ஈழடுகொலைகளுக்கெதிராக தமிழகத்தில் கள்ள மௌனம் காத்த யோக்கியவான்களின் நிலையை நியாயப்படுத்தி அவர்களின் மௌனத்திற்கு வலி எனும் முலாம் பூசி ‘ஈழம் – மௌனத்தின் வலி’ என்னும் கவிதை நூல் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.

 

 

நாமும் வினவு இணையதளமும் மற்றும் சில இணையதளங்களும் இந்த கவிதை நூலை வெளியிட்டவர்களை பற்றியும், அதன் பிண்ணனியில் உள்ள உளவாளிகளையும் அவர்கள் தமிழகத்தில் நடைபெறும் ஈழப்போராட்டங்களை கைப்பற்றி நிறுவணமயமாக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தின் ஏவல் நாய்கள் என்பதை அடையாளம் காட்டினோம்.

இதில் குறிப்பாக ஜகத் கஸ்பார் எனும் பாதிரியார் (ஈழ போராட்டம் பற்றிய பேச்சில் தற்போதைய Talk Of The City) பற்றி அடையாளம் காட்டியிருந்தோம். அவரின் உளவாளித்தனத்தையும், இந்தியாவிற்கெதிராக குரலெழுப்பாமலேயே ஒடுக்குமுறை பற்றி பாதிரியார் பாணியில் ஈழப் பிரச்சனையில் பிரச்சாரம் செய்ததையும் எழுதியிருந்தோம். இந்த உளவு கும்பல் ம.க.இ.க‌ தோழர் துரை.சண்முகம் அவர்களின் கவிதையை வெட்டி சிதைத்து பிரசுரித்தையும் சுட்டிக்காட்டி, இந்தியா மீதான இந்த கூலி கும்பலின்  விசுவாசத்தையும் அடையாளம் காட்டியிருந்தோம்.

இப்பிரச்சனை இணையத்திலும், பத்திரிகை உலகிலும், தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலும் கடந்த வாரம் வரை மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.கஸ்பார், எழிலன்,ஞானவேல் உள்ளிட்ட‌ இவர்கள் இந்திய ஆளும் கும்பலின் ஏஜென்டுகள், இவர்களுக்கு ஈழம் தொடர்பாக சில புரொஜக்ட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்கிற‌ நமது குற்றச்சாட்டுகளுக்கு இவர்கள் தரப்பிலிருந்து யாரும் இதுவரை மறுப்பு ஏதும் கூறவில்லை.

இப்போது இந்த ஜகத் கஸ்பார் நமது தமிழ் இளைஞர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் அம்மனமாக அம்பலப்பட்டு நிற்கிறார். அதற்கு இன்னொரு சான்று தான், இந்த வாரம் குமுதம் ரிப்போர்டரில் வந்திருக்கும் ‘புலிகள் செய்த தவறு என்ன ?’ – என்கிற‌ ஜகத் கஸ்பாரின் பேட்டி.

பேட்டியில் நிருபர் கேட்ட சில கேள்விகளுக்கு பாதிரி கப்ஸார் அளித்துள்ள பதில்களில் உள்ள நயவஞ்சகமான கபடத்த‌னத்திற்கு சான்றுகளாக அவற்றிலிருந்து ஒரு சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.

உங்களுக்கு விடுதலை புலிகளுடன் நேரடி தொடர்பு உண்டா, இல்லையா ? என்று ஒரு கேள்வி. அதற்கு நம்ம பாதிரி கப்ஸார், “நான் இயக்க உறுப்பினரும் இல்லை, இயக்கத்தோடு நேரடியான தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. என்னை பொருத்த வரையில் ஒரு யதார்த்தத்தை கண்டேன். அதற்கு பதில் சொன்னேன். அது செயலாக வெளிப்பட்டது. பலரோடு தொடர்பு கொண்டேன். அவர்கள் யார் என்று கூட கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. எனவே இயக்கத்துக்கு நான் ஆலோசகரும் அல்ல, பணியாளரும் அல்ல” என்று பதிலளித்துள்ளார்.

