இன்று இந்தியாவில் அதிலும் குறிப்பாக மும்பையில் உள்ள அனைவரின் பேச்சிலும் தீவிரவாதம் என்ற சொல் ஒரு முறையாவது உச்சரிக்கப்பட்டிருக்கும்,பல அப்பாவி இசுலாமியர்கள் வழக்கம் போல் புயலுக்குப்பின்னான சோகமாக விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படலாம்.

 தாக்குதலில் இறந்த‌ இந்துக்களின்,இசுலாமியர்களின் சொந்தங்கள் கன‌த்த இதயத்தோடு நொடிகளை கடத்தலாம். புயல் போல் நடந்து முடிந்துவிட்ட‌ இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட இரு நூறு உயிர்கள் பலியாகியிருக்கிறது.ரயில் நிலையங்களில் நின்று இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இரையாகிப்போன அப்பாவி பயணிகளுக்கும்,ஒட்டலில் பணிபுரிந்த‌ பணியாளர்களுக்கும்,சமையல்காரர்களுக்கும்,இன்னும் இந்த தாக்குதலில் இறந்த அனைத்து அப்பாவி உழைக்கும் மக்களுக்கும் நாம் நமது ஆழ்ந்த இரங்களைத் தெரிவிப்போம்,அதே நேரத்தில் இந்த பயங்கரவாத தாக்குதலின் நுட்பமும்,வேகமும்,உயிரையே இழக்கும் ஆவேசமும் கூடியிருப்பதையும் இதற்கான காரணிகளை,உற்றுக்கண்னை,இதன் தோற்றுவாயை ‘நடுநிலையாளர்களுக்கு’ மீண்டும் ஒரு முறை நினைவூட்டுவதும்,இந்தியாவில் தொடரும் இந்த‌ பயங்கரவாதத்தின் வினை எது என்பதை பார்க்க வைப்பது அவசியமானது என்று கருதுகிறேன்.

 

 

1

மற்ற‌ குண்டு வெடிப்புகள், தாக்குதல்கள் அனைத்தின் போதும் பீதியை கிளப்பி இந்து ம‌தவெறிக்கு தூபமிட்டு வெறியை கிளறிவிட்டுக்கொண்டிருந்த இந்திய புளுகுனி ஊடகங்கள் தற்போது கண்ணீரும் கம்பலையுமாக‌ அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கின்‌றன.இந்த தாக்குதல் சம்பத்திலிருந்து புதிதாக‌ எந்த பீதிகளையும் கிளப்பமுடியாமல் இந்தியாவையே தேசபக்த,இந்துமதவாத உணர்ச்சிகளுகுள் மூழ்கடிக்கும் செண்டிமென்ட் கட்டத்தை எட்டிவிட்டார்கள். அழுது வடியும் ஊடகங்களும் ஆழ்ந்த இர‌ங்கள்களை தெரிவித்துக்கொண்டிருக்கும் ஆளும்வர்க்கமும் ஏன் இதற்கு மட்டும் இப்படி கண்னீர் மல்கி உணர்ச்சிகளில் மூழ்குகிறார்கள் நம்மையும் பிடித்து முக்கி எடுக்கிறார்கள் ?

