இலங்கையின் வட கிழக்கை மையமாக வைத்துக் காந்தீயம் என்ற ஒரு சமூக சேவை அமைப்பை 1977 ம் ஆண்டு எஸ. எ. டேவிட் ஐயாவின் தலைமையில், வவுனியாவைத் தலைமையகமாக வைத்து ஆரம்பிக்கப்பட்டது.

இதன் பொதுச் செயலாளராக Dr. இராஜசுந்தரம் உப தலைவராக அப்புகாமி என்ற சிங்கள இனத்தைச் சார்ந்தவரும், உப செயலாளராக மன்னார் முஸ்லீம் இனத்தவர்;, மற்றும் எல்லா மாவட்டத்தைச் சாந்தவர்கள் இணைத்து நிர்வாகச் சபையையும் உருவாக்கினார்கள்.

வட கிழக்கப் பகுதிகளில் அகதிகளை குடியேற்றி, அவர்களுக்கு புதிய வாழ்வீயலை உருவாக்குவது. சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தையும், பாட்டாளிவர்க்கப் போராட்டத்தையும் நடத்துவதற்கும் மக்கள் சார்ந்த தலைமையை உருவாக்குவது, பாலர் பாடசாலைகளை நடத்துவது போன்ற பல திட்டங்களை வைத்து காந்தீயம் உருவாக்கப்பட்டது.
யாழ் மக்கள் மீது மலைய மக்கள் மத்தியில் உருவான தப்பு அபிப்பிராயத்தை போக்குவதற்கு அம் மக்கள் மத்தியில் உள்ள முற்போக்குச் சக்திகளுடன் இணைந்தும், அதுபோல் சிங்கள முற்போக்குச் சக்திகளுடன் இணைந்தும் இலங்கையில் சமத்துவமான அரசியல் நிலையை உருவாக்கி, இனவாதத்தை (சிங்கள-தமிழ்) உதிரவைக்க வேண்டும் என்பதற்கான சமூக அரசியலை உருவாக்குவதற்காக இவ் அமைப்பு உருவாக்கப்பட்டது.



அத் தருணத்தில் யாழ் மையவாதச் சிந்தனைக்கும், தலைமைக்கும் எதிராகத் தீவிரமான செயல்ப் பாட்டில் சுந்தரம், சந்ததியார், இன்பம், விசு போன்ற பல இளைஞர்கள் உருவாகினார்கள். இவர்களுக்குக் காந்தீயம் முழு ஆதரவைக் கொடுத்தது. இவ் அமைப்புடன் சுந்தரம், சந்ததியார் அவர்களின் தோழர்களும் இணைந்து தீவிரமாகச் செயல்ப்பட்டார்கள்.



பல குடியேற்றக் கிராமங்களுக்குப் போக்குவரத்து வசதிகள் (ஒற்றையடிப் பதை) இல்லாதபடியால் (வாகனம் போக முடியாத நிலை) இவ் இளைஞர்கள் தங்கள் தலையில் சுமந்து சென்று அம் மக்களுக்கு, அன்றாட தேவையான பொருள்களைக் கொண்டு சென்று கொடுத்தார்கள். அக் கிராமத்தில் வாழ்ந்த ஓர் அளவுக்குப் படித்த (அறிவுடைய) பெண்களுக்கு மருந்துவப் பயிச்சி கொடுத்து அக் கிரமங்களுக்குச் சேவையாற்ற வைத்தார்கள். 2000 க்கு மேலான பெண்கள் (பயிச்சிவித்து) பாலர் பாடசாலைகளை நடத்தினார்கள்.


சகலரும் தொண்டர்களாக பணிபுரிந்தார்கள். இவர்களுக்கு மாதம் 100 ரூபா மாதந்தச் செலவுக்கு (உணவுக்கு) வளங்கப்பட்டது.
காந்தீயம் நடத்திய கருத்தரங்களையும், பயிச்சிப் பட்டரகளையும் பார்த்த
யாழ் மையவாதத் தலைவரான அமிர்தர் ஜே. ஆர்ருடன் (அரசுடன்) இணைந்து, அகதிகள் குடியேறிய கிராமங்களுக்கு இராணுவத்தை அனுப்பி அம் மக்களுக்கு பலவிதமான நெருக்கடிகளையும், இன்னல்களையும் கொடுத்தார்.


