முன்பக்கம்

உலாவுவோர்

We have 224 guests online

உலாவியோர்

Content View Hits : 5128343
Visits [+/-]
Today:
Yesterday:
Day before yesterday:
407
1735
1544

+191
This week:
Last week:
Week before last week:
2142
16038
22142

-6104
செவ்வாய், 07 புரட்டாதி 2010
 


விமலேஸ்வரன் மீண்டும் சோதிலிங்கத்தால் படுகொலை

E-mail Print PDF
எழுத்து (பெருப்பிக்க - சிறுப்பிக்க)

பெருப்பிக்கசிறுப்பிக்க

விஜிதரன் போராட்டமும் விமலேஸ்வரன் நினைவுகளும் : சோதிலிங்கம் நேர்காணல் என்ற இனியொருவின் நேர்காணல் கட்டுரையில் சோதிலிங்கம் மீண்டும் விமலேஸ்வரனைப் படுகொலை செய்துள்ளார். இந்தப் பேட்டியை வழங்கிய சோதிலிங்கம், விமலேஸ்வரன் கொல்லப்பட்டதற்கான காரணம் என்னவாக இருக்கலாம் என்ற கேள்விக்கு அளித்த பதில் விமலேஸ்வரனை புலிகள் கொன்றழித்ததை விட மிகவும் மோசமானது. அவர் கூறும் காரணம் விமலேஸ்வரனை மட்டுமல்ல விமலேஸ்வரன் வரித்துக் கொண்டிருந்த கருத்துக்களையும் சேர்த்துப் படுகொலை செய்துள்ளது. இதனை மறுத்து இனியொருவில் என்னால் பின்னூட்டமும் இடப்பட்டிருக்கின்றது.

அவர் புலிகளை இன்று பூஜிக்கட்டும். ஆனால் அன்று ஈ.பி.ஆர்.எல்.எவ் வினை சார்ந்திருந்த சோதிலிங்கத்தை புலிகள் இந்தச் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குறித்த பாத்திரம் வகித்ததனால் கொன்றழித்திருந்தால் இதே ”தேர்தலில் போட்டியிடலாம் என்ற பயத்தின் நிமித்தமே அவர்கள் கொன்றதாக பேச்சிருந்தது" என்று கருத்துரைப்பது அவர்களுக்கு ஏற்புடையதாக இருந்திருக்குமா?

சோதிலிங்கம் ஈ.பி.ஆர்.எல்.எவ் வினை அன்று சார்ந்திருந்ததால் சிலவேளை தான் தேர்தலில் பங்கு கொள்ள நினைத்திருந்தாரா? தனக்குரித்தான சூழலை விமலேஸ்வரனுக்கும் இழுத்துப் பொருத்தினாரா?

இன்று புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் நிலையில், விமலேஸ்வரனை மட்டுமல்ல ஏனைய புலிகளின் படுகொலைக்கான காரணத்தையும் அவர் மிகவும் இலாவகமாக புனைந்தே கூறுவார் என்பது தெரிந்தது தான்.

மேற்குறித்த படுகொலைக்கான காரணத்தை நேர்மையைத் தொலைத்துவிட்டு பின்வருமாறு அவர் கூறுகிறார்.

//சோதிலிங்கம்: அன்று மாகாண சபைக்கான தேர்தல்களை இந்திய இராணுவ அதிகாரம் திட்டமிட்டிருந்தது. அவ்வேளையில் விமலேஸ்வரன் போன்றோர் அத் தேர்தலில் போட்டி போடலாம் என்ற என்ற பயம் புலிகளுக்கு இருந்திருக்கலாம். இவ்வாறு ஒரு கருத்துத் தான் அப்போது நிலவியது.//

இதைப் போல ஒரு திட்டமிட்ட நாசூக்கான பொய்யை சோதிலிங்கம் ஏன் கூறுகிறார் என்பது புரியவில்லை.


விமலேஸ்வரனுக்கு தேர்தலில் போட்டியிடும் எந்த எண்ணமும் இருந்ததில்லை. அப்படி இருந்ததாக யாரும் கூறுவார்களாயின் அது விமலேஸ்வரன் தேர்தல்கள் பற்றியும் போராட்டம் பற்றியும் கொண்டிருந்த கருத்துக்களுக்கு முற்றும் எதிரான அப்பட்டமான அரசியல் திசைதிருப்பலாகத்தான் இருக்கமுடியம். இவ்வாறு விமலேஸ்வரன் என்ற போராளியை இப்படி யாரும் காலில் போட்டு மிதித்திருக்க முடியாது.

