இதற்கு அமைய, பாலியல் அம்சத்தில் சமூக சீராழிவிலான தனிமனித ஒழுக்கக்கேடு கிடையாது என்ற கோணத்தில், சிறிரங்கன் மார்க்சையும் காதலையும் காட்டுகின்றார். பாலியல் என்பது சமூகம் சார்ந்தல்ல, தனிமனிதனின் பாலியல் சார்ந்து சுதந்திரமானது, தூய்மையானது, அன்பாலானது என்ற காட்டமுனையும் போக்கு அபத்தமானது. சமூகத்ததை கடந்து, அராஜாகவாத கோட்பாட்டை இது முன்தள்ளுகின்றது.

சமூகத்தைக் கடந்து தனிநபர்களின் பாலியல் நடத்தைகளை எல்லாம் நியாயப்படுத்துகின்ற, அதன் அராஜாகவாத சீராழிவுகள் மூலம் சமூகத்தை வழிகாட்டும் நடத்தைகளாக காட்டுகின்றனர். சோபாசக்தி சமூகம் பற்றியும், குடும்ப வாழ்க்கை பற்றியும், பெண்கள், குழந்தைகள், உழைப்பு பற்றி கொண்டிருக்க கூடிய கண்ணோட்டம் ஊடாக, பெண்ணை பாலியலுக்காக மட்டும் அனுகுகின்றவர். ஆண் பெண் பாலியல் உறவு என்பது, சமூகமாக இயங்கும் போக்கில் ஒரு  அம்சம். அது சமூகமாக இயங்க உழைத்து வாழ்வதைக் கோருகின்றது. சமூகமாக இருக்க குழந்தைகளை பெறவும், அவர்களை வளர்க்கவும் கோருகின்றது. இப்படி சமூக உயிரியாக வாழும் வாழ்வில், பாலியல் ஒரு அம்சமாகும்;. இதற்கு வெளியில் அதை நுகர்வாக, வேட்கையாக, தனிச்சொத்துரிமை உள்ளடக்கத்தில் அனுகின்ற போது, அது பாலியல் சீராழிவாகும்.

 

சமூக உயிரியாக சேர்ந்து வாழ்வதை மறுக்கின்ற பாலியல் நடத்தைகள், தனிமனித சுதந்திரத்தின் பெயரில், தங்கள் சொந்த பாலியல் தெரிவின் பெயரில் விபச்சாரமாகவே அரங்கேறுகின்றது. ஆணாதிக்க அமைப்பில் வாழும் எல்லா ஆண்களையும், பெண்களை புணரவே வழிகாட்டுகின்றது. இந்த புணர்வை செய்ய, எல்லாப் பெண்களையும் காதலிக்க ஆண் தயாராக இருக்கின்றான். உலகமயமாக்கல் நுகர்வை முதன்மைப்படுத்த, பெண்ணை வரைமுறையின்றி நுகர்வதை சந்தை வழிகாட்டும் நெறியாகின்றது. மறுதளத்தில் அது பெண்ணையும் நுகரத் துண்டுகின்றது. இந்த வகையில் பாலியல் நுகர்வு, விபச்சாரத் தளத்தில் இயங்குகின்றது. இதற்காக காதலிப்பது முதல் தன்னை முதன்மைப்படுத்தி காட்டி புணர்வது வரை, பாலியல் நுகர்வு விபச்சாரமாக மாறிவிட்டது. இதுவே பூர்சுவா மேட்டு குடி மத்தியில் சுதந்திரம், தனிமனித விருப்பு என்ற கோட்பாட்டுக்குள் தன்னை நியாயப்படுத்துகின்றது.

 

இது அராஜகவாத கோட்பாட்டுத் தளத்தில், தன்னை புதைத்து மூடிமறைத்தும் காட்ட முனைகின்றது. அராஜகவாத கோட்பாட்டு மூலம் நியாயப்படுத்தும் தன் பாலியல் நுகர்வு விபாச்சாரத்துக்கு, அராஜாகவாதத்தை மறுத்து இயங்கிய மார்க்சை காட்ட முனைகின்றனர்.  இதற்கு எற்ப சிறிரங்கன் மார்க்சை எடுத்துக் காட்ட முனைகின்றார்.

