நாம் அசோக்குக்கு ஈமெயில் எழுதியதாக எம் பெயரில் கருத்துச் சொல்லி, ஒரு ஈமெயிலை தேசம்நெற் வெளியிட்டுள்ளது. இதை நாம் எழுதியிருக்கவில்லை. இப்படி எழுத வேண்டிய அவசியமும் எமக்கு கிடையாது. ஜான் பற்றி அசோக்கோடு கதைக்க, எமக்கு அப்படி என்ன வேண்டியிருக்கின்றது!? அசோக்குக்கு வேண்டியவர், ஜானை துணைக்கழைக்க இது உதவுகின்றது.

 

இதை இவர்கள் திட்டமிட்டு தயாரித்தார்களா அல்லது மூன்றாவது நபர்கள் இடையில் புகுந்து விளையாடுகின்றார்களா என்பது எமக்குத் தெரியாது.

 

ஆனால் தெளிவாக கற்றன் நசனல் வங்கிப் பணத்துக்கும் தீப்பொறிக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புள்ளது என்று நன்கு தெரிந்த நபர், இதை திட்டமிட்டு செய்துள்ளார். இது ஜானுக்கு எதிரான அவதூறை புனைந்துள்ளதுடன், அதை எம்பெயரில் செய்துள்ளனர். ஜானுடனான  எமது அரசியல் முரண்பாடு 'குறிப்பாக மே 18" இயக்கம் பற்றிய விமர்சனம் எம்முன் வெளிப்படையானது. அதை நாம் நிச்சயமாக விவாதிப்போம். இது முற்றிலும் வேறு விடையம்.

 

ஈமெயில் நாம் போட்டதாக கூறிய ஜெயபாலன், கட்டமைத்த அரசியல் பின்னணி என்பது அவரின் அரசியல் உள்நோக்கத்தை அம்பலமாக்குகின்றது. நாம் இது போன்று அரசியல் செய்வது கிடையாது என்பதும், எதையும் நாம் பகிரங்கமாகவும் எழுதி வருபவர்கள் என்பதையும் காண்க.

 

இதற்கு வெளியில் நாம் உங்களைப் போல் குறுகிய அரசியல் எதையும் செய்வதில்லை. புனைபெயரில் கூட, பின்னோட்டம் போடுவது கிடையாது.

 

இது அனைவருக்கும் தெரிந்த வெளிப்படையான உண்மை. தேசம்நெற்றுக்கு மட்டும் தெரியாது போனது ஆச்சரியமானது. எம்மை எதிர்கொள்ள முடியாத அரசியல் கற்றுக் குட்டிகள் தான், இதுபோன்ற குறுக்குவழியை நாடுகின்றனர். வேறு என்னதான் செய்யமுடியும்.

 

நாம் இப்படியும் எதிர்ப்புரட்சி அரசியலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாம் எழுதாத சம்பந்தப்படாத ஒன்றுக்கு, அரசியல் ரீதியாக பதில் எழுத வேண்டியுள்ளது. இப்படி எம்பெயரில் கம்யூட்டர் முன் அமர்ந்திருந்து எழுதுவதை, மார்க்சியம் புரட்சி என்று நம்ப வைக்க முனைகின்றனர்.  

 

கம்யூட்டர் மூலம் திட்டமிட்டு கட்டமைக்கும் இந்த எதிர்ப்புரட்சியை, நாம் தேசம்நெற் ஊடாக எதிர் கொள்கின்றோம்.

 

தேசம் நெற்றின் இந்த அவதூறு பதிவை, நான் வேலையில் இருந்தபோதுதான் தெரிந்து கொண்டேன். உடன் நான் கேட்டுக்கொண்டதற்;கு இணங்க, தமிழரங்க ஆசிரியரில் ஒருவர், தேசம்நெற்றுக்கு உடனடியாக அனுப்பிய பின்னோட்டத்தை இதில் மீள இணைத்துள்ளோம்.

