கள்ளச் சாராயத்துக்கு எதிராகப் போராடிய மனித உரிமைப் பாதுகாப்பு மைய (HRPC)த்தின்,  சேலம் மாவட்டப் பொருளாளர் அய்யனார் மீதுþ பொய் வழக்குப் பதிந்து கொலைவெறித் தாக்குதலை தொடுத்திருக்கிறதுþ வீராணம்போலீசு!

வீராணம் ஸ்டீல் பிளாண்ட் போலீசு நிலைய ஆய்வாளர் ரவிக்குமார், உதவி ஆய்வாளர்கள் விநாயகம்,  ஜீவானந்தம்; ஆட்டையாம்பட்டி போலீசு நிலைய ஆய்வாளர் ராஜாரணவீ ரன் மற்றும் இவ்விரு போலீசு நிலையங்களைச் சேர்ந்த 14 போலீசு அடங்கிய இக்கும்பல்þ கடந்த 9.8.09 அன்று காலை 7.00 மணியளவில் பொதுமக்கள் முன்னிலையிலேயே அய்யனாரை வீடு புகுந்து தாக்கி, கையை முறித்திருக்கிறது.

 

"கள்ளச் சாராயத்துக்கு எதிராகவா போராடுற... பொய்யாகவே கேசு போடுறோம்; உன்னால என்னடா புடுங்க முடியும்?'', "மனித உரிமை அமைப்புல கூட்டமாபோடுற,  இப்ப எந்த மனித உரிமை அமைப்பு உன்னக் காப்பாத்தும்; பாக்கலாம்'',  "வீராணம் ஸ்டேஷனுக்கு வர்றதுக்கு ஒரு இலட்சரூபாய் கடன் வாங்கி லஞ்சம் கொடுத்து வந்தேண்டா,  என் பொழப்புல மண்ணப் போட்டுட்டியேடா''  — அய்யனாரைத் தாக்கியபோது போலீசு உதிர்த்த வார்த்தைகள் இவை; அய்யனார் மீது கொலை வெறித் தாக்குதலைக் தொடுப்பதற் கான முகாந்திரமும் இதுதான்!

 

கடந்த இரண்டு வருடங்களாக இப்பகுதியில் இயங்கி வரும் மனித உரிமை பாதுகாப்பு மையம் (HRPC), மக்களுடைய அடிப்படை உரிமைகளுக்காகவும்; நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் அநியாயங்களில் தொடங்கி, போலீசு நிலையங்களில் நடைபெறும் கட்டப் பஞ்சாயத்துகள் வரைக்கும் அதிகார வர்க்கத்தின் அடாவடித்தனத்திற்கு எதிராகவும்; களத்தில் நின்று தொடர்ந்து போராடி வந்திருக்கிறது. குறிப்பாக, கள்ளச்சாராயத்துக்கு எதிரான உறுதியான போராட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கிறது.

 

இதனால் தனது "வருவாய்க்கு' வழியின்றி போன ஆத்திரத்தை அடக்கி வைத்திருந்த இக்கும்பல், தருணம் பார்த்து தாக்குதல் தொடுத்திருக்கிறது.

 

ஏற்கெனவே இப்பகுதி மக்கள் மத்தியில்þ கட்டப் பஞ்சாயத்து, கள்ளச் சாராய கும்பலுக்கு விசுவாசமாக இப்போலீசு மிருகங்கள் செயல்படுவது அம்பலமாகிப் போன நிலையில், இது "சட்டப்பூர்வ கிரிமினல்கும்பல்தான்'' என்பதை தன் நடைமுறை மூலம் மீண்டுமொரு முறை நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

 

இக்கும்பலின் இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சாத இவ்வமப்பினர், இதனை ஓர் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு இக் கும்பலின் கொட்டத்தை ஒடுக்கும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

— பு.ஜ. செய்தியாளர்þ சேலம்.