 

சோபாசக்தி பாலியல் பற்றி கொண்டிருக்கும் கண்ணோட்டம், சமூக உயிரியாக ஆண்பெண் சேர்ந்து வாழ்வதை மறுப்பதாகும். மாறாக பெண்ணை இணக்கத்துடன் புணர்வதுதான், அவர் பாலியல் பற்றி கொண்டிருக்கும் அதிகபட்சமான ஒரு நிலைப்பாடாகும். பெண்ணை இணங்க வைப்பது எப்படி? இங்கு அவரைப் பொறுத்தவரையில் தன் கலை இலக்கிய ஆற்றல் முதல் நிர்பந்தித்தல் தான் அவரின் வழிமுறை. 

 

அவரின் கலை இலக்கியம் என்பது சமூகத்தை மாற்றுவதை முன்னிறுத்தி, படைப்பதை அது மறுதளிக்கின்றது. சமூக மாற்றத்தை முன்னிறுத்தி, அவரோ அவரின் கருத்துகளோ  இயங்கவில்லை. தன்னை முன்னிலைப்படுத்தி இயங்கும் படைப்பு, அதைக் கொண்டு தனது பாலியல் தேவை பூர்த்திசெய்யும் எல்லைக்குள் அது சீராழிந்துவிட்டது. தன் சீராழிவுக்கு மார்க்சைக் உதாரணம் காட்ட முனைகின்றனர். இதை இலகுவாக புரிந்து கொள்ள, உதாரணமாக புலிகள் ஒரு லட்சியத்துகாக போரடியவர்கள், தங்கள் சுயநலத்துக்காக  லட்சியத்தை பயன்படுத்துவராக மாறி சீராழிந்து அழிந்தனர். இது போல் சோபா சக்தியின் கலை இலக்கியமும். அவரின் தனிமனித பாலியல் நடத்தைக்கு பெண்ணை இணங்க வைக்க, கலை இலக்கியம் அவருக்கு உதவுகின்றது. இதற்காக அவர் கலை இலக்கியத்தை பயன்படுத்துகின்றார். அவரின் பாலியல் நடத்தைகள், தேவைகளையும் இந்த கலை இலக்கிய உலகின் ஊடாவே நடக்கின்றது. அதற்காக அவர் பெண்களை அனுகுகின்றார்.

 

இது போன்று பாலியல் நடத்தை பல தளத்தில் உள்ளது. இது தன்னளவில் உள்ளவரை, இந்த சீரரிழிவுவாதிகளின் நடத்தைகளை இட்டு நாம் அக்கறைப்படுவது கிடையாது. இந்த நடத்தைகளுடன் இதை நியாயப்படுத்தி மக்களிடம் செல்ல முடியாது. உண்மையில் அது அவர்களின் நோக்கமும் கிடையாது. சமூக உயிரியாக வாழும் மனிதன், தனிமனித அராஜாகவாத ஒழுக்கக் கேட்டை எற்றுக்கொள்வது கிடையாது.

 

ஆனால் இதன் மூலம் பெண்ணை நுகர உள்ள வரம்பு, விதம் விதமாக பெண்ணை அவளின் இணைக்கத்துடன் நுகர இது அனுமதிப்பதில்லை. இதனால் இதை சமூக விடுதலைக்குரிய ஒன்றாக காட்ட முனைகின்றனர். பெண்ணை தங்கள் பாலியல் நடத்தைக்கு தயார்படுத்த, மார்க்ஸ்சை உதவிக்கு அழைக்கின்றார். இதன் மூலம் என்ன சொல்ல வருகின்றனர், கம்யூனிஸ்கட்சியில் ஆண்ணும் பெண்ணும் சமூக உயரியாக சேர்ந்து வாழது பாலியலில் ஈடுபட முடியும், இதற்கு  காதல் போதும் என்கின்றனர். பாலியல் ஈடுபடக் காதல், இதைத்தான் சோபாசக்தி மார்க்ஸ் மூலம் சொல்ல முனைந்த செய்தி.

 

பாலியல் அராஜகவாதத்தை மார்க்சின் பெயரால் நியாயப்படுத்துகின்றனர். இதற்கு மார்க்ஸ்சை உதாரணம் காட்டும் சோபாசக்திக்கு, சிறிரங்கன் துணையாக விளக்கம் கொடுக்க முனைகின்றார்.      
 
இப்படித்தான் சோபாசக்தி தன் சீராழிவான பாலியல் நடத்தைகளுக்கு, மார்க்சை துணைகழைத்தார். சிறிரங்கன் "சோபாசக்தியினது குரல் நியாயமென்பது எனது வாதம்" என்கின்றார். வேடிக்கைதான்.

