29.09.2002 இல் பாரிசில் தீக்கொழுந்து திரைப்படம் திரையிடப்பட்ட போது, அதற்கு அமைப்பின் ஜனநாயக வீரர்கள் வேட்டு வைத்தனர். இந்தியா சினிமா சஞ்சிகையான நிழல்கள், உயிர்நிழல் மற்றும் அசை சஞ்சிகையும்

 வேறு சிலரும் இணைந்த நண்பர்கள் வட்டம் என்ற பெயரில் குறுந் திரைப்பட விழா ஒன்றை நடத்தினர்.

 

இதில் தீக்கொழுந்து திரையிடப்படும் என முன் கூட்டியே நிகழ்ச்சி நிரலில் அறிவித்து இருந்தனர். ஆனால் தீக்கொழுந்து திரைப்படம் தொடங்கிய போது முற்றாக முதல் பகுதியை திட்டமிட்டே திரையிடுவதை நிறுத்தியிருந்தனர். இரண்டாம் பாகத்தை இடையில் தணிக்கைக்குள்ளாக்கிய படி நிறுத்தினர். இதற்கு எதிராக நாம் எழுந்த போது 60களில் தொடங்கி இதே ஒப்பரியை தான் நீங்கள் வைப்பதாக கூறினர். இலங்கை புதிய ஜனநாயக கட்சி பரிஸ் பிரமுகர் ஒருவர் "21ம் நூற்றாண்டு இலக்கிய தெரியாதவர்களின்" குப்பைகளே இவை என்றார். "மார்க்சியம் மூளையில் இருந்து உருவாவது இல்லை" என்றார். 60களில் சர்வதேச வார்க்ப்போராட்டம் கூர்மையாகியதையும் அதை உயாத்தி நிற்பவர்களையும் நளினமாக கிண்டல் செய்கின்றனர். மக்களின் வாழ்வக்hன போராட்த்தைப் பற்றி பேசுவது கலை இலக்கியம் அல்ல என்பது இவர்களின் மையவாதம்.  

 

நாம் ஒட்டு மொத்தமாக இந்த அராஜாகச் செயலையும், ஒருவனின் பார்வைச் சுதந்திரத்துக்காவும் போராட வேண்டிய நிலை எற்பட்டது. தேயிலையில் மணம், குணம், சுவை அனைத்தையும் பன்நாட்ட நிறுவனம் எப்படி தீர்மனித்து விவசாயிகளை அழிக்கின்றதோ, அதே போன்று பார்iவையாளனின் உணர்வுகள், உணர்ச்சிகள், ரசனைகளை நீங்கள் தீர்மானிக்கவும், அழிக்கவும் முடியாது என்று அம்பலப்படுத்தினோம். பார்வையளனின் பெயரில் இப் படம் அலுப்புட்டுவதாகவும், நீட்சியாக இருப்தாகவும், நல்ல கதை இல்லை என்றும், சத்தம் தெளிவாக இல்லை என்றும், 21ம் நூற்றாண்டு இலக்கிய தெரியாதவர்களின் ரசனையற்ற கூத்து என்றும் பலவாக நிகழ்ச்சியை நடத்தியவர்கள் கூறி சேறடித்த போது, நாம் இதை எதிர்த்து போராடினோம். தனிப்பட்ட நபர்கள் மேலான அவதூறுகளால் திரையரங்கை மூழ்கடித்து பார்வையாளனை திசை திருப்ப முனைந்தபடி, திரையரங்கை விட்டு வெளியேறக் கோரினர். முதலாளித்துவ அமைப்பில் கூட பணம் கொடுத்து வாங்கியதை மீள மறுதலிக்க முடியாது. ஆனால் கலகம் செய்த போது பணத்தை தருகின்றோம் வெளியே போட என்றார்கள்;. நாம் அந்த உரிமை உங்களுக்கு கிடையாது என்ற மறுத்து, அதை எதிர்த்து நின்று போராடினோம்.



தீக்கொழுந்து தேயிலை விவசாயிகளின் எதார்த்த பற்றிய ஒரு போராட்ட களச்சித்தரம்;. இதில் இலங்கையில் இருந்து வலுகட்டயமாக நாடு கடத்தப்பட்ட மக்கள் உள்ளடங்கிய ஒரு வாழ்க்கை போராட்டத்தை சித்தரிக்கின்றது. தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வின் துயரங்களை இது உள்ளடக்கியுள்ளது. உலகைச் சூறையாடும் ஏகாதிபத்திய பன்நாட்டு நிறுவனங்களின் கோரமுகத்தை அம்பலம் செய்கின்றது. மக்களின் வாழ்வை சூறையாடும் கும்பல்களின் வாக்கு மூலத்தில் தொடங்கி அன்றாட கஞ்சிக்கே வாழியற்ற மக்களின் உள்ளக் குமுறலை எதார்த்ததில் எடுத்துக் கட்டும் ஒரு களச்சித்திரம். வாழ்வுக்காக போராடும் மனிதர்களின் உள்ளக் குமுறலுடன் கூடிய உண்மை முகத்தை காணச் சகிக்க முடியதவர்கள் படத்தை துண்டுதுண்டாக தணிக்கை செய்தனர். பார்வையாளனின் பார்வைச் சுதந்திரம் கற்பழிக்கப்பட்டது.  உணர்வுகள், உணர்ச்சிகள், ரசனை உணர்வுகள் முடமாக்கப்பட்ட போது, தணிக்கையை மீறி பார்வையளார்கள் சிறந்த படமாக தீக்கொழுந்தை தெரிவுசெய்தனர். அறிவிக்கப்பட்ட முதல் பரிசித் தொகை அப்படம் பெற்றது. அப்போது அந்த படத்தை தணிக்கை செய்து நிறுத்திய ஒரு ஜனநாயக பிண்டம் "படத்தை முழுமையாக பார்க்கமலேயே படம் தெரிவாகிவிட்டதா" என்று தன்னையும் மீறி பலத்த குரலில் ஒப்பாரி வைத்தார்.

 

பி.இரயாகரன்