கண் சிவந்திருந்தார்கள்
ரிஷிகள், மாமுனிகள்
டாட்டாக்கள், பிர்லாக்கள்
அம்பானிக்கள்
வே(தா)தாங்கள் ஓதப்பட்டன

 

ஆயிரக்கணக்கில்
புஷ்பக விமானங்கள்
லக்ஷத்தில் தேவ குமாரர்கள்
அசுரர்களின் கோடித்துணிக்கோ
ஏழாயிரத்து முன்னூறு கோடி ஒதுக்கீடு

கல்வியை, மருத்துவத்தை,
போக்குவரத்தை – எதையுமே
தராதவர்கள் நாகரீகத்தை
கற்றுக்கொடுக்கப் போகிறார்களாம்

ஆம் இது நாகரீகமற்றவர்களின் மீது
நாகரீகக்கோமான்கள் தொடுக்கும்
போர்

வேண்டாமென்றால் விடுவதாயில்லை
உன் உயிரைக்கொடுத்தேனும்
நாகரீகம்
வாங்கித்தானாகவேன்டும்
முதல் பலி நியாம்கிரியின்
அரக்கத்தலைவன்

நியாம்கிரி அரக்கன்
கொல்லப்படபோகிறானாம்
அசுர வாரிசுகள்
கலங்கினார்கள் ஆனால்
ஒதுங்கவில்லை
தவித்தார்கள் ஆனால்
தவிக்கவிடவில்லை
போரிட்டு செத்தார்கள்
செத்துக்கொண்டிருக்கிறார்கள்
ஆனால் சாகவிடவில்லை………….

பாசிச பேய்கள்
கர்ப்பிணியின் வயிற்றை
குறிவைக்கின்றன

அட முட்டாள்களே!
உங்களுக்குத்தெரியுமா
இதோ இந்த
இந்தக் கருக்குழிதான்
உங்களுக்கு சவக்குழியென்று

 

பாட்டன்,முட்டான்
அப்பன், மாமன், ஆத்தாள்,
பாட்டி, பூட்டி, அத்தை
எல்லாம் எதற்கு ஏந்தினார்களோ
அதற்காக
அதை
ஏந்த காத்திருக்கிறது
கருப்பையில்
சிசு

நாளைய வாரிசுகள்
காத்திருக்கிறார்கள்
அவர்கள் கொண்டு செல்வார்கள்
அரக்கத்தலைவனை யாரும் நெருங்க
முடியாத இடத்திற்கு

அப்போது
அவர்கள்
உங்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள்
எது நாகரீகமென்று

தொடர்புடைய பதிவுகள்

 http://kalagam.wordpress.com/