2

சாதாரணமாக மக்களிடம் ஒன்றும் தேசபக்தி பொத்துக்கொண்டு சாக்கடையில் ஓடுவதைபோல ஓடவில்லை,தொலைகாட்சிகள்,வானொலிகள்,செய்திப்பத்திரிகைகள் அனைத்தும் மேலிருந்து இந்த உணர்ச்சிகளை இறக்குகிறார்கள்,தொடர்ச்சியாக‌  சூடேற்றிக்கொண்டே இருக்கிறார்கள். ஏனெனில் இதுவரை ஆங்காங்கே குண்டுகள் தான் வெடித்தன ஆனால் தற்போது நடந்திருப்பது இதுவரையிலும் இந்தியா காணத,இந்துமதவெறி பயங்கரவாத‌ கும்பல் காணாத‌ தாக்குதல் என்பதை விட போர் என்றே கூறலாம்.அதுவும் இந்தியத் தரகு முதலாளியின் நூற்றாண்டு கால‌ பழமை வாய்ந்த ஹோட்டலின் மீதே போர் தொடுத்ததன் மூலம் இவர்களின் அமெரிக்க,பிரிட்டன் சொந்தங்கள் பீதியின் காரண‌மாக இன்னும் சில ஆண்டுகளுக்காவது இங்கு வரமுடியாமல் போகலாம் அதனால் உண்டான சோகம்,இனியும் பயங்கரவாதிகள்,பயங்கரவாதிகள் என்று கூறி அப்பாவி இசுலாமிய இளைஞ‌ர்களை நாய்களை போல‌ வேட்டையாட முடியாது அவ்வாறு செய்தால் என்ன நடக்கும் என்பதை எண்ணியதால் ஏற்பட்ட பீதி தேசபகத‌ வடிவில் வெளிப்பட்டிருக்கலாம். எந்த டாட்டாவும்,அம்பானியும் கொழுத்து சொத்து சேர்ப்பதை வைத்துக்கொண்டு இவர்கள் இந்த நாடு முன்னேறுகிறது,வல்லரசாகிறது என்று கதை சொல்லிக்கொண்டிருந்தார்களோ அந்த டாட்டாவின் ஹோட்டலின் மீதே நடத்தப்பட்ட தாக்குதலாலும் இந்த தாக்குதலின் எண்ணிப்பார்க்கவும்  இயலாத திடீர் அதிர்ச்சியும் தான் இவர்களை தேசபக்த பஜனையை கோரசாக பாட வைக்கிறது.இதற்கு முன்பு இங்கே குண்டுகள் வெடிக்கவில்லையா?

 அப்போதெல்லாம் இந்த ஊடகப்பொய்யர்களும்,ஆளும் கும்பலும் என்ன செய்தார்கள்? எல்லா குண்டு வெடிப்புகளின் போதும் வெறிக்கூச்சலிட்டு ஊரைக்கூட்டிய‌ இவர்கள் செய்ததெல்லாம் என்ன? இந்தியாவில் ஒவ்வொரு முறை குண்டுகள் வெடித்த போதும் இவர்கள் பயங்கரவாத பீதியை மட்டும் தான் கிளப்பினார்கள்,அதுவும் ஒவ்வொரு முறையும் திட்டமிட்டு இசுலாமிய மக்களுக்கு எதிராக திருப்பிவிட்டு அவர்களை பயங்கரவாதிகளாக சமூகத்திற்கு அடையாளம் காட்டி ஒதுக்கித்தள்ளினார்கள்,

5

ஆனால் இப்போது அத்வானி கூட தனது வார்த்தைகளிலிருந்து விக்ஷத்தை கக்காததன் மர்மம் என்ன ? காங்கிரசு அரசை ஏன் முன்பைப் போல லாயக்கற்ற அரசு, நாட்டை பாதுகாக்க முடியாத அரசு என்று கடித்து குதற‌வில்லை அதுவும் இந்து ஓட்டை பொறுக்கத் நல்ல வாய்ப்பாக‌ தேர்தல் நெருங்கும் தருணத்தில் கூட ஏன் பேசவில்லை ?ஏனென்றால் மேற்கூறியது மட்டும் தான் காரணமாக இருக்க முடியும், ஆனால் இதற்கு இவர்கள் சொல்லும் விளக்கமே வேறு அது தான் தேசபக்தி, நாடே அச்சுறுத்தலில் இருக்கும் போது காங்கிரசை விமர்சிப்பதா முக்கியம் இப்போது நாம் காட்ட வேண்டியது தேசபக்தியே என்று இந்த நாட்டை வல்லரசாக்க உழைக்கும் டாட்டாவின் இழப்பிற்காக நாமும் கண்ணீர் வடிக்க வேண்டும் என்கிறார்கள்,டாட்டாவை விடுங்க சாதாரண மக்கள் பலியாகியிருக்காங்களே என்று நீங்கள் கேட்கலாம், ஆம் உண்மை தான் ஆனால் அத்வானியோ இன்னபிற தேசபக்தர்களோ அவர்களுக்காக கண்ணீர் விடவில்லை என்பதை அடித்துச்சொல்லலாம் அவர்களுக்காக நாம் தான் உண்மையாக வருந்துகிறோம்.இதற்கு முன்னாலும் பல்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன அங்கேயும் மக்கள் நூற்றுக்கணக்கில் இறந்து போயிருக்கிறார்கள் ஆனால் எந்த இடத்தையும் இந்தளவிற்கு செண்டிமெண்ட் சீனாக்கி நட்டையே தேசபக்த சோகத்திற்குள் மூழ்கடிக்கவில்லையே ஏன்? அதற்கு இது மட்டுமே காரணமாக இருக்க முடியும்.ஆனால் இனி இதுபோல எண்ணிப்பார்க்கவியலாத வடிவங்களிலான தாக்குதல்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்! இதில் ஒன்றுமறியாத அப்பாவி மக்களும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்கவில்லை,ஆனால் அடிக்கும் இந்த புயல் காற்றிற்கான காரணத்தை மட்டும் அறிவார் யாருமில்லை,அறிய முற்படுவதுமில்லை,அல்லது நினைப்பது கூட இல்லை ஏனெனில் இந்து பயங்கரவாத கும்பல் வேறு பக்கம் பார்க்காத வண்ணம் பயங்கரவாதத்தை அடையாளப்படுத்தியுள்ள‌து.

