என்னடா, கத்திரிக்காய் வெண்டைக்காய் விற்கிற மாதிரி இப்படி தலைப்பை வெச்சு இருக்குதுன்னு நினைக்கின்றிர்களா? “உயர்கல்வியை சீர்திருத்தல் மற்றும் புத்தாக்கம் செய்தல்” குறித்த யஷ்பால் கமிட்டியின் உறுப்பினர் எம். ஆனந்தாகிருஷ்ணன் கொடுக்கும் தகவல்களை பார்த்தாலே உங்களுக்கு உண்மை புரியும் (டைம்ஸ் ஆப் இந்தியா, 10/10/2009).

கட்டுபாட்டில் உள்ள பல்கலைகழகங்களின் துணைவேந்தர் பதவி 10-20 கோடிகள். இந்த பணம் கவர்னர் மாளிகை முதல் தலைமைச்செயலகம் வரை செல்கிறது.

மருத்துவத்துறையில் எம் டி (M.D) படிப்பு — 1.5 கோடிகள்.

எம் பி பி எஸ் (M.B.B.S) — 50 இலட்சம்

இன்ஜினியரிங் சீட் (B.E) — 15 இலட்சம்

இந்தியாவில், தனியார் கல்வி நிறுவனங்கள் எல்லாம் குடும்ப கட்டுபாட்டில் இயங்குகிறது. தமிழ்நாட்டில், தி மு க வும், அ தி மு க வும் தனியார் கல்வி நிறுவனங்களில் இருந்து வரும் கருப்பு பணத்தால் இயங்குகிறது.

80% தனியார் கல்வி நிறுவனங்கள் வாங்கிய பணத்திக்கு உரிய ரசீது கொடுப்பதில்லை. PhD பட்டம் வெறும் 30 இலட்சத்திக்கு விற்கப்படுகிறது.

தனியார் பல்கலைகழக கலாச்சாரம் அழுகி நாறி கொண்டு இருக்கிறது.

****

மேலே கொடுக்கப்பட்ட தகவல் எல்லாம் புமாஇமு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ச. பரமானந்தம் கொடுத்தது அல்ல. “உயர்கல்வியை சீர்திருத்தல் மற்றும் புத்தாக்கம் செய்தல்” குறித்த யஷ்பால் கமிட்டியின் உறுப்பினர் எம். ஆனந்தாகிருஷ்ணன் கொடுக்கும் தகவல்கள்.

மாணவர்களே, சமூக ஆர்வாளர்களே, கல்வியாளர்களே இப்படி 10-20 கோடிகள் இலஞ்சம் கொடுத்து பதவிக்கு வரும் துணை(கொள்ளை)வேந்தர்கள் எப்படி அரசின் கல்வி தனியார்மய கொள்கையை (கொள்ளை) எதிர்பார்கள்?

எந்த கட்சியும் கல்வி தனியார்மயத்தை தடுக்காது. எல்லா ஒட்டுபொறுக்கிகளும் கூட்டு களவாணிகள் தான்.

மாணவர்களே, சமூக ஆர்வாளர்களே, கல்வியாளர்களே வீதியில் இறங்கி போராடாமல் அடிப்படை உரிமையான இலவச கல்வியை மீட்டெடுக்க முடியாது.