அழகியல் என்பது எப்பொழுதும் ஒரு வர்க்கம் சார்ந்தே இயங்குகின்றது. அழகியலை பாட்டாளியும், முதலாளியும் பயன்படுத்த முடியும். ஆனால் பாட்டாளி வர்க்கம் தனது சொந்தப் படைப்புகளில், தெளிவான நிலையில், அதாவது பொருளாதார அடிக்கட்டு மானம் மீதான விமர்சனத்தின் மீது மட்டுமே அழகியில் அதற்கு சேவை செய்யும். இல்லாத எல்லா அழிகயற் Nhகட்பாடும இந்த ப+ர்சுவா சமுதாய நலன்களையே பெறும். நாம் இதை நடைமுறை ரீதியாகப் பார்ப்போம். எங்கள மண்ணில் நாம் அதிகளவு கடற்கரையைச் சொந்தமாகக் கொண்டவர்கள். அதற்குச் சென்றுவர பெரிய செலவும் கூடக் கிடையாது. ஆனால், நாம் ஒரு கடற்கரைக் காட்சியை, அதில் களித்தல் என அனைத்தையும் செய்தவர்கள் அல்லர்.

பொதுவில் எம் மக்களின் 95 வீதம் பேர் அதைச் செய்ய முடியாத வகையில், வறுமை, வாழ்வுடன் போராட்டம் என்ற எல்லையைத் தாண்டி இதை அணுக முடிவதில்லை. அதேநேரம் 5 வீதமானோர் அதை ரசிக்கின்றனர். அவர்கள் யாரெனப் பார்க்கும் போது சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில், உழையாமல் வாழும் பிரிவினராக உள்ளனர். அழகியல் கூட எவ்வளவு ஆழமாக வர்க்கம் சார்ந்து பயன்பாட்டுத் துறையில் பிரிந்துவிடுகின்றது.

இக்கட்டுரையை எழுதுகின்றவர்கள் உள்ளிட, பெண்கள் பிரச்சனை என்றவுடன் சில குத்துக்கரணம் அடிப்பவர்கள்: பெண்கள் கூறுகின்றனவர் அழகியல் ஆணாதிக்கம் சார்ந்தது என்று. எவ்வளவு ஆழமான ண்மை. இதையே பாட்டாளிகள் அழிகயில் ப+ர்சுவா வர்க்கம் சாரந்ததுஎன்று கூறுகின்றனர். ஆனால் இதைக் கேட்டவுடன் துள்ளிக் குதித்து இம் மாக்சிச விரோதிகள் மறுத்து விடுகின்றனர்@

எனது மூன்று வயது மகள் தனது இரண்டரை வயதை முதல் தனது அறிவைப் பெறத் தொடங்கிய நிலையில் எனது அவதானத்திற்கு வந்த ஒரு தரவுகளைத் தர முயற்சிகின்றேன். எனது மகள் ஒரு நாள அரைகுறைக் கைப் பாஷையிலும், செய்கை மூலமும் கடற்கரையை விளங்கப்படுத்தியும், அதில கால்மேல் கால் போட்டு கால் நீட்டிப் படுத்திருக்க விரும்புவதாகவும், கருப்புக் கண்ணாடி அணிந்து அதை ரசிக்க முடிந்தால் எவ்வளவு சுகமாகவும் ரசனையாககுவும் இருக்குமென குறிப்பிட்டாள்! இது வரை எனது மகள் கடற்கரைக்குச் சென்றதுமில்லை ஆனால் அதைச் செய்யாமலேயே அதன் மீது ரசிக்கவும் சுகமாக இருக்க முடியுமெனவும் கூறுவது என்னi ஆச்சரியப்பட வைத்தது. இக் கருத்தை அவள் எப்படி பெற்றிருப்பாள் எனப் பார்க்கும் பொது விளம்பரம், தொலைக்காட்சி நிகழ்வுகள் மட்டுமே இதற்கக் காரணமாக இருக்க முடியும்.

இங்கு அழகியல், கருத்தியல், செயல்கள் அதை அனுபவிக்காமலேயே அதன் நோக்கிலேயே இரண்டரை வயதில் நகர்த்தப்பட்டு விடுகின்றது. இதை விட்டு விலகுவது என்பது ஒரு பெரிய போராட்டமே ஆகும்.

இதை நான் பிரஞ்சு சமூகத்துடன் ஒப்பிடும் போது, பிரஞ்சுத் தொழிலாளியின் மாடு மாதிரியான உழைப்பு 5 கிழமை லீடு நாட்களுக்கான கனவுகளை உள்ளடக்கியதாகவே உள்ளது. அவன் அதற்காக மேலதிகமாக வேலை செய்யத தயாராக உள்ள அதேநேரம், அந்தக் கடற்கரைக் காட்சி என்ற எல்லையே அவனின் குறிக்கோளாக, சென்று விடுகின்றது. இது எப்படி இந்த சுரண்டும் சமூகத்திற்குச் சேவை செய்கின்றது என்பதை நாம் கூறித் தெரியத் தேவையில்லை. இது சிறு குழந்தையில் இருந்தே அனுபவிக்காது வளத்தெடுக்கப்படுகின்றது. இதைச் சிறப்பாக முதலாளித்துவ அழகியல் வளர்த்தெடுகின்றது.

எனது இரண்டாவது அவதானக் குறிப்பையும்  தருகின்றேன். பிரான்சின் சுத்திர தினத்தன்று எங்கும் பிரஞ்சுக் கொடி பறந்துகொண்டிருந்தது. அதைக் கண்ட எனது மகள் கொடியைக் காட்டி “பொலீஸ்” என்றாள். இது ஆச்சரியப்படக்கூடியதான, கொடியின் வகைப்படுத்தலை அக் குழந்தை 3 வயதின் பெற்றுவிடுவது ஒரு சின்ன விடயமல்ல! பிரஞசுக் கொடி பிரஞ்சு மக்களின் என்பதை விட பொலீஸினது என்பதன் மூலம் அக்கொடியை ஆளும் வர்க்கச் சின்னமாக இக்குழந்தை 3 வயதிலேயே இனம் காண்கிறது.

அதேநேரம் தன்னை பெரிசாகக் கற்பனையும் செய்கின்றது. தான் பொலீஸ் எனக் கூறி கையைக் காட்டும் நிகழ்ச்சி எவ்வளவு ஆழமானது. ஒரு கொடி அதன் செயல்,  அதன் கருத்து, அதன் அழகியல் என அதன் அனைத்துமு; சாதாரணமாக ஒரு கொடி பறக்கும் போது ஒரு கருத்தை அக் குழந்தைக்குக் கொடுத்து விடுகிறத. கொடி இருக்குமிடம் பொலீசாக மாறா ஆசைப்படுகின்றாள்.

இரண்டரை வயது குழந்தை தனது அவதானத்தில், ஒரு சிறு அசைவில் கூட ஒரு கருத்தைப் பெறுகின்றது. அது இந்த சமுதாயத்தில் எந்த வர்க்கம் சார்ந்து இயங்குகின்றதோ அதற்கு இசைவாக்கம் அடைந்துவிடுகின்றத. இவைகளில விமர்சனத்தைக் காணவிடாது அழகியல் தடுத்து நிறுத்துவதுடன் அதை இக்குழந்தையானது ஏற்றும் கொள்கின்றது. பெண் அடிமையை யாரும் திணித்துக் கூறுவதை விட இயல்பாக அது பரவுகின்றது. எனின்: அங்கு கருத்து, செயலென அதனதும் ஆணாதிக்கம் சார்ந்துள்ளது. இதை மூடிமறைப்பதாகவே அழகியல் உள்ளது.

உதாரணமாக ஈழத்துக் கவிஞர்கள் என இன்று பலர் இனம் காட்டும் கவிஞர்களுக்குள் ஜெயபாலனின் கவிதைகளை எடுப்பின், அதன் வர்க்க மூலத்தை ஆய்வதை விட ஆணாதிக்க அடிப்படையில் அதை ஆய்வு செய்யின், கவிதை முழுவதுமு; புரிந்துவிடும். ஜெயபாலனின் கவிதைகள் ஆணாதிக்கம் சார்ந்தவை. பெண்களின் மீதான அடக்குமுறைக்குள் உட்பட்ட இக் கவிதைகள், அழகியல் மூலம் அவ் ஆணாதிக்கம் மூடி மறைக்கப்படுகின்றது. இவ் அழகியல் கோட்பாட்டை உயர்த்தியே, அதில் கவித்துவம் உண்டெனக் கூறி ஆணாதிக்கம் மூடி மறைக்கப்படுகின்றது. இக் கவிதையின் பின்னணியில பல பெண்களின் கண்ணீர் கதைகளுண்டு! ஆனால் அக் கண்ணீர் அழகியல் மூலம் கவித்துவம் பெற்ற ஆணாதிக்க ஒழுங்கு இசைவாக்கப்படுகின்றது.

சாதாரணமாக நாம் போடும் உடுப்புக்கள். ஏற்ற தொப்பி, சப்பாது என அதைன்தையும் கலர் இசைவான வகையில் பயன்படும். அழகியல் சாதாரண ஏழைக்குச் சாத்தியமில்லை. இந்த வகையில் இது தொடர்பான அழகியல் மேல் தட்டுப் பிரிவுக்கு மட்மே சேவை செய்கின்றது.

