1927ம் ஆண்டு சீனாவின் ஹ_னான் மாகாணத்தில் நடைபெற்ற விவசாயிகளின் எழுச்சியினைக்குறித்து, அப்போதிருந்த தவறான புரிதல்கள் குறித்தும், கட்சியிலிருந்த வலதுசாரி பிரிவான சென் டூ ஷி தலைமையிலானவர்கள் மேற்கொண்ட விவசாய இயக்கத்துக்கெதிரான செயல் பாடுகள் குறித்தும் தோழர் மாசேதுங் தெளிவாக விளக்குகிறார்.

கோமிண்டாங்கைத்திருப்தி படுத்த விவசாயவர்க்கத்தை கைவிட்டு தொழிலாளிவர்க்கத்தை தனிமைப்படுத்தியதை அம்பலப்படுத்தி கண்டிக்கிறார். இந்த விவசாயிகள் இயக்கத்தினைப்பற்றி மேட்டுக்குடியினரும், செல்வந்தர்களும் ஏன் கட்சியிலிருந்த வலது பிரிவினரும் பேசியதற்கு மாறாக தன்னுடைய நேரடி பயணத்தின் விளைவாக கண்ட அனுபவபூர்வமான அறிக்கையே இந்த ஹ_னான் விவசாயிகள் இயக்கம் பற்றிய ஓர் ஆய்வறிக்கை 1927 ஹ_னானில் வளர்ந்த விவசாய இயக்கத்தினை இரண்டு காலகட்டமாக பிரிக்கலாம். முதல் காலகட்டம் 1926 ஜனவரிமுதல் செப்டம்பர் வரையிலானது.

 

அக்கட்டம் அமைப்பைக்கட்டும் காலகட்டம். அதில் ஜனவரி முதல் ஜூன் வரை தலைமறைவாக செயல்பட்டது.புரட்சிகர ராணுவம் சாவோ ஹெங் டியை (யுத்த பிரபு) விரட்டிய காலமே வெளிப்படையான காலமாகும். (ஜூலை முதல் செப் வரை). இந்த முதல் காலக்கட்டத்தில் 3 முதல் 4 லட்சம் வரைதான் உறுப்பினர்கள் இருந்தது. அமைப்பின் நேரடி தலைமையின் கீழிருந்த மக்களின் எண்ணிக்கை 10 லட்சத்தினைத்தாண்டவில்லை. ஆனால் இரண்டாவது காலகட்டமான 1926 அக்டோபர் முதல் 1927 ஜனவரி வரையில் சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தினைத்தாண்டியது.அதன் நேரடி தலைமையின் கீழிருந்த மக்களின் எண்ணிக்கையோ 1 கோடிக்கும் அதிகமானது. விவசாயிகள் தங்களின் பலத்தினை சார்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். நான்கு மாதங்களுக்குள்ளாகவே ஒரு புரட்சியைத்தோற்றுவித்தனர். மாபெரும் ஈடு இணையில்லா சாதனை இது.

 

விவசாயிகளின் முக்கியத்தாக்குதல் இலக்காய் இருந்தவை உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள். ஆனால் நிலபிரபுக்களை வீழ்த்துகிற போகிற போக்கில் வம்சா வரிக்கோட்பாடு, ஊழல் அமைப்புக்களுக்கெதிராக, மூட நம்பிக்கைக்கெதிராக தங்கள் போராட்டத்தினை கட்டியமைத்தனர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் நிலபிரபுக்களின் வாரிசாய் , தகுதியாய், வளர்ந்த சலுகைகள் தூள் தூளாக்கப்பட்டது. நிலபிரபுக்களின் அதிகாரத்தை பறித்து அங்கு விவசாய சங்கம் அமர்கிறது. இது வரை மக்களை ஒடுக்கியே வந்த அதிகாரம் இப்போது ஒடுக்கியவர்களை ஒடுக்கப்பட்டவர்களால் அடக்கப்போகிறது. மாபெரும் முழக்கம் உதயமாகிறது அது தான் ” அனைத்து அதிகாரமும் விவசாய சங்கங்களுக்கே “ அது நடைமுறையிலும் சாத்தியமாக்கப்படுகின்றது.