 

தொழிற்நுட்பம் சம்பந்தமாக

 

நீங்கள் சிலாகிக்கும் தகவல் தொழிற்நுட்ப உலகில் கிடைக்கும் ஈமெயில்கள் உண்மையில் யாரிடமிருந்து வருகின்றன என்பதை அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பரீசீலிக்க சற்று நேரத்தை செலவழித்திருக்கலாம்.

 

வெளித்தோற்றத்துக்கு தமிழ்சேர்க்கிள் அனுப்புவது போல் தோற்றம் தருமாறு ஈமெயில் ஒன்றை அனுப்புவது தொழிற்நுட்பத்தின் மூலம் சாத்தியமே. இது சாதாரணமாக இந்த ஈமெயிலை பெறுபவருக்கு வெளிப்படையாக தெரியாது. ஆனால் அந்த ஈமெயில் எங்கிருந்து உற்பத்தியானது என்பதை கண்டுகொள்ள அந்த ஈமெயில் உள்ளடக்கியுள்ள (header information மூலம் ) அறிந்து கொள்ள முடியும். சாதாரண வாசகருக்கு இந்த header information மறைக்கப்பட்டிருக்கும். பிரச்சனைகள் சந்தேகங்கள் வரும்போது மட்டும் இந்த header information ஜக் கொண்டு ஆழமாக சென்றால் முழுவிபரமும் கிடைக்கும்.

 

வெறுமனே from என்ற பகுதி header information அல்ல. from என்ற பகுதியில் காணப்படும் ஈமெயில் விலாசத்தை யாரும்  எழுத முடியும்.

 

 

பி.இரயாகரன்
16.12.2009
             

 தேசம்நெற் சொன்னது:

 

/தங்கள் அரசியலை ஏற்றுக்கொள்ளாதவர்களை ஜோர்ஜ் புஸ், வே பிரபாகரன், மகிந்த ராஜபக்ச மட்டுமல்ல இரயாகரனும் மிரட்டுகின்றார். டிசம்பர் 6ல் ரமிள்சேர்க்கிளில் இருந்து யோகன் கண்ணமுத்துவுக்கு (அசோக்) அனுப்பப்பட்ட மின் அஞ்சல்:
From:
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Subject: tamilcircle
Date: Sun, 6 Dec 2009 18:31:17 +0000

”அசோக் நீ இப்போது கூட்டு வைத்திருக்கும் ஜான் மாஸ்டர் தான் கட்டன் நாசனல் வங்கிப்பணத்தை திருடிக்கொண்டு கனடாவிற்கு ஓடியவன். இதையும் நாம் அம்பலப்படுத்துவோம்.”/

 

தமிழரங்கம் சொன்னது:

 

புறமுதுகு பேசுவது தமிழரங்கத்தின் செயலல்ல. தமிழரங்கம் என்றும் எக்காலத்திலும் விமர்சனங்களை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றது. எனவே தமிழரங்கத்துக்கு இப்படியான மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய தேவைக்கு அடிப்படையே கிடையாது. இது தொடர்பில் நீங்கள் தொழில் நுட்பச் சான்றுகளை முன்வையுங்கள்.

 

மின்னஞ்சலின் ஹெடர் முழுவதையும் தந்தால் இது பற்றிய பரிசீலனைக்காக நாங்கள் மின்னஞ்சல் வழங்குநருடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதையும் வேண்டத்தகாத இந்த வீண்பழி சுமத்தும் தங்களுக்கு ஆதாரங்களுடன் அதனை மறுத்துரைக்க முடியும் எனவும் தெரிவிக்கின்றோம்.

 

மற்றும்தேசம்நெற் சொன்னது:

 

/வியூகம் சஞ்சிகையின் இலத்திரனியல் வடிவம் இரயாகரனுக்கு டிசம்பர் 14 மாலை 8:48க்கு கிடைக்கப்பெற்றுள்ளது /     


தமிழரங்கம் சொன்னது:

என்ற தகவல் எப்படி உங்களுக்கு கிடைத்தது என்ற தகவலும் எங்களுக்கு சந்தேகத்தை உருவாக்குகின்றது.