரமிப்பாளனும் அவனின் செய்தி அமைப்புகளும் மூக்கால் அழுது அக்கறையை வெளிக்காட்டுகின்றன. ஆப்கான் பெண்களின் மூடிக்கட்டிய அடிமை வாழ்வு முதல் ஆப்கான் மக்கள் எதையும் அறியாத இருட்டில் தத்தளிப்பதாக மூச்சுக்கு மூச்சு மூக்கால் சிந்தி புலம்புகின்றனர். ஆனால் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளனும் அவனின் எடுபிடி ஆதாரவாளர்களும், மூலதனத்தை வரைமுறையின்றி விரிவாக்க அனுமதித்த நாடுகளான சவுதி முதல் பல பத்து உலக நாடுகளில்; தொடரும் இந்த கொடுமைகளையிட்டு ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. முதலாளித்துவ ஜனநாயகத்தை மறுத்த மன்னர் பரம்பரையிலான சர்வாதிகாரத்தையோ, இராணுவ ஆட்சிகளையோ, முதலாளித்துவ ஜனநாயகத்தையோ கேலி செய்யும் அரசுகளையிட்டு ஒரு வார்த்தை கூட பேசதவர்கள் பேச மறுப்பவர்கள், ஆப்கான் மக்களையிட்டு அழுவதற்கு என்ன அருகதை இருக்கின்றது. சவுதி முதல் அமெரிக்கா வரை பெண்களின் நிலை என்ன? ஆணாதிக்க அடிமைகளாக பெண்கள் இருப்பது என்னவோ உண்மையல்லவா! ஏன் அரசியலில் பெண்களின் பங்கு என்ன? உலகு எங்கும் ஆண்களின் அரசியல் அதிகாரம் ஆணாதிக்கமாக கொடி கட்டி பறக்கும் போது, ஆப்பகான் பெண்களையிட்டு அவர்கள் புலம்புவது ஆணாதிக்கத்தின் மற்றுமொரு மோசடியுடன் கூடிய அடக்குமுறையாகும்.

முஸ்லீம் மத அடிப்படைவாதிகள் நிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டிகளாகி, ஆப்கான் பெண்களை மூடிக்கட்டி அடிமைப்படுத்தி அடக்கி வைத்திருக்கின்றார்கள் எனின் அதற்கு நேர் எதிராக அமெரிக்காவில் பெண்ணை நிர்வாணப்படுத்தி அவளை விளம்பரக் கவர்ச்சி பதுமையாக்கியதன் மூலம், மூலதனத்தை குவிக்கும் ஒரு பாலியல் நுகர்வு பண்டமாகவே பெண்ணை மாற்றிவைத்துள்ளனர். அவர்ரவர் சமூக பொருளாதார நலனுக்கு இசைவாக பெண்ணை அடிமைத்தனத்தில் நிலை நிறுத்தியபடி, பெண்னை எதிர் நிலைக்கு பரஸ்பரம் கொண்டு வரும் போக்கு, மனித விடுதலையையோ பெண் விடுதலையையோ பெற்றுத் தருவதில்லை. இவை இரண்டும், பெண்ணின் இயற்கையான மனிதத் தன்மையை அங்கீகரித்து விடுவிக்கவில்லை. மாறாக பெண்ணின் அடிமைத்தனத்தை நிலப்பிரபுத்துவ கண்ணோட்டத்திலும், ஏகாதிபத்திய (முதலாளித்துவ) கண்ணோட்டத்திலும் நிலை நிறுத்துவதாகும்;. ஆப்கான் மக்களின் அடிமைத் தனத்தை, அவர்களின் சொந்த விடுதலைப் போராட்டத்தால் மட்டுமே சாதிக்கமுடியும்;. மாறாக ஏகாதிபத்திய கைப்பாவையாகி செயல்படுவதால் அல்ல. ஏகாதிபத்திய பண்பாட்டை கலாச்சாரத்தை திணிப்பதால் அல்ல. ஏகாதிபத்தியங்கள் மனிதப் படுகொலை யுத்தத்தின் ஊடாக உலகத்தையும் அந்த மக்களையும் ஏமாற்ற, மனிதாபிமான உதவி என்ற போர்வையில் வழங்கும் உணவும் கூட, ஏகாதிபத்திய மூலதனத்தை குவிக்கும் உணவை உண்ண பயிற்சி அளிக்கின்றனர். இதன் மூலம் எதிர்கால அமெரிக்காவின் அடிமை ஆப்கானில், மக்டொனல்களை திறக்கவும், ஆப்கான் உணவு பண்பாட்டு கூறுகளையும் அழிக்கும் மறைமுக யுத்தத்தையும் திட்டமிட்டே அமெரிக்கா நடத்துகின்றது. ஏன் 1992 இல் முஜாகுதீன்கள் காபூல் கைப்பற்றிய போது, பாகிஸ்தான் 400 அதிகமான புடைவை தொழிற்சாலைகளில் இருந்த இயந்திரங்களை கொள்ளை அடித்துச் சென்றது.

