முன்பக்கம் இரயாகரன் - சமர் அநாதையாகவே மரணித்த பிரபாகரனும், காட்டிக் கொடுத்த துரோகிகளும்

உலாவுவோர்

We have 154 guests online

உலாவியோர்

Content View Hits : 4893026
Visits [+/-]
Today:
Yesterday:
Day before yesterday:
307
2474
2577

-103
This week:
Last week:
Week before last week:
16787
11797
11230

+567
ஞாயிறு, 01 ஆவணி 2010
 


அநாதையாகவே மரணித்த பிரபாகரனும், காட்டிக் கொடுத்த துரோகிகளும்

E-mail Print PDF
எழுத்து (பெருப்பிக்க - சிறுப்பிக்க)

பெருப்பிக்கசிறுப்பிக்க

எத்தனையோ மக்களை அனாதையாகக் கொன்றவர்கள் புலிகள். ஆனால் தன் தலைவரை அதே மாதிரி கொன்று போட்டுள்ள போது எதுவும் நடவாத மாதிரி நடிக்கின்றனர். பிரபாகரனின் உடலை தங்கள் தலைவரின் உடலல்ல என்று கூறி, மீண்டும் அவரை அனாதையாகவே தூக்கியெறிந்தனர். இப்படி அனாதையாக மடிந்த பிரபாகரனுக்கு, இன்று யாரும் அஞ்சலி கூட செலுத்த முன்வரவில்லை. 

 

ஆனால் இதைக் கச்சிதமாக செய்து முடித்தவர்கள், தாங்கள் செய்த துரோகத்தை மூடிமறைக்க நாடு கடந்த தமிழீழம் என்கின்றனர். மறுபக்கத்தில் பினாமிச் சொத்தைக் கைப்பற்ற, இந்த நாடு கடந்த தமிழீழம் உதவும் என்றும் நம்புகின்றனர். இதற்கமைய ஒரு துரோகத் தலைமை ஒன்றை, புலம்பெயர் மண்ணில் கட்டியெழுப்பும் அறிக்கைகள், விளக்கங்கள்.    

 

மக்கள் புழுதியை வாரித் திட்டுகின்றனர். வழுதியோ தங்கள் துரோகத்தை, நாடு கடந்த தமிழீழம் மூலம் மூடிமறைக்க முனைகின்றார். பத்மநாதன், உருத்திரகுமார், வழுதி என்று அனைவரும் சேர்ந்து நடத்திய இந்த துரோகத்தை, தியாகமாக காட்;ட முனைகின்றனர். இதையே சமூகத்தின் விளைநிலமாக்க முனைகின்றனர்.

 

வேடிக்கை என்னவென்றால் யாருடன் சேர்ந்து தங்கள் தலைமையைக் காட்டிக் கொடுத்தனரோ, அவர்களுடன் சேர்ந்து நாடு கடந்த தமிழீழம் அமைப்பது பற்றி கூறுகின்றது, இந்த சதிகாரக் மாபியாக் கும்பல். 

 

பச்சைப் பொய்காரர்கள். புலுடாப் பேர்வழிகள். அறிவும் நாணயமுமற்ற, முடிச்சு மாற்றிகள். மக்கள் மேல் தொடந்து சவாரி விடமுனைகின்றனர்.

 

வழுதி கும்பல் தம்மை மூடிமறைக்க கூறுவது போல் "ஏதோ ஒரு நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. ஆனால், அது வெளியிலிருந்து யாராலும் கொடுக்கப்பட்டதல்ல" என்பது அப்பட்டமான பொய். 

 

மாறாக புலித்தலைமையை சரணடைய வைத்தவர்கள் இவர்கள். சர்வதேச சூழ்ச்சி மூலம் கொன்றவர்கள் இவர்கள். அதில் சம்பந்தப்பட்டவர்கள் இவர்கள். இவர்கள் இதுவரை எதையும் மக்களுக்கு சொன்னது கிடையாது. கடைசி மணி நேரத்தில், பல மணி நேர உரையாடலை நடத்தியவர்கள் இந்த சதிகாரர்கள். எதைப்பற்றி என்று சொல்லவேயில்லை. துரோகத்தை எப்படி மக்களுக்கு சொல்ல முடியும். எதையும் மக்களுக்கு சொல்ல துணிவில்லை. தங்கள் சதியையும், சூழ்ச்சியையும், எப்படித்தான் மக்களுக்கு சொல்லமுடியும்.