புலிகள் விமலேஸ்வரன் தேர்தலில் குதிக்கக்கூடும் என்ற பயத்திலேயே விமலேஸ்வரனை கொலை செய்ததாக அப்படிப் பேசப்பட்டதாக போகிற போக்கில் கூறுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். புலிகள் தங்கள் அரசியல் எதிரிகளை, தங்களை ஆட்டம் காண வைத்த ஒரு மாபெரும் போராட்டத்தை அரசியல் அராஜகங்களுக்கு எதிராக நடாத்த துணிவும் வைராக்கியமும் உடையவர்களை அழித்தார்கள் என்பது தான் ஒரேயொரு காரணமே ஒழிய தேர்தலில் விமலேஸ்வரன் குதிக்கக்கூடும் என்றதற்காக அழித்தார்கள் என்பது ஒரு கல்லில் இரு மாங்காய் வீழ்த்தும் தந்திரமான பிரச்சாரம். ஒன்று விமலேஸ்வரன் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் என்று ஒன்று இருந்தது என்று கூறுவதன் மூலம் விமலேஸ்வரன் கொண்டிருந்த அரசியல் வெறும் சுயநலம் கொண்ட தேர்தல் நோக்குகளே என்பதான பார்வையை பட்டும் படாமல் விதைப்பது. மற்றையது புலிகளின் கொலைக்கான பாசிசக் காரணங்களை புலிகளுக்கு தத்துவ விளக்கு பிடித்து சோதிலிங்கம் இன்றும் வக்காலத்து வாங்குவது.

புலிகளின் பட்டியலில் விமலேஸ்வரன் பெயர் சேரக் காரணம்  தேர்தலில் விமலேஸ்வரன் குதிக்கலாம் எனப் புலிகள் சந்தேகித்ததே எனில் ஏனைய உண்ணாவிரதப் போராளிகளும் அமைப்புக்குழுவில் இருந்தவர்களும் புலிகளால் தேடப்படவும் கொலை செய்யப்படவும் அவர்களும் தேர்தலில் குதிப்பதற்கு இருந்தார்கள் என்ற காரணத்தாலா?

விமலேஸ்வரன் அனைத்துவித மக்கள் விரோதத்துக்கும் எதிராக அணிதிரண்ட மாணவர்களுக்கு ஒரு முன்னோடிப் போராளியாகவிருந்தான், அவர்களை தனது சக போராளிகளோடு இணைந்து அணிதிரட்டினான் என்ற அப்பட்டமான காரணத்தை முழுங்கிவிட்டு, தேர்தலில் போட்டி போடவிருந்ததே காரணமாயிருக்கலாம் என்று கூறி புலிகளின் குரோதத்தை இலாவகமாகவும் மிக நாசூக்காகவும் தந்திரமாகவும் மூடி மறைக்கும் வேலையை சோதிலிங்கம் இங்கு செய்கின்றார்.

இக் காரணத்தை நாவலனும் ஏற்றுக்கொண்டால் நாவலன் போன்றோர் விரட்டப்பட எது காரணம் என்பது புரியவில்லை.

சந்ததியாரை படுகொலை செய்த பின்னால் சந்ததியாருக்கு பெண்களோடு தகாத பாலியல் தொடர்புகள் இருந்ததாக புளட் இயக்கம் பிரச்சாரம் செய்ததற்கும் சோதிலிங்கம் விமலேஸ் கொலைக்கு கற்பிக்கும் காரணமும் வித்தியாசமின்றி ஒத்துப் போகின்றது.

கட்டுரையில் முன்னுரையில் //விமலேஸ்வரன் மட்டுமல்ல ஆயிரக்கணக்கான மக்கள் தவறாக வழிநடத்தப்பட்ட போராட்டத்தின் வன்மத்திற்குப் பலியாக்கப்பட்டுள்ளனர்.//
என்பது ஒரு வரியாக பதியப்பட்டுள்ளது. நாவலனின் கூற்றாயின் அது சரியானது.

சோதிலிங்கம் தன்னையும் இணைத்து தானும் முன்னின்று நடாத்திய போராட்டத்துக்கு தானே குழிபறிக்கும் வகையில் இன்று விமலேஸ்வரனை மீண்டும் படுகொலை செய்திருக்கின்றார் தற்போதைய அவரது எஜமானர்களுக்காக.