இது போன்றே இங்கு அழிவுகரமான யுத்தத்தை அமெரிக்கா ஆயுத முனையில் தொடரும் அதே நேரம், நுகர்வை தன்னை நோக்கி வரும் வகையில் உணவு உதவி யுத்தம் ஆப்கான் பாரம்பரிய உணவை அழித்தபடி, அவனின் பசித்த வயிற்றின் மேலாக திணிக்கின்றது. ஆப்கான் மக்கள் மேல் திணிக்கப்பட்ட யுத்தம் மற்றும் பண்பாட்டு கலாச்சார அழிவுகள் ஒருபுறம் நிகழ்கின்றன. மறு தளத்தில் நிலப்பிரபுத்துவ மதக் காட்டுமிராண்டிகள், அம் மக்களை கற்காலத்துக்கு அழைத்துச் செல்ல முனைகின்றனர். ஆப்கான் மீதான கடந்தகால ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகள் 22 லட்சம் மக்களை பலி கேட்டன. இன்று ஆப்கான் சனத் தொகையில் 70 சதவீதம் பெண்களாகியுள்ள ஒரு சமுதாயத்தில், பெண்கள் நாயிலும் கீழாக இழிவாக்கப்பட்டு அடிமை நிலைக்குள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். ஏகாதிபத்தியங்களின் துணையுடன் அமெரிக்காவின் மூலதனத்தின் செல்வ செழிப்புக்காக நடக்கும் புதிய ஆக்கிரமிப்பு, மேலும் ஆப்கான் மக்களை பலி கேட்கின்றது. அந்த பலியெடுப்பும் தொடங்கி விட்டது. இவ் இரண்டு அடக்குமுறையையும் எதிர்த்து ஆப்பகான் மக்கள் போராட வேண்டிய வரலாற்றுச் சூழலில் உள்ளனர்.

சீனா, றசியா மன்னன் மகா அலெக்சான்டர், பிரிட்டின், சோவியத் என்று பல ஆக்கிரமிப்பை கண்ட ஆப்கான மக்களின் போராட்டம்; என்பது, ஏன் இவர்கள் எல்லோரும் தொடர்ச்சியாக ஆக்கிரமித்தார்கள் என்ற வரலாற்று காரணங்கள் மேல் தம்மை அரசியல் மயமாக்கி ஆயுதமேந்தி போராட வேண்டும். இந்த நிலையில் அமெரிக்கா ஆக்கிரமிப்பு யுத்தத்தை முஸ்லீம் மதம் மீதான தாக்குதலாக, மத அடிப்படைவாதிகள் சித்தரிக்கின்றனர். ஆனால் எப்படி முஸ்லீம் மதம் அழிக்கப்டுகின்றது என்பதை மட்டும் விளக்குவதில்லை. அமெரிக்கா எதை அழிக்கின்றது? எதைக் கைப்பற்றி பாதுகாக்க முனைகின்றது? உலகமயமாதல் உலகத்தையே சூறையாடிவரும் இன்றைய நிலையில், தேசிய எல்லைகடந்த அனைத்தையும் அழிக்கின்றது. தேசிய பொருளாதாரத்தை அழிப்பதுடன், உள்ளுர் அதிகார வர்க்கமான நிலப்பிரபுத்துவ மத அடிப்படைவாத பிரிவுகளின்  குறிப்பான பொருளாதார நலன்களையும் அழிக்கின்றது. இந்த அதிகாரம் மற்றும் பொரளாதார நலன்களை பாதுகாக்க முனையும் ஒருபகுதியே, அதை முஸ்லீம் மதத்துக்கு எதிரான போராட்டமாக சித்தரிக்கின்றனர். இந்த நலன்களை அனுபவித்தபடி ஆட்சியில் இருக்கும் ஒரு