 

வழுதி இதை மறுத்து தம்மை பாதுகாக்க விடையத்தை புரளியாக்கி கூறுவதைப் பாருங்கள். "தலைவர் அவர்கள் நம்ப வைத்து ஏமாற்றப்பட்டிருக்கின்றார் என்றும், "உரிய நேரத்தில் வந்து இறங்கிக் காப்பாற்றுவோம்" என்று சொல்லி "யாரோ" அவரை ஏமாற்றி விட்டார்கள் என்றும் ஒரு கதை உலாவுகின்றது" இது பொய் என்கின்றார். சரி இது பொய் என்றால், இதைவிட என்னதான் நடந்தது. நீங்கள் என்னதான் நாட்கணக்காக கதைத்தீர்கள். அப்படி என்னதான் இருந்தது கதைக்க. யாரை ஏமாற்றுகின்றீர்கள்?

 

வழுதியின் அதே கட்டுரையில் இந்த சதிக்கு பதில் உண்டு. "போரை இடைநிறுத்தி, ஆயுதங்களை "மௌனிக்கச் செய்வதற்கு" மே 15, வெள்ளிக்கிழமை, இலங்கை நேரம் பிற்பகல் அளவிலேயே விடுதலைப் புலிகளின் தலைமை முன்வந்தது." என்கின்றார். அப்படியாயின் எதன் அடிப்படையில்? எந்த நம்பிக்கையின் அடிப்படையில்? அதை உங்களிடம் ஏன் சொல்ல வேண்டும்? இதில் உங்கள் பங்கு என்ன? 

 

இப்படி ”வழுதி கூட்டம்” நடத்திய அந்தச் சதியை "அப்போது என்னைத் தொலைபேசியில் அழைத்த நடேசன் அண்ணை - ஆயுதங்களைக் கைவிடத் தாம் தயாராக இருப்பதாகவும், சம்மந்தப்பட்டவர்களை வந்து இறங்கி மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சொல்லும்படியும், தலைவர் அவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்றும்  என்னிடம் சொன்னார்; எனது பங்கு நடவடிக்கைகளை நான் எடுத்தேன்" என்கின்றார். சரி அந்த "சம்மந்தப்பட்டவர்களை வந்து இறங்கி" என்றால், அவர்கள் யார்? முதல் அதைச் சொல்.  "உரிய நேரத்தில் வந்து இறங்கிக் காப்பாற்றுவோம்" என்றது பொய்யல்ல, அது  "சம்மந்தப்பட்டவர்களை வந்து இறங்கி" என்றதைத்தான் குறிக்கின்றது. "எனது பங்கு நடவடிக்கைகளை நான் எடுத்தேன்" என்றால், யாருடன் சேர்ந்து இந்த சதியைச் செய்தாய்? அதைச் சொல்.

 

"இதே தகவல் - பத்மநாதன் அண்ணனுக்கு சூசை அண்ணனால் சொல்லப்பட, அவரும் உருத்திரா அண்ணனும் தமது பங்கு நடவடிக்கைகளை எடுத்தனர்." சரி என்ன நடவடிக்கை? யாருடன் சேர்ந்து? இப்படித்தான் "தமது பங்கு", "எனது பங்கு" என்பதன் மூலம் தான், அவர்கள் இறுதியில் அழிக்கப்பட்டார்கள். அதுதான் உண்மை. 

 

"வேறும் சில நண்பர்கள் வேறு சில முனைகளால் தமது முயற்சிகளை எடுத்தனர்." சரி அவர்கள் யார்? எப்படி? என்ன முயற்சி, யாருடன்? இங்குதான் சதி, சூழ்ச்சி என எல்லாம் அடங்கிக்கிடக்கின்றது.

 

"ஆனால் - விடுதலைப் புலிகளின் தலைமை அவ்வாறு முன்வந்த போது, எல்லாம் காலம் கடந்தவையாக ஆகிவிட்டிருந்தன." என்றால், காலம் கடக்காவிட்டால் அது என்ன? யாருடன் சேர்ந்த சதி.

