புலிப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில், அதற்கு காரணமானவர்கள் காரணங்களை பூசி மெழுகி பாதுகாக்கின்றனர். அவைகளைக் கேள்விக்குள்ளாக்காது விமர்சிக்காது இடது சந்தர்ப்பவாதம், தேசியவாதத்தின் பின் அனைவரையும் செல்லக் கோருகின்றது. இதை அரசியல் ரீதியாக மூடிமறைத்த இடது தேசியவாதமோ, வலது தேசிய வாதத்தை  விமர்சிப்பதையே "அவதூறு" என்கின்றது. இந்த வலது தேசியவாதம் எப்படியெல்லாம் தன்னை நியாயப்படுத்தி அணுகுகின்றது என்பதைப் பாருங்கள். "விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் என்று சொல்லிக் கொண்டு அரசையும் அரசின் படுகொலைகளையும் அரசின் யுத்தத்தையும் ஆதரித்தார்கள். இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள், சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை நான் வளர்ந்த பிறகுதான் அறிந்தேன். அதை யார் செய்தார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அப்பாவிச் சிங்கள மக்களையும் முஸ்லீம் மக்களையும் கொல்வது தீர்வல்ல என்று விடுதலைப் புலிகள் கருதியவர்கள் என்பதை நான் அறிவேன்" என்ன தர்க்கம்!? என்ன வக்கிரம்!? இதுதான் புலியிசம். இதைப் பற்றியெல்லாம் பேசாது அரசியல் செய்வது தான், தேசியத்தின் பால் இடதுசாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை என்கின்றனர். இதை மீறினால் அதை "அவதூறு" என்றும், "வரட்டுவாதம்" என்றும் வேறு முத்திரை குத்துகின்றனர்.


தேசியத்தின் பெயரில் பாதிக்கப்பட்ட மக்கள், மக்கள் இல்லையா? பேரினவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டும்தான் மக்களா? ஒரு மனித அவலம் நடந்து முடிந்திருக்கின்றது. அந்த மனித அவலத்தை அரசு மட்டும் செய்யவில்லை. புலிகளும் சேர்ந்து செய்தனர். அரசு பலியெடுக்க புலிகள் பலி கொடுத்தனர். பலி கொடுத்ததை கண்டு கொள்ளாத இடதுசாரியம், தமிழ்தேசியத்தின் பின் அதை மூடிமறைக்கின்றது. இதை இன்று யார்தான் பேசியிருக்கின்றனர்.    

இடதுசாரிகள் இப்படி இதை மூடிமறைக்க, வலதுசாரிகள் அனைத்தையும் தங்கள் பாணியில் புதைக்கின்றனர். "நான் வளர்ந்த பிறகுதான் அறிந்தேன்" என்று கூறுவதனால், நடந்த உண்மை பற்றியும், அதைப்பற்றி பேச வேண்டிய விமர்சிக்க வேண்டிய சமூக பொறுப்பும் அவருக்கு கிடையாதா? மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய, மனிதத் தன்மை கிடையாதா?  பிறகு எதற்கு அரசியல்;. மனித விரோத வக்கிரமாக வெளிப்படும் போது, அதை "யார் செய்தார்கள் என்பது எனக்கு தெரியாது" என்று கூற வைக்கின்றது. அந்த கொலைகளை எல்லாம் இப்படி நியாயப்படுத்திபடி தான் புலி தமிழ்தேசியம் மெதுவாக நழுவுகின்றது. மக்களை நேசித்தால் தான், இதை யார் செய்தனர் என்பதை கண்டறிய முடியும்;. புலிகளை நேசித்தால், இதை யார் செய்தனர் என்பதை கண்டறிய முடியாத புதிராகவே, வலதுசாரிய வக்கிரங்களாகவே புளுக்கும்.

