கம்யூனிஸ்ட்டுகளுக்கு தடை

அவதூறு செய் அழுத்தம் கொடு

ஆயுதம் மில்லா கம்யூனிஸ்ட்டுகளை

வேட்டையாடு கொல்லு

இப்படியும் ஒருதீர்ப்பு முறை

உங்களது ஜனநாயகத்தில்.

 

பிறேம்குமாரும், திமுதும்

ஜெகனும் லலித்குமரும் இன்னும் பலரும்

உங்களது பொலிசு வரும்

தடயங்களைத்தடவும்

வீட்டைச்சுற்றி வரும்

துண்டு துணிகளைப் பொறுக்கும்.

விசாரனை- விராசனை உத்தரவு உங்களது என பத்திரிகையில்

செய்தி பரவும்.

கார்ல் மார்க்சே அவர்களை வளாத்;தார்

அவரே உறுதியான மக்களணியைப்படைப்பவர்,

அவ்வழியே அவர்கள் உண்மைகளைச் சுமந்து

செல்கின்றனர்;..உங்களது  நீதிக்கே-நடுக்கம்

இல்லையென்றால் அங்கையல்லவா-அவர்கள்

நிறுத்தப்பட்டிருக்கவேண்டும்.

பிறேம்குமாரின்தாயும் அதைத்தானெ கும்பிட்டு;, அழுது

உங்களிடம் கேட்டாh.;

உங்களது குள்ளநரித்தனங்களை

புரிந்து கொள்ள முடியாத

அப்பாவித்தாய்கள்.

 

உங்களது நீதிமன்றங்களில்-மேலும்

பன்றிகளைச்; சேர்த்துக் கொள்ளுங்கள்

உங்கள் விருப்பப்படி புசிப்பதற்கு .மட்டும்.

 

மூலதனத்தின் வயது உங்களுக்கு தெரியுமா?

உங்களது பரம்பரையின் சுரண்டலை

தோலுரித்த நாள்-அது

145வருடங்கள்.

மாக்சியம் மடிந்ததா?

பதினாறு வயது மாணவன் அவரது

எழுத்துக்களைத் தேடுகிறான்.

 

வடகிழக்கில் மொத்தமாக முள்ளிவாய்காலில்

தெற்கின் தெருக்களில் கங்கைகளில் (1971ல்மட்டுமல்ல)

அதன்பின்பும் புதைத்தீர்கள.;

உங்கள் நீதிமன்றங்களில் எவர் எப்போது

தண்டனை பெற்றார் அது எத்தனை ஆண்டுகள்.? -ஆனால்

உண்மைகளை பேசவரும்

கம்ய+னிஸ்ட்டுகளை கடத்து

வாயத்;துவிட்டால் வேட்டையாடு கொல்லு

 

உங்கள் தீர்ப்புக்களை மக்கள் அணிகள்

சரியாகவே கணக்கிடுகின்றன.

அண்மித்துக் கொண்டிருக்கின்றது -உங்களை

துரத்தும்காலம் உங்கள் சொத்துகளை

மக்கள் பறிப்பார்கள.;

 

நீங்கள் உங்கள் எஐமானர்களிடம் ஓடுவீர்கள்

அல்லது மக்கள்வலையில் சிக்கி மாண்டும்

போகலாம் நினைவில் வையுங்கள்.

 

9.4.2012

திலக்