 

இங்கு ஆயுதம் கைவிடப்பட்டு சரணடைவு உங்கள் ஓத்துழைப்புடன் மே 15 நடந்தது. அதுதான் உண்மை. என்ன நடந்தது, எப்படி நடந்தது, யாருடன் சோந்து நடந்தது என்று அனைத்தும், இந்த சதியில் பங்கு கொண்ட உங்களுக்கு நன்கு தெரியும். அதை மக்களுக்கு சொல்ல மறுப்பது சதி, சூழ்ச்சி.

 

இதையெல்லாம் மூடிமறைக்க, புலித் தலைவர் சரணடையவில்லை என்கின்றீர்கள்; சண்டையில் வீரமரணம் அடைந்தார் என்கின்றீர்கள். இப்படி சொல்லும் இவர்கள், நடந்த உண்மையை மறைத்து முழுப்பூசனிக்காயை சோற்றில் புதைக்க முனைகின்றனர். எப்படிப்பட்ட பொய்யர்கள், மோசடிக்காரர்கள் இவர்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

 

1. நடேசன், புலித்தேவன் சரணடைந்தபோது தான் கொல்லப்பட்டனர் என்று கூறியவர்கள் இவர்கள். இதை பல்வேறு தகவல் உறுதிசெய்கின்றது.

 

கேள்வி: இந்த சரணடைவு எப்படி, ஏன் நடந்தது. இது எந்த அடிப்படையில் நடந்தது. புலிகள் இங்கு புலிகளாகவே சரணடைந்தது உண்மையாகின்றது. இந்த வகையில் புலித்தலைவர் பிரபாகரனின் சம்மதத்துடன் சரணடைவு நடந்தது தெளிவாகின்றது. அவர்கள் சரணடைந்து உண்மையென்றால், மற்றவர்களும் தான்.

 

நடேசனும், புலித்தேவனும் துரோகம் செய்வதற்காக சரணடையவில்லை என்றால், இதை தலைமை வழிநடத்தியது என்றால், மற்றவர்களும் அதே வகையில் தான் சரணடைந்தனர்.

 

2. புலிகள் அறிவித்த அடுத்த முக்கியமான தகவல், ஆயுதப் பயன்பாட்டை நிறுத்தியது. இதை பத்மநாதன் அறிவித்திருந்தார். ஆயுதப் பயன்பாட்டை நிறுத்தியது என்றால், அது ஒட்டுமொத்தமான சரணடைவுதான். ஆயுதப் பயன்பாட்டை நிறுத்திய பின், எப்படி வீரமரணம் அடைய முடியும். தலைவர் சண்டையில் வீரமரணம் அடையவில்லை. சரணடைந்த பின், மரணம் நிகழ்ந்தது. 

 

இப்படி புலிகள் சரணடைந்தனர் என்பதை இந்த தகவல் தெளிவாக உறுதி செய்கின்றது. இதன் பின் தான் சித்திரவதை செய்யப்பட்டதும், அவர்கள் கோரமாக கொல்லப்பட்டதும் தெளிவாகின்றது. இந்த மரணத்தை ஓட்டி புலியல்லாத பல்வேறு தரவுகளும் இதை உறுதிசெய்கின்றது.

 

இப்படியிருக்க இதை மூடிமறைத்து, பிரபாகரனை அனாதையாக்கியே கொன்று போட்டவர்கள் இவர்கள். இன்று பொய்யும் புரட்டுகளுடன், நாடு கடந்த தமிழீழம் என்ற கூழ்முட்டையுடன் பவனி வருகின்றனர்.

 

இவர்கள் யார்? இந்த யுத்தத்தின் போக்கில் புலித்தலைமையை சுற்றிவளைத்து அழிப்பதற்கு ஏற்ற, சர்வதேச வலைப்பின்னலில் நின்று புலித் தலைமையை வழி நடத்தியவர்கள். இதற்காக நீண்ட பல காலமாக முயன்றவர்கள்.  அதை வழுதி "ஆயுதங்களை மௌனிக்கச் செய்துவிட்டு மூன்றாம் தரப்பு ஒன்றுடன் ஒத்துழைக்குமாறு கடந்த 9 மாத காலமாக - குறிப்பாக 2009 இன் தொடக்கம் முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை வேண்டப்பட்டது" என்கின்றார். யாரால்? ஏன்? அதில் உங்கள் பங்கு என்ன? இதற்கமைய நீங்கள், வேண்டுதல்காரருடன் எப்படி ஒத்துழைத்தீர்கள். நீங்கள் நடத்திய சதி, சூழ்ச்சிகள் தான் என்ன?