தாகம் உள்ளவன் தண்ணீரைக் குடிப்பான். ஆனால் குடிக்க வேண்டுமென்று சொகுசாக வாழ்பவன் குளிர்பானத் (ய+சைத்) தேடுவான். இது போன்றுதான் அழகியல். மக்கள் வாழ்வைச் சொல்லாத கலை தூக்கி எறியப்பட வேண்டும். அதை மூடிமறைக்கும் அழகியல் நொருக்கப்பட வேண்டும். வாழநிலைதான் உணர்வையும் அது சார்ந்த அழிகியலையும் தீரு;மானிக்கின்றதே ஒழிய: உணர்வும் அது சார்ந்த அழகியலும் வாழ்நிலையைத் தீர்மானிப்பதில்லை! வாழ்நிலை என்பது எமது உழைப்பும் அது சார்ந்த வாழ்வும் தான். இதுதான் படைப்புகளாக மாற வேண்டுமே ஒழிய மாறாக உழைப்பில் ஈடுபடாத சுரண்டும் பிரிவின் அரிப்புக் கலைகள் நொருக்கப்பட வேண்டும்.

இன்று உலகில் 80 சதவீதமான மக்கள் உலக செல்வத்தில் 17 சத விகிதத்தை மட்டுமே அனுபவிக்கின்றனர். மொத்த மக்கள தொகையில 20 சதவிகிதத்தினர் மொத்த உலக செல்வத்தில் 1.5 விகிதத்தையே அனுபவிக்கின்றரன். உலக மக்கள் தொகையில் 25 சதவிகிதம் பேர் உணவும், குடிநீருமின்றி அலைகின்றனர். ஆம், ஒடுக்கப்பட்ட இந்த வர்க்கத்தின் சார்பாக கலை இலக்கியம் மலரட்டும்! மீறுபவன் மீது பாட்டாளி வர்க்கத்தின் சார்பாக கலை இலக்கியம் மலரட்டும்! மீறுபவன் மீது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பாய வேண்டும். உலக செல்வத்தில் 83 வீதத்தைப் பயன்படுத்துமு; 20சத விகிதம் பேருக்காக கலை இலக்கியம் படைக்கப்படுவதையும், அதன் அழகியலையும் உயிர்ப்பு உயர்த்துகின்றது. இவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவின் எதிரிகள்! வர்க்கம் தாண்டிய படைப்பு என்பது ஒடுக்கும் வரக்கம் சார்ந்த அதன் சகபோகத்தை அனுபவிக்கும், அதன் அரிப்பு கலையாகும். இதை நாம் எப்படி உதைக்க வேண்டும், அதற்காக வாதாட முயலும் உயிர்ப்புக்கும் தான் எப்படி உதைக்க வேண்டும்?

இனி, நாம் உயிர்பினரின் வார்த்தைகளை எடுத்து என்ன சொல்கின்றனர் எனப் பார்ப்போம்:

“இது காறும் மார்க்சிசமாக அறியப்பட்ட அறிவுத் தோற்றம் குறித்து பிரதிபலிப்புக் கொள்கை. அடித்தளம் மேல் கட்மானம் என்கிற உருவக வகைப்பட்ட அணுகல் முறை ஆகியவற்றின் அடியாக உருவாக்கப்பட்ட மார்க்சிசய இலக்கிய விமர்சனக் கோட்பாடுகள் மேலை நாடுகளில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே மறு பரிசீலனைக்கு உள்ளாக்கப்படடுள்ளன.” என உயிர்ப்பு பிரகடனம் செய்கின்றனர். மார்க்ஸ் அடிக்கட்டுமானம் மேல் கட்டுமானம் என்ற அடிப்படையில் இருந்தே தனது தத்துவத்தை, அதாவது மார்க்சிசத்தை உருவாக்கினார்.அதனாலதான் மார்க்சின் பெயரால் இத்தத்துவம் ‘மார்க்சிசம்’ என அழைக்கப்படுகின்றது.

இதை நிராகரித்த எந்தக் கோட்பாடும் மார்க்சின் மார்சிசமல்ல என்பது உடன் புரிந்து கொள்ள முடியும். அது மார்க்சிசம் அல்லாத ப+ர்சுவாக கோட்பாடே ஆகும். அதுவும் முப்பது ஆண்டுகளுக்கு முன் மறு பரிசீலனைக்கு வந்தது எனின்@ உங்கள் எல்லோருக்கும் தெரியும் அது குருசேவின் வருகையைக் குறித்தே! அன்றுதான் மார்க்சிசத்தை குருசேவ் சேறு அடித்துத் திருத்தினான். வெறுமனே கிராம்சி, அல்தூசர் வாதங்களுடன் பொருத்துவது பின் இனம் காட்டி இட்டுச் சென்று விட முடியாது கிராம்சி 30களில் இறந்து போனார். அல்தூசர் வாதம் 70களில் மேற்கு நாடுகளில் அம்பலப்படுத்தப்பட்டு அதன் அடிப்படையே தகர்க்கப்பட்டது. இதை 70களில் பிரஞ்சு மாணவர் எழுச்சியுடன் நடைபெற்றது. பொருளாதாரம் என்ற அடிக்கட்டுமானம் மீதே மேல்கட்டுமானமான அரசியல், மதம், கலை, அழிகியல்… என அனைத்தும் இயங்குகின்றது. அடிக்கட்டுமான மாற்றமின்றி, மேல்கட்மானம் மீதான சரியான விமர்சனம் மட்டுமே மேல்கட்டுமானத்தில் புதியது ஒன்றை விமர்சிக்க முடியும். அடிக்கட்டுமானம் பற்றிய பொருள்முதற் பார்வையின்றி மேற்கட்டுமானம் சரியான பொருள்முதுற் பார்வையைப் பெற முடியாது. அப்படியல்லாத பார்வைகள் கருத்துமுதல் பார்வைகளாகவே இருக்கும். இது ப+ர்சுவா கருத்து மூலமே ஆகும். லெனின் மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும்.. என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிடுவது என்னவெனில்: “பொருளாதார அமைப்பு முறை என்ற அடித்தளத்தின் மதுதான் அரசியல் மேல்கட்முhனம் கட்டப்படுகிறது ன்று ஏற்றுக் கொண்டவுடன் மார்க்ஸ்  தனது பெரும்பாலான கவனத்தை இந்தப் பொருளாதார அமைப்பு முறையின் மீது செலுத்தினார்… நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்மந்தமான எல்லாவிதச் சொல்லடுக்குகளுக்கும், பிரகடனங்களுக்கும், வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதோவொரு வர்க்கத்தின் நலன்கள் ஒளித்து விற்பதைக் கண்டு கொள்ள மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில்  அவர்கள் மூட்டாள் தனமான, ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனர்.

இன்று உயிர்ப்பு மார்க்ஸ் -லெனின்டம் இருந்து மேலும் மார்க்கிசத்தை வளர்ப்பதாகக் கூறுவதை லெனின் இக் கூற்றுடன் ஒப்பிட்டப் பார்க்கையில் அது எவ்வளவு பொய்யெனத் தெரியும். நாம் ஒன்றை லெனின் கூற்றுடன் வைத்து உயிர்ப்பின் பின்னுள்ள வர்க்க நலன் என்ன? என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாத வரை நாம் உயிர்ப்பின் அரசியலை ஒட்டி முட்டாள் தனமான ஏமாளிகளாகவும், எம்மை நாமே ஏமாற்றிக் கொள்வவர்களாகவும் இருப்போம்.

அடுத்து உயிர்ப்பு “நவீன சிந்தனைகள் இன்னமும் தமிழ்ச சிந்தனையில் சரிவரசந் சுவறவில்லை என்பதையும் கூறத்தான் வேண்டும். இதனை நம் சிந்தனையாளர்கள் பலரும் உணர்ந்ததகாத் தெரியவில்லை. அத்தோடு பலரும விமர்சனம் எதுவுமின்றி கண்மூடித்தனமாக இச் சிந்தனைகளை நிராகரிப்பதையும்..” எனத் தொடர்கின்றனர். உயிர்ப்பின் திரிபுவாதம் இன்னும் முற்றாக அரங்கேறி விட முடியவில்லை என அங்கலாய்தது அழும் இவர்களையிட்டு, நாம் ஏதோ பலமான இருக்கிறோம் என சந்தோசப்பட முடியாது. தமிழ் தேசிய விடுதலைப் போரின் அவலம், திரிவாதத்திற்கு கம்பளம் விரித்துச்செல்கின்றது. ஒவ்வொரு தோல்வியும் புரட்சியைக் கைவிட்டு ஓட, தத்துவத்தைத் தேடும் என்பதை துரோகம் வரலாறாகவே உள்ளது.

அதாவது விமர்சனமின்றி என்பது அப்பட்டமான பொய்1! அவர்கள் நிராகரிக்கின்றனர் எனின்: ஓர் அரசியல் நிலையில் நின்றேயாகும். நூம் சரியாக விமர்ச்சிக்கின்றோம். அதை முறியடித்து உங்கள் கருத்தை வெற்றி பெறச் செய்யும் வல்லமை உண்டா? எனச் சமர் அறைகூவல் விடுகின்றது. இந்த லட்சனத்தில் இவர்கள் தன்னியல்பைக் கூறுவர். தமது நவீன சிந்தனை எனப் பிரகடனம் செய்வது: நவ மார்க்சிதத்தையும் அதன் கோட்பாடுகளையம், புதிய இடதுகளையும், மார்க்சிசத்தின் பெயரால் அரங்குக்குக் கொண்டு வரச் செய்யும் முயற்சியாகும். இந்தத் திரிபுவாதத்தை இட்டு நாம் எச்சரிக்கையாக இல்லா விட்டால், மேலும் எமது புரட்சிகர பாதை இன்னும் பல புத்தாண்டுகளுக்குப் பின் தள்ளப்பட்டுவிடும்.

