எது காவாலித்தனம்? லீனாவின் பேச்சாளராக திடீரென மாறிவிட்டார் சோபாசக்தி. புலிகளின் பேச்சாளர் தமிழ்ச்செல்வன் மாதிரி உளறுகின்றார். உன்னை மிஞ்சிய காவாலித்தனமா, ம.க.இ.க.வின் அணுகுமுறை. அன்று பாரிசில் நீ ஒட்டிய துண்டுப்பிரசுரத்தை தன் கடையில் இருந்து அகற்றியதுடன், அருகில் இருந்தவற்றையும் அகற்றிய போது, நீ செய்த காவாலித்தனத்தைப் போல் ம.க.இ.க. செய்யவில்லை. அன்று துண்டுப்பிரசுரத்தை ஓட்ட இருந்த உன் உரிமையைப் போல், அதைக் கிழிக்கும் உரிமை அவர்களுக்கு இருந்தது. உன் ஜனநாயகம் போல். இந்தளவுக்கும் அவர்கள், உனக்கு நன்கு தெரிந்தவர்கள். அது நடந்த சில நாட்களின் பின், நீ என்ன செய்தாய்? ஏன் கிழித்தாய் என்று, நியாயம் கேட்கச் சென்றாய், அவர்கள் தங்கள் பக்க நியாயத்தைச் சொன்னார்கள். சில மணிநேரம் கழித்து, அந்தக் கடையின் கண்ணாடியை அடித்து உடைத்தாயே, இதுதான் காவாலித்தனம்;. அதன் பின் அதை தவறு என்று, இன்றுவரை சொன்னது கிடையாது. அந்த கண்ணாடிக்கான பணத்தையோ, அதை மாற்றிய கூலியையே நீ கொடுத்;தது கிடையாது. அவர்கள் நண்பனாக பழகிய நீ, இப்படி செய்துவிட்டாயே என்று சொல்லி பொலிசுக்கும் கூட செல்லவில்லை.

இதைக் கலகம் என்றாய். ம.க.இ.க. கேள்வி கேட்டதை காவாலித்தனம் என்கின்றாய். பெண் என்றால், அது பெண்ணியம் என்று இன்று நீங்கள் உளறுவது போல்;. இதுதான் கலகம் என்றீர்கள். இப்படி காவாலித்தனம் கலகமாகியது.

 

ம.க.இ.க. என்ன செய்தது. தங்கள் எதிர்ப்பை கூட்டத்தில் முன்வைக்கின்றனர். துண்டுப்பிரசுரத்தை வெளியிடுகின்றனர். தங்கள் கேள்வியை எழுப்புகின்றனர். தொழிலாளர் வர்க்க தலைவர்களை மேட்டுக்குடி சீமாட்டிகள், தங்கள் பாலியல் வக்கிரம் ஊடாக எள்ளி நகையாடியதை அடுத்தே இந்தப் போராட்டம் நடக்கின்றது. இது உன் நடத்தையைப் போல் காவாலித்தனமல்ல. இந்த இடத்தில் ம.க.இ.க. வின் கேள்வியை முன்வைக்க அனுமதிக்கப்படுகின்றது. ம.க.இ.க போராட்டத்தின் விளைவு. அப்படி கேள்வியை எழுப்பத் தொடங்க, சீமாட்டி அவர்கள் மேல் வன்முறையை ஏவுகின்றார். இங்கு சீமாட்டி தான், தன் காவாலித்தனத்தை ஏவுகின்றார். ம.க.இ.க போராட்டமும், அதைத் தொடர்ந்து கருத்தை முன்வைக்க அனுமதித்து, அதை மறுக்கும் அராஜகமும் இங்கு அரங்கேறுகின்றது. இதன் பின் கூட்டத்தை ம.க.இ.க குழப்பிவிடவில்லை. அவர்கள் தம் எதிர்ப்பை வெளிப்படுத்தியபடி அங்கிருந்து வெளியேறுகின்றனர். இது தான் நடந்தது. இது போராட்டமே ஒழிய, காவாலித்தனமல்ல. 

 

இதைத்தான் காவாலியான சோபாசக்தி "உன் கேள்விக்கு காவாலித்தனம் என்று பெயர் வை!" என்கின்றார். தான் செய்தது கலகம், பெண் சொன்னால் பெண்ணியம். இது தான் மார்க்சியம் என்று சொல்கின்ற இழவு. இப்படி புலம்பும் அடையாள அரசியல்.

 

இப்படிப் போராடுவது தவறு என்கின்றனர் "ஜனநாயக" பைத்தியம் முற்றிப் போன லூசுகள். ஈராக்கில் புஸ் மேல் செருப்பை எறிந்தவனும், சிதம்பரம் மேல் செருப்பை எறிந்தவனும் என்ன "காவாலிகளா". ஏகாதிபத்திய தலைவர்கள் நடத்தும் கூட்டங்கள் எங்கும் மக்கள், போராடுகின்றனரே, அவர்கள் என்ன "காவாலிகளா" அங்கு இவர்களுக்கு எதிராக வன்முறை மக்களால் ஏவப்படுகின்றது. இதைக் கூட இந்த இடத்தில் ம.க.இ.க. செய்யவில்லை. செருப்பைக் கூட அவர்கள் கழற்றி எறியவில்லை.   