"யார் செய்தார்கள் என்பது எனக்கு தெரியாது" என்ற கூறிக்கொண்டு, அனைத்தையும் திரிக்கும். "அப்பாவிச் சிங்கள மக்களையும் முஸ்லீம் மக்களையும் கொல்வது தீர்வல்ல என்று விடுதலைப் புலிகள் கருதியவர்கள் என்பதை நான் அறிவேன்" என்று கூறிவிடுவதன் மூலம், "எனக்குத் தெரியாது" என்று கூறியது புலியைப் பாதுகாக்கும் கவசமாகி விடுகின்றது. மொத்தத்தில் புலிகள் அதைச் செய்யவில்லை என்று வக்கரிக்கின்றது. "நான் அறிவேன்" என்று கூறுவதால், புலிகள் கொன்றது பொய்யாகிவிடுமா? இறுதி யுத்தத்தின் போது கூட, வடக்கு கிழக்குக்கு வெளியில் இருந்த புலி உறுப்பினர்கள் கடத்திக் கொல்லப்படும் வரை, அவர்கள் அப்பாவி பொது மக்கள் மேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தினர். பொது போக்குவரத்து பஸ்கள் மேல் நடத்திய தாக்குதல்கள் முதல் காட்டுப் பகுதிகளில் நடத்திய படுகொலைகள் எதுவும் கற்பனையானதல்ல. இவை எல்லாம் நீங்கள் கவிதை எழுதிய காலத்தில்தான் அரங்கேறியது.

நீங்கள் இது போன்ற விடையத்தில் "யார் செய்தார்கள் என்பது எனக்கு தெரியாது" என்று கூறி, நழுவி விடலாம். "மக்களையும் கொல்வது தீர்வல்ல" என்ற புலிகள் கருதியதாக கூறி நழுவிவிடலாம்;. இந்த புரட்டு மொழிக்கா உங்களுக்கு பஞ்சம்? சரி அந்த அப்பாவி மக்களுக்காக, நீங்கள் ஏன் கவிதை எழுதவில்லை? அது தவறு என்று உங்கள் மனம் ஏன் பதை பதைக்கவில்லை. எப்படி பதைபதைக்கும்? புலித் தலைவர்கள்  தங்களைப் பாதுகாக்க, உங்கள் 12 வயது தங்கையை பலியிட இழுத்துச் சென்ற போது, நீங்கள் அவரை புலியிடமிருந்து மீட்கப் போராடினீர்கள். சில ஆயிரக்கணக்கானவர்களுக்கு இப்படி நடந்ததை மறுத்து, புலிகள் அப்படி யாருக்கும் செய்யவில்லை என்று இன்று வக்கரிக்கின்றீர்கள். இங்கு உங்கள் சுயநலத்துடன் கூடிய வலதுசாரிய அரசியல் வக்கரிக்கின்றது. அரசியலில் மக்கள் விரோத வலதுசாரியாக நக்கி பிழைக்க வெளிக்கிடும் போது, உண்மைக்கும் நேர்மைக்கும் அங்கு இடமில்லை. அதுதான் உங்களைப் போன்ற வலதுசாரிகளின் அரசியலாகும்.                   

"விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் என்று சொல்லிக் கொண்டு அரசையும் அரசின் படுகொலைகளையும் அரசின் யுத்தத்தையும் ஆதரித்தார்கள்." என்பது, உங்களின் வக்கிரங்களுக்கு வசதியாக திரிக்கும் ஒரு பக்க உண்மைதான். எப்படி நீங்கள் புலிகளுடன் பாசிட்டுகளாக மாறி நின்றீர்களோ, அப்படித்தான் அந்த புலியெதிர்ப்பு மாமா கூட்டமும் நின்றது. நீங்களும் சரி, அவர்களும் சரி, மக்களுடன் நிற்கவில்லை. மக்களை நேசித்தவர்கள், விடுதலைப் புலிகளின் அரசியலையும், அரசையும் எதிர்த்துப் போராடினார்கள். இது 1980 களில் தொடங்கிய ஒரு தொடர் போராட்டமாகும். புலியை எதிர்த்தவர்கள் அரசு சார்பானவர்கள் என்ற புலி முத்திரை குத்தல், அபத்தமானது. இப்படி முத்திரை குத்தித்தான், அரசுக்கு ஆள் பிடித்துக் கொடுத்தனர். இப்படி கூறிக் கொண்டு தாமல்லாத அனைவரையும், புலிகள் கொன்று குவித்தனர். இதன் விளைவால் தான், அரசின் பக்கம் பலர் சென்றனர். மறுபக்கத்தில் இந்த அரசை எதிர்த்து மக்களை நேசித்தவர்கள் எவரும், புலியை ஆதரிக்கவில்லை. மக்களை நேசித்தவர்கள் புலி மற்றும் அரசுடன் நிற்கவில்லை.    