னுச சாந்தி இவ் அமைப்பின் பக்கத் தூணாக விளங்கினார்.
இவர் வவுனியாவில் 'சாந்திக் கிளினிக்' என்னும் மருத்துவ மனையை நடத்தினார் இதன் மூலமாக ஏழை மக்களுக்கு (தமிழ் அகதிகளுக்கு) இலவசச் சிகிச்சை செய்தார்.

வவுனியாவில் உள்ள உழைக்கும் பெண்களை (மலையகப் பெண்களும்) ஒன்று இணைந்து 'பெண்' என்ற ஒரு பெண் விடுதலை இயக்கத்தை அமைத்து அகதி மக்களுக்குப் பலவிதமான உதவிகளைப் புரிந்தார்கள். பெண் என்ற சஞ்சிகையும் வெளியிட்டார்கள். இதில் பட்டம் படித்த பெண்கள் அங்கம் வகிக்கவில்லை. இந்த அமைப்பும் காந்தீயத்துடன் இணைந்து அகதிகளுக்குச் சேவையலாற்றியது.



மலையகச் சிங்களப் பெண்களுடணும், இணைந்து பல கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். முக்கியமாகச் சுதந்திர வர்த்தக வலையத்தில் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும், மலையகப் பெண்கள் படும் துயரத்தையும் வைத்துக் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அகதிகளாகக் குடியேற்றப்பட்ட மக்களுக்கு அடிப்படை மருத்துவ உதவிகள், அறிவியல் ரீதியான கருத்தரங்குகளையும், சுகாதார அறிவையும், குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கும் பணியைத் தன் நலமற்ற சேவையாகச் செய்தார்கள்.


டேவிட் ஐயா அன்று உலக ஆக்கிடேக் அமைப்பின் தலைவராக இருந்தவர். வெளி நாடுகளில் பல கட்டிடங்களை வடிவ அமைத்தவர். இவர் கட்டப் பிரமச்சாரி, எழிமையானவர். நாலு முழ வேட்டியும், கதர்ச் சட்டையுடனும் (கமக்கட்டுக்குள் குடை இருக்கும்) அணிவார். இவர் வெளிநாட்டில் உழைத்த பணத்தை மூலதனமாகப் போட்டுத்தான் இவ் அமைப்பை ஆரம்பித்தார். பின் வெளி நாட்டு நண்பர்கள் மூலமாக (தமிழர் உட்பட) பணம் பெற்று இவ் அமைப்பை நடத்தினார். (இவர் இன்று இந்தியாவில் வாழுகின்றார்.)


T. R. R. O
கந்தசாமியண்ணை வெளிநாடுகளில் இயங்கும் N.G.O. க்களிடம் இருந்து (தமிழ் அகதிகளைக் குடியேற்றி, புதிய வாழ்வை ஏற்படுத்துவதற்காக) பணம் பெற்றுக் கொடுத்தார்.


இவர் அன்று (கொலை செய்யப்படும் வரை) உலகத்தில் உள்ள N.G.O. அமைப்புகளுடன் நலலுறவு இருந்தது.


இவரை உலகத்தில் இருந்து பணம் பெற்றுத் தரும்படி புலிகள் (ஈரோஸ் மூலம்) வலியுறுத்தீனார்கள். இதனால் ஈரோஸ் (புலிகள்) மூலம் கொல்லப்பட்டார்.