பகுதியினர் ஏகாதிபத்தியத்தின் பொம்மைகளாக செயற்பட்டு கைக் கூலியாவதன் மூலம், தமது நலனை பாதுகாக்க முனைகின்றனர். அத்துடன் அதிகாரங்கள் சர்வாதிகார வடிவங்களாக சிலரின் நலன்களை மட்டும் திருத்தி செய்வதால், அதில் பங்கு பெற்றமுடியாத பிரிவுகளே  முஸ்லீம் அடிப்படைவாதத்தை தமது அதிகாரத்துக்கான ஒரு வடிவமாக்கி, அதிகாரத்தை கைப்பற்ற முனைகின்றனர். ஏகாதிபத்திய கைக்கூலியை பெறமுடியாத பிற்போக்கு நிலப்பிரபுத்துவ மதவாத சக்திகள் தேசிய பூர்வ பிரிவுக்கு தலைமை தாங்கும் வகையில், சர்வதேச சமூகப் பொருளாதார நிலைமை ஊக்கியாகியது. இந்த மத அடிப்படைவாத பிரிவே தாக்குதலை முஸ்லீம் மத அழிவாக சித்தரிப்பதன் மூலம், தமது பிற்போக்கு நலன்களை தக்கவைக்கவும் அடையவும் முயல்கின்றன. பூர்சுவர்க்கம் தேசிய கூறுகளை முன்னிறுத்தி தலைமை தாங்கி போராட முடியாத சமூக பொருளாதார நிலைமைகளினால், இந்த பிற்போக்கு கூறுகள் உலகம் தழுவிய முஸ்லீம் என்ற, அடிப்படைவாத கோட்பாட்டில் தலைமை தாங்கிவிட முயலுகின்றன.

அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் ஏன் எதிரியாக உலகு எங்கும் இருக்கின்றனர்? அவர்கள் எதை அடைய உலகை அடக்கியாளுகின்றனர். ஏகாதிபத்தியம் முஸ்லீம் மதத்துக்கு எதிராக இன்னுமொரு மதத்தை பரப்புகின்றனரா? என்ற கேள்விகள் எழுப்பப்படாத வரை, போராட்டமும் தியாகங்களும்; மக்களுக்கு எதிரானதாக, பிற்போக்கு காட்டுமிராண்டி காலகட்டத்தைச் சென்று அடைவதையே குறிக்கோலாக்கும். ஏகாதிபத்தியங்கள் உண்மையில் உலகமக்களின் உழைப்பை மலிவாக சுரண்டவும், தேசிய வளங்களை கொள்ளையிட்டு சூறையாடவும், இயற்கையை கொள்ளையடிக்கவுமே முனைகின்றன. இவை தாண்டி ஏகாதிபத்திய நலன்கள் என்பது எதுவும் இருப்பதில்லை. இதை எந்த தனிநபர் பயங்கரவாத வலது குழுக்களும் மக்களுக்கு சொல்வதுமில்லை. இந்த தனிமனித பயங்கரவாத குழுக்கள், அமைப்புகள், தாம் மட்டும் மக்களை சூறையாடும் உரிமையையே எப்போதும் கோருகினறனர். இதை வந்தடையவே மத அடிப்படைவாதத்தை ஒரு நெம்பாக பயன்படுத்துகின்றனர். ஏகாதிபத்தியங்கள் தமது சூறையாடும் பொருளாதார கண்ணோட்டத்தில் பண்பாட்டு கலாச்சாரக் கூறுகளை உருவாக்கி பழைய அனைத்தையும் அழிக்கின்றது. இது எந்த விதத்திலும் மதத்துக்கு எதிராக அல்ல. மூலதனத்தை விரிவாக்கும் பொருளாதார நலன்களை பெறறு எடுப்பதற்கு தடையான அனைத்தையும் ஈவிரக்கமின்றி