 

உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் ஆகியோர் பேசுவதற்கான எல்லா உரிமையும் மறுக்கப்படுகின்றது. பணத்தினைக்கொடுத்து சங்கத்தில் சேர முயற்சிக்கும் நிலப்பிரபுக்களுக்கு பதிலாய் தெறிக்கின்றன வார்த்தைகள் “தூ யாருக்கு வேண்டும் உன் எச்சில் காசு “.

 

 நான்கு மாதங்களுக்கு முன் மந்தையாக இருந்த (அழைக்கப்பட்ட) சங்கம் தான் இப்போது மிக மிக மதிப்புக்குரியது.நகரத்திற்கு தப்பி வந்த உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் ஆகியோர் உச்சரிக்கும் இது “பயங்கரமானது” என்ற சொல் முதலாளித்துவாதிகள் மட்டுமல்ல புரட்சிகர எண்ணம் கொண்டோரையும் பிடித்தாட்டியிருக்கிறது அதற்கு தெளிவாய் பதில் சொல்கிறார் மாவோ “இது அருமையானது”. ஆம் மக்களை கொன்று குவித்த நிலப்பிரபுக்களின் மீது இந்த பயங்கரமானது எத்தனை முறை விழுந்திருக்கும் ?

 

ஆனால் மக்கள் கிளர்ந்தெழுந்து நிலப்பிரபுக்களுக்கெதிராக போராடும் போது திருப்பி தாக்கும் போது பயங்கரமானது என்றவார்த்தைகள் மக்களை பாய்ந்து கடித்து குதறுகிறது. இதே போலத்தான் “சங்கம் தேவைதான் ஆனால் அத்து மீறுகிறார்கள்” என்ற போர்வையும்.

 

அத்துமீறிய உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்களுக்கு எதிராக கிளம்பாத வார்த்தை மக்களுக்கெதிராக கிளம்புகிறது. (இதை அப்படி நம்முடைய லால்கர், நந்திகிராமிற்கு பொருத்தியும் பார்க்கலாம் . அரச பயங்கவாதத்தினை பற்றி பேசாத வாய்கள் எல்லாம் மக்கள் நிலபிரபுக்களை விரட்டியவுடன் சொன்னது “அறிவில்லாத மக்கள் போலீஸ் ஸ்டேசனை கொளுத்தறாங்க, சீபீஎம் ஆபீசை கொளுத்தறாங்க, நிலப்பிரபுவை கொல்றாங்க “)

 

யாரை கீழ் மக்கள் என பணக்கார விவசாயிகள் இகழ்ந்தார்களோ அவர்கள் தற்போது பேரரசர்களாகிவிட்டார்கள் ஆம் மக்களின் ஆணைக்கிணங்க நிலப்பிரபுக்கள் சிறையிலடைக்கப்படுகிறார்கள். இப்புரட்சியின் முன்னணியாளர்கள் யார் தெரியுமா? ஏழை விவசாயிகள். மொத்த மக்கள் கிராமப்புற தொகையில் ஏழை விவசாயிகள் 70மூ, நடுத்தர விவசாயிகள்20மூ, பணக்கார விவசாயிகள் 10மூ இருக்கிறார்கள். அதிலும் அந்த 70 மூ ஏழை விவசாயிகளில் மிகமிக வறிய விவசாயிகள் 20மூ-ம் வறுமையில் வாடும் விவசாயி 50மூ பேரும் இருக்கிறார்கள். இந்த ஏழை விவசாயிகள் தான் நம்முடைய இலக்கு அவர்கள்ள்தான் இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள், இந்த இலக்கு தான் அந்த இலக்கினை (உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள்) தாக்கி அழிக்கும் என்கிறார் தோழர் மாவோ.

 

விவசாய சங்கம் குற்றம் இழைத்துவிட்டதாக கூறுபவர்களிடம் மாவோ சொல்கிறார் “உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்களுக்கெதிரான உழைக்கும் மக்களின் போர் இது . இது எவ்விதத்திலும் குறை கூறத்தக்கதல்ல .” என்று தான் பயணம் செய்த போது விவசாய சங்கத்தின் சாதனைகளை பட்டியலிடுகிறார்.