 

ஒரு விடுதலை இயக்கத்தை வழிநடத்த எந்த அறிவுமற்ற ஒரு மாபியாக் கும்பலின் தலைவரை, மாபியாப் பாணியில் அழித்தவர்கள் தான், இன்று நாடு கடந்த தமிழீழத்தை முன்வைக்கின்றனர்.

 

இந்த அழித்தொழிப்பில் இவர்களுடன் இலங்கை அரசு அல்லாத, சர்வதேச புலனாய்வு தரப்பு ஈடுபட்டது. தங்கள் நிலைமை பற்றி மக்களுடன் பேசாத புலித்தலைமை, இந்த சர்வதேச மாபியாக் கும்பலுடன் நாள் கணக்காக கதைத்துள்ளது. அவர்கள் என்ன கதைத்தனர், யாருடன் எதற்காக, ஏன் கதைத்தனர், என்று எதுவும் மக்களுக்கு தெரியாது.

 

புலத்து மண்ணில் பல பத்தாயிரம் மக்கள் வீதியில் நிற்கும் ஒரு பின்னணியில், இந்தச் சதி அரங்கேறியது. மக்களுக்கு எதுவும் தெரியாது, தெரியக் கூடாது என்பது, இந்த சதிகாரக் கும்பலின் நோக்கமாக இருந்தது. இந்த சதியில் ஈடுபட்டவர்கள், அதை மூடிமறைத்தபடி   நாடு கடந்த தமிழீழம் என்கின்றனர் இந்த மர்மமான மாபியாக் கும்பல்.

 

"ஆயுதங்களை மௌனிக்கச் செய்துவிட்டு மூன்றாம் தரப்பு ஒன்றுடன் ஒத்துழைக்குமாறு கடந்த 9 மாத காலமாக - குறிப்பாக 2009 இன் தொடக்கம் முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை வேண்டப்பட்டது" இந்த அடிப்படையில் வழிநடத்தப்பட்ட போராட்டம், "உரிய நேரத்தில் வந்து இறங்கிக் காப்பாற்றுவோம்" என்ற புலத்து புலித்தலைமையின் துரோகத்துடன் தான் முடிவுக்கு வந்தது. 

 

பி.இரயாகரன்
03.07.2009

 

Trackback(0)
கருத்துக்கள் (11)Add Comment
THAMILAKA PULIKAL THONDRUM NAL
பதிந்தவர் mannan, July 17, 2009
LTTE MAY DIE BUT ONE GROUP WILL FORM AT TAMILNADU BY THE REAL TAMIL PEOPLES. THEY WILL LEAD ALL THE PROBLEMS TO THE TAMIL PEOPLE . THIS WILL OCCUR SOON .

THIS IS THE ONLY SOLUTION FOR THE TAMIL PEOPLE.
...
பதிந்தவர் asa, July 06, 2009
asasaaas
vithandaavaathaam
பதிந்தவர் Silanthi, July 06, 2009
iyaa iraiyaakaran avarkale nirum kulampi mattavarariyum kulapuvathu sariyaa?
...
பதிந்தவர் valavan, July 04, 2009
தமிழர் போராட்டம் அளிக்கபட்டு விட்டது. வல்லமை பொருந்திய தலைமை அகற்ற பட்டு விட்டது .இனி வரும் எவராலும் எவ்வழியிலும் போராட்டத்தை நடத்த முடியாது. தமிழர் , தனி அரசு என்பதெல்லாம் வெறும் கனவே .எனவே புலம்பெயர் உறவுகள் இனியும் இந்த நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டாம் .எவரிடமும் ஏமாற வேண்டாம் . குந்தி இருந்து சிந்தியுங்கள் .
To kuveni
பதிந்தவர் knowukumaran, July 04, 2009
Dear kuveni still you bleive that prabha with alive no no.some dummi tigers like you
will never bleive that he will die. yes he surrender to forces like a cat.forcers killed
him like how he kill other innocents.ok
திரை மறைவில் புலிகள்
பதிந்தவர் thsrmi, July 04, 2009
புலிகள் போரில் தோர்க்கடிக்கப்பட்ட ு உண்மைதன் ஆனால் புலித்தலைமகள்
இப்பவும் இயங்கிகொண்டே இருக்கிறது
அதாவது என்கருத்துப்படி பொட்டு அம்மானோ அல்லது பிரபா கரன் கூட உயிருடன்
இருக்கல்லாம்