அழிக்கின்றது. இது மதம் கடந்து, மொழி கடந்து, இனம் கடந்து, நிறம் கடந்து, பால் கடந்து, சாதி கடந்து, எல்லை கடந்து உலகை ஒரே குடையின் கீழ் கொண்டுவர முனைகின்றது. இதை சாதிப்பதற்கு மத அடிப்படைவாதத்தை வைத்திருப்பது அவசியம் என்பதில், ஏகாதிபத்தியத்துக்கு கருத்து முரண்பாடு கிடையாது. மதம் உள்ளவரை ஏகாதிபத்திய சுரண்டலை எதிர்த்து மக்கள் போராட்டம் என்பது பின் தள்ளப்படும்;. மத அடிப்படை வாதத்ததை முன் தள்ளிவிடுவதும், தனிமனித ஆன்மிக வழியில் விடுதலையையும் தீர்வையும் கோரி நிற்கும் வரை, ஏகாதிபத்திய பொருளாதாரம் விரிவு பெறவும் செழித்து வளரவும் முடியும்;. சில அடிப்படைவாத மதக் கூறுகள் மேல் நம்பிக்கை இழந்த அதிர்ச்சியுறும் பிரிவுகளை அரவணைக்க, புதிய மத அடிப்படைவாதக் கூறுகளுடன் வளைத்துப் போடும் நடைமுறை விரிவாகவே, ஏகாதிபத்தியம் நிதி மற்றும் கோட்பாட்டு உதவிகளை தாரளாமாகவே வழங்கிவருகின்றன. இந்த  வகையில் கம்யூனிசத்துக்கு எதிராக முஸ்லீம் அடிப்படைவாதத்தை வளர்த்தெடுப்பதில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்தின் பங்கு மிகப் பெரியதாகும். இங்கு ஒசாமா பில்லாடனின் பங்கு என்பது சிறுதுளிதான். ஒசாமா பில்லாடனுக்கு இஸ்லாமிய அறிவூட்டிய தந்தை வேறு யாருமல்ல, அமெரிக்கா உளவு அமைப்புதான்.

ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் பொருளாதர நலன்களை எதிர்த்து, பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் மக்கள் திரள் வழிகளில் போராடவேண்டும்;. தனிமனித பயங்கரவாத வழிகளில் அல்ல. இன்றைய பொருளாதார அமைப்பு சுரண்டல் அற்றதாக மாற்றப்பட வேண்டும்;. ஒவ்வொருவரும் தனது உழைப்புக்கு சொந்தம் கொண்டாடும் ஒரு சமுக அமைப்பை படைக்க போராhட வேண்டும்;. உனது உழைப்பில் உழையாது சுரண்டி வாழும் எந்த பிரிவையும் எதிர்த்து போராடவேண்டும்; அது மதத்தின் பெயரில் வந்தாலும் சரி, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு வடிவில் வந்தாலும் சரி, இரண்டையும் எதிர்த்து போராடவேண்டும்;;;. எனது உழைப்பு, எனது அறிவு, எனது இயற்கையை தனிமனிதன் தன் பெயரில் தனது ஆக்குவதை எதிர்த்து, அதை சமூகத்தின் பொதுச் செல்வமாக்க வேண்டும்;. உழைக்கும் அனைத்து மக்களையும் மதம் கடந்து இனம் கடந்து, பால் கடந்து, நிறம் கடந்து, சாதி கடந்து நேசிக்கவேண்டும்;.

