சிங்களத் தீவினிற்கோர்
பாலமைப்போம் - என்ற
என் நடபுப்பாலம்
மக்களை ஆக்கிரமிக்கும்
பாலமானதடி கிளியே!

 

மன்னனும் நானே
மக்களும் நானே
கண்ணனும் நானே
போரிடவும் -
போராட வைப்பவரும்
நாமேயென
மாயமாய் சொல்லுதடி கிளியே!

 

மேனனும் - முகர்ஐpயும் வந்தும்
போர்நிறுத்தம் இல்லையானதால்
வரலாறு காணாததோர்
வரலாற்று உறவென
சிங்களப் போரினவாதம்
பேரானந்தம் கொள்ளுதடி  கிளியே!

 

பேரினவாதத்தின்
பேரானந்தப் போரின்
பொறியில் அகப்பட்ட மக்கள்
ஊன்உறக்கமின்றி
துடியாத் துடிக்கின்றனர் கிளியே

 

சொந்தபந்தங்களின் முன்னால்
இரத்த உறவுகளின் உடல்கள்
குதறப்படுகின்றன - மக்கள்
மரணத்துள் வாழ்கின்றார் கிளியே!

 

குண்டு மழைப்பொழிவால்
லட்சோப லட்சம் மக்கள்
கிடைப்பதை கையிலெடுத்து
நாலாதிசையும்
நடுங்கி ஓடுகின்றார் கிளியே

 

அப்பாவி மக்களின் அழிவை
பேரினவாதத்துடன் - ஐனநாயக
நீரோட்டக் கும்பலும் சேர்ந்து
ஆனந்தக் கும்மியடிக்குது கிளியே

 

மக்களின் மரணத்துள் வாழ்வை,
ஒரு சிலரின் மடிவே! இது
இன அழிப்பு இல்லையென
யுத்தமே நீ தொடர்ந்து போவென
ஆனந்தசங்கரியார்
ஆனந்தப்பள்ளு பாடுகின்றார் கிளியே!

 

யுத்தத் தொடரால்
புலிகள் இல்லாது போக
தான் இந்த வெளியில்
ஏகப்பிரதிநிதியாக
போகலாமென - இந்த
மக்கள்விரோதி நினைக்கின்றார் கிளியே!

 

வடக்கில் டக்கிளஸ்;
கிழக்கில் பிள்ளையானுடன் - கருணா
வன்னியில் -
இப்பாசிசக் கும்பலுடன் சேர்ந்து
சேர-சோழ- பாண்டியர் பாணியில்   
கோலோச்ச விரும்புகின்றார் கிளியே!

 

இம் மக்கள்விரோதக் கூட்டத்திற்கு
புலம்பெயர் மண்ணின் எடுபிடிகளும்
ஊதுகுழல் ஊதுகின்றார் கிளியே!

 

தலித் கம்பனிகளாய்,
மேம்பாட்டு முன்னணியாய்
கிழக்கின் விடிவெள்ளிகளாய் - தத்துவப்;
பல்லவி ஒத்தூதுகின்றார் கிளியே!

 

தேனீ என்றொரு இணையதளம் - அதற்கு
தேனாய் இனிக்கும் மகிந்தசிந்தனை - புலியை
பாசிசம் என்னுமடி - அரசைப்
பாசிசம் என்றிட்டால் - அதற்கு 
தத்துவச்; சண்டையும் பிடிக்குமடி

 

மக்கள் மடிவில் மகிழ்வு கொள்ளும்
பாசிசத்தின் கூட்டமதை நினைக்கையிலே
நெஞ்சு பொறுக்குதில்லையே கிளியே!

 

மாவிலாறு நீரை
தடுத்து நிறுத்தியதும்,
கல்மடு அணையை
குண்டால் தகர்த்ததும் - புலிகளின்
மக்கள் விரோதமடி கிளியே!

 

மக்கள் விரோதமென்றால்
எதுவென்று அறியாத
சுத்த இராணுவக் கூட்டமடி புலிகள்!;
மக்கள் அழிவில் உயிர் வாழும் - இவர்களை 
மக்கள் மௌனமாய்
தோற்கடித்தே விட்டடனர் கிளியே!

 

புலிகளும் அரசும்
ஐனநாயக நீரோட்டக் கூட்டமும்
மக்கள் விரோதிகளடி கிளியே
மக்கள் விரோதக் கூட்டம்
வரலாற்றில் என்றும்
நீண்டு நிலைத்ததில்லையடி கிளியே!

 

மக்களே! மக்கள் மட்டுமே
வரலாற்றின் உந்து சக்தியென
பள்ளுப் பாடுவோம் கிளியே!


அகிலன்
30.01.2009