ஊயிர்ப்பு இதை மேலும் “பிரதிபலிப்புக் கொள்கை – அடித்தளம் - மேற்கட்டுமானம் ஆகியவற்றை நேரடியாகப் பொருத்தப் பார்த்தல், பொருளாதா தாரவாதம், குறுகிய பயன்பாட்டுவாதம், ‘ஸ்தாநோசியப்’ பார்வை போன்றவற்றின் பாதிப்புக்களை நாம் காணமுடியும்… இவர்கள் அரசியலுக்கு மிகை அழுத்தம் கொடுக்க இது தவிர்க்க முடியாத வகையில் கலை இலக்கியத்தின் அழகியல் அம்சங்களை மறுதலிப்பதில் போய் முடிந்தது.” என்ற உயிரப்பின் இவ்வாதம் அடிப்படையில் சுரண்டும்ட வர்க்கத்தின் கூக்குரல் சார்ந்ததே. அடிக்கட்டுமானமான பொருளாதாரம் (அதாவது மக்களின் வறுமை பற்றிய காரணத்தை) பற்றிய விமர்சனமற்ற, எந்தப் படைப்பாளியும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தமது படைப்பை வழங்க முடியாது. ஏனெனில்: ஒன்று ஒருவன் உழைத்து பட்டினியுடன் வாழ, மற்றவன் உழைக்காமல் ஆடம்பரமாக வாழ இந்தப் பொருளாதாரம் என்ற அடிக்கட்டுமானமே காரணமாகும்.

இந்தப் பொருளாதார இடைவெளி ஏன் ஏற்பட்டது, எப்படி மனிதனானவன் சுரண்டப்படுகின்றான்? ஏன் மக்களுக்கு பஞ்சத்தாலும் பட்டினியாலும் வாழ்கின்றவார்கள் எனின் அதை ஒட்டி அவர்களின் வாழ்வின் சகல பிரிவுகளும் உள்ளது எனத் தெரிந்து கொள்ளாத எந்தப் படைப்பும் ஒடுக்கப்பட்ட மக்களின் படைப்புகளே ஆகும். இந்த வகையில் பொருளாதாரப் பார்வையின்றி படைக்கக்கோரும் உயிர்ப்பு, மேல் தட்டுப் பிரிவினரின் படைப்புக்களை அங்கீகரிக்கக் கோருகின்றனர். ப+ர்சுவா வர்க்க எழுத்தாளர்களை மகிழ்வியுங்கள்! எனக் கோருகின்றனர்.

அடுத்து குறுகிய பயன்பாட்டு வாதம் என்பத அடிக்கட்டுமான – மேற்கட்டுமான நோக்கில் அணுகப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். இங்கு உயிர்ப்பு தனது அரசியலில் பாட்டாளி வர்க்கம் அல்லாத பிரிவுகளுக்கான தனது சேவையை அங்கீகரிக்கக் கோருகின்றனர். குறுகிய பயன்பாட்டு வாதம் என்பதை யதார்த்தப் படைப்புகளாக நாம் காணமுடியும். விலங்கில் இருந்து மனிதன் தன்னை வேறுபடுத்தியது உழைப்பு என்பது பயன்பாட்டு: நிலைமைகளில் தான். மனிதன் தனது உழைப்பும், அதன் வாழ்வியலின் போதே படைப்புக்களைப் படைக்கத் தொடங்கினான். இப் படைப்புகள் தனது உழைப்பின் மீதான பயன்பாட்டுத் தன்மையைப் பிரதிபலித்தது. சமுதாயத்தில் எப்பொழுது ஒருவன் உழையாமல் வாழத் தொடங்கினானோ, அப்பொழுது பயன்பாட்டுப் படைப்புக்களுக்குப்பதில் அரிப்புப் படைப்புக்களை அவன் உருவாக்கினான்.

இன்று படைப்புக்கள் ஒன்று மனித உழைப்புச் சார்ந்ததும், மற்றொன்று மனித உழைப்பைச் சாராமலும் உள்ளது. படைப்புக்கள் உழைப்புச் சாராது உள்ளவைகள், பன்பாட்டை இழந்துவிட்ட உழைக்காத பிரிவின் ஆபாச, அரிப்புக்களாக தங்கள் கொரூரங்களை இனம் காட்டாத, சொகுசாக அழகியல் மூலம் மூடி மறைக்கின்றரன். உதாரணமாக: ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்தாத பெண்னிலைப் படைப்புக்கள் உருவாக முடியுமா? அவ்வாறு அம்பலப்படுத்தியது மட்டுமே பெண்ணிலைவாதப் படைப்புக்கள் எனக் கூறின்: அது குறுகிய பயன்பாட்டுத் தன்மை உடையது என அழுது புலம்பும் எக்கருத்தும் ஆணாதிக்கம் சார்ந்ததே!           

ஸ்தாநோசியப் பார்வை என அழும் உயிர்ப்பு மேற் குறிப்பிட்டது போல் 30 வருடத்டதிற்கு முன் இவை தகர்க்கப்பட்டவையே. அதாவது ஸ்ராலினின் காலத்தில் அடிக்கடமானம் - மேற்கட்டுமானம் என்ற மார்க்சிய அடிப்படைப் பொறு உண்மைகளின் மீது விமர்சனம் அமைந்தன. இது 30 வருடங்களுக்கு முன் தகர்ந்து போனது என பெருமைப்படும் உயிர்ப்பு. அதற்காக சந்தோசப்படுகின்றனர். ஆனால் நாம் வருந்துகின்றோம். ஏனெனில் 1950களின் இறுதிகளில் ஸ்தாநோசியப் பார்வையை குருசேவ் தாக்கிய போது, வர்க்கமற்ற சமுதாயம் உருவானது எனக் கூறியபோது உயிர்ப்பு விரும்பியது போல குருசேவ் அனைத்து அரசுக்கான அடிக்கட்டுமானப் பார்வையை நீக்கிய போது அங்கு படைப்புக்கள் ஒடுக்கும் வர்க்கம் சார்பாக மாறியது. சோவியத்தின் நிறமும் மாறியது.

அடுத்து அரசியலுக்கு மிகையான அழுத்தம் கொடுத்து அழகியலை புறக்கணிப்பதில் இட்டுச் சென்றது. என்கின்றவாதம் தொடர்பாக: கீழே மேலும்  விவாதிக்கவுள்ளோம். இருந்த போதும் எல்லா விதமான சேர்க்கைப் படைப்புக்ள் மட்டுமே இந்த நிலையை அடையும் ஒரு படைப்பாளி பொருளாதாரம் மீதூன தெளிவான விமர்சனத்தைக் கொண்டிருப்பின் அங்கு அரசியலும், அழகியலும் ஒருங்கே சேர்ந்து படைப்பைப் பெற முடியும். ஆனால் உயிர்ப்பு இங்கு அரசியலை நிராகரிக்க அழகியலுக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.


இன்று அடிக்கட்டுமானம் - மேற்கட்டமான அரசியலை ஏற்றவர்கள் தான் தாய் மற்றும் வீரம் விளைந்த நூல்களைப் படைத்து நின்றனர். அவற்றை இவர்கள் போற்றுகின்றனர். அப்படைப்புக்கள் அரசியலைக் கூறுகின்றது. அதேநேரம் அது அழகியலை கொண்டுள்ளது.

இன்று அடிக்கட்டுமான – மேற்கட்டமான அரசியலை ஏற்றவர்கள தான் தாய் மற்றும் வீரம் விளைந்த நூல்களைப் படைத்து நின்றனர். அவற்றை இவர்கள் போற்றுகின்றனர். அப் படைப்புக்கள் அரசியலைக் கூறுகின்றது. அதேநேரம் அது அழகியலையும் கொண்டுள்ளது. எனவே படைப்பில் அரசியல் இலலையெனில் அது மக்களை ஏமாற்றும் மந்தையாக்கும் ஒரு பேதைவஸ்தே ஆகும்.

உயிர்ப்பு மேலும் “.. கலை இலக்கியம் செய்யாது கூடிக்கலையும் அரசியல் பேசிக் கொள்ளும் நிகழ்வாக மட்டும் மாறிக் கொள்ளும் போக்கையே இங்கு கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது.. குறிப்பிட்ட ஒருவர் கலைஞராக இருப்பதா? அல்லது புரட்சியாளராக இருப்பதா? அல்லது இரண்டுமாக இருப்பதா? என்பது முற்றிலும் அவரைப் பொறுத்த விடயம்.” ஏன உயிர்ப்பு தனது தத்துவார்த்த வேர்களைத் தொட்டுக் காட்டுகின்றனர்.