நாங்கள் சாகவில்லை உயிருடன் இருக்கிறோம் என்றுசொன்னால் உலகனாடுகள்
சபாஸ் வாங்கோ ஆயுதமும் பணாமும் தருகிறோம் என்றா சொல்வார்கள்?
அல்லது நாடுகடந்த தமிழீழ அரசுதான் சத்தியப்படுமா?

மட்டகள்ப்பு திருகோணமலை அம்பாறை மணலாறு காட்டுப்பகுதியில் இருந்தபுலிகள்
எல்லாம் எங்கே என்றகேள்வி கூட உங்களுக்கு எளாமல் இருப்பது ஆச்சரீயமாக இருக்கு
பிரபாகரன் பொட்டு செத்துவிட்டதாக பத்மநாதன் சொன்னால் தான் புலிகளின் தூண்டுதலால் இல்லை புலம் பெயர்ந்தவர்களின் விருப்பமும் தமிளரின் விருப்பமும்
நாடுகடந்த தனியரசு சத்தியம்
அன்புடன் தர்மி1985


மூடு மந்திரமும் முட்டாள் கேள்விகளும்….
பதிந்தவர் Kuveni, July 04, 2009
இரயாகரன் அவர்களே..! இதற்குள் வரும் சிலரின் முட்டாள் கேள்விகளால் உங்கள் குறிக்கோள் சாடையாக நிறைவேறத் தொடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். உங்கள் முட்டாள் கருத்துக்களால் பல முட்டாள் கேள்விகள் எழுகின்றன!
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் போரிட்டு மாண்டாலும் மாள்வாரே தவிர……மகிந்த அனுப்பி வைத்த சிங்கள நாய்களின் கால்களில் ஒரு போதும் சரணடைய மாட்டார்!! இது வரை வந்த செய்திகளின் வாயிலாகவாவது இந்த உண்மையை எப்போதோ மூடர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.
கடந்த கால வீரத்தமிழர் வரலாற்றில் போர்த்தலைவர்கள் ~சரணடைதல்” என்பது எள்ளளவும் கிடையாது.(கருணா போன்ற துரோகிகளைத் தவிர). இலங்கை வேந்தன்- இராவணன் முதல் எல்லாளன் வரை போரிட்டு மாண்டார்களே தவிர சரணடைந்தது கிடையாது. இதிலும் தமிழீழத் தலைவன் பிரபாகரன் அவர்கள் சரணடைந்தார் என்று நாக்கூசாமல் பேசுபவர்கள் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவது மேல்!!
இப்போ இரயாகரன் போன்றவர்கள் “சரணடைந்தார்” என்ற வார்த்தைப் பிரயோகத்தை அடிக்கடி பாவிப்பதன் மூலம் வீரத்தமிழர் வரலாற்றை மாற்றியமைக்கும் வேடிக்கை விநோதங்களை புரியத் தொடங்கியிருக்கிறார கள்.
பிரபாகரனின் மகன் - சாள்ஸ் அன்ரனியும், மகள் - துவாரகா வும் கடைசிமணித்துளிகள் வரை களத்தில் நின்று போராடித்தான் மரணித்தார்கள்! அந்தச் சின்னஞ்சிறு பிஞ்சுகளே போராடி மரணித்தார்கள் என்றால்…..மிகுதியை நான் சொல்லித் தெரியத்தேவையில்லை… றிவுபூர்வமாக யோசிக்கத் தெரிந்தவன் அதிக கேள்விகள் கேட்டு…இரயாகரன் போன்றவர்களின் குசும்புக் கதைகளுக்கு தாளம் போடமாட்டார்கள். தமிழ் மக்களின் உணர்வுகளை திசை திருப்பும் திருகுதாள வேலைகளுக்கு சிங்கள அரசும் கருணாவின் நாய்ப்படையும் அதிக ஊதியம் கொடுக்கிறது என்பதும் யாரும் சொல்லித் தெரியத் தேவையில்லை! ஊதியத்தை பெற்று நன்றாக வாழுங்கள்- யாரும் தடுக்கவில்லை. ஆனால் வரலாற்றைத் திரிக்கும் வேலையில் மட்டும் கை வைக்காதீர்கள். காலம் உங்களை எப்பவும் தாலாட்டிக் கொண்டு இருக்கும் என்றும் கற்பனை செய்யாதீர்கள்.
நன்றி
குவேனி.
...
பதிந்தவர் Oviya, July 03, 2009
Rayakaren,

You contradicts within your 2 articles. See below.