இப்படிப்பட்ட உண்மையின் பின்புலத்தில் நடந்தது நடந்து விட்டது என்று கூறிக்கொண்டு, புலிக்கு முண்டு கொடுப்பது கூட பிழைப்புவாத அறிவுத்துறை சார்ந்த புலி அரசியல்தான். இது எப்படி முகிழ்கின்றது என்பதைப் பாருங்கள். "இயக்கங்களில் முரண்பாடுகளை, சகோதரப்  படுகொலைகளை  யாரும் விரும்பவில்லை. அவைகள் நடந்து முடிந்து விட்டன. எங்கள் இனம் முதலில் தோல்வியடைந்தது அதனால்தான். ஆனால் மக்களின் கனவை விடுதலைப் புலிகள் முன்னெடுத்ததால் அதற்குப் பிறகு மக்கள் முழுமையாக விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் அந்த சூழலில்தான் நான் வளர்ந்தேன்." என்ன தர்க்கம்!? என்ன வக்கிரம்.  இவைதான் மூடிமறைத்த பாசிசம். இது தன்னை வெளிப்படுத்தும் அரசியல் வடிவங்களில் இவையும் ஒன்று. "இயக்கங்களில் முரண்பாடுகளை, சகோதரப்  படுகொலைகளை  யாரும் விரும்பவில்லை." என்று கூறுகின்ற கூற்று, புலியின் நடைமுறைக்கு எதிரானது. உங்கள் நடத்தைக்கும் எதிரானது. இதையே தங்கள் நடைமுறை அரசியலாக செய்த புலிகள், அதை ஆதரிக்கும் நீங்கள் எல்லாம், அதன் பிரதிநிதிகள்தான். "அவைகள் நடந்து முடிந்து விட்டன" என்று கூற தட்டிகழிக்கத் தான் முடிகின்றது. ஜனநாயகத்தின் நிழலைக் கூட அனுமதிக்காத புலிக்குப்பின், படுகொலைகளை அரசியல் ஆணையில் வைத்து உறுமிய புலிக்கு பின், கொலைகளையே அரசியலாக தொழிலாக செய்துவந்த புலியின் இறுதிக் கட்டம் வரை, எவையும் காலம் கடந்தவையாக இருக்கவில்;லை. "அவைகள் நடந்து முடிந்து விட்டன"வாக இருக்கவில்லை. காலம் காலமாக புலிகள் செய்தவைகளையே, தொடர்ந்தும் அவர்கள் செய்துவந்தனர். கருணாவின் பிளவைக் கையாண்ட முறை, இதைப்பற்றி பேசச் சென்ற திருமலை புலித் தளபதி பதுமன் கொல்லப்பட்டது வரை, எத்தனையோ சம்பவங்கள். புலிகள் இருந்தவரை எதுவும் நடந்து முடிந்து விடவில்லை. புலிகள் அழியும்வரை அது தொடர்ந்தது. இதனால் அது தன்னைத்தான் அழித்துக் கொண்டது.  

"எங்கள் இனம் முதலில் தோல்வியடைந்தது அதனால்தான்" என்பது, இங்கு உங்கள் அரசியல் எல்லைக்குள் கூட உண்மையல்ல. இறுதியாக தோல்வி அடைந்ததும் கூட இதனால்தான். மாற்றுக் கருத்துக்கு எந்த இடமுமற்ற ஒன்றுதான், அதன் அழிவை தவிர்க்கும் மாற்று வழியையும் கூடத்; தடுத்தது. இதுவே இறுதியில் அரசியல் தற்கொலையாக மாறியது. ஆரம்பத்தில் இந்த புலி வலதுசாரி அரசியல் தான், தன்னைத்தான் சர்வாதிகாரமாக மாற்றியது. இங்கு புலிகள் அதை அமுல்படுத்துவதைத்தான், புலி தன் அரசியலாக்கி அதை காலகாலமாக செய்தும் வந்தது.