 

சரி "ம.க.இ.க" கேள்வி ஆணாதிக்கம் சார்ந்தது என்று, உங்கள் பெண் அடையாளம் சார்ந்த மொழி அரசியல் கருதினால், அவர்கள் அதை முழுமையாக சொல்லிவிட்டு பதில் அளித்து இருக்கவேண்டும். லீனாவுக்காக அதை பெண்ணிய மொழியில் மொழி பெயர்க்க, சோபாசக்;தியை கூப்பிட்டு இருக்கலாம். நீங்கள் அவர்களை பேச அனுமதித்த பின், வன்முறை மூலம்  மறுத்தீர்கள். பேசவிட்டு அவர்களின் அந்த "ஆணாதிக்கத்தை" உங்கள் பெண் அடையாள அரசியல் மூலம் தோலுரித்து இருக்கவேண்டும்;. ஆனால் பெண் அடையாளத்தை பெண்ணியமாக காட்டி கொக்கரிக்கும் காவாலி, உன்னைப்போல் வன்முறையில் ஈடுபடுகின்றது.      

 

இப்படியிருக்க, இதற்கும், தொழிலாளியை நான் தாக்கவில்லை என்ற பிரபாகரன் பேட்டி போல், தமிழ்செல்வன் உளறல் போல், லீனாவின் பேச்சாளராக மாறி உளறுகின்றார். ஒரு காவாலி "காவாலித்தன"மாக பேசுகின்றார். நீ செய்தால் அது கலகம், நியாயம். தொழிலளார் ஊதியத்தை கேட்டால் அடி உதை. கடைக்காரன் பதில் சொன்னால், கண்ணாடி உடைப்பு. இது தான் காவாலித்தனம்;. எந்த அரசியலுமற்ற ரவுடித்தனம்;. இதை ம.க.இ.க செய்யவில்லை.  அவர்கள் தங்கள் எதிர்ப்பு போராட்டத்தின் பின் வெளியேறுகின்றனர். இதை பெண் அடையாளம் ஊடாக பூசுவது பெண்ணியத்தை கருவறுப்பது.

 

உங்கள் பெண் அடையாளப் பெண்ணியம் தான் என்ன!? பெண் பேசினால் பெண்ணியம்! இதை ஆண் மறுத்தால் ஆணாதிக்கம்;! இதுதான் உங்கள் அடையாள பெண்ணிய உள்ளடக்கம். தலித்தியம் சாதிய அரசியல் போல் இதுவும். உள்ளடக்கம் என்ன என்பதல்ல. 

 

1. பெண் விடுதலை பற்றிய உங்கள் அரசியல் தான் என்ன?

 

2. மேட்டுக்குடி பெண்ணியத்தையும் தொழிலாளர் வர்க்க பெண்ணியத்தையும், எப்படி எந்த விமர்சனத்துடன் வேறுபடுத்துகின்றீர்கள்.

 

3. மேட்டுக்குடி விபச்சாரத்தை எப்படி இனம் காண்கின்றீர்கள். அது என்ன பெண்ணியமா? அது என்ன பெண் உரிமையா? தனிமனித சுதந்திரமா?

 

இப்படி உங்கள் அடையாளப் பெண்ணியமே சூக்குமமாக இருக்க, "ஒரு கம்யூனிஸ்டாக எனக்குப் பெருத்த அவமானத்தைத் தரக்கூடிய குற்றச்சாட்டு அது" என்கிறார் சோபாசக்தி. நீ எல்லாம் ஒரு கம்யூனிஸ்டா!? ஒரு கம்யூனிஸ்டடு தொழிலாளி வர்க்கத்துக்கு இதன் வர்க்கப் புரட்சிக்காக போராடுபவன். அவன்தான் கம்யூனிஸ்ட். நீ எங்கேயும், அப்படி போராடுபவனல்ல. பொதுத்தளத்தில் அரசியலற்ற அடையாள எதிர்ப்பை வெளியிடுவதன் மூலம், அடையாளத்தை தக்கவைக்கும் தந்திரத்தைத் தாண்டி மக்கள் அரசியல் கிடையாது. இதுதான் உங்கள் நீங்கள் தக்க வைக்கும் அடையாள அரசியலாக இருக்கின்றது. லீனா தான் ஒரு பெண் என்ற அடையாளம் மூலம், தான் பேசுவது பெண்ணியம் என்ற அடையாள உத்தியைத்தான் இங்கு முன்நிறுத்துகின்றார். இதைப் பெண்ணியம் என்று விளக்கம் கொடுக்கின்றார் "ஒரு கம்யூனிஸ்டாக" இருக்கும் சோபாசக்தி. இப்படி நிறையப் பேர் தம்மை, அடையாளம் ஊடாக  அடையாளப்படுத்துகின்றனர். இப்படி அடையாளப்படுத்துவதை, பெண்ணியம், வர்க்க அரசியலாக காட்டுகின்றனர். இதன் அரசியல் உள்ளடக்கம் என்ன? ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் தன்னார்வ அரசியல் போல், இதுவும் அடையாள அரசியல். அடையாளத்தை அரசியல் ரீதியாக விரித்து பேசுவதில்லை. பெண் அடையாளம் மூலம், சாதி அடையாள அரசியல் மூலம், எதை உளறினாலும் பெண்ணியம் தலித்தியம் என்று நீங்கள் கூறுவது போன்றது தான், சோபாசக்தி தான் "ஒரு கம்யூனிஸ்ட்" என்பது.