7

ஒரு பயங்கரம் அல்லது பயங்கரவாதம் உருவாக காரணம் இன்னொரு பயங்கரவாதமே என்பதை யாரும் மறுக்க முடியுமா? அதை யாரும் மறுக்க முடியாது. இல்லையென்றால் அகிம்சை தான் பயங்கரவாதத்தை உருவாக்குகிற‌தா?


ஒரே வரியில் சொல்வதெனில் இசுலாமிய பயங்கரவாதத்தை உருவாக்கியது பார்ப்பன இந்து பயங்கரவாத‌ம் தான். இந்து பயங்கரவாதத்தால் பழிவாங்கப்பட்டவர்களின் போர் தான் இசுலாமிய பயங்கரவாதம்.எனவே இசுலாமியர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் என்று பார்ப்பன பயங்கரவாத கும்பல் பிரச்சாரம் செய்கிறது, அந்த கண்ணோட்டம் என்பது பரவலாகவும் பரவியுள்ளது.அந்த பிரச்சாரத்திற்கு இரையாகாமல் தங்களுடைய‌ சுயமான கண்ணோட்டத்துடன் இந்த பயங்கரவாதிகளையும் இவர்கள் தோற்றுவித்துள்ள எதிர் பயங்கரவாதத்தையும் அடையாளம் காணும் வரை இவை தொடரும் என்பதே முடிவு. இந்து மதவெறி பயங்கரவாதிகள் சமீபத்தில் தமது பயங்கரவாத செயலுக்காக பிடிபட்டுள்ளார்கள்.மாலேகானிலும் ,ஆமதாபாத்திலும்,சாம்ஜத் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் வெடித்த குண்டுகளை வைத்த‌ பயங்கரவாதிகள் இந்துமதவெறி ஆர்.எஸ்.எஸ் கும்பல் என்பது அம்பலமாகியுள்ளதே ஆனால் இந்த‌ குண்டு வெடிப்பு பற்றி தேசபக்தியுள்ள தேசீய ஊடக யோக்கியர்கள் ஏன் வாயை திறக்கவில்லை? இவர்கள் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருப்பது ஏன்?

 

 அது பயங்கரவாத செயல் இல்லையா? இல்லை! ஏனென்றால் அது இந்து பயங்கரவாதிகள் வைத்த குண்டுகள் ! எனவே இந்த ஊடகங்கள் பற்றியும் இவர்களின் தேசபக்தி பற்றியும் நடு நிலையாளர்களே கேள்விகேளுங்கள்,அவர்களின் முகத்தின் முன் உள்ள திரையை விலக்கி பாருங்கள். அப்போது தான் உண்மை செய்திகளை அரிய முடியும். நீங்கள் உண்மை செய்திகளை அறியாத வரை உண்மையான,முதன்மையான பயங்கரவாதிகளை அடையாலம் கானாதவரை இந்த தாக்குதல்களை நாம் எதிர் நோக்கியிருக்கலாம். இந்த பயங்கரவாத செயல்கள் பற்றி எழுத்தாளர் அருந்த‌தி ராய் சில மாதங்களுக்கு முன்பு தெகல்கா வார ஏட்டுக்கு கொடுத்த நேர்காண‌லின் மொழியாக்கம் தற்போதைய சூழலின் அவசியம் கருதி இங்கே பதிவிடப்படுகிறது.இதன் மூலமும் இதே தளத்தில் இருக்கிறது.மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது.