அமெரிக்கா கோபுரங்களின் மேலான தாக்குதலை கண்மூடிக் கொண்டு ஆதாரிப்பது, உனது அறிவின்மையின் மேலானதாகவே இருக்கும். மத அடிப்படைவாதத்தின் காட்டுமிராண்டித்தனமான விளக்கங்கள் அனைத்தும் மக்கள் விரோதமானவையாகும்;. உழைக்கும் மக்கள் எங்கு இருப்பினும், அவர்கள் எங்கள் தோழர்களே. அவர்கள் உங்களுக்கு எதிராக இருந்தால், அதை அவர்களுக்கு விளக்கும் முயற்சியின் ஊடாக வென்று எடுக்க முயலவேண்டும்;. அதுபோல் தான் உனக்கு பின்னால் உள்ள மத அடிப்படைவாத கண்ணோட்டத்தை அகற்ற, அவர்கள் விளக்கி உன்னை வென்று எடுக்க முயலவேண்டும். உள்ளடகத்தில் ஏகாதிபத்திய தேசிய வெறியையும், மத அடிப்படை வாதத்தையும் பரஸ்பரம் எதிர் தளத்தில் களைந்தாகவேண்டும்.

அன்று நான்கு விமானத்தில் பறந்த அப்பாவி பயணிகள் எப்படி மக்களுக்கு எதிரியாக இருந்தானர்;. அன்று இடிந்து போன கட்டிட தொகுதியில் அன்றாட கூலிக்கு உழைக்கும் மக்கள், உனக்கு எப்படி எதிரியாக இருந்தான்;. அங்கு முஸ்லீம் மக்களும் அடங்குவர் என்பதை, ஏன் நீ புரிந்த கொள்ளவில்லை? அப்பாவி பயணிகளும், கூலிக்கு உழைக்கும் மக்களின் மரணத்துக்காக நாம் கண்ணீர் விடவேண்டும்;. அவர்களுக்கு நேர்ந்த இந்த துயரத்தில் பங்கு கொண்டு, இந்த ஈனச் செயலுக்காக நாம் கோவப்படவும் எதிர்த்து போராடவும் வேண்டும். இது படு கொலைகள் விதிவிலக்காக நடந்துவிடவில்லை. மக்களை வரைமுறையின்றி கொல்ல வேண்டும் என்ற வெறியுடன் தான் இவை நடந்தன.

மறுதளத்தில் அந்த கட்டிடத்தின் உயரத்தில் இருந்தபடி, உலகை எப்படி கொள்ளை அடிப்பது என்ற ஒரு கூட்டம் திட்டமிட்டபடி இருந்தது. அன்றாட உழைப்பின் சேமிப்புகளை  பெறுமதியற்றதாக்கி உலகளவில் எப்படி பறிப்பது என்று உலகின் பல வங்கிகளும், பங்கு சந்தை மூலம் எப்படி மனிதனின் உழைப்பை அழிப்பது என்றும், உழைக்கும் மக்களை எப்படி வேலையை விட்டே துரத்துவது என்று ஆயிரக்கனக்கான வழிகளில், மக்களுக்க எதிராக திட்டம் திட்டிக் கொண்டு இருந்த எந்த அதிகார வர்க்கத்தையிட்டும் நாம் ஒரு துளி கண்ணீர் கூட சிந்தமட்டோம். இதுபோன்ற உலக மக்களை அடிமையாக்கி அழிக்க திட்டம் தீட்டிய படி, உலகு எங்கு கண்காணித்தபடி இருந்த பெண்டகன் இராணுவ அதிகார வர்க்கத்துகாக நாம் கண்ணீர் சிந்தவில்லை. மக்களுக்காக போராடுபவர்களை படுகொலை செய்ய கண்காணிக்கும் பெண்டகன் இராணுவ பயங்கரவாதிகளையிட்டு, அவர்களின் மரணத்தையிட்டு நாம் கவலைப்படவில்லை. அவர்கள் அணுக்குண்டுகளையும், இரசாயன ஆயுதங்களையும், உயிரியல் ஆயுதங்களையும் உற்பத்தி செய்தபடி, தமது மக்கள் விரோத பயங்காரவாதத்தை எப்படி மக்கள் மேல் கையளாலாம், எங்கே குண்டு போடலாம் என்று பல தளத்தில் இயங்கிக் கொண்டிருந்த இந்த