பாதிரியாரே உங்களை புலிகளுடன் நேரடி தொடர்பு இருக்கிறதா இல்லையா என்று கேட்டதற்கு, யதார்தத்தை கண்டேன். பதார்தத்தை கண்டேன் என்று பிரசங்கம் செய்யாதீர்கள். எல்லோரும் யதார்தத்தை தான் காண முடியுமே தவிர அதையும் மீறி இல்லாததை பார்க்க யாருக்கும் இங்கே ஞானக் கண்கள் ஒன்றும் இல்லை!

தோழர்களே, இப்போது புலிகளுடன் எனக்கு எந்த‌ நேரடி தொடர்புமே இல்லை அய்யய்யோ என்னை விட்ருங்க என்கிற பாணியில் பேசும் இந்த‌ பாதிரி தான் கடந்த ஆறு மாதங்களாக நக்கீரனில் ‘மறக்க முடியுமா’ என்கிற பெயரில் பிரபாகரனை சந்தித்தேன் , பொட்டு அம்மாணை சந்தித்தேன், இயக்கத்துடன் நல்ல தொடர்பு இருந்தது என்றெல்லாம் எழுதி வருகிறார். இதன் உச்சமாக  ‘நடேசனுடன் தொடர்பு கொண்டு இதோ இதே போனில் தான் பேசினேன்’ என்று கூறினார்.

ஒரு பக்கம் புலிகளோடு தனக்கு தொடர்பு எதுவும் இல்லையென்று சொல்கிறார். இன்னொரு பக்கம் தொடர்பிலிருந்தேன் என்று கதை கதையாக எழுதுகிறார். யாருப்பா நீ ஜகத்து! என்று தலையை பிய்த்து கொள்வதற்கு முன் இன்னொரு விச‌யத்தை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

இவர் புலி ஆதரவாளர் இல்லை!! ஆனால் இந்தியாவின் கைகூலியா என்று யோசித்து பார்த்தால் உங்களுக்கு உண்மை சட்டென விளங்கும்.

இதே குமுதம் ரிப்போர்டரில் கேட்ட இன்னொரு கேள்வி “இறுதிகட்ட போரின் இறுதி நாட்களில் இந்தியாவுக்கும், புலிகளுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பில் நீங்களும் கலந்து கொண்டீர்கள். போரை நிறுத்த என்னென்ன நிபந்தனைகள் வைக்கப்பட்டன ?”

இதற்கு கப்ஸார் என்கிற கஸ்பார் “இதில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலை பெற்றுக்கொண்டு தான் எதையும் பேச முடியும்” என்கிறார்.

இந்தியாவிற்கும் புலிகளுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் சம்பந்தபட்டவர்களின் ஒப்புதல் என்கிறீர்களே யார் அந்த சம்பந்தப்பட்ட்டவர்கள் ?

ஜகத் கஸ்பரே, நீங்கள் என்ன ஒபாமாவின் ஒப்புதலையா கேட்கப்போகிறீர்கள்?   வெளிப்படையாக சொல்லுங்கள்  “என்னை அனுப்பிய இந்திய உளவு நிறுவனங்களிடம் ஒப்புதல் வாங்க வேண்டும்” என்று. இப்போது தோழர்களுக்கு தெரியும் என்று நம்புகிறோம். இவர் புலி ஆதரவாளரா இல்லையா என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் இவர் இந்தியாவின் ஆதரவாளர், கைக்கூலி என்பது மட்டும் முழு உண்மை.

புலிகளுக்கு சேரவேண்டிய பெரும்தொகையை கஸ்பார் இடையில் கையாடல்  செய்து தனது பரிசுத்த ஆவிக்குரிய‌ கைவரிசையை காட்டிவிட்டார். எனவே புலிகள் இவர் மீது கடுப்பிலிருந்ததாக கூறப்படுகிறது. நிருபர் இது தொடர்பாக, ”ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதாக சொல்லும் உங்கள் மீது புலிகள் கடும் அதிருப்தியில் இருந்தார்கள். பெரும் தொகையை கையாடல் செய்துவிட்டதாக‌ உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே” அது பற்றி உங்கள் பதில் என்ன‌ என்று கேட்டதற்கு,

கோபமாக நான் களை பிடுங்கினேன். நாத்து நட்டேன், வயலுக்கு ஏற்றம் இறைத்தேன் என்றெல்லாம் வசங்கள் பேசிவிட்டு “எனக்கு சான்றிதல் தரக்கூடிய தகுதி அதிர்வு,வினவு போன்ற‌ இணையதளங்களுக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை” என்றும் பதிலளித்துள்ளார்.