 

மாபெரும் 14 சாதனைகளை கூறும் மாவோ இப்புரட்சி சரியான திசை வழியில் செல்வதை தெளிவாக அறிகிறார்.மக்களை அமைப்பாக்கியதே மாபெரும் சாதனை . ஹ_னான் மத்திய மாவட்டத்தில் எல்லா விவசாயிகளும், தெற்கு ஹ_னானில் பாதி விவசாயிகளும், மேற்கு ஹ_னானில் தற்போது அமைப்பாக்கும் நிலையிலும் சங்கத்தில் இணைந்திருக்கின்றனர். ஆனால் சில மாவட்டங்களை அமைப்பு இன்னும் சேரவில்லை. நிலப்பிரபுத்துவ வர்க்கத்தினைத்தாக்கும் விவசாய சங்கம் தன் பலத்துக்கேற்றவாறு செயல் பாட்டில் இறங்குகிறது. அரசியல் ரீதியாக தாக்க கணக்குகளை சரி பார்ப்பது , அதாவது பொதுப்பணத்தினை கையாடல் செய்த தீய மேட்டுக்குடிக்கெதிரான நவடிக்கை, பணத்தினை மீட்பதோடு அந்தஸ்தினை அடித்து வீழ்த்தவும் பயன்படுகிறது. ஒழுங்கீனக்களுக்கெதிராக நன்கொடை வசூலிக்கப்படுகிறது. அத்துடன் அவன் தன் மானம் மரியாதையை முற்றிலும் இழக்கவும் வைக்கிறது சங்கம். நன்கொடைகள் மூலம் தண்டனை வழங்கப்படுகிறது.

 

 உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள். நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் மிகவும் முக்கியமானவை. சியாங்டன்-ல் 15000 விவசாயிகள் தீய மேட்டுக்குடியினரின் வீட்டில் நுழைந்து துவம்சம் செய்து 4 நாட்கள் தங்கி தின்று தீர்க்கின்றனர். பின்னர் வழக்கமான அபராதம் வேறு. உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் ஆகியோரை தெருவில் காகிதத்தொப்பி அணிந்து இழுத்து வரும் இந் நிகழ்வு மக்களிடையே மிகவும் வரவேற்பினை பெற்றிருக்கிறது. முன்னர் நிலபிரவின் ஆணைக்கிணங்க சிறையில் தள்ளிய நீதிபதி தற்போது விவசாய சங்கம் காலையில் சொன்னால் மதியம் பிடி ஆணை பிறப்பிக்கப்படுகிறார். மிக மோசமான குற்றங்கள் புரிந்த உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் தன் வசதிக்கேற்றவாறு தப்பி ஓடுகின்றனர்.

 சிலர் திருப்பி அரசால் திருப்பி கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மிக மிக மோசமான கொடுங்கோலர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கான குறிப்புக்கள், மற்றும் அவன் இழைத்த குற்றங்கள் என அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான விவசாயிகளை வறுமையால் கொன்றவன், பிச்சைக்காரர்களை கொன்று ஆரம்பிக்கின்றேன் என சொன்னவன் என முக்கிய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

 

ஹ_னான் மாகாணத்தில் விவசாய சங்கத்தின் அதிகாரத்தின் கீழுள்ள பகுதிகளில் எல்லாம் எங்குமே தானிய பதுக்கலோ, வெளியே அனுப்புவதோ, விலையேற்றம் செய்வதோ முற்றிலும் இல்லை. தடை செய்யப்பட்டுள்ளது. குத்தகையை காரணமின்றி அடிக்கடி உயத்தி கொள்ளை அடித்தல் முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. டூ எனப்படும் மாவட்டமும் டூவான் எனப்படும் மாவட்ட நிர்வாகமும் தற்போது அமைதியாய் ஒதுங்கியிருப்பதைத்தவிர வேறு வழியில்லை என்றாகிவிட்டது.

 

மக்களை சித்திரவதை செய்யும் போலீசு இப்போது ஒதுங்கிச்செல்கிறது. நிலப்பிரபுக்களின் ஆயுதப்படைய தூக்கியெறிந்துவிவசாயிகள் தங்களின் படைகளை நிறுவியிருக்கிறார்கள். சியாங் சியாங்-ல் 100000 ஈட்டிகளும்,மற்ற மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஈட்டிகளும் இருக்கின்றன. “ஈட்டியை கண்டு உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் தான் பயம் கொள்ள வேண்டும். புரட்சியாளர்கள் அல்ல” சீனாவில் மதிக்கும் எந்த ஒரு சாதாரண மனிதனும் அரசியல் ஆதிக்கம் (மாகாண அமைப்பு முறை), குல ஆதிக்கம், கடவுளாதிக்கம் என 3 வகையான ஆதிக்கத்தின் கீழ்தானிருக்கின்றனர். ஆனால் பெண்கள் இந்த மூன்றையும் சேர்த்து கணவன் ஆதிக்கத்திலும் உழல்கின்றனர்.

