குருதிப் புனலும் பிரபா கொலையும்

நாம் விடுதலைப்புலிகளின் அழிவைப் பற்றியும் (http://udaippuu.blogspot.com/) தலைமையை எவ்வாறு சதிசெய்தார்கள் என்பது பற்றியும் எழுதிக் கொண்டிருக்கின்றோம். புலிகளின் தலைமையை கயமைத்தனமாக வீழ்த்தியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

 

வெகு திட்டமிட்ட முறையில் நந்திக்கரைவரை கொண்டுவந்து விட்டது.
அசாதாரனமான முறையில் பாதுகாப்பில் கவலையீனம் இருந்த போதிலும் உள்வீட்டில் இருந்து காட்டிக்கொடுக்கப்பட்ட துரோகமே நிகழ்ந்திருக்கின்றது.
குருதிப்புனல் என்ற படத்தில் எவ்வாறு ஓரு பொலீஸ் அதிகாரி அமைப்பிற்கு தலைமை தாங்குவதாக திரைக்கதையை முடித்துக் கொண்ட கமல் போல இன்று கே.பி வந்திருக்கின்றார். இவர்களின் காட்டிக்கொடுப்பு லொபிக்களாக உருவாக்கம் பெற்று வாக்குறுதிகளுக்கு மத்தியில் சரணடையவைத்து விவிலியக் கதைபோல யேசுவை யூதாஸ் கட்டிப்பிடித்து காட்டிக் கொடுத்தது போல புலிகளின் தலைமை காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

புலிகளின் தலைமையை விமர்சிக்கின்ற வேளையில் இனவாத அரசினாலும் சர்வதேச சதியாலும் சூழப்பட்ட நிலையில் கொல்லப்பட்ட தேசபக்தர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் எமது அஞ்சலியைச் செலுத்துகின்றோம். மக்களுக்காக தமது இறுதி மூச்சுவரை எண்ணியே வாழ்ந்த தேசபக்தர்களை புலி என்ற காரணத்திற்காக நாம் அவர்களின் தியாகத்தை மதிக்காமல் இருக்க முடியாது. இந்த தியாகிகளின் அழிவில் இருந்து எமது எதிரிகள் இனவாத அரசுமாத்திரம் அல்ல.

 

பிராந்திய வல்லரசுபோலிகம்யூனிச சீனாஐரோப்பா,யப்பான், அமெரிக்க ஏகாதிபத்தியமே என்று தமது தியாகத்தின் மூலம் வெளிப்படுத்திச் சென்றிருக்கின்றார்கள்.

 

உடனடித் நடவடிக்கைகள் குறித்து :

  

*சர்வதேச மன்னிப்புச் சபை சரணடைந்த போராளிகளை சந்திக்க
வேண்டும்

  

*அரசியல் கைதிகள் அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும்
*உடனடியாக மக்களை தமது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்
*உடனடியாக செல்லமுடியாதவர்களுக்கு தற்காலிக தங்குமிடமாக நடமாட்டச் சுதந்திரத்துடன் இடைத்தங்கல் முகாம்களில் தங்க அனுமதித்தல்
*சர்வதேச மனிதநேயர்கள்,
புலம்பெயர் தமிழர்கள் தமது உறவுகளுக்கு நோரிடையாக உதவிட அனுமதிக்க வேண்டும். 
(எவ்வித அச்சுறுத்தல் இன்றி)
பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால உதவியும், நீண்ட
கால உதவியும் உறுதிப்படுத்த வேண்டும்
*உறவுகளுடன் இணைவதற்கு உடன் வசதி செய்து கொடுக்கப்படவேண்டும்
*படைத்தளங்கள் விஸ்தரிப்பை நிறுத்த வேண்டும்

 

 *பேச்சு, எழுத்துச் சுதந்திரம் உறுதிப்படுத்த வேண்டும்

அரசியல் தீர்வை
முன்வைக்க வேண்டும்

 

*பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலை பகிங்கரமாக வெளியிடுவது.