இன்று பல்வேறு இடங்களில் கூடிக் கலையும் போக்கு என்பது தனித்து அரசியலோ, அல்லது கலையோ பேசிக் கொண்டால் மட்டும் அது கூடிக் கலையாமல் போய்விடுமா? கூடிக் கலையும் போக்கின் அடிப்படை என்பது நம்பிக்கையீனத்துடன் கூடிய விரக்தி மனப்பான்மை ஆகும், இங்கு இவர்கள் கூடிக்கலையும் போது கூட கலையையும் அரசியலையும் பேசிக் கொள்வதில் சரியான நிலையைக் கொண்டுள்ளனர். அந்த வகையில் கூடிக் கைலயும் வரையிலும் கூடஇது சரியாகத் தொடரப்பட வேண்டும்.

இன்று உயிர்ப்பு உட்பட அனைத்துத் திரிபுவாதிகளும் மார்க்சிசத்தின் மீது தாக்குதலைத் தொடுக்கும் போது சோவியத்தில் அரசுக்கும் மக்களுக்கும் இடைவெளி அதிகரித்துச் சென்றது எனவும், அரசு உதிர்ந்து போகாமல இறுக்கமானது எனவும், பல்வேறு பல்வேறு பிரிவுகளுக்கு இடையில் இருந்த வேறுபாட்டை சோவியத் - சீனாவில் சுட்டிக்காட்டித் தாக்குகின்றனர். இப்படித் தாக்கிவிட்டு சோம்பல் முறித்தபடியே அரசியலையும் கலையையும் வேறு வேறாக்க, இடைவெளியே அதிகரிக்க வைக்க, அரசியலா? கலையா? என்பது அவரவர் சொந்தப் பிரச்சினையாகக் காட்டி இரண்டையும் தனியாக ஒன்றிலிருந்து ஒன்றை; ஓரங்க்கட்டுகின்றனர்.

முதலாளித்துவ சமுதாயத்தில் இருந்து சோசலிச சமுதாய மாற்றமும், பின் கம்மினிச சமூகத்தை நோக்கிய பாதையில் இவைகளுக்கு இடையிலான வேறுபாடு இல்லாது போக வேண்டும். ஓர் அரசியல்வாதி. ஒரு கலைஞன், ஒரு தொழிலாளி என்ற அளவில் அவர்களின் சிந்தனை, செயலென எல்லாமே ஒன்றாகமாற வேண்டும். தொழில் ரீதியான சிறப்பான வேறுபாடு என்பது வேறு. ஆனால் சிந்தனையில் ஒவ்வொரு மனிதனும் அரசியல் வாதியாகவும், கலைஞனாகவும், தொழிலாளியாகவும் அவன் எல்லாமாக இருக்க வேண்டும். இது மட்டுமே புரட்சயைப்பாதுகாக்கவும் எல்h நேரமும் விழிப்பைக் கொண்ட சமூகமும், தொழில் ரீதியாகவுள்ள வேறுபாட்டை ஒழித்துக் கட்டவும் வேண்டும்.

இதைவிடத்து அரசியல்வாதி, கலைஞனுக்கு இடையில் இரு வேறுபட்ட வேலையை அதன் அரசியல் நிலையை நியாயப்படுத்தி ஒன்றிலிருந்து ஒன்றை அகற்றுவது, அதை நியாயப்படுது;துவது என்பது இந்த முதலாளித்துவ சமுதாய இருப்பின் மீதான தீராத காதலேயாகும். இவ் முதலாளித்துவ சமூகத்தில் மட்டுமே வேலைப் பிரிவினையும், அதற்கு இடையில் இடைவெளியும் அகட்டிச் செல்கின்றனர். இதை உயிர்ப்பு நியாயப்படுத்தவும் கோரவும் செய்வது என்பது மார்க்சிசமே அல்ல. இன்று ஒரு மனிதன் அரசியலையும் கலையையும் பேசுவது ஒரு சரியான நிலை. அவர்கள் எதையும் படைக்கவில்லை என்பது இன்றுள்ள எமது சூழ்நிலையே அடிப்படையாகும் என்பதை உயிர்ப்;பு திசை திருப்ப முனைகின்றது.

ஒரு கலைஞனின் வேலை அரசியற் தீர்வு வைப்பது இல்லை@ அது அரசியல்வாதியின் வேலை என்ற உயிர்ப்பின் சொற் தொடர்களில் உள்ளடங்கியதே. இதே கருத்தையே ‘மார்க்சிசமும் தேசியமும்’ என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய யமுனா ராஜேந்திரன் பல்வேறு சந்தர்ப்பத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.

குறிப்பாக அவர் ரோஜா, பம்பாய், இந்திரா போன்ற படங்களின் மீது முன்வைத்த விமர்சனங்களில், மணிரத்தினத்தை நே;மையானவர் எனப் பிரகடனம் செய்த போது அதற்கு எதிரான விமர்சனத்தில் அவர் தீர்வு வைப்பது கலைஞனின் வேலையல்ல. அரசியற் தீர்வு வைப்பது அரசியல்வாதியின் வேலையென மீள மீள கூறியுள்ளார். பம்பாய் சினிமா பற்றிய நியாயப்படுத்தலில் பல்வேறு விமர்சனங்களும் இக்கருத்தை பிரதிபலித்து நின்றனர். இத்துடன் உயிர்ப்புக்கும் உடன்பாடும் ஏற்படும். ஏனெனில் அதுதான் உயிர்ப்பினதும் அடிப்படையாகும்.

இப்படித் தம்மை மார்க்சியவாதிகள் எனப் பிரகடனம் செய்யும் மார்க்சியப் போலிகள் இக்கருத்தை மணிரத்தினத்தையும், அதன் ஆதிக்க வெறிகளையும் நியாயப்படுத்துகின்றனர். இதற்குத்தான் நவீன சிந்தனையை எல்லோரும் சிந்திக்க வேண்டும் என உயிர்ப்புக் கோருகின்றது. இந்த சீரழிவு, சந்தர்ப்பவாத மார்க்சியர்கள் ஒரு புறம் தீர்வு வைப்பது கலைஞனின் வேலையல்ல எனப் பிரகடனம் செய்ய மணிரத்தினமோ அதை நிராகரித்துள்ளார். மனிரத்தினம் ஓர் அரசியல் தீர்வை இப்படத்தின் மூலம் மௌனமாகவே முன்வைத்துள்ளார்.

இதை இந்த மார்க்சிய விரோதிகள் மூடிமறைக்க எலலாவித சொல்லடுக்குகளையும் மாறிப் மாறிப் பயன்படுத்துகின்றனர். மணிரத்தினம் என்ற பார்ப்பான் இந்தியா விஸ்தரிப்பு வாதத்தை, பிராந்திய வல்லரசு நோக்கை, தேசிய - இன – மத – சாதி ஒடுக்குமுறைகளை தனது படத்தின் மூலம் நியாயப்படுத்தி நிற்கின்றார்.

இவை இப்படங்களில் வெளிப்படாமல் இருக்கவே அழகியலை உயர்ந்த அளவில் எல்லாத் துறைகளிலும் கையாள்கின்றார். மக்களின் நாளாந்த வாழ்வில் இப்படமும், அதன் அடிப்படை யதார்த்தமும் எழுந்தால் மட்டுமே, அழகியலை மீற நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் இப்படங்களை எதிர்த்தனர். மற்றவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு அழகியலில் கவரப்படடு விசிலடித்துவிட்டுச் சென்றனர். 1991 இலும், 93இலும் முறையே மத்திய கிழக்கு, மற்றும் சோவியத் பாராளுமன்றம் மீதான தாக்குதலை சினிமாவாகக் காட்டிய தொலைக்காட்சிகள், மக்கள் அழகியல் மூலம் ரசிக்கும் பார்வையாளராக மாற்றினர். இதையே மணிரத்தினம் என்ற பார்ப்பான் மிகத் திறமையாக அழகியல் மூலம் ஒடுக்கப்பட்ட மக்ளின் போராடடங்களை, எதிர்ப்பை கொச்சைப்படுத்தி ஒடுக்குபவனின் குரலாக ரசிகனை மாற்றி, படத்தை நியாயயப்படுத்தி உள்ளார்.

கலையில் குறிப்பாக சினிமாவில் எப்பொழுதும் எல்லாவற்றுக்கும் தீரு;வை முன்வைக்க வேண்டி ஏற்படுத்துகின்றது. ஏனெனில் அது அடிமட்ட மக்களிடம் தான், அக்கலையை உயிர்வாழ முன் வைக்க முடிகின்றது. எனவே சினிமாவில் எல்லாம் தீர்வைத் தாங்கி உள்ளன. அதனால் அது எந்த சமூக அமைப்பைச் சார்ந்தது என எடுத்த எடுப்பிலேயே இனம் கண்டுவிட முடிகின்றது.

மற்றைய கலைகள் அடிமட்டம் என்பதைவிட மேல்மட்டக் கலையாவே உயிர் வாழ்ந்த வண்ணம் உள்ளது. ஏனெனில் அது அழகியலை தன்னுள் புகுத்தி மக்களின் உழைப்பையும் நடைமுறையையும் நிராகரித்து, மேல்மட்ட அரிப்புக் கலையாக உள்ளது. அதனால் அது தீர்வை பிழையாகத்தன்னும் நேரடியாக வைக்கத் தவறுகின்றது. அல்லது பிழையாக முன்வைக்கும் போது அழிகியல் முலாம் ப+சப்படுகின்றது.