 

நிலபிரபுத்துவத்துக்கெதிரான இப்போராட்டம் நான்வகை ஆதிக்கத்தையும் தகர்க்கிறது. பெண்களுக்கு சம உரிமை என சுதந்திரம்ஜனனாயகம், சமத்துவம் என அனைத்தும் பரவலாக்கப்படுகிறது. இந்தப்புரட்சி மாபெரும் கல்வி அறிவினை மக்களுக்கு கொடுத்திருக்கிறது, அன்னியப்பாணி கல்வியினை வெறுத்த மக்கள் சீனப்பாணி கல்விமுறையை ஆவலோடு கற்கிறார்கள்.அரசியல் கல்வில் இரு குழந்தைகள் விளையாடும் போது கூட ஒன்று ஏகாதிபத்தியம் ஒழிகஎன முழக்கமிடுவதன் மூலம் மக்களிடம் ஆழமாக வேறூன்றியுள்ள அரசியலை அறியமுடிகிறது. தீய பழக்கங்கள் சூதாட்டம்,ஆபாச நடனம், அபின் புகைத்தல், சாராயம் காய்ச்சுதல் தடை செய்யப்பட்டு ஒழிக்கப்பட்டு விட்டது.


mao__2_copy

 

எருதுகள் கொல்வதற்கும் தடையும், கோழிகள், வாத்துகள், பன்றிகள், வளர்க்க கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. கொள்ளையடித்தல் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, கொள்ளையர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். மேலும் மிக அதிகமான நன்கொடை கூட தடை செய்யப்பட்டிருப்ப்து என்பது பணக்கார விவசாயிகள் மத்தியில் கூட நல்லபெயரை கொடுத்து இருக்கிறது. கடனுக்காக கூட்டுறவு இயக்கம், தானியத்துக்கான கூட்டுறவு என பலவும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பல்லாண்டுகளாக போடப்படாத சாலை, தூர்வாரப்படாத குளங்கள் என அனைத்தும் சாத்தியமாகி இருக்கின்றன அதுவும் நான்கு மாதங்களில்……….

 

இது மக்களின் போராட்டமே உழைக்கும் விவசாயிகளின் புரட்சியே என்பதனை ஆணித்தரமாக நிறுவுகிறார் தோழர் மாசேதுங். இதை ஆதரிக்கவேண்டியது நம் கடைமை என்றும் அப்போதிருந்த வலது தலைமை புரட்சியை புறக்கணித்தது தவறு என்பதயும் தெளிவிக்கிறார். இப்புத்தகத்தினை படிக்கும் போதே கவர்ந்த விசயம் என்னவெனில் அந்த எழுத்து நடை நம்மை அவருடனே (மாவோ) பயணிக்கவைக்கிறது.

 

புத்தகம் முடிந்தவுடன் அவரின் வார்த்தைகள் ஆழமாய் பதிகின்றன

 

” ஒரு புரட்சி என்பது மாலை நேர விருந்தோ, ஒரு கட்டுரை எழுதுவதோ, ஓவியம் தீட்டுவதோ, பூத்தையல் வேலைப்பாடோ அல்ல……….. ஒரு புரட்சி நிதானமுள்ளதாகவும் பொறுமை, கருணை, பெருந்தன்மையுள்ளதாக இருக்க முடியாது. புரட்சி என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தினை தூக்கி எறிவதாகும். இது ஒரு பலாத்த்கார நடவடிக்கை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்திருக்கும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தை ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பலத்தை பிரயோகிக்காது சாத்தியமில்லை. சக்திமிக்க எழுச்சி மட்டுமே லட்சக்கணக்கான விவசாயிகளை தட்டி எழுப்பி பலம் வாய்ந்த சக்தியாக உருவாக்க முடியும்”

 

கேடயம் வெளியீடு,

விலை 20ஃ- தற்போது மிகவும் கிடைப்பதற்கு தட்டுப்பாடான நூல்