 

 

12214

தெகல்கா : அதிகரித்துவரும் தீவிரவாத தாக்குதல்கள் எதனை குறிக்கின்றன ?


காக்ஷ்மீர்,வ‌ட‌கிழ‌க்கு மாநில‌ங்க‌ள் அல்ல‌து ப‌ஞ்சாப்பை போன்று குறிப்பான‌ அர‌சிய‌ல் கோரிக்கைக‌ளை ஒட்டிய‌  வ‌ன்முறையாக‌ இல்லாம‌ல் இது தொட‌ர்பின்றி ந‌டைபெறுகிற‌தே, இந்தியாவில் என்ன‌ மாற்ற‌ங்க‌ள் ந‌டைபெற்றுள‌து?

 

 

அருந்ததி ராய் : இது தெளிவாக‌ உள்ள‌து, இது வெறுப்புண‌ர்ச்சியினுடைய‌ அறிக்கை. நாம் அனைவ‌ரும் இதை எதிர் கொண்டாக‌ வேண்டும். சென்ற‌ வார‌ம் பா.ஜ‌.க‌ வெளியிட்டிருக்கும் அறிக்கை இந்த வெறுப்புண‌ர்ச்சிக்கான‌ துதிபாடல் [அதை மேலும் தீ விட்டு வ‌ள‌ர்க்கும் எண்ணை‍‍‍ - நாம்] காங்கிர‌சும் முன்பைப்போல‌ த‌ன‌து பிரித்தாளும் அர‌சிய‌லை துவ‌ங்கியுள்ள‌து.இன்னும் சொல்ல‌ப்போனால் பா.ஜ‌.க வினுடைய‌ விருப்ப‌ம் என்ன‌வென்றால் இந்த‌ வெறுப்புண‌ர்ச்சியை மேலும் அதிக‌மாக‌,மிகுந்த‌ வெறுப்புண‌ர்ச்சியாக‌ மாற்றிச்செல்ல‌ விரும்புகிற‌து. இது போன்று ம‌த‌ ம‌ற்றும் சாதிய‌ வாக்குக‌ளை  அறுவ‌டை செய்வ‌தென்ப‌து த‌ற்கால அரசியல் ந‌டைமுறையின் ஓர் அங்க‌மே. கடந்த‌ கால‌ங்க‌ளில் ம‌ட்டுமல்ல‌‌ நாம் இத‌ற்கெதிராக‌ எதையும் செய்யாத‌ வ‌ரை  இனி எதிர்கால‌ங்களிலும் இந்நிலை தொட‌ரும். நாம் இத‌ற்கு அர‌சிய‌ல்வாதிக‌ளை ம‌ட்டும் குறை சொல்லி ப‌ய‌ன் இல்லை. இது மைய‌மான‌ ஒழுங்க‌மைக்க‌ப்ப‌ட்ட‌ பிர‌ச்சினையாக‌ இருக்கிற‌து. ஒவ்வொரு முறையும் நிச்ச‌யமாக‌ ம‌க்க‌ளுக்கு நீதி கிடைப்ப‌தில்லை. இந்த‌ விச‌ய‌த்தில் நீதிமன்ற‌‌ங்க‌ளும்,போலீசும்,ஊட‌க‌ங்க‌ளும் ஒருங்கினைந்து ஒன்று போல‌ செய‌ல்ப‌டுகிறார்க‌ள்.