"மக்களின் கனவை விடுதலைப் புலிகள் முன்னெடுத்ததால் அதற்குப் பிறகு மக்கள் முழுமையாக விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் அந்த சூழலில்தான் நான் வளர்ந்தேன்." என்பது எந்த விதத்திலும், புலியை நியாயப்படுத்த முடியாது. ஆறு அறிவுள்ள மனிதனுக்கு, பகுத்தறிவுள்ள மனிதனுக்கு முரணானது இந்தக் கூற்று. புலிகள் மக்களின் கனவை பாதுகாக்கவில்லை, மக்களின் கனவை அழித்தவர்கள். மக்கள் தம் கனவுக்காக போராடவேண்டிய போராட்டத்தை, மக்களிடமிருந்து அழித்து அதை கைப்பற்றியவர்கள் புலிகள். அதற்காக மக்களை ஓடுக்கியவர்கள், அந்த மக்களின் கனவை அழித்தவர்கள் புலிகள். அந்த கனவின் பெயரால், இனத்தையே அழித்தனர். மக்களை பார்வையாளராக்கி, அவர்களை ரசிகர் கூட்டமாக்கி, தங்கள் மந்தையாக்கினர். இறுதியில் அவர்களையே பலிகொடுத்து, எதுவுற்ற அனாதைக் கூட்டமாக்கினர். மக்கள் "விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள்" என்றால்!, தங்களை பலி கொடுத்ததையும் சேர்த்தா! மக்களைப் பலியிட்டு, புலிகள் தப்ப முனைந்த அந்த போக்கிரித்தனத்தையம் சேர்த்தா ஆதரித்தனர்? புலித் தலைவர்கள் தங்கள் உயிரைப் பாதுகாக்க இறுதியில் சரணடைந்த, அந்த கேடுகெட்ட நயவஞ்சகத்தனத்துக்;காகவுமா ஆதரித்தனர்? மக்கள் பெயரால் எதையும் சொல்லி நியாயப்படுத்த, இங்கு முந்தைய பிந்தைய காலம் என்று எதையும் பிரிக்க முடியாது.  நீங்கள் இந்த "சூழலில்தான் நான் வளர்ந்தேன்" என்று கூறி இதற்கு பாசிச விளக்கம் கொடுக்க, எந்த தார்மீக அறமும் இதில் இல்லை.

தொடரும்

பி.இரயாகரன்

 

1.புலி அரசியலுக்கு மக்களின் பிணம் தேவைப்பட்டது. தீபச்செல்வனின் அரசியலுக்கு எது!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 01)


2.வர்க்கம் கடந்து இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்கான குரல்கள், வர்க்கம் கடந்ததா!? மக்கள் சார்பானதா!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 02)


3.கடந்தகால விமர்சனம், சுயவிமர்சனமற்ற சாக்கடையில் தான் அரசியல் மிதக்கின்றது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 03)


4.தீபச்செல்வன் பற்றிய பொதுமதிப்பீடு மீதான அரசியல் திரிபு (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 04)

 

5.இனம் வர்க்கம் சார்ந்து குறுகிய வலதுசாரிய எதார்த்தம் தான் தீபச்செல்வனின் படைப்புகள் (தீபச்;செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 05)


6.தமிழ் மக்கள் தோற்றது என்? புலிகள் அழிக்கப்பட்டது ஏன்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 06)

 

7."சிலர் போராட்டத்தைச் சரியாக உணராமல்" செயல்பட்டதால், தவறுகள் நடந்ததாம்! (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 07)

8. "எங்களுக்கு அப்பொழுது வேறு வழிதெரியவில்லை" அதனால் நாங்கள் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 08)

 

9. மக்கள் விரோதிகளால் "உண்மையான எழுத்தையும் இலக்கியத்தையும்" மக்களுக்காக படைக்க முடியாது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 09)

 

10.செஞ்சோலையில் நடந்தது என்ன? யுத்தத்தை தொடங்கியது யார்? இதை விமர்சிக்காத அரசியல் எது? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 10)

11.யுத்தத்தில் "மக்களை ஆயுதமாக, காயாகப் பாவித்தது" யார்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 11)

 

12புலித் தலைமையின் "தியாகம்" "வீரம்" உண்மையானதா!? பொய்யானதா? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 12)

 

13. "உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு மரண எச்சரிக்கை குறிக்கப்பட்டவனாக வாழ்ந்தேன்." உண்மை, ஆனால்… (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 13)

 

14.மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற புலிகள் விரும்பியிருந்தால்!... அதைச் செய்திருக்க முடியும் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 14)

 

15.அரசின் எதிரியாக புலி இருந்ததால், புலியை ஆதரிக்க முடியுமா? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 15)


16."புலிகள் உண்மையில் தோற்றார்களா…. புலிகள் தோற்கவில்லை." உண்மைகள் மேலான பொய் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 16)


17.இந்தியாவை நம்பக் கோருகின்ற சுயவிமர்சனமற்ற அரசியல் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 17)

 

18.ஒருபக்க கொடுமைகளைப் பேசுவதன் மூலம் மறுபக்க கொடுமைகளை மறுப்பது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 18)