துரோகக் குழு - Rayakaren????????????????????????????

//மறுபக்கத்தில் துரோகக் குழுக்கள், இந்த போர்க்குற்றத்தின் பின் இருந்துள்ளனர். பிரபாகரனை மோசடி மூலம் மூன்றாம் தரப்பிடம் சரணடையவைத்துக் கொன்றவர்கள் தான், படத்தை பெருமையுடன் வெளியிட்டார்கள். வேறு யாருமல்ல இந்தியாவில் றோவின் கூலிப்படையாக இருக்கும் ஈ.என்.டி.எல்.எவ் இணையம் இந்தப் படத்தை வெளியிட்டவுடனேயே, சிறிது நேரத்தில் அதை அகற்றியிருந்தனர்//


//ஆனால் இதைக் கச்சிதமாக செய்து முடித்தவர்கள், தாங்கள் செய்த துரோகத்தை மூடிமறைக்க நாடு கடந்த தமிழீழம் என்கின்றனர். மறுபக்கத்தில் பினாமிச் சொத்தைக் கைப்பற்ற, இந்த நாடு கடந்த தமிழீழம் உதவும் என்றும் நம்புகின்றனர். இதற்கமைய ஒரு துரோகத் தலைமை ஒன்றை, புலம்பெயர் மண்ணில் கட்டியெழுப்பும் அறிக்கைகள், விளக்கங்கள்.

மக்கள் புழுதியை வாரித் திட்டுகின்றனர். வழுதியோ தங்கள் துரோகத்தை, நாடு கடந்த தமிழீழம் மூலம் மூடிமறைக்க முனைகின்றார். பத்மநாதன், உருத்திரகுமார், வழுதி என்று அனைவரும் சேர்ந்து நடத்திய இந்த துரோகத்தை, தியாகமாக காட்;ட முனைகின்றனர். இதையே சமூகத்தின் விளைநிலமாக்க முனைகின்றனர்.//
...
பதிந்தவர் Asokan, July 03, 2009
Daer Kuvani,

Please come to the real world. We all have lived past 30 years a fantasy world.
We all had a Hero. This is not a cinema any more.

Time for all of us to reality thinking. This is time to identify and expose enemies who helped India, America, GB, Europe and Japan to kill Prabaharan.
பிரபாகரன் குடும்பம் என்ன ஆனது ?
பதிந்தவர் அறிவுடைநம்பி, July 03, 2009
இரயாகரன்,

நான் உங்களை மிகவும் விமர்சித்தவன். சரி ! பிரபாகரன் குடும்பம் என்ன ஆனது என்றா தலைப்பே உங்களுக்கு கோபத்தைக் கொடுக்கும் - ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கொல்லப்பட்ட போது, கொல்லப்பட்டுக் கொண்டிருக்கப்படும் ோது, பிரபாகரனைப் பற்றி மட்டும் நான் கேட்பதும் கவலைப்படுவதும் உங்களைக் கோபப்படுத்தும் ஒன்றுதான். இது தமிழினப் பிரச்சனை விட்டு கவனத்தை திசை திருப்பும் ஒன்றுதான்.

ஆனால், எங்கள் நிலைமைகளையும் புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் அப்பாவி தமிழக மக்கள். ஓட்டுக் கட்சிகளால், தொப்புள் கொடி உறவு என்ற பெயரில், ஈழமக்களின் மீதான இந்திய வல்லாதிக்கத்தை நாங்கள் உணரவியலாத அளவு, முனை(ள) மழுங்கச் செய்யப்பட்டவர்கள், நாங்கள்.