மக்கள் விரோதிகளை இட்டு நாம் கவலைப்பட போவதில்லை. அவர்கள் தண்டனைக்குரிய மனிதவிரோத குற்றவாளிகளே. அவர்கள் தனிமனித பயங்கரவாத நடவடிக்கை மூலமல்ல, மக்கள் நீதி மன்றங்களில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேணடிய அளவுக்கு மக்கள் விரோதிகளே. ஆனால் தனிமனித பயங்கரவாதம் உழைக்கும் மக்களுடன் இந்த மக்கள் விரோதிகளையும் ஒரே தட்டில் இட்டு படுகொலை செய்யும் போது, மக்களோடு மக்களாக கலந்து ஒளித்துவிடுகின்றனர். மக்கள் என்ற பெயரில் புதிய அடக்கமுறைக்கு இவை துணைபோய்விடுகின்றது. மக்களின் வாழ்வை அழிக்கும், அவர்களின் உழைப்பை உறுஞ்சும் அட்டைகளின் மேலான யுத்தம், தனிமனித பயங்கரவாதத்தால் முடிவுகட்டிவிடுவதில்லை. சுரண்டலையும் அடக்குமுறையையும் தனிமனித பயங்கரவாதம் விரிவாக்குகின்றது. மக்களின் உழைப்பு உறிந்து வாழும் இந்த பன்றிகளின் எதிரியாக மக்கள் இருக்கும் போது, அந்த மக்களை அணிதிரட்டி மக்கள் திரள் வழிகளில் போராடுவதுதான் ஒரே மார்க்கம்;. அதைவிட்டு தனிமனித பயங்கரவாதம் என்பது மக்களில் நம்பிக்கையற்ற, ஏகாதிபத்திய காதநாயகர் பாணியிலான மக்கள் விரோதத் தன்மை கொண்டவையே.

 

இத் தாக்குதலை அடுத்த உலக பொருளாதாரமே சேதத்துக்குள்ளாகி நெருக்கடியில் சிக்கிவிட்டது. மூலதன பயங்காரவாதம் தனிமனித பயங்கரவாதம் போல் உழைக்கும் மக்களை வேலையில் இருந்து துரத்த பயங்கரவாத நெருக்கடியை மூலதனமாக்கின்றனர். ஒருபுறம் தனிமனித பயங்காரவாதம் உயிருடன் மனிதனை கொன்றுவிட, ஏகாதிபத்திய உலகமயமாதல் பொருளாதாரம் உயிருடன் உழைக்கும் மக்களை வதைத்து கொல்ல பின் நிற்கவில்லை.  அதன் தொடர்ச்சியில் நளாந்தம் 35000 விமானப் பறப்பை கொண்ட அமெரிக்க விமானத்துறை ஒரு லட்சம் ஊழியர்களை வேலையில் இருந்து துரத்தும் பயங்கரத்தை அறிவித்துள்ளது. பொழுது போக்கு சார்ந்து நத்தார் வர்த்தகம் சார்ந்து நியுயோர்க்கில் மட்டும் 50 சதவீதம் வர்த்தகம் சரிவடைந்துள்ளதாக கூறி பலரை வீட்டுக்கு அனுப்புகின்றது மூலதனம். பிரிட்டிஸ் விமானச் சேவை தனது ஊழியரில் 7000 பேரை தனது பங்கு (யுத்தத்தில் பங்களிப்பது போல்) வேலையை விட்டு நீக்கியுள்ளது. தாக்குதல் நடந்து ஒருமாதம் கழித்த நிலையில், பிரிட்டிஸ் விமானச் சேவை தனது விமானப் பறப்பை கிழமை ஒன்றுக்கு 190 யால் (9 சதவீதமான விமானச் சேவையை)  குறைத்துள்ளது. அத்துடன் அமெரிக்க விமானச் சேவை 120000 முதல் 140000 வேலையை இழப்பர் என்று அறிவித்துள்ளனர். அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கும் ஆழமாகியிருந்த விமான உற்பத்தி மற்றும் விமான சேவைக்கான மூலதன ஆதிக்க முரண்பாட்டு மேலும் ஆழமாகியுள்ளது இத் தாக்குதலை ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு சார்பாக மாறி, அமெரிக்க விமானத்துறை சார்ந்த அனைத்து மூலதனமும் ஆழமான நெருக்கடியில் சிக்கிவிட்டது. தனிமனித பயங்கரவாதத்தை கண்காணிக்கும் அதே தொழில் நுட்பம் தான் ஐரோப்பிய பொருளாதார வர்த்தகத்துக்கு எதிராக, அண்மையில் சவூதிக்கான பிரான்சின் விமான வர்த்தகத்தை ஒட்டுக் கேட்டு முறியடித்த போது, ஐரோப்பிய ஏகாதிபத்தியம் பிரிட்டனில் இயங்கும் அமெரிக்கா கண்காணிப்பு மையத்தை மூடக்க கோரி துள்ளிக் குதித்தனர். இந்த கண்காணிப்பு மையங்கள் கூட கம்யூனிசத்தை ஒழித்துக் கட்ட, அன்று உலக ஏகாதிபத்தியங்கள் உலகு எங்கும் நிறுவியதே. அது போன்று உலகு எங்கும் கம்யூனிசத்தக்கு எதிராக பல நூறு செய்தி வலைப் பின்னல்களை உருவாக்கி, பல மொழி ஒளிபரப்புகளையும் நிறுவினர். அதையே இன்று அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு  உலகமயமாக்கும் நலனுக்கும் பயன்படுத்துகின்றது.

இன்று ஆப்கான் மக்கள் மேல் நடத்தும் ஆக்கிரமிப்பை ஏகாதிபத்திய செய்தியமைப்புகள் நியாப்படுத்தும் அதேநேரம், ஒவ்வொரு தனிமனிதனும் பயங்கரவாதியை கொல்வது போன்ற கம்யூட்டர் விளையாட்டுகளை உருவாக்கி, இலவசமாக உலகு உலவவிட்டுள்ளனர். பயங்கரவாதி என்ற பெயரில் படுகொலையை பல ஆயிரமாக நடத்தி வக்கரிக்கும் அமெரிக்கா வக்கிரத்தை கம்யூட்டரிலும் உருவாக்கியுள்ளனர். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படுகொலை செய்யும் ரசனைக்கு கட்டமைக்கும் இந்த விளையாட்டுகள், பச்சை இனவாதத்தில் தொடங்கி மனிதவிரோத தனிமனித படுகொலை வக்கிரத்தையும் கற்றுக் கொடுக்கின்றது. இந்த தாக்குதல் நடந்தவுடன், நாசி கண்ணோட்டத்தில் இனவாதத்தை உச்சத்துக்கு மேற்கு செய்தியமைப்புகள் எடுத்துச் சென்றனர். அமெரிக்காவில் பல நூறு இனவெறி தாக்குதல்கள் நடபெற்றன. இது ஐரோப்பாவிலும் நடை பெற்றது. சுவீடன் விமானச் சேவையை சேர்ந்த ஒரு இன நிற வாத விமானி, அரபு பிரiஐ ஒருவரை வலுக்கட்டயமாக விமானத்தில் இருந்து இறக்கிவிட்ட பின்பே விமானப் பறப்பை நடத்தினர். "இஸ்லாமிய பயங்கரவாதி" என்று அடையாளப்படுத்தி செய்தி அமைப்புகள் வெளியிட்ட செய்திகள், இன நிறவாத்தை மேற்கில் ஊக்குவித்தன. அத்துடன் யுத்தத்துக்கு ஆதாரவான கண்ணோட்டம் இதை உச்சத்துக்கு கொண்டு போனது. மேற்கு அல்லாத அனைவரையும் பயங்கரவாதியாக காண்பது விளக்கவது, சர்வசாதரணமாக நிகழ்ந்தது. உதாரணமாக இலங்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தை, "தமிழ் பயங்கரவாதமாக" காட்டுவது ஏகாதிபத்திய இன நிறவாத வடிவமாகும். இது போன்று  "இஸ்லாமிய பயங்கரவாதமாக" வருணித்த நிகழ்வு, மேற்கு எதிரான கண்ணோட்டத்தை உலகு எங்கும் உருவாக்கியது.

