சொந்த மண்ணில் இப்படிப்பட்ட ஒரு மாபெரும் இராணுவ நடவடிக்கை அரசியல்வாதிகள், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் ஒரு வீச்சான விவாதத்தைக் கிளப்பியிருந்திருக்க வேண்டும். ஆனால், மயான அமைதிக்கு இடையில், தனது பலத்தைத் திரட்டிக்கொண்டிருக்கிறது.

- ஷோமா சவுத்ரி, எழுத்தாளர்

உண்மையில், அரசு ஏன் இந்தப் படைகளை ஆதிவாசிகள் மேல் ஏவுகிறது? கனிவளம் நிறைந்த அந்தக் காடுகளைக் காலிசெய்து கொழுத்த தொழிலதிபர்களிடம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே.  அதற்காகத்தான் இந்த ஆயுதப் படைகள் அங்கே ஏராளமாய் குவிக்கப்படுகின்றன.

 ஹிமான்சு குமார்,  காந்தியவாதி

இதுவரை அம் மக்களுக்கு (பழங்குடியினர்)  புறக்கணிப்பையும், வன்முறையையும் தவிர வெறெதையும் வழங்காத அரசாங்கம், இப்போது அவர்களிடம் கடைசியாக எஞ்சியிருக்கும் அவர்களது பூமியையும் பிடுங்க விரும்புகின்றது. பழங்குடி மக்கள் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இதுதான்.

- அருந்ததி ராய், சமூக ஆர்வலர்

‘ஆபரேசன் கிரீன் ஹன்ட்’   காடுகளை வேட்டையாடுவது, அவற்றுக்குக் காவலிருக்கும் பழங்குடிகளை வேட்டையாடுவது, அதற்குத் தடையாக இருக்கும் நக்சல்பாரிகளை வேட்டையாடுவது என்ற மூன்று நோக்கங்களையும் உள்ளடக்கியது. இதுவரை ஒரு இலட்சம் பழங்குடி மக்கள் சட்டிஸ்காரிலிருந்து ஆந்திரத்துக்கு விரட்டப்பட்டிருக்கிறார்கள். ஈழத்தின் தமிழின அழிப்புப் போரில்
இலங்கை இராணுவம் கையாண்ட அதே உத்திகளை பழங்குடி மக்களுக்கு எதிராக கையாண்டு வருகிறது மத்திய அரசு. ஆம் நண்பர்களே, மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்பு போர்

இன்று மாலை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் (அசோக் பில்லர் அருகில்) நடக்கவிருக்கும் எமது கூட்டத்திற்கு கண்டிப்பாக வாருங்கள்! போராடும் மக்களுக்கு துணையாய் நில்லுங்கள்!!

தலைமை: அ. முகுந்தன்
தலைவர், பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு

உரையாற்றுவோர்:

தோழர் எஸ். பாலன்
உயர்நீதிமன்ற வழக்குரைஞர், பெங்களூரு.

தோழர் மருதையன்
பொதுச்செயலர், ம.க.இ.க., தமிழ்நாடு

தோழர் வரவரராவ்
புரட்சிகர எழுத்தாளர் சங்கம், ஆந்திரப் பிரதேசம்.

ம.க.இ.க மையக் கலைக்குழுவின்  புரட்சிகர கலைநிகழ்ச்சி