 

புலியிலிருந்த வரை, புலியெதிர்ப்புக்குள் எல்லாம் இவை ஒளித்துக்கிடந்தது. இப்படி  அடையாள "ஜனநாயகம்" பேசியவர்கள், புலியின் அழிவுடன் பேரினவாதத்தையே ஜனநாயகம் என்றனர். இப்படி பெண் அடையாளம், தலித் அடையாளம், பெண் விடுதலையாக தலித் விடுதலையாக காட்டுகின்றனர். புலியின் அழிவுடன் பேரினவாதத்தை தொழுவது தான் ஜனநாயகமாகிப் போனது. நீங்கள் தலித்தியம் பின்நவீனத்துவம் என்று, இந்தியாவின் மார்க்சிய விரோதிகளின் சரக்கை இறக்கி, கம்ய+னிசத்துக்கு மாற்றாக கடை பரப்பினீர்கள். இந்திய இலங்கை ஏகாதிபத்திய நலன்கள், இதன் மூலம் நிறைவு பெற, அதை நம்பி அதன் பின் ஒடியவர்கள் இன்று மகிந்தாவுக்கு கடை விரிக்கின்றனர். இந்த வகையில் எதிர்ப்புரட்சி அரசியல்தான், இதன்பின் இருந்து வந்துள்ளது. 

 

பேரினவாத மகிந்த அரசு, புலம்பெயர் அரசியல் தளத்தில் இரண்டு பாரிய நிதியை வழங்கியது. ஒன்று தனக்கு நேரடியாக வேலை செய்பவர்களுக்கானது. இரண்டாவது நிதி இந்திய இலக்கிய வட்டத்தை தனக்கு ஏற்ப இயங்க வைக்க புலம்பெயர் அடையாள இலக்கியவாதிகளுக்கு வழங்கியது. இப்படித்தான் இந்திய அடையாள இலக்கியவாதிகள் பலரை, பேரினவாதம் புலம்பெயர் அடையாள இலக்கியவாதிகளுக்கு ஊடாக உள்வாங்கியது.

 

இது ஒருபுறம்; மறுபக்கத்தில் இந்த பெண் அடையாள அரசியலைக் காப்பாற்ற புறப்பட்டவர்தான், நோர்வேயில் இருந்து வினவில் (http://www.vinavu.com/2010/04/17/pala-rising/) விவாதித்த விமல்; என்பவர். அவர் வேறு யாருமல்ல. உயிர்மெய் இணையத்தைச் சேர்ந்தவர் தான். "எவரது முதுகையும் சொரிந்து கொடுக்க நகம் வளர்க்கவில்லை நான்"   (http://www.uyirmei.com/2010/04/blog-post_15.html) என்ற ஆதவன் தீட்சண்யா என்ற போலிக் கம்யூனிஸ்டும், நக்சல்பாரிகளை ஒழிக்க துணைநிற்பவரும், இலங்கை பேரினவாத அரசின் எடுபிடியாக இருப்பவரின் கட்டுரைகளை தங்கள் தளத்தில் வெளியிட்டவர். அத்துடன்  "ம.க.இ.கழகத்தினரின் அராஜக கம்யூனிஸம்..!" என்ற உண்மைத் தமிழனின் கம்யூனிச விரோதத்தையும் பிரசுரித்துக் கொண்டு, சோபாசக்தி அடையாள அரசியல் கட்டுரைகளையும், தங்கள் கம்யூனிச விரோத உணர்வுடன் பிரசுரித்துக் கொண்டு தான் வினவில் எழுதுகின்றார். இதன் மூலம் எதை சொல்ல வருகின்றார். அடையாள அரசியல் மூலம் "பெண்ணியம்" பேசும் மேட்டுக்குடி "பெண்ணியத்தைக்" காப்பாற்ற, இதை நிறுத்திவிட்டு இராமேஸ்வர மீனவர்கள், இலங்கை மீனவர்கள் பற்றி கதைக்க வாருங்கள் என்கின்றார். குறுக்குவழியில் முன்வைக்கும் பெண் அடையாள உத்திகள். 

 

2.லீனாவும், அ.மார்க்ஸ்-சோபாசக்தி நடத்திய தொழிலாளர் விரோதக் கூட்டம்  

 

1.தொழிலாளர் விரோத உணர்வுடன் கூடும் சோபாசக்தியும் லீனாவும்

 

தொடரும்

பி.இரயாகரன்
22.04.2010