"பயங்கரவாதத்தைத் தொடக்கி வைத்தவர்கள்,இப்போது அதைமுடித்துவைத்ததாகச் சொல்வதிலும்("with the total commitment of the armed forces",the Tamil rebels in an unprecedented humanitarian operation finally defeated militarily ")பயங்கரவாதத்தைக் கைக்கொண்டு, மக்களை அழித்தபடியே இன்னொரு பயங்கரவாத்தைச் சட்டபூர்வமாக இயக்குகிறார்கள்.அதைப் பெரும்பாலும் பாதுகாப்பு என்ற போர்வையில் வைத்திருக்கும்

 ஆளும்வர்க்கம், இன்னொரு இனத்துக்குள் ஆதிக்கஞ் செய்ய முனைந்த ஆளும்வர்க்கத்தையும் அதன் ஆயுதச் சர்வதிகாரத்தையும் அழித்துவிடப் பல்லாயிரம் அப்பாவி மக்களை வேட்டையாடுவதை எதன் பெயராலும் நியாயப்படுத்த முடியாது."

 

இக் கட்டுரையூடாக நான் "புலிகளது இறுதிவரையான போரடிச் சாதல் குறித்தோ அல்லது பிரபாகரன்-புலிகள் இல்லாத இலங்கையில் புரட்சி செய்வது குறித்தோ" பேசமுனையவில்லை.ஆனால், அந்நிய நலன்களுக்கான இலங்கையைத் தகவமைக்கும் மகிந்தாவின் அரசியல் இலக்கை,அவர் அடைந்துவிட்டதில் பணயக் கைதிகளாக்கப்பட்ட இலங்கை மக்கள்தம் அவலத்தைப் பேசுவதில் எனது தன் முனைப்பைக் கச்சைக்குள் திணிக்க முனைகிறேன்.-அவ்வளவுதாம்!மேலே தொடர விரும்புகின்றவர்கள் தொடர்க.

 

மகிந்தா இராஜபக்ஷ ஜோர்தானிலிருந்து புலிகளது இறுதிமுடிவுகுறித்துக் இங்ஙனம் உரைக்கிறார்:"My return will be back to a country free of terrorism"இந்தப் பார்வையினூடாகத் தமது இராணுவவெற்றியை உலகுக்கு நியாயப்படுத்தும் இலங்கை அதிபர்,இதுவரையான தனது இராணுவவாத அரசியலையும் முற்று முழுதாகத் துறந்துவிடவேண்டிய இன்னொரு வினையையும் இத்துடன் உரைப்பதாகவே உலகங் கருத்தாற் காணவேண்டிய நிலையில்,இதுவரை புலித்தலைவர் பிரபாகரனோடு பயணித்த போராளிகளின் நிலைகளையும்,அவர்களது தலைவரது நிலையையும் குறித்தெதுவும் உரைக்கவில்லை.It is unclear whether the government troops, rebel chief Prabhakaran Velluppilai have arrested or killed. He had, according to the military in the combat zone be halted.இதை,நான் மிகவும் அவதானத்தோடேதாம் கூறுகிறேன்.பிரபாகரனது தலைக்கு இந்தியா விலைகூறிக்கொண்டிருக்கும்போது,அவரது தலைவிதியை அவரே தீர்மானித்தாரா அல்லது அடுத்தவரிடம் கையளித்தாராவென்பது தமிழ்பேசும் மக்களுக்கு இதுவரை தெரியாது.

 

இவருக்காகப் பல பத்தாhயிரம் இளைஞர்களைப் பலிகொடுத்த தமிழ்பேசும் மக்கள் இறுதியில் பிரபாகரனின் உயிருக்காகச் சில தினங்களுக்குள்ளேயே பல்லாயிரம் தமது உயிர்களைக் கவசமாக்கி அழிந்தார்கள்.இது,தமிழர்களது உரிமையின்வழி நியாயப்படுத்தப்பட்ட கொலைகள்.மக்களது அழிவில் இலங்கை அதிபர் "பயங்கரவாதத்தை வென்றதாகவும்,புலிகள் சரணடையாது போராடித் தியாகிகளாவதும்" இதன் அர்த்தமாக விரிகிறது.

