நட்புடன் நண்பருக்கு,

'புதியபாதை சுந்தரத்தின்' கொலை தொடர்பாக,  
அன்று மதில்களில் பேசும் செய்திகளுக்கு ஐயாவினதும், விசுவினதும் உழைப்புக்கள் மகத்தனவை!
இதை உதாசீனம் செய்யும் வரலாறு, மீண்டும் கேள்விக்கு உட்படுத்தப்படும்!!

 

 

'புதிய பாதை சுந்தரத்தின் மரணம்' அன்றைய சூழலில், இராணுவ அரசியல் மார்க்கத்தில் புதிய உந்துசக்தி என்றே சொல்லவேண்டும். 

........


இவைபற்றி வரலாறு விபரமாகப் பேசும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் உண்டு! இதனால்,
(சுந்தரத்தின் கருத்துக்கள் அன்று கிட்டத்தட்ட 6 ஆயிரம் வசகரால் உணரப்பட்டவை)
இது 'சுதந்திரனின்' வரலாற்றில் சுந்தரத்தால் விளாசப்பட்ட முதலாவது 'சவுக்கடி' என்றே சொல்ல வேண்டும். 

புலிகளால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் (அரச, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள்) பெரும்பாலும், புலிகளால் கொல்லப்பட்டவர்களாலும், அரச எதிர்பாளர்களாலுமே பட்டியலிடப்பட்டுள்ளது என்பதே உண்மை! ஆனால், ஜே.வி.பி மற்றும் அரச விரோதிகளைக் கொன்ற : (ஆளும் அரசு சார்பு பாராளுமன்ற அரசியற் படுகொலைகள்), மக்கள் விரோதங்கள் பட்டியல் இட முடியாத அளவிற்கு இன்றும் தொடர்கதையாகவே உள்ளது!! 

இலங்கை நாட்டில் 4 சகாப்தமாகச் சிந்தப்பட்ட இரத்தம், தமிழா சிங்களமா (அல்ல வேறு இனக் குழுமமா) என்று பார்க்க எனக்குத் தொரியாது. சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி இரத்தமும், 'இரத்தம் சிந்திய அரசியல்' என்பது மட்டும் எனக்குத் தெரிகிறது.

இலங்கையில் ஆளும் (ஆண்ட) அரசுகளின், அரச இயந்திரத்துக்கு வெளியே சிங்கள, மற்றும் முஸ்லீம், மலையக ...வேறு சிறுபான்மை இனக்குழுக்கள் எந்த ஒரு இனப் பிரிவின் மீதும், புலிகள் தவிர்ந்த ஏனையேர் நடத்திய மக்கள் விரோத, மற்றும் அரசியற் படுகொலைகள், புலிகளின் மீது போர்த்திவிட்டுப் போகும் எந்தக் 'கெட்டித்தனங்களும்' மக்களால் அங்கீகரிக்கப்படும் - மக்கள் ஜனநாயகமும் - ஆகிவிடாது! 

சிறீமாவோ டார நாகாவின்  பாரளுமன்ற தேர்தல் ஜனநாயக உரிமையைப் பறித்த 'பிறேமதாசா' அரசுக்கு, எதிராக 'ஜனநாயகப் போராட்டத்தை' (உங்களுடைய பாணியில்) முன்னெடுத்த சிறீமாவுக்கு எதிராக துப்பாக்கியை நீட்டிச் சுட்டவர்கள், சிங்கள இராணுவமல்ல! தமிழ் இயக்கத்தின் அரசு சார்பினரே!!

பலவிதமான அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய இந்த இக்கட்டான காலகட்டத்தில் நீங்கள் இருக்கலாம். ஜனநாயக சக்திகள் தமிழீழ விடுதலைப்புலிகளாலு் ஏனைய இயக்கங்களாலும் கொல்லப்பட்ட தமிழ் பேசும் மக்களின் விபரங்களை துல்லியமாக சேகரிப்பதிலும் முழுக்கவனம் செலுத்தவேண்டும். அரசியல் படுகொலைகளை நினைவுகூருவதற்கு ஜனநாயக சக்திகள் பொருத்தமான நாளொன்றினையும் பிரகடனப்படுத்தவேண்டும். 

என்றும் நீங்கள் 'சோக்குக்' காட்டலாம். ஆனால் அரசு சார்புடன்் இவர்கள் ஏனைய இனங்கள் ஆன சிங்கள மற்றும் இனங்களுக்குப் புரிந்த அநியாங்களை யாரைபார்த்துக் கேட்க முடியும்!

சுதேகு
020110