ஒரு தொழிலாளியின் உடம்பில் எழும் நாற்றம் உழைப்பின வேர்வையால் தான் எழும். ஆனால், அது நாற்றம் எடுக்காது. ஆனால் உழைக்காத ஒருவனில் வெளியேறும்நாற்றம் மிதம்மிஞ்சிய தேங்கிய கழிவுகளினால் மேலேழும் நாற்றமமாகிறது. இதை ப+சி மெழுக இவர்களுக்கு நறுமணம் (சென்ட்) தேவைப்படுகிறது. இது போன்றுதான் கலைகள். தொழிலாளியின் கலை எப்பொழுதும் அவனின் உழைப்பை நேரடியாகப் பிரதிபலிக்கும். அங்கு அழகியல் வெறும் கழுவும் தண்ணீர் பொன்றதே. ஆனால் உண்டு கொழுக்கும் உழைக்காத பன்றிகளின் அரிப்புக் கலையை மூடி மறைக்க அழகியல் தேவை. அதாவது நறுமணம் மூலம் கழுவப்பட வேண்டும். இதுவே இரண்டுக்கும் உள்ள வேறுபாடாகும்.

அடுத்து உயிர்ப்பு தமது கருத்தில் “இன்று நாம் கலை இலக்கிய விமர்சனத்தை ஒரு கொச்சையான உள்ளடக்கவாதமாக மட்டுமே குறுக்கும் போக்கும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. கலை இலக்கியத்தை சாரம்சத்தில் சில சமூகக் கருத்துக்களின் தொகுதியாக மட்டும் காண்பதே உள்ளடக்க வாதத்தின் அடிப்படையாகும். ஏன்ற உயிரிப்பின் இக்கருத்து முதல்வாத படைப்புக்களை அங்கீகரிக்க அதுவும மார்க்சிசத்தின் பெயரால் கோரும் ஒரு வேடிக்கையான நிகழ்வே.

ஒரு மனிதனின் சிந்தனை என்பது கலையாக பரிணாமிக்கும் போது ப+மியில் காணப்படும் பொருள் சார்ந்தே அது வெளிப்படுகிறது. அப்பொருட்கள் என்பது இன்றை உலக ஒழுங்கில் இரண்டு வர்க்க நிலைக்களுக்குள் பிரிக்கப்படுகின்றது. ஒரு காதலைப் பற்றிய ஒரு கலையில கூட அது வர்க்க இருப்புக்கள்ளானது. ஆங்கு ஆணாதிக்கம், சுரண்டல் என்ற பல நிகழ்வகளும், அக் காதலுக்குள் ஊடுருவியும் நிற்கிறது. இதுபோன்று யுத்தப் பிரதேசத்திற்குள் வாழும் மக்கள் சாதாரண வாழ்வையும், அதன் அழகியலையும் ரசிக்க முடியாது. இது போன்ற உயர்ந்த சாதியினர் வாழவோ அதன் அழகியலை ரசிக்கவோ முடிவதில்லை. வெள்ளை இனத்தவர் வாழும் வாழ்வையும் அதன் அழகியலையும் கறுப்பு இனத்தவர்கள் வாழவோ, அதன் அழகியலை ரசிக்கவோ முடிவதில்லை. வெள்ளை இனத்தவர் நாடுகளில் வெள்ளையர் வாழும் வாழ்வையும், அதன் அழகியலையும் அங்கு புலம் பெயர்ந்த கறுப்பின அகதிகள் வாழவோ அழகியலை ரசிக்கவோ முடிவதில்லை. இது போன்று பாட்டாளி ஒரு முதலாளியின் வாழ்வையோ, அதன் அழகியலையோ ரசிக்க முடிவதில்லை. ஒரு பெண் ஆண்போல் வாழவோ அதன் அழகியலை ரசிக்கவோ வாழவோ முடிவதில்லையே.

இப்படியாக நாம் யதார்த்தத்தில் எவ்வளவோ உண்மைகளைக் காண முடியும். அதேநேரம் கருத்தை முதன்மையாகக் கொண்ட ஒரு கருத்து முதல்வாதி, படைப்பக்கள் சில சமூக கருத்துக்களின் தொகுதி என்பதை மறுக்கின்றான். சமூகத்துக்கு வெளியே கருத்தை முதன்மையாகக் கொண்ட கற்பனைக் கருத்து முதல்வாதப் படைப்பை அங்கீகரிக்கக் கோருகின்றான். சமூகத்தை விட்ட படைப்பைக் கோரும் உயிர்ப்பு, சமூகக் கருத்துத் தொதியை தாண்டிய படைப்புக்களை மார்க்சிசத்தின் மூலம் அங்கீகரிக்கக் கோருவது திரிபுவாதமாகவும் உள்ளது, அதேநேரம் அது கருத்து முதல்வாதமும் ஆகும்.

இன்று படைப்புக்கள் என நாம் ஆராயும் போது படைப்புக்கள் இரண்டாகப் பிரிகின்றது. இப்பிரிவு என்பது எப்பொழுதும் ஒரு பிரிவால் எதிர்க்கப்படுகின்றது. வர்க்க சமுதாயத்தில் எல்லோருக்குமான படைப்பை குருசேவ் மற்றும் உயிர்ப்புக் கூறுவதைப் போல யாராலும் படைத்துவிட முடியாது. ஏனெனில் உலகம் வர்க்கங்களாகப் பிரிந்து கிடக்கின்றது. இதை லெனின் வரலாற்றில கார்ல் மார்க்ஸ் தத்துவத்துக்கு விதிக்கப்பட்ட வருங் காலம் என்ற புத்தகத்தில்..

“வர்க்கமல்லாத சோசலிசம்  வர்ககமல்லாத அரசியல் இவை குறித்த எல்லாத் தத்துவங்களும் அப்பட்டமான அபத்தமே என்பது நிரூபணமாயிற்று”
அடிக்கோடு லெனின்

எனச் சரியாக லெனின் சுட்டிக்காட்டினார். மேலும் நாம் லெனின் மார்க்சிசத்தின் மூன்று தோற்று வாய்களும் மூன்ற உள்ளடக்கக் கூறுகளும் என்ற நூலை படித்துப் பார்த்தால் “மார்க்கிசம் ஒரு வiயான நச்சுத் தன்மை கொண்ட குறுங் குழுவாதம்” என்ற அது கருதுகின்றது… வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு சமுதாயத்தில் ‘ஒரு சார்பற்ற’ சமுதாய விஞ்ஞானம் எதுவும் இருக்க முடியாது”

என லெனின் அழுத்தம் திருத்தமாகவே கூறியிருக்கின்றார்.

இன்று சார்பற்ற் கலை இலக்கியம் என்பது எதுவுமே இல்லை. இதை இருக்கும் என உயிர்ப்பு பிரகடனம் செய்ய அடிக்கட்டுமானம் என்ற பொருளாதாரத்தின் மீது தாக்குகின்றனர். இதன் மூலம் வர்க்கமற்ற அழகியலை கூப்பி;டு நியாயப்படுத்துகின்றனர். தொடர்ந்து உயிர்ப்பு ப+ர்சுவா வர்க்கத்திற்காக வாதிடும் விதத்தை சற்றுப் பார்ப்போம்.

“நாம் ஒரு புதுக்கவிதையில், சிறு கதையில் ஆழமான சிக்கலான சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வைத் தேடும் முயற்சியும், குறிப்பிட்ட ஒரு சமூகப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்பது இலகுவானதல்ல என்பதை பார்க்கத் தவறி விடுகின்றோம்” என உயிர்ப்பு தனது மார்க்கிச விரோத நிலைக்கு ஒரு நடைமுறைத் தீரு;வை வைக்கின்றனர். ஓர் அரசியற் கட்சியின் போராட்டமும், அதன் தீர்வும் மிகத் தெளிவானதாக, அதை வழி நடத்துபவனாகவும் உள்ளது. இதை எப்படி சிறுகதைகளில், கவிதைகளில் கொண்டுவர முடியும் எனக் கேட்பதன் மூலம், படைப்புக்கள் கற்பனையான கருத்து முதல் வாதமாகவோ வர்க்கமற்ற் இலக்கியமாகவோ இருக்க முடியுமென்ற எடுக்கோளுக்கு வந்து விடுகின்றனர்.

நான்கு வரிக் கவிதை முதல் நாற்பது பக்க சிறுகதை வரை எல்லாமே ஏதோவொரு சமூகத் தீர்வையோ, அதன் சமூக அடிப்படையையோ அது தன்னுள் கொண்டேதான் உள்ளது. உதாரணமாக

திருஞானசம்பந்தர் தேவாரமான நாலு வரியில்…

“பெண்ணகத்து எழில் சாக்கியப் பேய் அமன் தெண்ணற் கற்பழிக்கத் திருவுளமே” என்று உள்ளது. இதன் பொருள் சைவத்துக்கு எதிhன சாக்கிய, சமணப் பெண்களைக் ‘கற்பழிக்க’ எல்லாம் வல்ல பெருமானிடம் திருவுளம் தேடுகின்றார். திருஞானசம்பந்தர். இந்த ஒரு வரி சமுதாயத்தில் பலவற்றை கூறிச் செல்கின்றது.