123

ஒவ்வொருவ‌ரும் இந்து ம‌த‌ச்சாயத்திற்குள் மூழ்கிக்கிட‌க்கின்ற‌ன‌ர். ஜ‌ன‌நாய‌க‌த்தை ப‌ர‌வ‌லாக்கும் ஒவ்வொரு நிறுவ‌ன‌மும் முற்றிலுமாக‌ உடைந்து செயலற்று கிட‌க்கிற‌து. அனைவ‌ரும் த‌த்த‌ம‌து சொந்த‌ வ‌ழிக‌ளில் ப‌ய‌ணிக்கின்ற‌ன‌ர். என‌வே தான் ம‌க்க‌ள்


[நீதி கிடைக்காத‌, நீதி ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்கள் - நாம்] ச‌ட்ட‌ங்க‌ளை த‌ம‌து கைக‌ளில் ஏந்தத்துவ‌‌ங்கிவிட்ட‌னர், சட்டத்தை மீறிய செயல்களில் துவ‌ங்கி தீவிர‌வாத‌ தாக்குத‌க‌ள் வ‌ரை செல்கின்ற‌ன‌ர்.


தெகல்கா : ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை மென்மையாக‌ கையாள்வ‌தா க‌டுமையான‌ முறைகளில் கையாள்வ‌தா என்கிற‌ ச‌ர்ச்சை இப்பொழுது மைய‌ம் கொண்டுள்ள‌து. உண்மையில் இவையெல்லாம் தீர்வாகுமா ?

அருந்ததி ராய் : பொடா, த‌டா, ச‌த்திஸ்க‌ர் பாதுகாப்புச்ச‌ட்ட‌ம் என எந்த ஒரு ச‌ட்ட‌மும் இதுவ‌ரை தீவிர‌வாத‌த்திற்கு முடிவு க‌ட்டிவிட‌வில்லை. இந்த‌ ச‌ட்ட‌ங்க‌ள் எதையும் சாதித்த‌தாக‌ சான்றுக‌ளும் இல்லை, மாறாக இந்த‌ ச‌ட்ட‌ங்க‌ள் அனைத்தும் சமூகத்தின் இயல்பை மாற்றியமைப்பதற்கும் மேலும் ஜ‌ன‌நாய‌க‌த்தின் இட‌ங்க‌ளை கிரிமினல்ம‌ய‌மாக்குவ‌த‌ற்கும், கேள்வி கேட்ப‌வ‌ர்க‌ளின் வாயை அடைப்ப‌த‌ற்கும் ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌ட்டிருக்கிற‌து.

தெகல்கா : தேர்த‌ல் நெருங்கிக்கொண்டிருக்கும் நேர‌த்தில்,  செயற்கையாக உருவேற்றப்பட்ட இந்த அரசியல் சூழலில் இது போன்ற‌ தாக்குத‌ல்க‌ள் நிக‌ழ்கின்ற‌ன‌வே, இவற்றை எவ்வாறு பார்க்கிறீர்க‌ள் ?