 

சிறிரங்கன் ஹெலேனா டெமுத் மற்றும் மாhக்ஸ் தொடர்பு பற்றி தான் அறிந்ததை சொல்வது வேறு. ஆனால் சோபாசக்தி சொன்னது நியாயமென்பது, முற்றிலும் தவறானது. அது சோபாசக்தியின் நுகர்வு பாலியல் சீரழிவுக் கண்ணோட்டத்தை நியாயப்படுத்துவதாகிவிடுகின்றது.

 

சோபாசக்தி தன்னுடை சீராழிவான பாலியல் நடத்தைக்கு தான், மார்க்சைக் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு என்று காட்டவெளிக்கிட்டவர். இந்த இடத்தில் பாலச்சந்திரன் அதற்கான ஆதாரத்தைக் கேட்டவர். பாலச்சந்திரன் கேட்டது மிகச் சரியானது. இதற்கு சோபாசக்தி ஆதாரம் எதையும் இதுவரை வைக்க முடியவில்லை. அவர் காட்டிய  "அன்புள்ள டாக்டர் மார்க்சுக்கு.." என்ற தலைப்பில் உள்ளடக்கமும், இதன் நோக்கமும் மார்க்சிய எதிர்ப்பை அடிப்படையாக கொண்டது. இப்படி லீலா ரௌபாத்தத்தின் நூல் முதல் அதை மொழி பெயர்த்தவர்கள், மார்ச்சியத்தை எதிர்ப்பதை அடிப்படையாக கொண்டவர்கள். இதை முதலில் சொன்ன யமுனா ராஜேந்திரனோ மார்க்சிய விரோதி. இங்கு இவர்களின் நோக்கம் மார்க்சியத்தை எதிர்க்க, மார்க்ஸ் பற்றி ஒரு விவகாரத்தை முன்வைக்கின்றனர் அவ்வளவுதான். அதற்கு அவர்கள் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. மார்க்சின் நடத்தையைக் காட்டி, மார்க்சியத்தை சேறடிப்பதே அவர்களின் நோக்கம்.

இங்கு இந்த விடையம் இப்படி இருக்க, இதை சோபாசக்தி தன் சொந்த பாலியல் நடத்தையை நியாயப்படுத்த இதைப் பயன்படுத்துகின்றார். இங்கு இவர் இதை ஆதாரமற்ற அவதூறு வடிவத்தில், மார்க்சிய விரோதிகளிமிருந்து இதை எடுத்து முன்வைக்கின்றார். இவரும் இங்கு வர்க்க விடுதலைக்காக போராடுவது பற்றி கருசனையில் இருந்து, இதை முன்வைக்கவில்லை. தன் பாலியல் நடத்தையை நியாயப்படுத்த இது உதவம் என்பதால்,  இதை முன்வைக்கன்றார். இந்த வகையில்தான் "சோபாசக்தி ஹெலேனா டெமுத்துக்காகத் தனது கொரில்லா நாவலை அர்பணித்திருக்கிறார்" இதன் மூலம் தன் பாலியல் ஒழுக்கக்கேட்டுக்கு மேலும் வழிதிறக்கும் என்ற கருதுகின்றார். இதைவிட ஹெலேனா டெமுத்து, மார்க்ஸ் சொன்ன, சமூக மாற்றதின்பாலான அக்கறையல்ல. இங்கு இதற்கு அவர் ஹெலேனா டெமுத்து, மார்க்ஸ் எந்த ஆதாரத்தையும் வைக்கவில்;லை. மார்க்சிய விரோதிகளிடமிருந்து தன் பாலியல் தேவைகாக எடுத்து பயன்படுத்தியவர், அவர்களிடமிருந்து மார்க்சியத்தை காப்பற்றுவது அவரின் நோக்கமல்ல. குறிப்பாக சிறிரங்கன் சொன்ன அளவில் கூட, எதுவும் அவர் முன் இருக்கவில்லை.

 

இங்கு இந்த விடையத்தில்

 

1.ஆதாரங்கள் எதுவுமற்ற தன் நிலையில் நின்று, மார்க்சை கொச்சைபடுத்தி பயன்படுத்தியிருக்கின்றார்.

 

2.இதன் மூலம் தன்னுடை சொந்த பாலியல் நடத்தைக்கு நியாயம் கற்பித்திருக்கின்றார்.

 

3.பாலியலை இந்த சமூக பொருளாதார உறவுக்கு வெளியில், மிகமிகச் சுதந்திரனமானதாக காட்ட முனைந்து இருக்கின்றார்.