 

பகிங்கரமாக தீர்வுத்திட்டத்தை வெளியிடுவது. நான்கு சுவருக்குள் தீர்வு வைப்பது நேர்மையானது அல்ல.
தீர்வுக்கான அடிப்படை:
அனைத்துப் பகுதியினரும் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவேண்டும்-
அரசியல் தீர்வை முன்வைத்தல் வேண்டும் இவைகள்
தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம்
தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கு என்பதை ஏற்றுக் கொள்ளல் அத்துடன் முஸ்லீம், மலையக மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் வேண்டும்.
வட- கிழக்கு இணைப்பு அனைத்து மக்களுக்கும் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும்.
மேற்கூறியவை உடனடியாக அமுல்படுத்த வேண்டியவையாகும்.
தமிழ் மக்களே தமது அரசியல் பேச்சுவார்த்தைக்கான சபையை உருவாக்கிக் கொள்வதன் மூலம் உள்நாட்டு ஆட்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஆட்சியாளர்களின் எதேர்ச்சாதிகரமாக தீர்வை திணிப்பதை தவிர்க்க முடியும்.
முன்னுள்ள பெரும்கடமைகள்:
மக்களுக்காக கோரிக்கையை முன்வைத்த போராட்டங்களை இடதுசாரிகள் இணைந்து போராட்டம் நடத்தவதன் மூலமே ஒரு காத்திரமாக தாக்கத்தை கொடுக்க முடியாது.
இன்று இடதுசாரி அரசியல் பேசுபவர்கள் பல பிரிவுகளாகவும் உதிரிகளாகவும் பிரிந்திருக்கின்றனர். இவர்கள் வெறும் விமர்சனம் செய்து கொண்டிருப்பதால் இன்றும் இன்றும் பாசீசம் தொடர்ச்சியாக தனது வேரை ஆழ ஊன்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் கொடுத்துவிட முடியாது. இடதுசாரிகள் நிலவரத்தை ஆய்வு செய்து அதற்கு தகுத்தாற்போன்றதான அரசியல் செயல்வடிவங்களை கொடுக்க வேண்டும். ஏனெனில் இனப்பிரச்சனையில் ஆரம்பகாலத்தில் விட்ட தவறுபோல இந்தக்க காலத்திலும் விடக் கூடாது.
பரந்துபட்ட ஐக்கிய முன்னணி என்பது பல தளங்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். எமக்கான கோரிக்கைகள் உடனடித் தேவை எனவும் நீண்டகாலத் தேவை என திட்டத்தில் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் நாம் எமது மக்களுக்காக தேவையை எந்தவிதமான பாசீச சக்திகளை ஆதரிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியாது என்பதே உண்மையானதாகும். பாசீச எதிர்ப்பு என்ற அடித்தளத்தில் இருந்து உழைக்கும் மக்களுக்கான தேவை என்பதை நோக்கி விரிவடைந்து செல்ல வேண்டும். எவ்வாறு எதிர்காலத்தை வழிநடத்தப் போகின்றோம் என்பதைப் பொறுத்தே
இலங்கையில் உழைக்கும் மக்களுக்கான விடிவைக் கொடுக்கும் போராட்டத்தை மாத்திரம் அல்ல. அனைத்து இனமக்களின் சுயநிர்ணயஉரிமையை பெற்றக் கொள்ளக் கூடிய ஒரு போராட்ட கட்டமைப்பை தொடர்ச்சியாக கொண்டு செல்லமுடியும். அதாவது புலிகளுடனோ அல்லது புலியெதிர்ப்பு அணியினரின் துரோத்தனத்தினால் தமிழ் மக்களுக்காக போராட்டம் முற்றுப் புள்ளபெற்றதாக இருகக்கூடாது. சிறிலங்கா பாசீச அரசோ அல்லது ஏகாதிப்பத்தியங்களோ எமது மக்களுக்கான நியாயமான தீர்வை முன்வைக்கப் போவதில்லை. அரசியல் ரீதியாக வளர்ச்சியடையாது மலடாகிப் போன ஒரு சமூகத்தை போராட்ட ரீதியாக தொடர்ந்தும் வளர்த்தெடுப்பது என்பது பரந்து பட்ட ஒரு அரசியல் செயற்பாட்டினால் தான் சாத்தியமாகும்.

 

பி.குறிப்பு: உடனடித் நடவடிக்கைகள் குறித்து இன்னும் செழுமைப்படுத்த வேண்டும்