 

Trackback(0)
கருத்துக்கள் (5)Add Comment
கருத்தையே மறுப்பவர்கள் காலத்தை வெல்வார்களா??
பதிந்தவர் ரூபன், July 29, 2010
இறுதியாக இட்ட பின்னூட்டம் ' இனியொருவில்' மறுக்கப்பட்டது!
(('சோதிலிங்கம்' இன்றைய அரசியல் சீட்டில் ஒரு சொர்கத்தங்கம் (யோக்கர்)!!

இதற்கான இரண்டு பக்கங்கள்:-))

ரூபன்
29 07 2010

11.30.33
'சோதிலிங்கம்' இன்றைய அரசியல் சீட்டில் ஒரு சொர்கத்தங்கம் (யோக்கர்)!!
பதிந்தவர் ரூபன், July 29, 2010
இதற்கான இரண்டு பக்கங்கள்:-

1 - இனியொரு : ரயாகரன் விஜிதரன் குறித்த பல்கலைக் கழக மாணவர் போராட்டத்தைத் தானே தலைமை தாங்கி நடத்தியதாகக் குறிப்பிடுகிறார். இது குறித்து உங்கள் கருத்து?
சோதிலிங்கம்: இது முற்றிலும் பொய். உண்மையில் போராட்டம் அந்த அமைப்புக் குழுவின் தலைவர் என்ற வகையில் எனதும் விமலேஸ்வரன் ஆகியோர் தலைமையில் ஆரம்பமானது. அதன் பொதுவான போக்கும் அவ்வாறே அமைந்தது. ரயாகரனின் செயற்பாடுகளால் மாணவர்கள் மத்தியில் சில நெருக்கடிகளை நாம் சந்திக்க நேர்ந்தது என்பதே உண்மை.இவ்வளவு நீண்ட காலத்தின் பின்னர் இவற்றையெல்லாம் விலாவாரியாக பேசுவதை நான் உண்மையில் விரும்பவில்லை. தவிர, ஏனையோரின் பங்களிப்புகளைப் போல அவரின் பங்களிப்பையும் நான் மறுக்கவில்லை.


2:- இனியொரு : மாணவர் போராட்டம் நடைபெறுவதற்கு ஏதாவது அரசியல் சக்திகள் பின்னணியில் தலைமை வகித்தனரா?
சோதிலிங்கம்: அந்த நேரத்தில் நான் ஈ.பி.ஆர்.எல்.எப் இல் இணைந்திருந்த காரணத்தால் அது அவர்களோடு அடையாளப்படுத்திப் பேசப்பட்டது. ஆனால் அவ்வாறு எந்த அரசியல் சக்திகளும் போராட்டத்தில் செல்வாக்குச் செலுத்தவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எப், பாசறைக் குழு, என்.எல்.எப்.ரி போன்ற அமைப்புகள் உட்பட பலர் சில உதவிகளைச் செய்திருந்தாலும் போராட்டம் மாணவர்களின் தன்னெழுச்சியாகவே அமைந்தது. மாணவர் தலைவர்கள் அரசியல் ரீதியான வளர்ச்சியடைந்தவர்க ாக இருந்ததனால் அதனை புதிய நிலையை நோக்கி வளர்தெடுக்க வாய்ப்பிருந்தது.


இறுதியாக:

வரலாறுகளை யாரும் அழிக்கமுடியாது!!

வரலாறு என்பது மக்கள் வாழ்ந்த காலம்!!!

ரூபன்
29 07 2010
விமலேஸ்வரன் ஒரு 'வித்தியாசமான' மக்கள் போராளி-...
பதிந்தவர் ரூபன், July 28, 2010
விமலேஸ்வரன் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் சேர்ந்தபோது...

'தமிழ் மக்கள் ஐனநாயக முன்னணியின்' கருத்தை அறிந்திருந்தான். இவர் விடுதியில் தங்கியிருந்தபோது, உரித்திரபுரம் 8ம் வாய்க்காலைச் சார்ந்த ஒருவர் (பெயர் தவிர்க்கப்படுகிறது) 'தமிழ் மக்கள் ஐனநாயக முன்னணிக்கு' அப்பொழுது வேலைசெய்து வந்தார். இவ் நபர் விடுதிக்கு வெளியிலும், இவரின் தங்கை விடுதியிலும் (நான்கு வயது சிறியவர்) இருந்து வந்தனர்.

இந்நபரின் ஊடாகவே விமலேஸ்வரன் 'தமிழ் மக்கள் ஐனநாயக முன்னணிக்கு' அறிமுகமாகினார்.

பின்னர்....