 

இங்கே,எவரும் வெற்றிகள் குறித்துப் பரப்புரை எழுதும் இந்தத் தருணத்தில் நாம் இலங்கையில் தமிழ்பேசும் மக்களது சமூகசீவியத்தைக் குலைத்த அரசியல்,பொருளாதாரப் போக்கில் புலிகளையும்,இலங்கை அரசையும் குறித்துத் தீர்ப்பெழுதுவதல்ல இன்றைய பணி.எமது மக்களது வாழ்வைத் தமிழீழத்தின் பெயரால் கருவறுக்க உடந்தையாகவிருந்த அனைவரையும் குறித்துக் கேள்வியொன்றை எழுப்புகிறோம்.அதாவது,"இன்றுவரை கொல்லப்பட்ட மக்களுக்கு எந்த அரசியல் பொறுப்பு?"இந்தச் சாமானியக் கேள்வியைமட்டுமே கேட்கின்றோம்.இதுதாம் இன்றைய அடிப்படையான அரசியலைப் புரிவதற்கான மாற்று.இக் கேள்விக்குப் பதிலாக இனவாத அரசியலில் உரைத்துப் பார்க்கும் தமிழ் அரசியல் நடாத்தைகள் மிக விருத்தியாகப் பேசப்பட்டாகவேண்டும்.

 

"I am happy to observe that the need to combat terrorism comprises an important element of the G11 White Paper. We must work closely with the G8 to have co-ordinated and concerted global action in combating terrorism in all its manifestations. Enactment of appropriate legislation and intelligence sharing must comprise the core of this exercise. "-Mahindha.உலகத்தின் முன் இலங்கை அதிபர் மகிந்தா நடாத்தும் அரசியல் மிகத் தெளிவான பொருளாதாரப் போக்குகளை நமக்கு உரைக்கிறது.இதன் தொடராகத் தான் நடாத்திய போரினது இலக்கைத் தான் அடைந்துவிட்டாதாக ஜோர்தானிலிருந்து அறைகூவிலிட்டுச்சொல்லித் தமது எஜமானர்களைக் குதுகாலத்தில் ஆழ்த்துகிறார்.அவர்,பல்தேசியக் கம்பனிகளின் தேவைக்காக இலங்கையைத் தயார்ப்படுத்திய நிலையில்,தொழில்வள நாடுகளோடு பயங்கரவாதத்துக்குமட்டுமல்ல அவர்களது பொருளாதார இலக்குகளோடும் இணைவதாகவே ஊர்ஜிதப்படுத்திக் குறிப்பெழுதுகிறார்.

 

வருங்கால இலங்கையில் அந்நிய மூலதனம் தங்குதடையின்றிப் பாய்வதற்காகப் பணயக் கைதிகளாக்கப்பட்ட இலங்கை மக்கள் அனைவரும் மகிந்தாவின் முன் பெருமைகொள்ள எதுவுமில்லை.அவர் புலிகளை வென்றதான இன்றைய அரசியலுக்கு வாரீசுமட்டுமல்ல மாறாக மாறிவரும் இலங்கை அரசியலுக்கும் அவரே வாரீசாகிறார்.இந்த இலங்கை நிச்சியம் அந்நியத் தேசங்களது வேட்டைக்காடவே இருக்கும்.இது,உலக ஏகாதிபத்தியங்களின்வழியில் "இனச் சேர்க்கை-ஒன்றித்தல்"என்றவரையறையுள் இலங்கையிலுள்ள மக்களினங்கள் யாவையும் ஒரு தேசியவினவுருவாக்கத்துள் இட்டு நிரப்பும் காரியத்தை பூகோளமயமாகும் பொருளாதாரப் போக்குள்; அசைவியக்கங்கொள்ளும் இலங்கையை உருவாக்கும்.

 

மக்களினங்களின் அடையாளங்கள் இலங்கைத் தேசியத்துள் மெல்ல உள்வாங்கப்பட்ட இலங்கையை, அடுத்த நூற்றாண்டு நோக்கி நகர்த்தும் அரசியலைப் புறந்தள்ளமுடியாதபடி இலங்கை ஆளும்வர்க்கம் தமது பொருளாதார இலக்குகளை இலங்கையின் தேசிய எல்லைக்குள் நிறுவமுடியாதிருக்கும் இன்றைய இலங்கைப் பொருளாதாரப் போக்குகள், மிக வன்மையாக இலங்கையினது சுய பொருளாதார இலக்குகளை மட்டுமல்ல அந்தத் தேசத்தினது மக்கனிங்களையே வர்த்தகச் சமுதாயத்துக்கேற்றபடி தகவமைக்கும் நிலைக்குள் உந்தித்தள்ளப்பட்டுள்ளது.இது,இலங்கையில் உருவாக்கி வைத்துள்ள அரசியலில் முதலில் பலியாக்கிய இனம் தமிழினமாகும்.இந்த இனத்தின் அழிவுக்கு வழிவகுத்த அரசியலை முன்னெடுத்தவர்களே தமிழர்கள்தாம்.இந்த இலக்கில் வீழ்த்தப்பட்ட தமிழினம் உலகெங்கும் அகதியாகக் குடியேறித் தனது தலைமுறையையே அந்நியத் தேசத்துக்கு அடிமையாக்கிய நிலையில், இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் மிக யதார்த்தமாகப் பெரும்பான்மை மக்களது உறுப்புச் சமுதாயமாக மாற்றப்பட்டு காலவோட்டத்தில் தனது காலடித் தடத்தை அழியவிடும்.இது,இன்றைய பொருளாதாரப் போக்குகளுக்கிசைவான இலங்கையின் தேவையுள் ஒன்று.