இவர் 1983 ம் ஆண்டு நடைபெற்ற இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மகக்களைப் பாதுகாப்புடன் தமிழ்ப் பிரதேசங்களுக்கு அனுப்பி வைப்பதில் மிக முக்கிய நபராக விளங்கினார். (சிங்களப் பகுதியில் உள்ள அகதி முகாகளில் உள்ள தமிழ்ப் பேசும் மக்களின் கண் எதிரே தமிழர்களை சுட்டுக் கொல்வது என்று ஜே. ஆர் திட்டம் தீட்டி இருந்த தருணத்தில்).
1988
ம் ஆண்டு ஈரோஸ் அமைப்பு இவரைக் கொலை செய்தார்கள் (இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்ட போது ஈரோஸ் தலைவரான பாலகுமார் ஒரு பத்திரிகைப் பேட்டியில் நாள் தோறும் பல கந்தசாமிகள் மரணமாகின்றார்கள்
ஏன் இந்தக் கந்தசாமிக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள் என்று ஒரு எதிர்க் கேள்வியைக் கோட்டார். (வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றுத் தரவில்லை என்ற காரணத்தால் கொல்லப்பட்டார்)


சர்வோதயம் என்ற அமைப்பு பிரேமதாசவின் அரசியல் வளர்ச்சிக்கு உதவியதால் அதற்கு எதிராக நோர்வேஜியன் அரசு (இலங்கைப் பிரதி நிதி) காந்தீயத்துக்குப் பல விதமான உதவிகளைப் புரிந்தார்.


இதன்பின் பல நாட்டில் இயங்கிய N.G.O அமைப்புக்கள் தாங்களாகவே வந்து உதவி புரிந்தன. எந்த நிலையிலும் இந்த அமைப்பின் நிர்வாகக் கட்டைமைப்பாலும், அவ் இளைஞர்களின் பலத்தாலும் இந்த ஒரு அமைப்போ, அல்லது வெளி நாடோ அல்லது தனி மனிதர்களோ இவ் அமைப்பின் மீது ஆதிக்கம் செலுத்த முடியாமல் போய்விட்டது.


உதாரணமாக ஜேர்மன் நாட்டில் உள்ள N.G.O. அமைப்பான G . T. E செட் என்ற நிறுவனம் வவுனியாவில் குளாய்க் கிணறு, அகலக் கிணறு தோண்டுவதாகக் காந்தீயத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. காந்தியத்துக்குப் பல லட்ச ரூபாக்களை கொடுத்து உதவினார்கள். வவுனியாவில் ஒரு சிறுவர் இல்லத்தை (அனாதை இல்லம்) 20 லட்சம் முதலீடு செய்து பல அறைகளும், பல வசதிகளைக் கொண்ட ஒரு வீட்டைக் (குருமன் காட்டில்) கட்டிக் கொடுத்தார்கள்.
இதன் காணியை ஒரு தனி மனிதனின் பெயரில் வாங்கப்பட வேண்டும் என்று இந்த ஸ்தாபனம் வலியுறுத்தியது. இதற்காக காந்தீயத்துக்குத் தானாகவே வந்து உதவி புரிந்தவர்கள் மூலமாகவும், மாவட்டத்தில் இயங்கும் குழுவில் இருந்த ஒரு சில தமிழர்களை அணுகிக் குழப்பத்தை உண்டு பண்ண முயற்சிகள் எடுத்தார்கள். இதை அறிந்த டேவிட்ஐயா அதி சக்தி வாய்ந்த நிறைவேற்றும் சபையை உருவாக்கினார்.; இதில் டேவிட் ஐயா தலைவரகவும் Dr. இராஜசுந்தரம் செயலாளராகவும் சாந்தியும், சந்ததியாரும், சுந்தரமும், உப தலைவரான சிங்கள மகனும், உப செயலாளரான மன்னார் முஸ்லீம் மகனும், ஆகும்) அங்கம் வகித்தார்கள். அவர்களின் முயற்சியை இவர்கள் முறியடித்தார்கள். ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அவர்களை ஒதுங்கிக் கொண்டார்கள் இதன் பின் காந்தீயம் என்ற அமைப்பின் பெயரில்த் தான் அக் காணி வாங்கப்பட்டது.