ஒவ்வோர் வார்த்தைக்கும் அர்த்தம் உண்டு என்பதும், ஒவ்வோர் வார்த்தைக்கும் வர்க்கம் உண்டு என்பதையும் உயிர்ப்பு நிராகரிக்கின்றது. வர்க்கமற்ற படைப்புக்கள் உண்டு (வர்க்கமற்ற புலியைப் போல்) என்கின்றனர்.

ஒரு சிறுகதை, நாலுவரிக் கவிதை கூட இச் சமூகத்தைப்பற்றிய ஒரு பிரதிபலிப்பேயாகும்.அது இச் சமூகம் பற்றிய விமர்சனமா? இல்லையா? என்பதே எம் முன் உள்ள கேள்வி. முனிதன் அர்த்தமற்ற் புலம்பல் கவிதையாகவோ, சிறுகதையாகவோ இருப்பதில்லை. ஒரு பயித்தியம் பிடித்தவன் மட்டும் தொடர்பற்ற புலம்பலைச் செய்ய முடியும். ஆனால்? ஒரு படைப்பு ஒரு தொடர்பற்ற புலம்பலல்ல. மாறாகத் திட்டவட்டமாக இச் சமூகப் படிமானத்தின் வெளிப்பாடுகளே! அது எந்த சமூகத்தைப் பிரதி பலிக்கின்றது என்பதே எமது பிரச்சினையாகும்.

அடுத்த நாலுவரிக் கவிதையில், சிறு கதையில் ஓர் அரசியல் கட்சியின் முழுமையான தீர்வை வைக்க கோருவது என்ற உயிர்ப்பின் கண்டுபிடிப்பு நகைக்கத் தக்கதேயாகும். ஏன் புரட்சியாளர்கள் தொழிலாளர் விவசாயிகளிடம் செல்லும் போது ஒரு கவிதைபோல், ஒரு சிறுகதை போல பிரச்சினைகளை விரிவாக விளக்கி செல்கின்றனர். கமினிஸ்டுக்கள் திட்டத்தைப் போட்டு இதைச் செய்யுங்கள் எனப் பிரகடனம் செய்வதில்லை. மாறாக அவர்களின் நடைமுறை வாழ்க்கை, அதில் எழும் பிரச்சினைகள் அவர்களின் உழைப்பு என எல்லாவற்றையும் அவர்களிடம் கற்று, பின் அவர்களிடமே எடுத்துச் செல்லப்படுகிறது. இது சிறுகதையாக கவிதையாக மாறுகின்றது ஆக்கப்படைப்பாகிறது.

ஒரு படைப்பாளி மக்களிடத்தில் கற்றுக் கொள்ளவும், பின் அதைத் திருப்பிக் கொடுக்கவும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த சமூகம் பற்றிய விமர்சனத்தை அவன் தெளிவாக பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அவன் எதைப் பற்றிப் படைப்புச் செய்தாலும் அது அச்சமூக அமைப்பை விமர்சிக்கும். அது தனது உள்ளடக்கமாக மாறும். அது ஒரு சமூக மாற்றத்துக்கான ஆக்கங்களைக் கொண்ட ஆக்கப்படைப்பாக மாறும்.

இன்று முற்போக்காக வெளிப்படுத்தும் அனைவரும், எப்போது தம்மை தம் படைப்புக்கள் மூலம் இனம் காட்டுகின்றனர் என்பது முக்கியம் அது அராஜகத்திற்கு எதிராகவே உள்ளது. இது இப்படைப்புக்களில் பொதிந்துள்ளது. அது நாலு வரி முதல் சிறுகதைவரை விரவி நிற்கின்றது. இதுமட்டுமே அவர்களைத் தனித்துவமாக்குகின்றது. இல்லாதவர அவர்களை இனம் காணமுடியாது. இல்லாத படைப்பு வாதிகளையும் உயிர்ப்பு முற்போக்காக அங்கீகரிக்கின்றது. அராஜகத்தை விமர்சிக்க முடியாதவர்கள் எப்படி முற்போக்கு வாதிகளாவர்?

உயிர்ப்பு மேலும் தமது திரிபுவாதத்தை  விளக்க “ஒரு கலைஞனிடம் தீர்வை எதிர் பார்ப்பது என்பது அவசர சக்திக்கு அப்பாற்பட்ட தென்பதோடு, பொறுப்பை அவரது தலையில் வீணே சுமத்துவதாகவே அர்த்தப்படும்.” என்கின்றனர். இது தொடர்பாக நாம் மேலே விவாதித்துள்ளோம். யமுனா ராஜேந்திரன் பம்பாய் படத்தை நியாயப்படுத்தி இதே கருத்தையே முன் தள்ளுகிறார். ஆனால் உயிர்ப்போ அல்லது இவரோ எல்லாக் கலைஞனும் ஒரு தீர்வை முன்வைத்தே தீருகின்றான் என்பதை அழிகியல் மூலம் ப+சி மெழுகி மறுத்து நிற்கின்றனர். பம்பாய் படம் ஓர் அரசியல் தீர்வை தன்னகத்தே உள்ளடக்கி நிற்கவில்லையா?

அரசியற் தீர்வை வைப்பது கலைஞனின் வேலையல்ல என்ற சொற் தொடர் ஊடாக வைக்கும் தீர்வின் ஆதரவாளராக உயிர்ப்பு மாறி விடுகின்றது. அத்துடன் கலைஞனின் வேலையல்ல என்ற கூற்றினூடாக ஓர் அரசியல்வாதி தனது அதிகார நிலையை, ஆளும நிலையை தன்னுடன் தக்கவைத்துக் கொள்கின்றான். உயிர்ப்பு அதன் அரசியற் தலைவர்களும் தமது ஆளும் அரசு மட்டத்தை தனிமைப்படுது;தி, எல்லாவற்றிலும் மேலானதாக பிரகடனம் செய்கின்றனர். இப்படி இவர்கள் வாதிடின் அரசை ஒருக்காலும் ஒழிக்க முடியாது. அரசு ஒரு நிரந்தர அமைப்பாக அங்கீகரிக்கப்படும். வேலைப் பிரிவினை தொடர்ச்சியாக நியாயப்படுத்தப்படும்.

உயிர்ப்பு தனது கருத்தை நியாயப்படுத்த “… அவர் தீர்வு முன்வைக்கும் போது அழகியல் தளத்திலிருந்து அரசியற் தளத்தினுள் காலெடுத்து வைப்பதாகவே அர்த்தப்படும்” என்று உயிர்ப்பு வாதிட முனைவது அழகியல் படைப்புக்களில் அரசியல் இல்லை என்கின்றனர். அழகியல் உள்ள இடத்தில் அரசியல் இருக்க முடியாது என்கின்றனர். அதாவது தேன் இருக்கும் இடத்தில் வண்டு இருக்க முடியாது என்கின்றனர். நகம் உள்ள இடத்தில் தசை இருக்க முடியாது என்கின்றனர். அழகியல் உள்ள இடத்தில் சமூக யதார்த்தம் இருக்க முடியாது என்கின்றனர். ஆம், அழகியல் உள்ள இடத்தில் அரசியல் இருக்க முடியாது எனின், அது ப+ர்சவா அழகியலாகவே உள்ளது. அதில் உள்ள ப+ர்சுவா அரசியல அவ் அழகியல் மூலம் மூடப்படுகின்றது. இதையே இல்லையென உயிர்ப்பு நியாயப்படுத்துகின்றது. அழகியல் உள்ள இடத்தில் பெண்  விடுதலை இருக்கமுடியாது என்கின்றனர். அதாவது அழகியல் உள்ள இடத்தில் ஆணாதிக்கம் மூடி மறைக்கப்படுகின்றது.இங்கு ஆணாதிக்கம் இல்லையென உயிர்ப்பு நியாயப்படுத்துகின்றது.அழகியல் சுயாதீனமான, சுதந்திரமான, சமுதாயத்திலிருந்து அந்நியப்பட்ட பருப் பொருள் சாரதா வகையில் உள்ளதென வாதாடுகின்றனர். எனவே தொழிலாளி இந்த படைப்புக்களை இட்டு அலட்டிக் கொள்ளாமல் அச்சம் கொள்ளாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்றனர். அழகியல் படைப்புக்கள் எதிர் காலத்தில் சமுதாய மாற்றம் ஏற்பட்டு கமினிசமாக மாறினாலும் நிலையான காலத்தால் அழிய முடியாதது என்கின்றனர். அழகியல் படைப்புக்களான பழைமையோ, புதுமையோ காலத்தால் கூட அங்கீகரிக்கப்படும் என்கின்றனர். இந்த வண்டவாலங்களையே உயிர்ப்பின் அரசியல் கோரி நிற்கின்றது. இது இந்த ப+ர்சுவா வர்க்கத்தின் அசல் அரசியல் கோரிக்கையே ஆகும். பெண் சமத்துவப் படைப்பு இல்லாத படைப்புக்கள் ஆணாதிக்கம் சார்ந்ததாக இருக்காது என்கின்றனர். இது அழகியல் தளத்தில் பெண் சார்ந்ததே என்கின்றனர். இப்படி எவ்வளவு மோசடி செய்து வருகின்றனர் இந்த உயிர்ப்பு குழுவினர்!