 

4.பாலியலில் இணங்க வைத்தால் போது. அதுதான் ஒழுக்கம். இணங்க வைப்பதற்கு கையாளும் முறைகள் பற்றி பேசுவது எல்லாம் அத்துமீறல் என்கின்றார்.  

 

இந்த இடத்தில் சோபாசக்தியின் அற்பதனமான செயலை, சிறிரங்கன் இனம் காணது இனம் காட்டாது தன் கருத்துகளை முன்வைக்கின்றார். லீனா – சோபாசக்தி முன்தள்ளிய, பாலியல் பற்றி கோட்பாட்டையும், கண்;ணோட்டத்தை இது கண்டு கொள்ள மறுத்துவிடுகின்றது. சோபாசத்தி மார்க்சை இதற்குள் இழுத்தது இதற்காகத்தான். தங்கள் கோட்பாட்டையும், நடத்தையையும் நியாயப்படுத்தவே மார்க்சை காட்டுகின்றார். சிறிரங்கன் சமூக உள்ளடக்கத்தை கைவிட்டு, இதற்கு விளக்கம் சொல்பவராக மாறியது விசித்திரம் தான்.   உலகமயமாதல் வர்க்கம் அமைப்பில், நுகர்வு வெறி சார்ந்த பாலியல் பற்றி கண்ணோட்டத்தை, வர்க்கமற்ற ஒன்றாக காட்டுவதில் இது தடம் புரண்டுவிடுகின்றது.

 

மார்கஸ் முதல் அனைவரும் தவறு செய்யக் கூடியவதுகள்தான். அவர்கள் மனிதர்கள். முரண்பட்ட வர்க்க அமைப்பில், முரண்பட்ட வர்க்கக் கூறுகளைக் கொண்டு இயங்கும் தளத்தில், தவறுகள் எற்படுகின்றது. இதைத் தாண்டி யாரும் இருப்பதில்லை.

 

இங்கு மார்கஸ் ஹெலேனா டெமுத் பாலியல் ரீதியான உறவு இருந்து இருந்தால், அது தவறானது. இது ஏன் என்பதை பின்னால் பார்ப்போம். இங்கு மாhக்ஸ் செய்தார் என்று கூறி, தங்கள் இழி நடத்தைகளை யாரும் நியாயப்படுத்த முடியாது. மாhக்சின் வரலாற்றில் அப்படி ஒரு விடையம் நடந்து இருந்தால், அது விமர்சனத்துக்குரியது. "தூய்மை", "புனிதம்" என்ற வரையறைற்குள் மார்க்சிய தலைவர்கள் தம்மை உள்ளடக்கவில்லை. அவர்கள் தான் விமர்சனத்தையும்,  சுயவிமர்சனத்தை கற்று, அதை ஆயுதமாகத் தந்தவர்கள்;. மார்க்சின் வாழ்வில் இது நடத்து இருந்தால், தவறானது தான்.   

 

இது ஒரு முன்மாதிரியான நடத்தையல்ல. இது ஏன் தவாறனது.

 

அராஜகவாதத்துக்கும் மார்க்சியத்துக்கும் இடையிலுள்ள வேறுபாடு, இதை நுன்தளத்தில் தான் பிரிக்கின்றது. அராஜகவாதம் குடும்பம், உழைப்பு, அரசு என்று அனைத்தையும் படிமுறை வடிவமின்றி நிராகரிக்கின்றது. மக்கள் புரட்சியின்றி அராஜகமாக சிலர் வாழத் தொடங்குகின்றது. கட்டுபாடற்ற பாலியலிலும் அது ஈடுபடுகின்றது. மார்க்சியம் இதை நிராகரிக்கின்றது. மாற்றங்கள் அனைத்தையும் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தின் ஊடாக அனுகுகின்றது. இதுவல்லாத அனைத்தையும் நிராகரிக்கின்றது. மக்கள் நடத்தும் தொடர்சியான பல புரட்சிகள் ஊடாகவே மாற்றத்தைக் கோருகின்றது.

 

இந்த வகையில் மார்க்ஸ் அராஜகவாதியல்ல. குடும்ப அமைப்பை எற்று, பரஸ்பரம் ஒப்பந்ததின் அப்படையில் கூடி வாழ்கின்றன்றனர். இங்கு ஜென்னியுடனான ஒப்பந்தம், அவர்களுக்கு இடையிலான பாலியல் ஒப்பந்தத்தைக் கொண்டது. இதை மார்க்சோ, ஜென்னியோ மீற முடியாது. அப்படி மீறுவதென்றால் அந்த, ஒப்பந்தத்தை கிழிக்க வேண்டும்;. இதுவல்லாத பாலியல் உறவு, மற்றவருக்கு துரோகமாகும்.