இந்த நிலையில் இந்த ஜேர்மன் ஸ்தாபனத்தின் மேல் சந்தேகங்கள் உருவாகியது. இதை அறிய டேவிட் ஜேர்மனிக்குச் சென்று அவர்களைப்பற்றி முழுமையாக அறிந்து வந்தார். (இவர்கள் தான் வியட்னாமில் தண்ணீர் மூலம் நோய் பரப்பினார்கள்). உடனே டேவிட் ஐயா அவர்களை அழைத்து கணக்கு வழக்குப் பார்த்து 50 லட்சத்தைக் கொடுத்து அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்துச் செய்தார். பணம் முக்கியம் அல்ல, மக்கள் தான் அதி முக்கியமானவர்கள் என்று கருதியதால். (இன்றைய N.G.O. க்கள் பணம் தான் முக்கியம் என்று செயல்ப்படுகின்றார்கள்)


எமது மக்களுக்கு எங்களால் அவர்களின் வாழ்வைச் சிறப்பாக அமைத்துக் கொடுக்க (உதவ) முடியும் என்றும், எந்த ஒரு வெளிநாட்டவர்களின் உதவியும் தேவையில்லை என்று முகத்தில் அடித்தால்; போல் கூறி (டேவிட் ஐயா) அந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார்.


வவுனியா நகரக் குடி நீர்த் திட்டத்தையும், 60 க்கு மேல் அகலக் கிணறுகளை அகதிகள் குடியேற்றப் பகுதிகளில் வெட்டப்பட்டது. ஒரு கிணற்றில் 5 ஏக்கர் நிலத்துக்குப் பயிர் செய்யும் விதத்தில் வெட்டப்பட்டது.
(5
அகதிக் குடும்பங்கள் பயிர் செய்து வாழக்கூடிய விதத்தில் இக் கிணறுகள்; வெட்டப்பட்டது).

புளொட்டின் விமானப்படைத் தாக்குதலால் பழைய சிறுவர் இல்லம் அழிக்கப்பட்டது புதிய கட்டிடம் உடைக்கப்பட்டது.


பழைய சிறுவர் இல்லத்தில் 50துக்கு மேல்ப்பட்ட சிறுவர்கள் இருந்தாhர்கள்.
இவ் இல்லம் எரிக்கப்பட்ட போது இங்கு ஆயாவாக வேலை செய்தவர்கள் அச் சிறுவர்களைக் காப்பாற்றிப் பக்கத்தில் உள்ள வீடுகளில் பத்திரமாகக் கொண்டு சேர்த்தார்கள். (இதற்குச் சுற்றியிருந்த சிங்கள முஸ்லீம் மக்கள் உதவினார்கள்).


இந்த அடாவடித்தனத்தைச் செய்தவர் வவுனியா பொலிஸ் மா அதிபர் கேரத் தாகும். (இவர் பின்னர் புளொட்டால் கொல்லப்பட்டார்)
இதன் பின் அந்த ஸ்தாபனத்துடன் யாழ் மேலாதிக்க மையவாதத் தலைவர்கள் இணைந்து, வவுனியா நகரைச் சுற்றி குழாய் கிணறுகளை தோண்டினார்கள். (இன்று பாவனைய் இல்லாமல் தூர்ந்து கிடக்கின்றது) இதனால் வவுனியா எம். பிக்கும் புலேந்திரனுக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியது. வவுனியா எம். பி க்கு கைவைக்கும் அளவுக்கு விடை முத்தியது.

சண்அண்ணா.

இதனால்த் தான் புலேந்திரன் உயிர் பறிக்கப்பட்டது. இந்த சம்பத்தைச் செய்தவர்கள் வவுனிய எம். பியின் கையாட்கள். இவ் இருவரும் 1985 ம் ஆண்டுக்குப் பின் புளொட்டின் வவுனியா பொறுப்பாளராக இயங்கினார்கள்.
(
வவுனியா எம். பி சிதம்பரத்துக்கும்- உமாவுக்கும் நீண்ட கால நட்பு உறவு உண்டு. இதற்கு உதாரணம் புளொட்டின் ஆயுதப் போராளிகளுக்கு, மதாந்தச் செலவுக்காக இந்த எம். பி க்கு ஊடாகத் தான் உமா இந்தியாவில் இருந்து பணம் அனுப்பினார். புளொட்டுக்குக் காத்தீயம் பண உதவி செய்வதற்கான குற்றச் சாட்டை மறுப்பதற்கு இது நல்ல உதாரணமாகும். (காந்தீயத்தில் பணி புரிந்த தொண்டர்கள் விலகிய பின்புதான் புளொட்டில் இணைந்தார்கள்.)