அரசு எதிரியாக இருந்தால் போதுமானது என்ற தர்க்கமும், இது சார்ந்த நடைமுறைகளும்,  சந்தர்ப்பவாதத்தின் அரசியல் மூலமாகும். இப்படித்தான் புலிகள் பின் வால்பிடிக்கும் அரசியல் கட்டமைக்கப்பட்டது. புலிக்கு எதிரான அரசியல் மறுக்கப்பட்டது. மௌனமாக கைவிடப்;பட்டது.  வலது முதல் இடது வரை, தமிழ் மக்களை கைவிட்ட அரசியலே உலகம் முழுக்க பூச்சூடியது. இது இரண்டு வகைப்பட்டதாக காணப்பட்டது.

1. புலியை வெளிப்படையாக சார்ந்து நின்றது.

2. புலியைப் பற்றிப் பேசாத சந்தர்ப்பவாதத்துடன், அரசை மட்டும் குறிவைத்து அதை எதிரியாக காட்டி இயங்கியது.

இப்படி இரண்டு போக்குகள் எம் மக்களைக் கொன்று குவிக்க மறைமுகமாக உதவியது.  இதில் புலியைச் சார்ந்து நின்றது நேர்மையாக இருந்தது. புலியைப் பற்றிப் பேசாத சந்தர்ப்பவாதத்துடன் இயங்கியது, நேர்மையற்ற பூசி மெழுகிய ஒரு அரசியலாக இருந்தது. இதை உலகம் தளுவிய அளவில் நாம் எங்கும் காணமுடியும். இதை தன்னந்தனியாக எதிர்த்து நின்றது, தனிமனித முனைப்புவாதமென்றும், போராட்டத்துக்கு எதிரான அவதூறு என்றும் கூறி தூற்றப்படுகின்றோம்;  

இறுதியுத்தம் புலி அழிவாக மாறியது. தமிழ்மக்களை பலிகொடுத்து தங்களை காப்பாற்ற புலிகள் முனைந்த காலத்தில் கூட, தமிழ் மக்களைச் சார்ந்து நின்று அதற்கு எதிராக போராடியவர்கள் எவரும் உலகில் கிடையாது. இதைச் சொல்வது இந்த அரசியல் உண்மையை இனம் காணத்தானே ஒழிய, எங்களை மிதப்பாகக் காட்டவல்ல. இப்படி திரித்து, இந்த உண்மையை வரலாற்றில் மறைக்க பலர் முனைகின்றனர். மக்களைப் புலிகள் பலியிடுவது வரை சென்றபோது கூட, புலிகளை நோக்கிக் கோசங்கள்  முன்வைத்த போராட்டங்களோ, கருத்துக்களோ முன்வைக்கப்படவில்லை. அரசு எதிர்ப்பு மையக் கோசங்களுக்குள் தான், சந்;தர்ப்பவாத அரசியல் எங்கும் வே~ம் போட்டது.  
 
இது தான் உலகெங்கும் நடந்;தது. யுத்தம் கூர்மையாகி மக்களைப் புலி பலி கொடுக்க, பலியெடுத்த அரசை மட்டும் முன்னிறுத்திய உலகம் தளுவிய வலது இடது கூத்துகள் பின்னணியில் தான், எம்மக்கள் அழிக்ககப்பட்டனர். புலிகள் மக்களுக்கு எதிரான செயல்களை தவறு என்று சொல்லாத சந்தர்ப்பவாத அரசியல் நடத்தைகள், புலிகள் செய்வதை சரியானதாக்கியது. எந்தக் கேள்வியுமின்றி, எந்த விமர்சனமுமின்றி புலிகள் தமிழ்மக்களை ஒடுக்கிப் பலியிட, அதன் விளைவைக்காட்டி அரசுக்கு எதிராக போராடினர். இதைத்தான் சந்தர்ப்பவாதிகளும் அரசியல் ரீதியாக செய்து முடித்தனர்.     
 