 

காதல் அல்லது நேசித்தல் பல அர்த்தம் கொண்டது. இது மொழி பெயர்ப்பில் தவறாக விளக்கம் பெறுகின்றது. தமிழில் காதல் என்பது பாலியல் அர்த்தத்தில் மட்டும் பெரும்பாலும் குறிக்கின்றது. இங்கு ஆண் பெண் காதல் செய்வது பாலியல் உள்ளடக்கத்திதான். பாலியல் அல்ல தளத்தில் நேசித்தல் பல தளத்தில், பல முனையில் இருக்கின்றது. இந்த அர்தத்தில் இங்கு காதல், நேசித்தல் இடமாற்றி தவறாக மொழி பெயர்த்த பயன் படுத்தப்படுகின்றது. இங்கு மார்க்ஸ், ஹெலேனா டெமுத் காதலித்தார் என்றால்!? பாலியல் உள்ளகத்தில் தான் என்றால்!? அது தவறான நடத்தையாகும். இதை நியாயப்படுத்த முடியாது.

 

ஹெலேனா டெமுத் பற்றி மார்க்ஸ் பற்றி உள்ளடக்கத்தில் எழும் கேள்வி

 

1.இந்தக் காதல் அவரின் ஆயூள் முழுக்க நீடித்ததா? இல்லை என்றால் அது காதலா? வெறும் பாலியல் நடத்ததையா?  ஆயூள் முழுக்க நீடித்தது என்றால், அதற்கு ஆதாரம் என்ன? இல்லை என்றால், அதை தவறு என்று மார்கஸ் எற்றுக்கொண்டாரா?

 

2.ஹெலேனா டெமுத் குழந்தைக்கு தந்தை மார்க்ஸ் என்றால், அவரை தன்னுடன் தன் குழந்தையாக மார்க்ஸ் வளர்க்கத் தவறியது தவறு தான். அப்படிப்பட்டவரா மார்க்ஸ் என்ற கேள்வி இங்கு எழுகின்றது? தன் குழந்தையை தன் வீட்டை விட்டு வெளியேற்றிதற்காக, மார்கஸ் வருந்தவில்லை என்பது, இந்த கதையை கேள்விக்குள்ளாகின்றது. மார்க்ஸ் உணர்வுபூர்வமானவர். அதைபற்றி அவர் பேசவில்லை என்பது ஆச்சரியமானது. 

 

3.சரி மார்க்சின் எதிரிகள் இதைபற்றி ஏன் பேசவில்லை. மார்க்ஸ் பற்றி எத்தனையோ அவதூறுகள் இருந்த போது, இதைப் பேசாமல் போனது எதனால்?

4.மாhக்ஸ் காதலித்தால் பிறந்த குழந்தைதான் என்றால் அதை சொல்லாமல் விட்டது ஏன்? அப்படிப்பட்டவரா மார்கஸ்!? அப்படிப்பட்ட தாயா ஹெலேனா டெமுத்!? 

 

5.தன் குழந்தை என்றால், என் தன்பெயரை என் மார்க்ஸ் பயன்படுத்தவில்லை. அவ்வளவு மோசமானவரா மார்க்ஸ்!?

 

6.இந்த பாலியல் சார்ந்த காதல், வெளி உலகம் அறியாது  மூடிமறைக்பட்ட கள்ளக் காதலா? நம்பும்படியாக இல்லையே.

 

7.அவர்கள் கடிதத் தொடர்புகள் மற்றும் சம்மந்தப்பட்டவர்கள் இதுபற்றி குறிப்புகள் எதையும் வெளிபடையாக முன் வைக்கவில்லை என்பது ஆச்சரியமானது. 

 

சிறிரங்கன் ஆதாரங்கள் மீது

 

1.எம்மால் அதை படிக்க முடியாது. எமக்கு ஜெர்மன் தெரியாது.
 
2.எந்த மூலத்தின் மொழி பெயர்ப்பை அப்படியே அவர் தரவில்லை.

 

3.சம்மந்தப்பட்டவர்கள் சொன்னதை, தெளிவாக மூலத்துடன் அவர் தர முடியவில்லை

 

4.அவர்கள் அல்லாதவர்கள் சொன்னதை வைத்துதான், இதை எடுத்துக்காட்ட முனைகின்றார்.
  
5.அதை தன் கருதுகோல் மூலம் கலந்து தருகின்றார்.