 

மகிந்தா இதைக் கெட்டித்தனமான மொழியினூடாக உலகத்துக்கு உணர்த்துகிறார்.

 

அவரது காலத்து அரசியல்-பொருளாதாரப் போக்கில் அவர் செய்யவேண்டிய அரசியலின் இந்த இலக்கு வேறானவொரு தடத்தை இனிமேல் உருவாக்காது.இது,தமிழுக்கு மட்டுமல்ல அனைத்துக்கும் சங்கு ஊதும்.தமிழகத்தை இந்த இலக்கில் பார்ப்பவர்களுக்கு அது உருவாக்கும் இளைய தலைமுறையைத் தமிழாக இனங்காணவா முடியும்?-இலங்கைமட்டும் இதலிருந்து தப்ப முடியுமா?

 

இந்த நிலையில்,இலங்கை அரச அதிபர்மீது போர்க்குற்றுஞ் சுமத்தும் எந்தத் தார்மீகவுரிமையையும் எவரும் கொள்ளமுடியாதவொரு அரசியலை இலங்கைக்குக் கற்பித்த உலகப்பொருளாதார நிறுவனங்கள், மிகந்தாவினது அரசியல் நடாத்தையை"இலங்கையர்கள்"என்ற பொதுமைக்குள் கட்டிக் காத்துவிட்டது.இது,இலங்கையில் பயங்கரவாதத்தை அழிப்பதற்கான முதல் அரசியல்-இராணுவ முன்னெடுப்பை மக்களது அழிவில் கட்டியமைக்க ஒப்புதல்கொடுத்த ஆசியாவினது வர்த்தக நடாத்தைக்கு உந்துதலாக இருப்பவர்கள் மகிந்தாவை எந்தச் சட்டத்துமுன்னும் கொணரமுடியாத முட்டுக்களை ஐ.நா.சபையிலிருந்து தொடங்கியுள்ளனர்.இதன் விருத்தியான இன்னொரு அரசியல், ஆசியா-ஐரோப்பா எனும் பொருளாதார வியூகங்களுக்கமைய இலங்கைமீது ஆதிக்கஞ் செய்ய முனையுந் தருணங்களில் இருஷ்சியாவும்,சீனாவும் மட்டுமல்ல இந்தியாவும் இலங்கையைக் காத்து வருவதாகவே இருக்கும்.

 

பிரபாகரன் இல்லாதவொரு இலங்கையில் பயங்கரவாதம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் பட்டுணியும் பாராமுகமும் அனைத்து மக்களினங்களுக்குள்ளும் நிலவும்.இது,இலங்கையைமட்டுமல்ல அதை வேட்டையாடும் கம்பனிகளையும் நிச்சியம் பதம் பார்க்கும்.பல் தேசிய மக்களினங்களை ஒன்றித்த தேசத்துக்குள் முடக்கிய பொருளாதாரம், அதன் ஒன்றித்த எதிர்ப்புக்கூறுகளையும் மறுமுனையில் வளர்த்தபடிதாம்"புலிப் பயங்கரவாதத்தையும்"அடக்கியுள்ளது.அங்கே, செத்தவர்களது கணக்கு வெறும் எழுபதாயிரம் என்று உலகஞ் சொல்லும்.புலிகளது வால்களுக்கோ அதுள்"துரோகிகள்-தியாகிகள்-மாவீரர்கள்-நாட்டுப்பற்றாளர்கள்"என்று பற்பல பிரிவுகளுடாகச் சாகடிக்கப்பட்டவர்களுக்குக் குறிப்பெழுதுதல் பிரபாகரனோடு முடிந்துவிடாது.

 

ஆனால்,நாம் இவர்கள் எல்லோரிடமும் இப்போது கேட்கும் கேள்வி இதுதாம்:

 

"இன்றுவரை இலங்கைத் தேசத்துள்ளும்,வெளியிலும் கொல்லப்பட்ட மக்களுக்கு எந்த அரசியல் பொறுப்பு?"

 

I will return to a land that, of the barbaric acts of the LTTE is totally free.

 

ப.வி.ஸ்ரீரங்கன்