இந்த பின்னணியில் தான் தீபச்செல்வன், இன்றும் தங்களை தாங்கள் நியாயப்படுத்துகின்றனர். அவர் "யாழ் பல்கலைக்கழகம் சார்ப்பான நாங்கள் விடுதலைப் புலிகளைப் பகிரங்கமாக ஆதரித்தோம். ஏனென்றால் அவர்கள் எங்களுக்காக நடத்திய போராட்டத்தின் நியாயத்தின் பொருட்டு அவர்களை ஆதரித்தோம்." என்கின்றார். விடுதலைப்புலிகள் எங்களுக்காக போராடினர் என்று கூறுகின்ற கூற்றும் சரி, எமது எதிரியான அரசுக்கு எதிராக போராடியதாக  கூறுகின்ற கூற்றும் சரி, பொய்யானது புரட்டுத்தனமானது. ஏனெனில் "எங்களுக்காக" நாங்கள் போராடாமல், மற்றவர்கள் எங்களுக்காக போராட முடியாது. மற்றவர்கள் எங்களுக்காக போராடுகின்றனர் என்றால், நாங்கள் போராடாமல் இருக்கின்றோம் என்றால், இது எங்களுக்கான போராட்டமல்ல. இது அவர்களுக்கான போராட்டம். இதுதான் உண்மை.

நீங்கள் விடுதலைப் புலிகளின் மக்கள் விரோத செயலையும் எதிர்த்துக் கொண்டு, அரசை எதிர்த்து இருந்தால், உங்கள் போராட்டம் மக்களைச் சார்ந்ததாக இருந்திருக்கும். இல்லாத போராட்டம் புலியைச் சார்ந்தது, மக்களை என்றும் சார்ந்தல்ல.        

நீங்கள் புலி சார்ந்து நின்று "விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுக்கு விருப்பம் தெரிவித்து அழிவற்ற பாதையை விரும்பிய பொழுது, அரசு விடுதலைப் புலிகளை வேருடன் அழித்து ஈழ மக்களைப் போராட முடியாத நிலைக்குத் தள்ள அழிவு யுத்தத்தை நடத்தி மக்களை அழித்தது. அதனால் அரசுதான் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்." என்கின்றீர்கள். "விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுக்கு விருப்பம் தெரிவித்து அழிவற்ற பாதையை விரும்பிய பொழுது" என்பது தவறானது. புலிகள் சமாதானத்தை என்றும் விரும்பியது கிடையாது. இந்த வகையில் அதனை என்றும் பேசியது கிடையாது. அரசு தமிழ்மக்களின் இனப் பிரச்சனைக்கு தீர்வை என்றும் முன்வைக்கவில்லை என்ற உண்மை ஒருபுறம் இருக்க, பேச்சுவார்த்தை மேடையில் புலிகள் அதை என்றும் மையக் கோரிக்கையாக முன்வைத்து பேசவில்லை.

அதாவது பொதுவான தளத்தில் சொன்னதற்கு அப்பால், தீர்வை மையக் கோரிக்கையாக முன்வைத்து புலிகள் பேசவில்லை. இதனடிப்படையில் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறவில்லை. நடந்த புலிகளிள் அனைத்துப் பேச்சுவார்த்தையிலும், இதை புலிகள் முன்வைக்கவில்லை.

புலிகளுக்கு அச்சம் இருந்தது. அரசு தீர்வை வைத்துவிட்டால், தங்கள் கதி என்ன என்பதுதான், புலிகள் அதை கோர மறுத்ததுக்கு அடிப்படைக் காரணமாகும். அரசு ஒரு தீர்வைத் தரத் தயாரற்ற சூழலில் தான், புலிகளின் மற்றைய கோரிக்கைக்குள் அரசு எந்த அரசியல் நெருக்கடியுமின்றி தப்பிப்பிழைத்தது.