 

இப்படி சிறிரங்கன் சொன்னதில் இருந்து

 

1.எந்த இடத்திலும் அந்தக் குழந்தை தன்னுடையது என்று மார்க்ஸ் சொன்னதாக சிறிரங்கன் ஆதாரத்துடன் சொல்லவில்லை. 

 

2.ஹெலேனா டெமுத்தோ, ஜென்னியோ இது மார்க்சின் குழந்தை என்று எங்கு சொன்னதாக சிறிரங்கன் ஆதாரத்துடன் சொல்லவில்லை.

 

3."மார்க்ஸ் அவர்களுக்கும் ஹெலேனா அம்மையாருக்கும் இடையிலான தொடர்புகள், உறவுகள், திருமதி ஜென்னி மார்க்சினது விருப்புக்கமையவும் நிகழ்ந்தவை என்பதும், மார்க்ஸ் தனது சட்டபூர்வமான துணைவிக்கு எழுதிய கடிதத்திலிருந்து நம்மால் வாசித்தறியக்கூடியதாகவே இருக்கிறது." என்ற சிறிரங்கனின் இந்த கூற்று, உள்ளடக்க ரீதியாக பாலியல் சார்ந்தாக அர்த்தப்படாது. "தொடர்புகள், உறவுகள், திருமதி ஜென்னி மார்க்சினது விருப்புக்கமைய" என்பது, பொதுவான உறவை விளக்குகின்றது. இதை கடந்து இதை பாலியல் ரீதியாக புரிந்து கொள்ள முடியாது.      
 
4."ஹெலேனாவின் மீதான காதலில் சிக்குண்டிருந்தபோது மார்க்ஸ் அதிகமாகக் காதல் வயப்பட்ட கடிதங்களை ஜென்னியோடு பகிர்ந்துள்ளார்" இதனால் தான் என்று எந்த எடுகோளையும், சிறிரங்கன் முன்வைக்கவில்லை. இது கூட அவரின் அனுமானம் தான்.

 

5."நாவோடு நா வைத்து முத்தமிடும் காதல் நடாத்தைகள் குறித்து மார்க்ஸ் தனது கைப்பட எழுதியிருக்கிறார். குடும்பம் பிரியாதிருப்பதற்காக அவர் பல முறைகள் காதலுணர்வின் உச்சத்தை ஜென்னி வெஸ்பாலினோடு செய்திருக்கிறார்." என்பது என்ன ஆச்சரியம் இருக்கின்து? அவர்களின் குடும்பம், இயல்பாக பாலியல் ஈடுபட கொண்டது தானே. இங்கு சிறிரங்கன் என் இதை, இங்கு எதற்கு முன்வைக்கின்றார் என்பது தான் புரியவில்லை? "குடும்பம் பிரியாதிருப்பதற்காக" என்றால் எப்படி?

 

அடுத்து வாயில் முத்தமிடுதல், சில சமூகங்களில் பாலியல் அல்லாத தளத்தில், நெருங்கி குடும்ப உறவுகள் மத்தியிலும் காணப்படுகின்றது.

 

6."இடையினில் எதிர்ப்பட்டாள் நங்கை ஒருத்தி. அவள் மெல்லெனப்பாயும் நீராகவும், நான் கல்லாகவும் இருக்கக் காலம் நீரினின் அமைதியில் என்னைக் கரைத்தது. அந் நீர் ஹெலேனா டெமுத் என்று நான் சொல்வதற்குள் உலகம் அவளது புத்திரனில் எனது முகத்தை ஒட்டிக்கொண்டது." இந்த வார்த்தை மார்சினுடைய மூல மொழி பெயர்ப்பா? மூலம் தான் என்றால், மார்க்ஸ் இதை உலகம் முன் சொல்லத் தவறியது ஏன்?

இப்படிப் பல. இங்கு சம்பந்தப்பட்ட அவர்களின் கூற்று தான், இதன் மீதான உண்மைத் தன்மை விளக்கும். அவர்கள் கூற்று எதுவும் மூலத்துடன் இல்லாத வரை, இது வெறும் அனுமானம் தான். மறுபக்கத்தில் இது மார்க்சியம் மீதான அவதூறுதான்.

 

இது உண்மை என்றால், அது தவறானது. அது விமர்சத்துக்குரியது. இது பாலியலுக்கு எற்ற, முன்மாதிரியான வழிகாட்டும் சமூக நடத்தையல்ல. 

      

பி.இரயாகரன்
12.03.2010