உயிர்ப்புக் கூறும் பிறிதோர் வாதத்தைப் பார்ப்போம்: “அழகியல் விதிகள் சித்தாந்த வரையறுப்புக்கும், வர்க்க நிலைப்பாடுகளுக்கும் இத்தியாதிகளுக்கும் அப்பாற்பட்ட கலைப்படைப்பின் சொந்த விதிகள் எனலாம்.” என்ற வாதம் இவர்களின் ப+ர்சுவா அரசியலை நியாயப்படுத்துவதை தெளிவாக்குகின்றது. இதற்கு மாஓவின் கருத்துக்களில் பதில் அளிப்பதாயின்:

“மனிதனின் சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? அவை வானத்திலிருந்து விழுகின்றனவா? இல்லை மூளையில் இயல்பாக உள்ளனவா? இல்லை, அவை சமுதாய நடைமுறையிலிருந்து மட்டும் தோன்றுகின்றன. உற்பத்திக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம், அறிவியல் ஆய்வு என்ற மூவகை நடைமுறையிலிருந்து வருகின்றன.” என்ற மாஓவின் கூற்று இவர்களின் பொய்யான மார்க்சிய முகத்தையும் , பூர்சுவா சிந்தனையையும் தோல் உரித்து காட்டுகின்றன.

அழகியல் மனிதனின் உலக நோக்கை மீறி சொந்த விதிகளைக் கொண்டதது அல்ல. மாறாக மனிதன் உலக நோக்கிற்கு உள்ளார்ந்ததே அழகியல். மனிதனின் உலக நோக்க என்பது சமூகம் இரண்டாகப் பிரிந்துள்ளது என்ற எல்லைகள் உட்பட்டதே. ஏனெனில் மனிதன் வாழ வேண்டுமெனின் உழைக்க வேண்டும். உழைப்பு என்பது இன்று சுரண்டப்படுகின்றது. சுரண்டப்படும் சமுதாயத்தில், மனிதனின் சிந்தனையும் இரண்டாகப் பிரிகின்றது. இது மனிதனின் எல்லாத்துறைகளிலும் காணப்படுகின்றது.

இதையொட்டி லெனின் எப்படி விளக்குகிறார் எனப் பார்ப்போம்: “.. சிந்தனை உணர்வு என்பவை உண்மையில் என்ன, அவை எங்கிருந்து தோன்றுகின்றன என்ற கேள்வி கேட்டுக் கொள்வோமேயானால் அவை மனித மூளைகளின் விளைவுகளே என்பதும், மனிதன் இயற்கையின் அதன் சூழலில் உள்ளும் உடலும் வளர்ந்து வருகிற ஒரு விளைவே… இறுதியாக பகுத்தாராயும் போது, மனித மூளையின் விளைவுகளை இயற்கையின் விளைவுகளாகவே இருப்பதனால், அவை இயற்கையின் மற்றெல்லா பரஸ்பரத் தொடர்புகளோடும் முரண்பட்டிருக்கவில்லை.” (அடிக்கோடு நாம்)

மார்க்சிசத்தின் வரலாற்று வளர்ச்சியில்:-

மனிதனின் சிந்தனை என்பது அவன் வாழும் வாழக்கையில் எழுகின்றது. இதனால் இது வர்க்கம் சார்ந்து விடுகின்றது. லெனின் மேல் குறித்த அதே நூலில் அவர் கூறியதைப் பற்றிய விஞ்ஞானத்தில்…. பொருள் முதலவாத அடிப்படைக்கு இணக்கமாகக் கொண்டுவந்து, இந்த அடிப்படை மீது அதை மீண்டும்அழைப்பத அவசியமென மார்க்ஸ் கண்டார். வாழ்நிலையில் இருந்த உணர்வு தோன்றகிறதே அன்றி உணர்விலிருந்து வாழநிலை தோன்றுவதிலலை என்ற பொருள் முதல்வாதம்.. வாழ்வு விசயத்திலும் சமுதாய உணர்வு சமுதாய வாழ் நிலையிலிருந்தே தோன்றுகிறது ..” (அடிக்கோடு லெனின்)

என விளக்கும் இம் மேற்கோள் மனிதனின் உணர்வ வாழ்நிலையில் இருந்துதான் தோன்றுகின்றது என்கிற போது அங்கு வர்க்க அடிப்படை அடிப்படையாகிறது. மாறாக உயிர்ப்பு நிலை நாட்டமுயலும் கலைப்படைப்பு சொந்த முயலும் கலைப்படைப்பு சொந்த விதியைக் கொண்டது என்ற வாதம், உணர்வே வாழ்நிலையைத் தீர்மானிக்கின்றது என்ற கருத்து முதல்வாதக் கோட்பாடேயாகும். கலைப் படைப்பு என்பது வாழ்நழலயில் இருந்து தான் தோன்ற முடியுமே ஒழிய வெறும் உணர்விலிருந்து கலைப்படைப்பு தோன்றுவதில்லை! இதைப் பற்றி லெனின் அதே புத்தகத்தில் மேலும் விளக்கும் போது  “திகைப்ப+ட்டும் புதிர் போல், குழப்படிபோல் தோன்றும், இதை ஆளும் விதிகள் என்ன என்பதை கண்டு பிடிப்பதற்கான ஒரு வழிகாட்டியை, அதாவது  வர்க்கப் போராட்டம் என்னும் தத்துவத்தை, மார்க்சிசம் தருகின்றது.. மேலும் வர்க்கங்களாக பிளவுண்டிருக்கின்ற ஒவ்வோர் சமூதாயத்திலும் அந்த வர்க்கங்கள் வசிக்கும் நிலை, வாழ்க்கை முறை ஆகியவற்றிலானா வேறுபாட்டில் தான் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் வே;கை கிளைத் தெழுகின்றன. என்று விளக்கும் லெனின், உயிர்ப்பின் திரிபு வாதத்தை அன்றே அம்பலப்படுத்தினார். அதன் ஆணி வேர்களை வெட்டி வீழ்த்தினார்.

அழகிய மனிதனின் உலக நோக்கை மீறி சொந்த விதிகளைக் கொண்டது அல்ல. மாறாக மனிதன் உலக நோக்கிற்கு உள்ளார்ந்ததே அழகியல். மனிதனின் உலக நோக்கு என்பது சமுகம் இரண்டாகப் பிரிந்துள்ளது என்ற எல்லைக்கள் உட்பட்டதே. ஏனெனில் மனிதன் வாழ வேண்டுமெனின் உழைக்க வேண்டும். உழைப்பு என்பது இன்று சுரண்டப்படுகின்றது. சுரண்டப்படும் சமுதாயத்தில், மனிதனின் சிந்தனையும் இரண்டாகப் பிரிகின்றது. இது மனிதனின் எல்லாதுறைகளிலும் காணப்படுகின்றது.

உயிர்ப்பு தனது திரிபு வாதத்தை அப்பட்டமாகக் கூறிவிட்டு, அதை அச்சொற் பிரயோகத்தின் முத்திரை குத்துவதென்று கூறி அதை நிராகரிக்க முடியாமல்; தம்மீது அநுதாபத்தைத் திசைதிருப்ப முனையும் அவ் வாசகத்தையும் நாம் பார்ப்போம்.

“இதுபற்றி கேள்வி எழுப்பி விட்டால் போதும் திரிபுவாதிகள், மார்க்சிய விரோதிகள், ஏகாதிபத்திய கைக்கூலிகள் என முத்திரை குத்துவதில் இவர்கள் காட்டும் கவனத்தை வேறு உருப்படியான முயற்சிகள் எதனிலும் காட்ட முடியாதவர்களாகவே உள்ளனர்” என உயிப்பினர் அழுது புலம்புகின்றனர்.

முதலில் இப்படிக் கூறுபவர்கள் நாம் தவறான வகையில் திரிபுவாதிகள் எனக் கூறியிருப்பின் அதைத் தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். ஏதோ தத்துவார்த்த வாதம் நடத்திக் கொண்டிருப்பதாக பீற்றிக் கொள்ளும் உயிர்ப்பு, இதுவரை முன்வைக்கப்ப்டட எமது எந்த கருத்துக்களுக்கும் பதிலளிக்க முடியாமல் இருந்துள்ளனர். பதிலளிப்பின் தமது சொந்தத் தளமே ஆட்டம் கண்டுவிடும் என்ற பயம் இவர்கள் பதிலளிக்க முடியாமைக்கு முக்கிய காரணமாகும். அடுத்து உருப்படியான முயற்சி எதுவும் செய்யமுடியாது உள்ளனர் என கூறும் கூற்று, அடிப்படையில் சரியான மாற்றுக் கருத்தை தமது திரிபுவாத நோக்கின் மேல் வைப்பதைத் தடுக்கும் ஒர் எதிர்விளைவே யாகும்.

உருப்படி என்கின்ற போது நீங்கள் திரிபுவாதத்தை முன் தள்ள, அதை நாம் உருப்படியாக அம்பலப்படுத்தி மார்க்சிச உண்மைகளின் தத்துவத்தை, இந்த வரலாற்றுக் கால கட்டத்தில் நிலைநிறுத்தி வருபவர்களே. மற்றும் உருப்படி என்ற சொல்லின் செயலைக் குறிப்பின், இன்று எமது வரலாறு உங்களையும் உள்ளிட்டு ஒரு தேக்கத்திற்கே நகர்த்தியுள்ளது. நாம் இதை மற்றைய நாடுகளுக்கு விரித்துச் செல்லின், உங்கள் திரிபுவாதக் குரு அ.மார்க்ஸ் உருப்படியாக இந்தியப் பரட்சிக்கு என்ன செய்கிறார்? அவர் புரட்சிக்கு எதிராக எதிர்ப் புரட்சியை நிலைநாட்ட முனையும் அதே நேரம், புரட்சகர பணியில் கருத்தியியல் தளத்தில் எம் நிலையைக் கொணடவர்கள், பல தியாகங்களுடன் நாள்தோறும் போராடி வருகின்றனர்.