உளவு பாதிரியாரே உங்களுக்கு சான்றிதழ் தர யாருக்குத் தகுதி இருக்கிறது என்று கேட்கவில்லை. நீ சுருட்டினியா இல்லையான்னு கேட்டாக்கா என்னென்னமோ பேசிட்டு எங்கள் இணைய தளங்களுக்கு தகுதியில்லைன்னு ரிப்போர்ட் கொடுக்குறீங்க. அதுவும் சரிதான், தகுதியுள்ள ‘சன் டிவி, கலைஞர் டிவி’ போன்ற சுருட்டல் குடும்பம் சொன்னாதான் நீங்க ஒத்துக்குவீங்க. அப்படித்தானே!

இந்த பேட்டியில் உச்சபட்ச காமெடியையும் நம் பாதிரியார் செய்திருக்கிறார். அதாவது ”தோழர் துரை சண்முகத்தின் கவிதையில் இந்திய அரசுக்கெதிரான வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளதே” என்கிற நிருபரின் கேள்விக்கு ”நான் அவரிடம் கவிதை கேட்கவும் இல்லை. வாங்கவும் இல்லை. இதை முன்னெடுத்ததுச் செய்தவர்கள், ‘போருக்கு எதிரான பத்திரிக்கையாளர்கள் அமைப்பு’. கவிதை புத்தகம் அச்சிட்டு அதை மக்களிடம் எடுத்து செல்லும் பணியை மட்டும் தான் நான் செய்தேன். கவிதைகளை வாங்கியது அதை வடிவமைப்பு செய்தது இது இப்படி தான் இருக்கவேண்டும் என்று எதிலும் நான் தலையிடவில்லை” என்று தலையை ஆமையை போல் பாதுகாப்பாக உள்ளே இழுத்துக் கொண்டு பதிலை மட்டும் துப்பி விட்டார் ஈழ மக்களை பாதுகாக்க குரல் கொடுக்கும் பாதிரியார்.

இந்த நூலை வெளிட்டது நல்லேர் பதிப்பகம். இந்த பதிப்பகம் இந்த ஜெகத் கஸ்பாருடையது தான். எனவே இந்த விசயம் தெரிந்திருந்த‌ பேட்டி எடுத்த பத்திரிகையாளரும் உன்னை விட்டேனா பார் என்பதைப் போல, அது உங்கள் பதிப்பகம் என்றால் ஒரு பதிப்பாளர் என்கிற முறையில் உங்களுக்கும் பொறுப்பு உண்டு தானே, நீங்களும் தானே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கிடுக்கிபிடி போட்டதும், அதற்கு அவர் நாங்கள் அடித்தல், திருத்தல் வேலைகளை எல்லாம் செய்வதில்லை என்கிறார்!! அடித்தல் திருத்தல், சரி பார்த்தல் எதையும் இவர் செய்வதில்லையாம். ஆனால் பதிப்பிப்பது மட்டும் இவர்களாம். இந்தியாவை பற்றி நாங்கள் ஒரு புத்தகம் தருகிறோம் அதையும் அப்படி போடுவீரா கஸ்பாரே ?

இதை கேட்கும் போது, மாப்புள நான் தான். ஆனா போட்டுட்டிருக்கிற ட்ரெஸ் என்னோடதில்ல என்பது போல்  ‘படு சுட்டியாக காமெடி கூட செய்வாரா நம்ம பாதிரி ஜகத் கஸ்பார்’ என்ற ஆச்சரியத்தை நமக்கு தருகிறது.

அடுத்து, இது போன்ற கவிதை நூல்களை வெளியிடுவதால் யாருக்கு என்ன பயன் ? என்கிற கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு சடாரென்று நிருபரைப்பார்த்து, நீங்கள் என்னிடம் இப்படி கேள்வி கேட்டு வெளியிடுவதால் மட்டும் யாருக்கு என்ன பயன் என்று எதிர் கேள்வி கேட்டுவிட்டு. எங்களைப் பற்றி குற்றம் பேசும் புரட்சிக்காரர்கள்

ஈழத்திற்காக இதுவரை என்ன செய்து கிழித்துவிட்டார்கள். இதுவரை இப்படி ஒரு புத்தகமாவது போட்டிருக்கிறார்களா என்று சிங்கத்தை போல சினந்துவிட்டார்.