புலிகள் விரும்பியது யுத்தத்தைத்தான், சமாதானத்தையல்ல. புலிகள் நெருக்கடிகளை சந்தித்த போதுதான், சமாதானம் என்று கோசத்தை மீள முன்வைத்தனர். புலிகள் இறுதி அழிவைச் சந்தித்த போது, மீண்டும் சமாதானம் என்றனர். இந்த நிலையில் கூட, யுத்தத்தை நிறுத்தக் கூடிய கோசத்தை அது முன்நிறுத்தவில்லை. போராடியவர்கள் புலிக்கோசத்தை மீள முன்வைத்தனரே ஓழிய, மக்களைச் சார்ந்து நின்று ஒரு சமாதான கோசத்தை முன்வைக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் "புலிகளை வேருடன் அழித்து ஈழ மக்களைப் போராட முடியாத நிலைக்குத் தள்ள அழிவு யுத்தத்தை நடத்தி மக்களை அழித்தது." என்பது முழுமையான உண்மையல்ல. மக்கள் சுயமாக போhராட முடியாத வண்ணம், புலிகளின் கோசத்துக்குள் புலிக்கொடியின் கீழ் போராட்டம் அழிக்கப்பட்டது. சமாதானத்தையும், மக்களை விடுவிக்கவும் கோரி, மக்கள் சுயமாக போராடியிருந்தால் போராட்டம் அழிந்து இருக்காது. அதை இல்லாதாக்கியவர்கள் நீங்கள். அதாவது புலிகளாகிய நீங்கள் தான். நீங்கள் மக்களை போராடவிடாது அழித்ததைத்தான், அரசு இலகுவாக வெற்றிக்கொண்டது.  

பி.இரயாகரன்
தொடரும்

1.புலி அரசியலுக்கு மக்களின் பிணம் தேவைப்பட்டது. தீபச்செல்வனின் அரசியலுக்கு எது!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 01)

 

2.வர்க்கம் கடந்து இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்கான குரல்கள், வர்க்கம் கடந்ததா!? மக்கள் சார்பானதா!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 02)

 

3.கடந்தகால விமர்சனம், சுயவிமர்சனமற்ற சாக்கடையில் தான் அரசியல் மிதக்கின்றது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 03)

  

4.தீபச்செல்வன் பற்றிய பொதுமதிப்பீடு மீதான அரசியல் திரிபு (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 04)

 

5.இனம் வர்க்கம் சார்ந்து குறுகிய வலதுசாரிய எதார்த்தம் தான் தீபச்செல்வனின் படைப்புகள் (தீபச்;செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 05)

 

6.தமிழ் மக்கள் தோற்றது என்? புலிகள் அழிக்கப்பட்டது ஏன்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 06)

 

7."சிலர் போராட்டத்தைச் சரியாக உணராமல்" செயல்பட்டதால், தவறுகள் நடந்ததாம்! (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 07)

 

 

8. "எங்களுக்கு அப்பொழுது வேறு வழிதெரியவில்லை" அதனால் நாங்கள் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 08)

 

9. மக்கள் விரோதிகளால் "உண்மையான எழுத்தையும் இலக்கியத்தையும்" மக்களுக்காக படைக்க முடியாது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 09)

 

10.செஞ்சோலையில் நடந்தது என்ன? யுத்தத்தை தொடங்கியது யார்? இதை விமர்சிக்காத அரசியல் எது? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 10)

 

 

11.யுத்தத்தில் "மக்களை ஆயுதமாக, காயாகப் பாவித்தது" யார்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 11)

 

12புலித் தலைமையின் "தியாகம்" "வீரம்" உண்மையானதா!? பொய்யானதா? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 12)

 

13. "உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு மரண எச்சரிக்கை குறிக்கப்பட்டவனாக வாழ்ந்தேன்." உண்மை, ஆனால்… (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 13)

 

14.மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற புலிகள் விரும்பியிருந்தால்!... அதைச் செய்திருக்க முடியும் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 14)