அந்நபர் பிரன்ஸ் சென்றபோது...

விமலேஸ்வரன் (தனிப்பட்ட - மேற்சொன்ன தொடர்புகளுக்கு வெளியே- சொந்தக் காரணங்களின் நெருக்கடியால்)

புளட்டுடன் இணைந்திருந்தார். இக்காலகட்டத்தில் இப்பிரதேசம் புளட்டின் அளுமையும், 'தமிழ் மக்கள் ஐயநாயக முன்னணியின்' , ''கூட்டுக்குழுவின்'' வேலைப்பிரதேசமாகவும இருந்தது (புத்தூர் நிலப்பிரச்சனையில், புளட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலா... போன்ற அமைப்புக்கள் இணைந்து வேலை செய்தன...)

தமிழீழத்தை ஏற்றுக்கொள்ளாத கருத்துடன் இணைந்த விமலேஸ்வரன்,( 'தமிழ் மக்கள் ஐனநாயக முன்னணி' காலத்தில்) புளட்டுடன் இணைந்து, கடைசிக்காலத்தில்..என்.எல்.எவ்.ரீ யின் கருத்தை ஏற்றிருந்தார்.

விமலேஸ்வரனின் மரணம் ஒர் அரசியற் படுகொலை! இதை யாரும் நிராகரிக்கமுடியாது. அவ்வாறு நிராகரிப்பது அரசியற் காரணங்களைக் கொண்டதாகவே இருக்கமுடியும்!

இருப்பினும் விமலேஸ்வரின் மரணத்துக்குக்கு, ஒரு மத்தியதர வர்க்கக் காதல் விவகாரமும் - பக்க - கரணமாக இருக்குமா? (புலியின் பக்க வியாபாரத்துக்காக) என்பதும் ஆராய்வுக்குரியது....

மதியதனியுடன் உண்ணாவிரதமிருந்த 9 போரும் புலிகளால் கடத்தப்பட்பட்டிருந தனர். இதில் ஒருவரும், பின்னர் சிங்கப்பூர் வாசி ஒருவரின் ஆளுமை இங்கு ஆய்வுக்குரியது... (பெயர் தனிமனித சுதந்திரத்துக்காக - முதலாளித்துவ சுதந்திரம்-) நோர்வேயின் சட்டதிட்டத்தின் படி இதை வெளியிடுவது, சிலவேளைகளில் சட்டச் சிக்கலைக் கொடுக்கலாம்... (அதனால் தவிர்க்கப்படுகிறது)

மொத்தத்தில் விமலேஸ்வரன் இச்சமூகத்தின் நிலப்பிரபுத்துவ மற்றும் தரகுமுதலாளித்துவ வரம்ரபுகளை மீறி, இதை எதிர்த்துப்போராடி வன் என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடில்லை.


இதைவிடவும், ஐனநாயகத்துக்காக மரணத்துடன் போராடிய ஒரு நேர்மையான போராளி - விமலேஸ்வரன்.....

ரூபன்

28 07 10









...
பதிந்தவர் Segar, July 20, 2010
Hopefully Rajaharan will reconsider his comments on his previous article where he said "Sothiligham is from the revolutionary camp in EPRLF along with Seliyan and Das".
The so called revolutionary gang in the EPRLF have done a big summersault and became the LTTE sympathisers. But the real revolutionay forces in the EPRLF remained with the people and are still with the people in North and East (Sugu, Mohan and late Robert). Not like you guys who came abroad and conducting keyboard revolution and trying to claim the credit for Vijitharan's struggle after 24 years....because you guys (Navalan, Rajaharan, etc) haven't done anything revolutionary for the people in N&E apart from this. GROW UP
...
பதிந்தவர் rajinathan.D, July 20, 2010
ஐய்யா, விமலேஸ்வரன் ஜோதிலிங்கத்தால் மறுபடி கொலைசெய்யப்படவில்ல . இனியொருதான் கொன்றது. இனியொருவின் நோக்கம் தெளிவானது. ஒரே ஒரு கேள்விக்காக மட்டுமே இந்தப்பேட்டியை எடுத்திருக்கிறார்க ்;. இனியும் அதைத்தான் செய்வார்கள்.

கருத்துக்களைப் பதிவிடுக
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
சுருக்குக | விசாலமாக்குக

busy
Last Updated ( Monday, 19 July 2010 12:47 )  
Copyright © 2010 தமிழரங்கம். All Rights Reserved.
Joomla! is Free Software released under the GNU/GPL License.
Banner