அன்பார்ந்த இளைஞர்களே!
இது போன்ற சந்தர்ப்பத்திற்கேற்றவாறு நாடகமாடும் கயவர்களையும் உளவாளிகளையும் ஆளும் வர்க்க கைகூலிகளையும் நாம் அடையாளம் காணவேண்டும் என்பதற்காகத் தான் சென்ற பதிவை எழுதியிருந்தோம்.

அதில் குறிப்பாக

“இப்போது இவர்கள் மீது விமர்சனம் வந்து விட்டது என்பதால் இவர்கள் அடுத்த சில நக்கீரன் இதழ்களில் இந்தியாவிற்கு எதிராகக் கூட எழுதலாம். சில கூட்டங்களில் இந்தியாவிற்கு எதிராக கூட பேசலாம். அவற்றை எல்லாம் உண்மை என்று நம்பி விடாதீர்கள். நம்பகத்தன்மை ஏற்படுத்த‌ இடைக்காலமாக‌ அப்படி பேச இது போன்ற ஆட்களை இந்திய அரசே அனுமதிக்கும். நம்பாதீர்கள்!  எச்சரிக்கை!” என்று முன் எச்சரிக்கை விடுத்திருந்தோம்.

அதற்கேற்றாற்போலவே இந்த பேட்டியில் “இந்தியா இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவியது உண்மை, போர்க் குற்றங்களில் இந்தியாவுக்கும் மறைமுக பங்கு இருக்கிறது. இந்திய மக்களின் கரங்களில் ஈழ மக்களின் இரத்தம் படிந்திருக்கிறது. இந்தியாவுக்கு பரிசுத்த பட்டம் தர யாரும் தயாராக இல்லை” என்று ஜனநாயகவாதி போல‌ சொல்லியிருக்கிறார்.

இந்த‌ ஜகத் கஸ்பருக்கு நாம் சில‌ கேள்விகளை மட்டும் முன் வைக்கிறோம்:

1,போரை துணை நின்று நடத்தி கொடுக்கும் பரிசுத்தமற்றவனின் ஏவலாளாக‌ செல்வது மட்டும் பரிசுத்தமா ?

2,இந்தியாவின் இச்செயலை ஏன் இதற்கு முன்பு எங்கேயும் பெரியளவிற்கு குறிப்பிட்டு கண்டிக்கவில்லை ?

3,தமிழகத்தில் நடந்த பல்வேறு ஈழ ஆதரவு போராட்டங்களை நீங்களும் எழிலனும் சேர்ந்து கொண்டு அவை அனைத்தும் இந்தியாவிற்கு எதிராக திரும்பி விடாமல் தடுத்தது உண்மையா இல்லையா ? இல்லை என்றால் அவற்றை எந்த திசையை நோக்கி வளர்த்துச்சென்றீர்கள் ?

4,பரிசுத்த பட்டம் தரமுடியாத இந்தியாவின் சார்பாக ஏன் புலிகளுடன் பேச்சு வார்த்தைக்கு சென்றீர்கள் ?

தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் இந்த நபரிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஈழ மக்கள் இந்த நரியை நம்ப வேண்டாம் என்றும் எச்சரிக்கிறோம்.

ஏஜெண்டுகள், உளவாளிகள் ஆசீர்வதிக்கிறேன் என்று கூறிக்கொண்டு பாதிரி வடிவிலும் வருவார்கள், அவர்களை தேவனுடைய பரலோகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் உங்களுக்குத் தான் உண்டு!

தொடர்புடைய இடுகைகள்:

ஐயோ…! இந்தியா நாசமாப் போ

ஈழம்- செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!

ஈழம் – கூத்தாடிகள், கூலிக் கவிஞர்களின் ஒப்பாரி! யார் இந்த ஜெகத் கஸ்பார் ?

உங்களில் யார் அடுத்த ஜெகத் கஸ்பர்?

ஜெகத் கஸ்பரின் ‘நாம்’ அமைப்பும், போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பும் விபசாரம் செய்யலாம்!

திடீரென விழித்தெழுந்த தேவதூதர்கள், ஈழத்தின் மெளனவலி பற்றிப் பேசினரா..?

http://vrinternationalists.wordpress.com/2009/11/25/ஜகத்-கஸ்பாரின்-கப்ஸாத்-த/