திரிபுவாதிகள், மார்க்சிய விரோதிகள்… எனக் கூறுவது தவறானது என்றதன் மூலம் திரிபுவாதமோ, மார்க்சிய விரோதப் போக்கோ, ஏகாதிபத்திக் கைக் கூலித் தனமோ மார்க்சிசத்தின் பெயரைச் சொல்pக் கொண்டு இருக்க முடியாது என்கின்றனர். அதாவது உயிர்ப்பு அங்கத்தவர்கள் இங்கு எமக்குக் கூறியதைப் போல், ஒருவர் மார்க்சிசவாதி எனச் சத்தியம் செய்யின் பின் அங்கு அவரின் அரசியல் விமர்சனம் அற்ற மார்க்சியவாதி ஆகிவிடுகின்றது என்கின்றனர். மார்க்சிசத்தில் எப்பொழுதும் எல்லா விதமான போலிகளும் இருப்பர். இதை லெனின் சோசலிசடும் சித்தாந்தமும் … என்ற நூலில் என லெனின் இன்றைய எமது நிலையை சரியாகப்படம் பிடித்துக் காட்டியதுடன், எமது செயலையும் அதன் உருப்படித் தனத்தையும் அங்கீகரிக்கின்றார். லெனின் கூடத் திரிபுக்கு எதிராக விட்டுக் கொடுக்காது போராடியவரே. ஆவர் திரிப்பவரைத் திரிபுவாதி என்றே கண்டித்தார். அடிக்கட்டுமானம் மேற்கட்டுமான உறவின் நோக்கில் பிரச்சினைகளை ஆராயாது நிராகரித்தபடி தம்மை மார்க்சியவாதி எனப் பிரகடனம் செய்யின் அவர்களை லெனின் திரிபுவாதி என்றே கூறி அம்பலப்படுத்தினார். இதை நாம் கூறின் எப்படி முத்திரை குத்தலாக மாறிவிடும்? ஆம், திரிபுவாதி என்பது கோட்பாட்டு ரீதியிலானது. தனி நபர் என்ற ஒரு ஜடமல்ல. கோட்பாட்டு திரிபு எனின் அது திரிபுவாதம் தான். அதை எப்படிச் சொல்லி ஒப்பாரி வதை;தாலும் மாற்றிவிட முடியாது.

அடுத்து உயிர்ப்பு “நம்பவர்களான சிவத்தம்பி, நுஃமான் என்பவர்கள், தமிழகத்தில் அ.மார்க்ஸ் போன்றோர் இச் (இச் என்பது நவீன மார்க்சிய நிலைகளை ஏற்வர்களை - இது நாம்) சுயவிமர்சனப் போக்கை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள்.” என மாபெரும் கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர்;. சிவத்தம்பி நுஃமான் பற்றி அ.மார்க்ஸ் தனது ஒரு வெளியிட்டில் இப்படி கூறியதுடன். அதை வாந்தி எடுத்து விட்ட உயிர்ப்பு எமது மண்ணில் பலர் தியாகம் செய்த போராட்ட வரலாற்றையே மறந்து போனார்கள். சிவத்தம்பி, நுஃமான் பற்றி அ.மார்க்ஸ்க்கு தெரிந்ததெல்லாம் தனது கருத்தை நியாயப்படுத்த ஏதாவது இருந்தது என்பது மட்டுமேயாகும். அந்த வகையில் அ.மார்க்ஸ் ஜெர்மனியில் தமிழ்ப் பெண் ஒருவர் ‘லெஸ்பியன்’ என இந்தியாவில் கட்டுரை ஒன்றை எழுதினார்.

முதலில் அப் பெண் லெஸ்பியன் அல்லர். வெறும் வறட்டுத் தனமான குருட்டுப் பார்வையை மட்டும் கொண்டு தனது திரிபுவாதத்திற்கு சேவை செய்யும் பார்வை கோளாற்றில் எழுந்ததே இக்கட்டுரை.

இதுதான் சிவத்தம்பி, நுஃமான் வழிகளிலும் ஏற்பட்டது எம்மண்ணில் நாம் இன்னும் ஜனநாயகத்தை இழந்து உள்ளோம் என்றால், அதில் சிவத்தம்பியின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது. எதிர் புரட்சித் தன்மையும் வாய்ந்தது. எம் மண்ணில் எழுந்த தன்னியல்பான பல ஜனநாயகப் போராட்டங்களில், முக்கியமாக பெரிய போராட்டத்தின் தன்னியல்பை இந்த மாதிரி படித்த புத்திஜீவிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி, அப் போராட்டத்தை போராடக் கூடாது என்று தடுத்து அழித்தவர்கள். அதற்கு நிறையவே பல சாட்சிகளாக இறந்தவர்களும் உயிருடன் உள்ளவர்களுமாக ஒரு பெரும் வரலாறே சாட்சியாக உள்ளது. பல பேரின் மரணங்களுக்கு பின் இந்த சிவத்தம்பியின் வில்லங்கமான தலையீடும், அதைத் திட்டமிட்டே காட்டிக்கொடுத்த வரலாற்றுத் துரோகத்தனமும் இவரைச் சார்ந்ததாக உள்ளது. நாள் தோறும் நிறம் மாறிவிடும் ஒரு பச்சோந்தியாக உயிர் வாழும் ஒரு தசைப்பிண்டமே சிவத்தம்பி.

நுஃமான் பற்றி நாம் அவரின் நிலைப்பாடுகளை அதிகம் அறிய முடியாததால் கருத்துக் கூறுவதை மடடுப்படுத்துகின்றோம். இருந்த போதும் அண்மையில சந்திரி;காவை முந்திக் கொண்டு ஒரு தீர்வுத் திட்டத்தை கொஞ்ச புத்திஜீவிகள் முன் வைத்தனர். சமர்-16ல் அதற்கு விமர்சனமும் உண்டு. அதில் நுஃமானும் கையெழுத்து இட்டுள்ளார். ஆம் நுஃமானின் அரசியல் இந்த பேரிவாத அரசை பொத்திப் பாதுகாக்கும் வகையில். அதன் நோக்கில் இந்த ஏகாதிபத்திய நோக்கத்தை நிலை நாட்டுவதே ஆகும்.

இந்த மாதிரி சுயவிமர்சனம் செய்த அ.மார்க்ஸ் பற்றி நாம் அவர்களின் வெளியீடுகளை விமர்சிக்கும் பொழுது தெளிவாக அம்பலப்படுத்த முடியும். அ.மார்க்ஸின் கருத்துக்களே உயிர்ப்பின் கருத்தாகும். உயிர்ப்பினருக்கான விமர்சனமே அ.மார்க்சுக்கும் ஆனதாகும். நாம் மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனைக்கு போராடும் போது மார்க்சிய அடிப்படை உண்மைகளை சார்ந்துள்ளோhம் ஆனால் உயிர்ப்பு அ.மார்க்ஸ், சிவத்தம்பி, நுஃமானைப் போற்றும் போது, யாரோ ஒங்காளித்து வாந்தி எடுத்துவிட்டதை அள்ளி வைத்துக் கொண்டு அதில் எந்த மார்க்சிச உண்மைகளையும் நிலை நாட்ட முடியாது போய் உள்ளனர்.

ஒரு நவீன தத்துவத்தை மாக்கிசத்திற்கு பிரதியீடாக நிலை நாட்ட உயிர்ப்பு முனைந்தால், அவர்களுக்கு நாம் கூறும் ஆலோசனை முதலில் உங்கள் கருத்தை நாம் முன்வைக்கும் கருத்தின் மீது நிலை நாட்டுங்கள்! அப்படி நிலை நாட்டின் அல்லது திரிப்பின் அதை மார்க்சியம் எனப் பெயரிடாதிருங்கள். புதிய பெயரை மார்க்சியத்தில் இருந்து வேறுபட்ட தன்மையை தெளிவாக முன்வையுங்கள். இதுதான் குறைந்த பட்ச நேர்மையாகும். இல்லாத வரை அது மோசடியுடன் கூடிய கபடத்தனம் கொண்ட சதியாகும்!

இந்த சதி கடந்த மார்க்சிய வரலாற்றில எப்ப தோன்றின, கோரிய என்பதை அடுது;த சமர் இதழ்களில் உங்கள் சுய தெடலை தூண்டும்   வகையில் ஒரு கட்டுரையைத் தருகின்றோம்.

“மனிதன் மீது வெளிப்புற உலகத்தின் தாக்கங்கள் அவனது மூளையில் பதிந்தே அங்கே உணர்ச்சிகள், சிந்தனைகள், இயப்புணர்ச்சிகள், விருப்பாற்றல்களாக சுருக்கமாகக் கூறுவதென்றால், கருத்தியலான ஆர்வங்களாக – பிரதிபலிக்கிற்னறன.”

லுட்விக் ஃபபியர் பாஹ{ம் மூலச் சிறப்புரை ஜெர்மன் தத்துவ ஞானத்தின் முடிவும்.