நான் மார்சிச பார்வைக் கொண்டவன் எனினும், தமிழினத்திற்கே உரியதான தனிநபர் வழிபாடு (Heroism), நான் மார்சிசத்தை எல்லாம் கற்பதற்கு முன்பிருந்தே எங்களுக்கு ஊட்டப்பட்ட ஒன்று. அதிலிருந்து நாங்கள் மெல்ல மெல்ல வெளிவருகின்றோம். ஆனால், ஒரு தமிழன் என்ற முறையில், எங்கள் காவியத்தலைவனாக சுவிகரித்த பிரபாகரன் என்னதான் ஆனார் ? அவர் குடும்பம் என்ன ஆனது ?

தற்போது, ம.க.இ.கவின் வெளியிடுகள் மூலமாக ஓரளவு புலிகளின் பாசிச அரசியல், சர்வதேச அரசு அதிகார வர்க்கதால் அதற்கு அவர்கள் எவ்வாறு மிக நல்ல முறையில் திட்டமிடப்பட்ட முறையில் தயார் செய்யப்பட்டார்கள், பின்பு அவர்களாலே அவர்கள் எவ்வாறு காட்டிக் கொடுக்கப்பட்டார்கள என்பது எமக்கு விளங்குகிறது.

ஆனால், உம்மாலேயே ஒரு அப்பாவியான தேசப்பற்றுள்ள இளைஞனான பிரபாகரன் எவ்வாறு பாசிசமயப்படுத்தப்ப ்டார் என்று அறிய முடிகிறது. அதாவது, நீரே பிரபாகரன் ஒரு அப்பாவி என்று ஒப்புக் கொண்டிருக்கின்றீர் ள்.

உண்மையைச் சொல்லுங்கள். பிரபா, அவர்தம் புதல்வர்கள், புதல்வி, மனைவி ஆகியோர் என்ன ஆனார்கள் ?

இந்தியாவில் இருந்து வெளி வருகின்ற நக்கீரன், ஜூ.வி முதலான கியுபிராஞ்சு பத்திரிக்கைகளைப் படித்தால் எரிச்சல் தான் வருகின்றது.

அறிவுடைநம்பி

அறிவுடைநம்பி
இரயாகரனின் உறுதியான கண்டுபிடிப்பு
பதிந்தவர் Kuveni, July 03, 2009
பிரபாகரன் அவர்கள் சரணடைந்தாராம்…..இரயாகரன் அதை இப்போ உறுதி செய்கிறாராம்!! பெரிய கண்டு பிடிப்பு…..! வாழ்த்துக்கள்!
சரணடைந்த போது யாரும் ; ஒளித்து நின்று புகைப்படங்கள் எடுத்திருப்பார்களே?? அவற்றைப் போட மறந்து விட்டீர்களோ? ஏன்…இலங்கை அரசாங்கத்துக்கும் சரணடைதல் வித்தைகளை படங்களாக்கிப் போட யாரும் கடைசி நேரம் உதவவில்லைப் போலும்! இரயாகரன் அவர்கள் அந்த மாஜ்மால வித்தைகளுக்கு உதவியிருக்கலாம் வேலைப் பழுவில் மறந்துவிட்டார் போலும் … இஒரு சிறு ஐடியா தான். காலம் போகவில்லை. முயன்று பாருங்கள்.
“நாடு கடந்த தமிழரசு” ஒன்று உருவாக முதல் …எவ்வளவு கஷ்டப்பட்டு அவற்றைக் குட்டிச்சுவராக்கலா ோ…அவ்வளவுக்கு முயற்சி செய்யுங்கள். விடாமுயற்சி வெற்றியளிக்கக் கூடும். சிங்கள அரசும் கருணா ஒட்டுண்ணிகளும் இப்போ தமிழ் மக்களிடமிருந்து நிறையவே பணம் பறிக்கிறார்கள். எனவே உங்களுக்கும் அவர்கள் வழமையை விட அதிக பணம அன்பளிப்புச் செய்ய சந்தர்ப்பம் இருக்கிறது! எனவே உங்கள் பணியை இடையறாது செவ்வனே செய்யுங்கள். வாழ்த்துக்கள்!

கருத்துக்களைப் பதிவிடுக
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
சுருக்குக | விசாலமாக்குக

busy
Last Updated ( Wednesday, 25 November 2009 16:14 )  
Copyright © 2010 தமிழரங்கம். All Rights Reserved.
Joomla! is Free Software released under the GNU/GPL License.
Banner