அருந்ததி ராய் : நான் ஒரு நேர்கான‌லை க‌ண்டு விய‌ப்படைந்து போனேன், ச‌மீப‌த்தில் தெக‌ல்கா இத‌ழுக்கு காங்கிர‌சு த‌லைவ‌ர் திக்விஜ‌ய் சிங் கொடுத்த‌ பேட்டி தான் அது. முத‌ன் முறையாக‌ ஒரு முன்னணி அர‌சிய‌ல் த‌லைவ‌ர் சொல்கிறார் “தாக்குதல்களுக்கான நேரம் தெரிந்தும், இந்த‌ தீவிர‌வாதிக‌ள் யார் என்று எங்க‌ளுக்கு தெரியாது” கடைசியில் இதனால் லாபமடையப்போவது யார்?, த‌வ‌றான‌ ந‌ப‌ர்க‌ள் கைது செய்ய‌ப்ப‌டுவ‌தும்,தேவையான ஆதாரங்கள் வ‌ழ‌ங்கிய‌ பிற‌கும் யாருக்கும் உண்மையான‌ குற்ற‌வாளிக‌ளை தெரிந்துகொள்ள‌ விருப்ப‌மில்லை, அல்லது தெரிந்தே அதை மூடி மறைக்கின்றனர். உதார‌ண‌த்திற்கு இந்திய‌ முஜாகிதீன்க‌ளை எடுத்துக்கொள்ளுங்க‌ள் தீவிர‌வாத‌க்குழுக்க‌ளில் இவ‌ர்க‌ள் தான் முன்ன‌ணியான‌வ‌ர்க‌ளா அல்லது அரசுக்கு எதிரான பயங்கரவாதிகள் என்று அரசால் புனையப்பட்டவர்களா ? இதில் குறிப்பிட வேண்டிய விசயம் என்னவெனில் இவையெல்லாம் திட்டமிட்டு உருவாக்கப்படுபவை, இதை கேட்டு நாம் ஆச்சர்யப்பட தேவையில்லை.        நீங்கள் தொட‌ர்ச்சியாக‌ ஒரே செய்தியை வெளியிடுகிறீர்கள் அது சீக்கிய‌ர் பிர‌ச்சினையாக‌வோ அல்ல‌து இப்போது ஒரிசாவிலுள்ள கிறித்தவர்களின் பிர‌ச்சினையாக‌வோ இருக்க‌ட்டும், அனைத்திலும் ம‌க்க‌ள் நீதியையும், நியாய‌த்தையும் எதிர்பார்க்க‌ முடியாது. இவை அனைத்தையும் விட‌ அபாய‌க‌ர‌மான‌ விச‌ய‌ம் என்ன‌வென்றால் பா.ஜ‌.க‌ இதை வைத்து பெரும்பான்மை ஒட்டை கைப‌ற்ற‌ முய‌ற்சிப்ப‌தும், சிறுபான்மையினரை தீவிரவாதிகளாக்குவதும் தான். இந்தியாவில் மட்டும் தான் 200 மில்லியன் மக்களை சிறுபான்மையினர் என்ற கருதுகோள் உள்ளது. இந்த‌ க‌ண்ணோட்ட‌ம் நிச்ச‌ய‌மாக இந்த‌ நாட்டையே இல்லாம‌ல் அழித்து விடும். இது போன்ற‌ க‌ருத்துக்க‌ள்,க‌ண்ணோட்ட‌ம் இந்தியாவிற்கு ம‌ட்டும‌ல்ல‌ ஒட்டு மொத்த‌ உல‌கிற்கும் ஆப‌த்தான‌து.

நீங்க‌ள் ஒட்டுமொத்த‌ த‌லைமுறையையே, 

81

வாழ வேறு வழியில்லை என்று உணரும்படியான நிலைக்கு தள்ளுகிறீர்கள், சில‌ர் ம‌ட்டும் வேண்டுமானால் இந்த‌ கொடுமைக‌ளையெல்லாம் த‌லையை தொங்க‌விட்டுக்கொண்டு ஏற்க‌லாம் ஆனால் பெரும்பான்மையின‌ர் அவ்வாறு கிட‌க்க‌ மாட்டார்க‌ள். தீவிர‌வாத‌த்தின் நோக்க‌ம் அழிவாக ம்ட்டுமே உள்ளது. அது ஒன்றும் புர‌ட்சிக‌ர‌மான‌ அர‌சிய‌ல் அல்ல‌. காக்ஷ்மீரிலுள்ள‌ பாதுகாப்பு ப‌டையின‌ரிட‌ம் கேட்டுப்பாருங்க‌ள்.அந்த‌ சிறு ப‌ள்ள‌த்தாக்கை உங்க‌ள் [அரசின்] க‌ட்டுப்பாட்டிற்குள் வைக்க‌ 5 ல‌ட்ச‌ம் பேர் தேவைப்ப‌டுகிற‌து.இதையே ஒட்டுமொத்த‌ நாட்டிற்கும் செய்ய‌போகிறீர்க‌ளா ? ஆனால் இதை விட இன்னும் ஒரு படி மேலே போய் உடனடியாக தேர்தலில் நடக்கப்போவது, என்னுடைய‌ க‌ருத்துப்ப‌டி காங்கிர‌சு திறனற்று இன்னும் பல‌கீன‌மாகி பா.ஜ‌.க‌ எடுத்த‌முடிவுக‌ளை தான் எடுக்கும். பா.ஜ‌.க‌ வை பொறுத்த‌வரை த‌ம‌து சொந்த‌ நிலைப்பாடுக‌ளின் ப‌டியே அவ‌ர்கள் தமது எதிர்மறையான‌ செயல்கள் என்ப‌திலிருந்து இதை கொடூர சகாப்ததிற்கு எடுத்துச்செல்வார்க‌ள். நாம் இத‌ன் விளைவுக‌ளை இந்தியாவை கடந்து உல‌க‌ள‌விலும் எதிர்கொள்ள நேரிடும். இதற்கான பாதைகள் திறந்தே இருக்கிறது. நாம் இதை இன்னும் முறைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ வ‌ழிக‌ளில் சந்தித்தாக‌ வேண்டும்.