இவை நியாப்படுத்திய உலக ஆக்கிரமிப்புக்கும், உலகமயமாதல் பொருளாதார அமைப்புக்கும் பாதகமாக மாறிய நிலையில், மேற்கு தலைவர்களும் செய்தி அமைப்புகள் தீடிரென தமது பல்லவியை மாற்றி வாசிக்கத் தொடங்கினர். அதேநேரம் தாக்குதலைத் தொடர்ந்து உச்சத்தில் இருந்த யுத்த ஆதரவு கண்ணோட்டம், யுத்தத்துக்கு எதிரான போராட்டத்தின் வளர்ச்சியுடன் படிப்படியாக சரியத் தொடங்கியது. யுத்த எதிர்ப்பு போராட்டங்கள் ஒழுங்கமைந்த வகையில் வளர்ச்சி பெற, இனவாத கண்ணோட்டம் படிப்படியாக கேள்விக்குள்ளாகி வருகின்றது. சமுகத்தை அரசியல் ரீதியாக சிந்திக்கவும், மேற்கின் ஆக்கிரமிப்பு நோக்கம் அரசியல் ரீதியாக அம்பலமாகி வருகின்றது.

உலகு எங்கும் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் தெளிவாக இதை கற்றுக் கொடுக்கின்றது. அமெரிக்காவில் இன்று யுத்தப் பிரச்சாரமே ஒரே மொழியான நிலையிலும், அதைத் தாண்டி அதற்கு எதிரான 15 சதவீதமான மக்கள் உறுதியான எதிர்ப்பை அமெரிக்காவில் காட்டுகின்றனர். இது போல் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களில் கூட, இந்த யுத்த எதிர்ப்பு குரல்கள் இயல்பானது. ஏன் இந்த யுத்த பிரச்சாரத்தை எதிர்த்து 20.9.2001 அன்று 36 அமெரிக்கா அரசு பிரிவுகளில் இருந்து 146 பல்கலைக்கழகம் சார்ந்த 2000 மாணவர்கள், அமெரிக்காவின் யுத்தவெறிக்கு எதிராக ஒரு போராட்டத்தை அமெரிக்காவிலேயே நடத்தியுள்ளனர். நிறுத்து சண்டையை என கோசம் எழுப்பியுள்ளனர். குண்டு வெடித்தது முதல் பத்து நாளில் 500 மேற்பட்ட இனவெறி தாக்குதல்கள் அமெரிக்காவில்; நடத்தப்பட்டுள்ளது. இருவர் கொல்லப்பட்டனர். பல முஸ்லிம் பள்ளி வாசல்கள் நொருக்கப்பட்டன. இதை எதிர்த்தும் கூட அமெரிக்க மக்களின் போராட்டம் நடைபெற்றுள்ளது. இவர்கள் எல்லாம் மக்களின் எதிரிகளா? இல்லை நண்பர்களா? மத அடிப்படைவாதம் இதையும் எதிரியாக காட்டியே, தனிமனித பயங்கரவாதத்தை மக்கள் மேல் தீர்வாக்குகின்றது. இன்று முஸ்லீம் மத அடிப்படைவாதம் அல்லாத யுத்த எதிர்ப்பு போராட்டங்கள், உலகு எங்கு நடக்கின்றன. நேபாளத்தில் (27.9.2001 20000 பேர் யுத்த எதிர்ப்பு, தனிநபர் பயங்காரவாத எதிர்ப்பு,  ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் பங்குகொண்டனர்) தொடங்கி அமெரிக்கா வரை இது யதார்த்தமாகியுள்ளது. உழைக்கும் மக்கள் தம்மைத் தாம் அடையாளம் காணவும், எதிரியை இனம் காணவும் தெரிந்து கொண்டு, மக்கள் திரள்வழி போராட்டத்தை முன்வைத்து போராட வேண்டியதே, உலகளாவிய ஒரே ஒரு மக்கள் போராட்ட வழியாகும்.