தெகல்கா : சிமி அமைப்பை எப்ப‌டி பார்ப்ப‌து, ஏற்கென‌வே தெக‌ல்காவின் தந்திர‌மான‌ புல‌ணாய்வில் சிமிக்கு எதிரான‌ அர‌சின் அனைத்து வ‌ழ‌க்குக‌ளும் ஆதார‌ம‌ற்ற‌வை என்றும் இதன் பேரில் பல அப்பாவி இசுலாமியர்கள் பலிகடாவாக்கப்பட்டார்கள் என்றும் நிரூபிக்க‌ப்ப‌ட்டுள்ளது எனினும் சிமி வெளிப்படையான இஸ்லாமிய‌ அடிப்ப‌டைவாத‌ அமைப்பு தான்.

அருந்ததி ராய் : நாம் ப‌ஜ்ர‌ங்த‌ளை எப்ப‌டி பார்க்கிறோமோ அப்ப‌டி தான் சிமியையும் பார்க்க‌ வேண்டும். இருந்தாலும் அவ‌ர்க‌ளின் ந‌ம்பிக்கையை எந்த அளவிற்கு நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதல்ல விசயம், அவர்களுக்கு எதிரான‌ ஆதார‌ங்க‌ளை புனைந்து உருவாக்கும் அர‌சுக்கு உத‌வும் வ‌கையில் யாரும் வலிந்து போய் நிற்க‌க்கூடாது. நான் இதை வெறும் ச‌ட்ட‌த்திற்கு எதிரான‌ செய‌லாக‌ ம‌ட்டும் பார்க்க‌வில்லை, மீண்டும் இங்கு மறுத்து ஒதுக்கித்த‌ள்ள‌ப்படுவது நீதி மட்டுமே. விக்ஷ்வ இந்து பரிக்ஷ‌‌த்தோ,ப‌ஜ் ர‌ங்த‌ள்ளோ அல்ல‌து சிமியோ த‌ம‌து செய‌ல்பாடுக‌ள் அனைத்தும் ச‌ட்ட‌த்திற்கும் நீதிக்கும் எதிரான‌து என்ப‌தை புரிந்து கொண்டால் வ‌ன்முறை செய‌ல்க‌ளில் ஈடுபட மறுப்பார்கள், இப்ப‌டித்தான் ந‌ம‌து ச‌மூக‌ம் தாங்கிப்பிடிக்க‌ப்ப‌டுகிற‌து. ஆனால் இங்கு ஒரு சூழ‌ல் உருவாக்க‌ப்ப‌டுகிற‌து,ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டம் இன்னொரு மக்கள் கூட்டத்தை எரிக்கவும், கொல்லவும் முடிகிறது,

91

அதன் பிறகு அதற்கான சாட்சிகள் இருந்தும் கூட தண்டனை கிடைக்காது என்கிற துணிவான சூழல் உருவாக்கப்படுகிறது. அதே வேலையில் தாக்கப்பட்டு ஒடுக்கப்படும் மக்கள் நீதியின் பாலும் சட்டத்தின் பாலும் நம்பிக்கையை இழக்கிறார்கள். இந்த செயல்களின் விளைவு புரட்சியை கொண்டு வராது, நிச்சயமாக அழிவைத்தான் த‌ரும். இதைப்போன்று மாற்றப்படுகின்ற சிறுபான்மை மக்கள் கூட்டம் கண்டிப்பாக ஒரு அரசை தேர்வு செய்யவோ, ஒரு புரட்சியை நடத்தவோ முடியாது. ஆனால் கண்டிப்பாக அது இந்த நாட்டை அழிப்பதோடு மட்டுமின்றி மொத்த உலகத்திற்கும் அச்சுறுத்தல

http://brahmanicalterrorism.wordpress.com/